தமிழ் அழிந்து கொண்டிருக்கும் பொறுப்பைத் தமிழரே ஏற்க வேண்டும்
மொழிக்கு சட்டரீதியான அந்தஸ்துக்கள் கொடுப்பதனால் அதனைப் பாதுகாக் கலாம் என யாராவது எண்ணுவாரேயாகில் அவர்கள் நிஜவுலகில் வாழாமல் கற்பனையுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்து கிறார்கள் என்று துணிந்து கூறலாம். வருடமொரு முறை தமிழாராய்ச்சி மாநாடுகள் என்ற பெயரில் விழாக்கள் நடத்தப்படுவதால் தமிழ் வளர்கின்றது என நினைப்பதும் முன்னையதைப் போன்றதே. ஆவணங்களாக்கப்படுபவை ஓர் காலத்தில் தடயங்களாக, சுவடுகளாக, ஆதாரங்களாக, மொழி என்ற ஒன்று இருந்ததாக நிரூபிக்க உதவுவதாக இருக்கலாம். தவிர மொழி வாழ்வதற்கு அது எவ்வகையிலும் உதவிடப் போவதில்லை.
மொழி என்பது பேச்சை முழுமுதலாகக் கொண்டது. மனிதன் தோன்றிய காலத்திலேயே, எழுத்துருப் பெறும் முன்னரே மொழிகள் தோன்றிவிட்டன. ஆரம்பத்தில் இறைவன் ஆதம் என்ற முதல் மனிதனுக்கு பொருட்களின் பெயரைக் கற்றுக் கொடுத்தாகத் தெரிகிறது. இதிலிருந்து, மனித படைப்பின் ஆரம்பத்திலிருந்தே மொழிகள் இருந்தமை தெளிவாகின்றது. அடுத்தவருக்கு அதன் வெளிப்பாடு ஆரம்பத்தில் சைகை மூலமாக சென்றடைந்து இருந் திருக்கும். இவை சைகை மொழியாக வளர்ந்திருக்கும். இன்றும் சைகை மொழிகள் உலகெங்கும் காணப்படுவது இதனை மெய்ப்பிக்கும். இக்காலத் தில் செவிப்புலன் அற்றோருக்காக இவை பாவிக்கப்படுகின்றன.
உணவு தேடும் உந்துதலால் இடம் பெயரல் தொடங்கியவுடன், தொடர் பாடலுக்கு, பாவனையில் இருந்த, ஒலிவடிவ மொழியும், சைகை மொழியும் பயன் தந்திருக்காது. அச்சந்தர்ப்பத்தில் வேறு மாற்று வழிகள் காண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த அறிவின் உதவியுடன் அப்பொருட்களைச் சித்திர வடிவமாக மனிதன் மாற்றித் தன் கருத்தை வெளியிட்டிருப்பான். அது விளங்கிக் கொள்வதில் கஷடத்தையும், கால விரயத்தையும் ஏற்படுத்தி இருந்துள்ளதோடு, எல்லோராலும் பின்பற்ற முடியாததாகவும் இருந்திருக்கலாம். பின்னர் தூரத் தொடர்பாடல்களுக்காக உருவாக்கப்பட்ட வழக்கில் இருந்த மொழிகளுக்கான குறியீடுகள் எழுத்துரு வைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வெழுத்துக்களுக்கு ஒலியுருவும் கொடுக் கப்பட்டி ருத்தல் வேண்டும். அந்த ஒலியுரு இறைவன் கற்றுக் கொடுத்த தாகவே இருந்திருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாகக் காலப் போக்கில் அவற்றில் மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டு தற்போதைய எழுத்துரு நிலையை மொழிகள் அடைந்திருக்க வேண்டும். அதன் பின்னர் பொதுமையில் இருந்து இலக்கணங்கள் உருவாகியிருக்கும். இது ஓர் சிந்தனையே தவிர முடிபல்ல.
