Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
யார் எதிர்த்தாலும் எனது செயற்பாடுகளை விட மாட்டேன்
புத்த மதகுரு என்ற வகையில் கொடுக்கப்படும் ஒரு கௌரவத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் காட்டுத் தர்பார் நடத்தி வருகிறார். அதனை அனைவரும் கைகட்டி வாய்பொத்திப் பார்த்துக் கொண்டிருக்கினறனர்.
அவர் எதனையும் எதிர்க்கலாம், தகர்க்கலாம், யாரையும் கீழ்த்தரமாக மேடைகளில் நின்று விமர்சிக்கலாம: தானே பொலிஸ் என்று யாரையும் பிடிக்கலாம், இந்த நாட்டின் யாப்பை மீறலாம், அது செல்லாதது எனக் கூறலாம் என்ற வகையில் நடப்பதற்கு யார் அவருக்கு அனுமதி கொடுத்தவர்?
இந்நிலை உலகில் எங்கும் நடவாதது. நடக்கவும் கூடாதது. பெரும்பான்மைப் புத்தர்களுக்கும், நாட்டுக்கும் கூட சர்வ தேச ரீதியில் பெரும் அபகீர்த்தியையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறார்.அனைத்து மக்களுக்கும் துன்பத்தையும், நிம்மதியின்மையையும், இனங்களுக் கிடையில் சந்தேகத்தையும், முறுகல்களையும், குழப்பங்களையும உருவாக்கி மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறை ஓட வைக்கவே முயல்கிறார்.
இந்நிலையைத் தொடரவிடுவது நாட்டுக்கு நன்மை பயப்பதல்ல. உடனடியாகத் தடுத்து நிறுத்தா விட்டால், பினனர் அனைவரும் கைசேதப்பட வேண்டிவரும். காலங் கடந்து விட்டால் வைத்தியமும் பலனளிக்காது.
No comments:
Post a Comment