மேற்கண்ட உண்மைகள், மொழி என்பது பேச்சு வழக்கைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதை விளக்குகின்றன. எழுத்துருவிலான பேச்சற்ற மொழிகள் சித்திரம் என்ற வரையறையுள் அடக்க மாகிவிடும். எழுத்துரு வற்ற எந்த மொழியானாலும்கூட, அது பேச்சு வழக்கில் இருக்குமாயின் அது வாழும் மொழியாகிவிடும். ணுயசயவாரளாவi னுயசi என்ற பாரசீகத்தில் பேசப்படும் மொழி அது போன்றதே. ஒரு மொழி உயிருள்ள மொழியாகக் கருதப்படுவது பேச்சு வழக்கில் அது இருப்பதால் மட்டுமே. இறந்த பாiஷகள் (னநயன டயபெரயபநள) என சமஸ்கிருதம், பாளி போன்றவைகள் கூறப்படுவதற்குக் காரணம் அவை பேச்சு வழக்கில் இல்லாததே. அப்பாiஷகளில் இன்னும் எழுத்துருவிலான ஏடுகள் உள. இந்து சமய நூல்கள் சமஸ்கிருதத்திலும், புத்த காவியங்கள் பாளி மொழியிலும் காணப்படுகின்றன. கோவில்களிலும், பாஞ்சாலைகளிலும் அவர்களது வேத மந்திரங்கள் அவ்வப் பாiஷகளிலேயே நடைபெற்றாலும் அவை இறந்த மொழிகளாகவே கருதப்படுகின்றன. இதற்குக் காரணம் அம்மொழிகள் பேச்சு வழக்கில் இல்லாமற் போனமையே என்பதை மேற்கண்ட தகவல்கள் நிரூபிக்கின்றன.
தற்போதைய நிலையில், அரச ரீதியாகத் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டதாக தமிழ் நாட்டில் எல்லோரும் பெருமையாகப் பேசிக் கொள்கின்றனர். இவ்வாறான பெருமைகளோ, அல்லது சட்ட ரீதியாக மத்திய அரசில் இருந்து கிடைத்த செம்மொழி, இன்னபிற அந்தஸ்துக்களோ ஒரு மொழியை உயிருடன் வைத்திருக்கப் போதா. அம்மொழி உயிருடன் இருப்பதாகக் கருதப்படுவதற்குக் காவியங்கள், புராணங்கள், இதிகாசங் கள், இலக்கியங்கள் இருப்பது உதவப் போவதில்லை. அவை எல்லாம் முற்காலத்தில் இருந்து அழிந்து போன மொழிகள் கல்வெட்டுக்களிலும் இன்னபிறவற்றிலும் இருந்து, அம்மொழிகள் இருந்ததாக ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்த உதவுவதற்குப் பாவிக்கப் படுவதைப் போன்று இருக்குமே தவிர, வாழும் மொழியாகத் தமிழை வைத்திருக்க உதவப் போவதில்லை. ஆக வாழும் மொழியாக இருக்க வேண்டுமாயின், அம்மொழி பேச்சு வழக்கில் உருமாறா நிலையில் இருக்க வேண்டும். தமிழ் என்ற போர்வையில் ஓர் புதிய மொழியின் உருவாக்கம் தானாகவே நடந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பேஜாராப் போச்சு, கசுமாளம், மச்சோ, பிகுரு, அல்பம் போன்றவை என்ன பாiஷ என்பது தெரிகிறதா!
உலகில் இன்றும் பல்வேறு மொழிகள் வழக்கில்; உள. அவை அத்தேச மக்களால் பேசப்படு கின்றன. அவர்கள் பேசும் மொழியை வைத்தே அந்நாடுகள் இனங்காணப்படுகின்றன. உதாரணமாக, ருஷ;ய மொழி பேசும் நாடு ருஷ;யா, சீன மொழி சீனா, தாய் மொழி தாய்லாந்து, பிரெஞ்சு மொழி பிரான்ஸ், ஜெர்மன் மொழி ஜெர்மனி, ஜப்பானிய மொழி ஜப்பான், அரபு மொழி அரேபியா, மலே மொழி மலேசியா, நோர்வே மொழி நோர்வே, ஸ்பானிய மொழி ஸ்பெய்ன், பார்ஸி பாரசீகம், அரபு மொழி அரேபியா என வழங்கப்படுவதால் அறியலாம்.
இந்தியாவுக்குள் எனப் பார்க்கினும், தென் மாநில நாடான கேரள மொழி பேசும் பகுதி கேரளா எனவும், மற்றைய மாநிலங்களான மராட்டி, குஜராத்தி, தெலுங்கு, போன்ற மொழிகள் பேசப்படும் ஊர்கள் அந்தந்த மொழியைக் கொண்டே அழைக்கப்படுவதையும் காணக் கிடக்கின்றது. தமிழகம் என ஒரு நாடு இருக்கவில்லை என்பதால், தமிழ் மொழிக்கென்று ஒரு நாடு இருந்திருக்கவில்லை என்றே கருத இடமுண்டு. சில வருடங்களுக்கு முன்னர், இதனை உணர்ந்ததாலோ என்னவோ இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான மதராஸைத் தலைப்பட்டினமாகக் கொண்ட பகுதிக்கு 1969 இல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டினர். ஆதியிலேயே அவ்வாறான நிலை காணப் படாமைக்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. சில வேளை அக்காலங்களில் ஆட்சியில் இருந்த தமிழ் மன்னர்கள் தமிழை வளர்க்கப் பாடுபட்ட அதே வேளை தமது பெயர்களை முன்வைத்தே சேர, சோழ, பாண்டிய என்றவாறாக நாட்டை அறிமுகம் செய்துள்ளமை காரணமாக இருக்கலாம். அப்படியாயின் அவை பதவி, அதிகாரம் போன்றவைகளின் ஆதிக்க மேம்பாடாகக் கருதிக் கொள்ளக் கூடியதாயுள்ளது. எப்படியோ உலகில் தமிழைப் பெயராகக் கொண்ட ஒரு பிரதேசம், தற்போதாவது இந்தியாவின் தென் மாநிலத்தில் இருப்பது சற்று ஆறுதலாகவும், சந்தோஷம் தருவதாகவும் உள்ளது.
கட்டுரையின் தலைப்பிற்கு வந்தால்,முன் பந்தியின் பிற்பகுதியில் கூறிய ஆறுதலும் சந்தோஷமும் நீடித்து நிலைக்கக் கூடிய அறிகுறிகள் தென்பட வில்லை. அதற்கான மூல காரணம், தமிழ் மக்களின் தற்போதைய மன நிலை. அதாவது, உலகில் தமது பாஷையைப் பேசுவதற்குக் கூச்சப்படும் ஓர் இனம் உண்டாயின் அது தமிழ் இனமே என்பதை வருத்தத்துடன் கூறி வைக்க விரும்புகிறேன். ஏனெனில் ஆங்கிலம் பேசுவதையே நாகரிகமாக வும், பேசுபவர்களையே உயர்ந்த சமூகமாகவும் தமிழர் கற்பனையில் வாழ் கின்றனர். அத்தோடு விட்டால் பரவாயில்லை. தமிழ் பேசுவோர் ஏதோ தரங் குறைந்தவர்கள் போலவும், கல்வி அறிவற்ற, நாகரிகமற்ற பிரகிருதிகள் போலவும் தமிழர்களாலேயே பார்க்கப் படுகின்றனர். ஆங்கிலம் தெரியாத வர்கள்கூட ஆங்கிலத்தில் சில சொற்களையாவது சேர்த்துப் பேச எத்தனிக் கிறார்கள். தங்களைத் தமது குழந்தைகள் டடி, மம்மி என்று அழைப்பதை விரும்பாத தமிழர் இருந்தால் அது மிக அரிதான நிகழ்வாகவே இருக்கும்.
தங்கள் குழந்தைகளைக் கூட, பெயர் சொல்லி அழைப்பதற்குப் பதிலாக பேபி, பபா, சூட்டி, நோனா என்றே அழைக்கின்றார்கள். இவை அந்நிய ஆங்கிலேய ஆட்சியின் அடிமைத் தனத்தின் எச்ச சொச்சங்களா என்றால் அதுவும் இல்லை. எச்ச சொச்சங்கள் என்பது இல்லாமல் அழிந்து போகும் வழியில் இருப்பது. ஆனால் இந்நிலையோ இங்கு ஏறுமுகமாகவே உள்ளது.
அக்காலத்தில் இருந்து இக்காலம் வரையான தமிழ்க் கவிஞர், புலவர் எனப்படுவோர், தமிழ் பற்றி வெறும் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் பாணியில், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய முது தமிழ் எனவும், சிவன் தந்த தமிழ் என்றும், கடல் குடித்த குடமுனியாலும் கரைகாண முடியாத தமிழ் எனவும், இனிய தமிழ், இன்பத் தமிழ், தேமதுரத் தமிழ் என்றும் உதவாக் கற்பனைகளை வெளிப்படுத்தி கைதட்டலைப் பெற்றுக் கொள்ள, தமது எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்துள்ளனரே தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. யுனெஸ்கோ நிறுவனம் உலக மொழிகளில் இனிய மொழியாக வங்காள (பெங்காலி) மொழியைத் தேர்ந்துள்ளது.
மேலும், தமிழர் தமக்குத் தாமே, உலகத்தை இணைத்து பட்டங்கள் வழங்கிக் கொண்டார்கள். அகில உலக கவிச் சக்கரவர்த்தி, கவிப்பேரரசு, புரட்சித் தலைவன், புரட்சிக் கவிஞர், மக்கள் திலகம், நடிகர்; திலகம், கப்பலோட்டிய தமிழன், சிபி சக்கரவர்த்தி, உலகப் பொது மறை, உலகத் தமிழர் தலைவன், உலக உத்தமர், அகில உலக தமிழர் தலைவன், அகில உலகக் கதாநாயகன், அகில உலக தமிழ்ப் பேரவை போன்றவை அவற்றிற் சில... அண்மையில் எங்கோ ஓர் பத்திரிகையில் ஒருவர், தேர்தல் முறையை உலகுக்குத் தந்தவர்கள், தமிழர் என எழுதியுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் எங்கோ ஓர் இடத்தில் வாழ்ந்த தமிழர் அந்நாளில் லாட்டரி போன்று குலுக்கல் முறை யில் தம் தலைவர்களைத் தெரிவு செய்தமையைக் காட்டுகிறார். குலுக்கல் மூலம் தெரிவு செய்வது எப்படி தேர்தல் முறையுள் வருமோ? குலுக்கல் முறையில் பெயர் எழுதப்பட்ட ஒரு நறுக்கொன்றைத் தேர்ந்ததைத் தேர்தல் என்கிறாரோ! இதே பாணியில்தான் தமிழ் வளர்க்கப்பட்டதே தவிர வேறல்ல.
தொழில் நுட்பமும், விஞ்ஞானமும் வளர்ந்த போது புதிய படைப்புக்கள் தோன்றின. அவைகளுக்குத் தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்படவில்லை. தட்டச்சு, ஒலிபெருக்கி, வானொலி, மிதிவண்டி, இரயில் வண்டி, பலகனி, கார், ரயில், பஸ், சைக்கிள், டெலிபோன் போன்றவை. அப்படி உருவாக்கப் பட்டவை கூட மொழி வழக்கில் இல்லை. பாவனைக்கு உதவாத சொற்களா கின. உதாரணம்;. மோட்டார் இரதம், தொடரூர்ந்து, தொடர்மாடி, ஈருருளி, பேரூந்து, முண்டக்கூவல் போன்றவை. ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப் படுத்த முனைந்தவர்கள் அவற்றுக்கு ஓர் புதிய இலகுவான பெயர்களை (சொற்களை) உருவாக்கி இருக்கலாமே! அக்காலத்தில் வக்கீல், அலவாங்கு, அலுமாரி, ஆலம், கடவுள், ஆகமம் போன்ற பிற மொழிச் சொற்கள் தமிழில் உள்வாங்கப்பட்டது போலாவது செய்திருக்கலாம்.
ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும், ஸ்பானியரும் தமது பாஷைகளை உலகின் பெரும்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளனர். கல்தோன்றி மண் தோன்றா... எனக் கூறிக்கொண்டிருக்கும் தமிழினமோ, தமிழை எங்கும் வளர்த்ததாகத் தெரியவில்லை. அவர்கள் தாம் போன இடங்களில் வழக்கிலுள்ள பாஷையைப் பேசுவோராகவே மாறியிருக்கின்றனர்.
700 கோடி மக்களில் ஏழு கோடியினரால்கூடத் தமிழ் பேசப்படுவதில்லை என்பதே உண்மை. இதனை அறிந்ததனால்தானோ என்னவோ பாரதியார், 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' எனப் பாடிச் சென்றார். பட்டி மன்றங்களும், சங்கங்களும் வைத்து தமது பெருமைகளையும், போட்டா போட்டிகளையும் காட்டிக் கொண்டிருந்தனர் அக்காலப் புலவர் பெருமக்களாகக் கருதப்பட்டோர். ஓரிருவரைத் தவிர, வயிறு வளர்ப்பதற்காகவே தமிழைப் பயன்படுத்தி கவிதைகள் யாத்ததாகவே தெரிகிறது. அவற்றில் அதிகமானவை அக்கால அரசரைப் புகழ்வதற்காகவே யாக்கப்பட்டவையாகத் தெரிகின்றன. 'வென்றி வளவன் விறல் வேந்தன் எம்பிரான் என்றும் முதுகுக்கிடான் கவசம்...' எனத் தொடங்கும் செய்யுள் இதனை விளக்கப் போதுமானதாகும். விவாத மேடைகள் கூட இவ்வகைத் தனவே. தமிழைப் புகழ்வதில், புழுகுவதில் அவர்கள் செலவழித்த சக்தியை, காலத்தை தமிழை வளர்க்கும் பாணியிலான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து இருக்கவில்லை.
சுவாமி வேதாசலமும், சூரியநாராயண சாஸ்திரியாரும், பாலசுப்பிரமணி யமும் கூட தனித் தமிழை வளர்ப்பதாகக் கூறித் தம்பெயரை முறையே மறை மலை அடிகள்,பரிதிமாற் கலைஞன், இளமுருகன் என மாற்றிச் சென்றார்களே தவிர மக்கள் மனதை மாற்றிட முடியாமல் போய்விட்டது. முயலவில்லையா? முடியவில்லையா? தமிழுக்கு இலக்கணம் கூட ஒரு ஆங்கிலேயரான J.K.Pope என்பவரால் எழுதப்பட்டிருந்தது இந்நிலையை மேலும் விளக்கும். 'தனி ' கூட தமிழ் இல்லையே! தனி என்ற இச்சொல் சிங்களத்திலும் இதே கருத்தோடு பாவிக்கப்படுகிறது. ஆக பாளியிலும் இச்சொல் இருக்கலாம்.
ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் தமிழில் பாடியதனால் தமிழை வளர்ப்பதாக நினைத்தார்கள். ஆனால் அவைகளே தமிழர்தம் கதைகள் என்றவாறான மாயையை மட்டுமே ஏற்படுத்தி இருக்கின்றன. தமிழுக்கு உயிரான ஐம்பெருங் காப்பியங்கள் கூட பௌத்த, சமணர்களால் எழுதப்பட்ட வையே என்பதுகூடத் தமிழர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இன்னொன்றையும் இங்கு கூறியே செல்ல வேண்டியுள்ளது. தமிழ் இந்து சமயத்தவர்களின் மொழி என்று உரிமை கொண்டாடும் வகையில் தமிழரின் செயற்பாடுகள் அமைந்திருந்தமையும், தமிழ் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கக் காரணமாயின. இந்தியாவில் வாழும் 90 வீதத்துக்கும் அதிகமான இந்துக்கள் தமிழ் பேசுவோரல்லர். தமிழ் காப்பியங்கள் பெரும் பாலானவை இந்து சமய நூல்களாக இருந்தமையும், தமிழைக் கற்பதில் மற்றைய சமயம் சார்ந்தோர் பின்னிற்கும் நிலையை உருவாக்கி இருக்க லாம். பிற சமயத்தவரைத் தமிழராக உள்வாங்கும் மனோ நிலையும் இவர் களிடம் இருக்கவில்லை. தமிழ் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே உரியது என்ற மனப்பாங்கும் காரணமாக அமைகின்றது தமிழின் தற்போதைய நிலைக்கு.
இதனை இலங்கையின் வடக்கில் பரம்பரையாகத் தமிழ் பேசிக் கொண்டு சௌஜன்யமாக வாழ்ந்து கொண்டு இருந்த அமைதி விரும்பிய ஒட்டுமொத்த முஸ்லிம்களை, அவர்கள்தம் பிறந்தகத்தை விட்டே ஈவிரக்கமின்றி, அவர் களது சொத்துக்களை அபகரித்துக் கொண்டு தமிழருக்கு விடுதலை பெற்றுத் தருவதாகக் கூறி, போராட்டம் நடத்திக் கொண்டிருந்த புலிகள் (தமிழரான முஸ்லிம்களை ) விரட்டியடித்தது நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் வருடப் பிறப்பு என சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அதனை இந்துக்கள் மட்டுமே மதத்தோடு சம்பந்தமுள்ளது போன்று கொண்டாடுகின்றனர். தமிழ் பேசும் கிறிஸ்தவர்களோ, முஸ்லிம்களோ அதனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அதே வேளை தை முதலாம் திகதியை சாதி, சமய வேறுபாடின்றி உலகில் அனைவரும் கொண்டாடுகின்றனர் என்பது அம்மக்கள் புதுவருடத்தை சமயம் சார்ந்ததாகக் காட்டிக் கொள்ளாததே காரணம்.
பொருளாதார, வர்த்தக நோக்கு கொண்டதாகவே நாட்டு நடப்புகள் அமைந் திருந்ததால், தமிழகத்திலேயே கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை கொடுத்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் துறை என்பது தமிழை ஒரு பாஷையாகக் கற்பிப்பதற்காக மட்டும் பாவிக்கப்படுவதே தவிர, தமிழ் வளர்ச்சிக்காக அனைத்துத் துறைகளும் தமிழில் கற்பிக்கப்படுவதில்லை. தமிழர்களுக்கும் தமது மொழியில் இருக் கும் பற்றைவிட அதிகமாக ஆங்கிலத்தில் கற்று, அயல் நாடுகளில் வேலை செய்து பொருளாதார ரீதியில் உயர்வான இடத்தைப் பிடிக்கும் போக்கே மேலோங்கி நிற்பதால், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும்கூட தமது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள வர்த்தக நோக்கில் மக்களின் தேவைக்கு இரைபோடுவதால், தமிழும் தானாகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படு கின்றது.
சுப்பிர மணிய பாரதி கூறியபடி பிறநாட்டு நூல்கள் தமிழ் மொழியில் பெயர்க் கப்பட்டு இருந்தால், தமிழர் ஆங்கிலம் படித்துத்தான் தம் அறிவைப் பெருக் கிக் கொள்ள வேண்டும் என்ற இழிநிலை இன்று ஏற்பட்டிராது. தமிழில் அனைத்துத் துறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப நூல்களும் யாக்கப்பட்டு, கற்றலும் நடந்து, தொழில் வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டி ருந்தால் தமிழில் கற்கும் நிலை தோன்றி இருக்கும். அதனை விட்டுத் தமிழை வளர்ப்பதாக மேடைகள் போட்டு முழங்குவதால் தமிழை அதன் அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது. தமிழை ஒரு குறுகிய வட்டத்துள் வைத்துக் கொண்டமையே இவ்விழி நிலைக்குக் காரணம். செம்மொழி அந்தஸ்து பெற்றுக் கொள்வதை விடுத்து, பல் வேறு துறை சார்ந்த சிறந்த நூல்களைத் தமிழில் மொழி மாற்றம் செய்து, அத்துறைகளில் கற்கை நெறிகளையும் வேலைவாய்ப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கலாம்.
தற்போது தமிழில் கடிதம் எழுதுவோர் எண்ணிக்கைகூட வெகுவாகக் குறைந்து கொண்டு போகின்றது. தமது கோரிக்கைள், பிரச்சினைகள்கூட வேற்று மொழியான ஆங்கிலத்திலேயே முன் வைக்கப்படுகின்றன. இதற்கு அரசின் தமிழ் புறக்கணிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் தமது கையெழுத்தைக் கூட ஆங்கிலத்தில் எழுதுவதே பெருமையாகக் கொள்ளப் பட்டு, அதுவே நடைமுறையிலும் உள்ளது. கையெழுத்தை ஆங்கிலத்தில் போடுமாறு யாரும் நிர்ப்பந்தித்து உள்ளார்களா? அது தமிழின் மேல் தமிழ ருக்கு இருக்கின்ற அக்கறையை வெளிப்படுத்துகின்றது. தமது தொழில் ஸ்தாபனங்களுக்கு எத்தனை பேர் தமிழில் பெயர் வைத்துள்ளனர், இந்நிலை எந்த நிhப்பந்தத்தினால் ஏற்பட்டது?
தமிழுக்காகப் போராடிய அனைத்து இயக்கங்களும் கூடத் தமது பெயரை ஆங்கிலத்திலேயே வைத்திருக்கின்றன என்பதை அறியாதோர் யாரோ? LTTE, TELO, EPRLF, EPDP, PLOTE போன்றவை நல்ல உதாரணங்கள். தமது நாய்க்குக் கூட tiger, sheefa, browny, blacky ோன்ற பெயர்களை இடுவதிலேயே பெருமை கொள்கிறார்கள். தங்கள் வீட்டு நாய்க்கும், வேலைக்காரனுக்கும்கூட English தெரியும் எனத் தம் போலி உயர்வை வெளிப்படுத்துகின்றனர். வீட்டுக்கு முன்னால் நாய்கள் கவனம் என எழுதார்.Beware of dogs, please do not park, stick no bills எனவே எழுதுவர்.
கோவணம் அல்லது மார்க்கச்சை, சொக்காய் என்றால் எத்தனை பேருக்கு விளங்கும்?panty, brassier, shirt, banian என்றால் சிறு குழந்தையும் அறிந்து விடும். அந்தளவு தமிழை விட்டு, நாம்- தமிழர் தூரச் சென்று கொண்டு இருக்கின் றோம். 'நாம் தமிழர்' எனக் கட்சிகள் உருவாக்கி தமிழர் எனக் கூறிக் கொள் ளும் அபாக்கிய நிலை இப்போதே தமிழகத்தில் தோன்றியுள்ளது. இதற்குப் பின்னர் 'நாம் தமிழர்' என சத்தியக்கடதாசி முடித்து மார்பில் தொங்கவிடும் நிலை தோன்றாதிருந்தால் சரியே! இந்தியாவில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான மொழிகள் தற்போது அழியும் நிலையை அடைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சரி அது போகட்டும், தமது ஆடைகளிலாவது தமிழ் மணங் கமழ்கின்றதா எனப் பார்க்கின் அது கூட ஆங்கில மோகத்தின் அழுத்தத்தையே பிரதிபலிக் கின்றது. தமது பெயர்களைக் கூட எத்தனையோ பேர் தற்போது ஆங்கில உச்சரிப்பாகத் தெரியும் வண்ணம் மாற்றிக் கொண்டுள் ளனர். உதாரணத் துக்கு ஒன்று இரண்டு மட்டும். பெரிய சாமி அல்லது பெரிய தம்பி என்பதைச் சுருக்கி 'பெரி' என வைத்துக் கொண்டு உள்ளார்கள். கிரிதரன் என்பதைச் சுருக்கி Giri 'கிரி', ஹரிதரன் Hari, மரியதாசன் என்பதை Mari 'மரி' (செத்துப் போ)என வைத்துள்ளார்கள். இவர்கள் தாங்கள் தமிழர் என்று சொல்வதற்குக் கூட வெட்கப்படுகின்றார்கள் என்ற அவல நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது, தமிழர்களாலேயே என்பது இதிலிருந்து தெரியவில்லையா? தங்கள் பிள்ளை களுக்குக்கூட ஆங்கில் பெயர்கள், சமஸ்கிருதப் பெயர்கள். தெய்வங்களின் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்கள் என்பதனால்தானோ என்னவோ ஈவேரா பெரியார் தமிழருக்கு கடவுள் இருக்கவில்லை. கடவுள் என்ற பெயரே கூட வடமொழி எனக்கூறிச் சென்றார்.
தமிழ் ஊடகங்கள் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் எத்தனை ஊடகங்கள் தமது பெயரையாவது தமிழில் வைத்துக் கொண்டுள்ளனர்? நேத்ரா, சக்தி, வசந்தம் இவைகள் வடமொழிச் சொல்லல்லவா! இவர்கள் சமஸ்கிருதம்தான், தமிழ் என்ற மாயையில் உள்ளனரா எனத் திகைக்க வைக்கிறது. போனால் போகட்டும் என அதனை விட்டால், அவர்களின் அத்தனை நிகழ்ச்சிகளும் ஆங்கிலத்தில்தான் எழுதப்படுகின்றன, பேசப்படு கின்றன. இதனை யாராவது தமிழ் வளர்ச்சிக்கான அறிகுறியாக அல்லது ஆரோக்கிய நிலை எனக் கூறலாமா? மேலும் இவற்றைத் தமிழ் ஊடகங்கள் எனவாவது கூறத் துணிவார்களா? அறிவிப்பாளர், நிகழ்ச்சிகளை நடத்துவோர் பற்றிக் கேட்கவே வேண்டாம். இவர்களும் தாம் தமிழர் என்பதை மறந்து விட்டார்களோ அல்லது தமிழரெனச் சொல்லிக் கொள்ள வெட்கப்படுபவர் களோ?அவர்களின் உச்சரிப்பைப் பற்றிப் பேசத் தேவையில்லை. இவர்கள் அனைவரும் வர்த்தக நோக்கம் கொண்டவர்களே. அதனாலேயே தமிழ் படாதபாடுபடுகிறது அவர்களது வாய்களில் ஆலைவாய்க் கரும்பாக! யானை கால் வாழையாக!
அச்சூடகங்கள் தமிழில் எழுதியே தீரவேண்டும் என்பதற்காக எழுதுகிறார்கள். தமிழ் பத்திரிகைகள் தமது பெயர்களை தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினமணி, தினத்தந்தி என்றே வைத்துள்ளன. சிங்களவருக்கு சிங்களத்தில் உள்ள பற்றுக்கூட தமிழர்களுக்கு இல்லையே! சில சமயங்களில் இவர்களின் தமிழிலும் பிழைகள் காணப்படுவதுண்டு. உள்ளடக்கத்தின் கருத்தை திரிபு படுத்தும் வகையில் தலையங்கங்கள் எழுதப்படுகின்றன. தமிழ்ப் பத்திரிகை கள் என்ற வகையில் தமிழ் இலத்திரனியல் ஊடகங்களில் தமிழ் புறக்கணிக் கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் இவர்கள் கண்டுங் காணா மல் இருந்து கொண்டிருக் கின்றார்கள். நமது வேலை செய்தி வெளியிடுவது தானே என்று வாளாவிருக்கின்றனரோ தெரியவில்லை. தமிழைக் காப்பது இவர்களது கடமையில்லையா? ஊடகங்கள் கூட தமிழ் என்றால் இந்து சமயம் என்ற மாயையில் அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்கின்றன.
இப்போதெல்லாம் ஒரு வசனம் தமிழில் பேசுவதாயின், எப்படியோ ஓரிரு தமிழ்ச் சொற்கள் அவ் வசனத்தில் இடம் பெறுகிறதே என நினைந்தே ஆறுதல் கொள்ள வேண்டியுள்ளது. அந்தளவுக்கு அவர்களுக்குத் தமிழ் சொற்கள் பஞ்சமாகிவிட்டதா? அன்றேல், ஆங்கிலம் கலக்காது பேசுவது அநாகரிகம் என நினைந்துள்ளனரா? நாகரிகமற்றவர்களின் அதாவது பெரியார் கூறுவது போன்று காட்டுமராண்டிப் பாஷைதானா? என்னைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு சொற் பஞ்சமும், ஆங்கிலம் கலக்காவிடில் அநாகரிகம் என நினைக்கும் தாழ்வு மனப்போக்கும் என்பேன். பரவாயில்லை அவர்கள் தாம் பாவிக்கும் ஆங்கிலச் சொற்களையாவது சரியாக உச்சரிக்கத் தெரிந்து வைத்திருக்கின்றனரா என்றால் அதுவும் அவர்கள் பாஷையில் Zero ஸீரோவே. உதாரணத்துக்கு ஒரு சொல், எல்லோராலும் எப்போதும் பிழை யாக உச்சரிக்கப்படுவது, மூன்று ஏழுகள் எனக் கூறும் ஆங்கில வார்த்தை Triple ட்ரிப்ள். இதனை Treble (ட்றிBள்) என்பது. காகம் அன்னம் போல் நடக்கப் போய் தன்னடையையும் இழந்தது என்றோர் பழமொழி (பழைய மொழி) அல்ல எனக்கு ஞாபகம் வருகிறது.
பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. நாம் தமிழர் என்போர்கூட ஹெப்பி பர்த் டே happy birth day to you என ஆங்கிலத் தில் song பாடியே, English Cake ஐ knife ல் cut பண்ணுகிறார்கள். ஊடகங்களும் போதாக்குறைக்கு எமது தமிழ் மக்களுக்காக பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுகின்றார்கள் English song பாடி!
இவர்கள்தான் இப்படியென்றால், தமிழ் கற்பிக்கும் ஆசான்கள் தமிழை அழிப்பதிற் செய்யும் சேவையோ அளப்பரியது. உச்சரிப்பென்றால் அவர் களுக்கு என்ன என்றே தெரியாது. அது என்ன விலை எனக் கேட்காதிருந் தால் சரியே! அவர்கள் எப்படி எழுதுகின்றார்களோ இறைவனுக்கே வெளிச் சம். நீங்கள் எந்த வகுப்பு ஆசிரியர் எனக் கேட்டால், ஐந்தாந்தர பொறுப்பாசிரி யர் எனக் கூறார் Grade five class teacher எனவே கூறுவர்.
ஆசிரியரைக் காணும் மாணவர்கூட Good morning sir, Thank you sir, yes sir, no sir, three bags full sir னக் கூறும்படியே புகட்டப்பட்டிருக்கின்றனர். முன்னிலைப் பாடசாலை கள் மொன்டிசூரி. அதற்கு தமிழென ஓர் பாஷை இருப்பதே தெரிவதில்லை. twinkle twinkle little star, Ba ba blackship விர உலகமே இல்லை. என் தகப்பனார் காலத் துக்கு முன்னரும் இதே rhym தான். இதனைப் படிப்பதையே தமிழரும் பெருமையாக நினைத்துக் கொண்டுள்ளனர்.
அரசின் புத்தக வெளியீட்டுக் குழுவும் விட்டேனா பார் என கங்கணம் கட்டிக் கொண்டு தமிழ்க் கொலை முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள் ளனர். தரமற்றவர்களும், தரங் கெட்டவர்களும் அக்குழுவில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனரோ என எண்ண வைக்கின்றது.
தற்போதைய தமிழ் சினிமாப் பாடல்கள் தமிழைக் கொலை செய்வதற்காகவே புனையப்படுவதாகத் தெரிகின்றது. 'கொலவெரி' விளங்குகின்றதா? கலாசாரச் சீரழிவு வேறு. சின்னத்திரை நாடகங்கள் சிறிது பரவாயில்லை. ஆனால் வன்செயல், பிறர் மனை கவர்தல் என்ற கட்டுக்கோப்புள்ளும் சிக்காதவை மிக அரிதாகவே உள்ளன. இவற்றில் இருந்தெல்லாம் தமிழ் தப்பிப் பிழைத்து வாழும் மொழியாக நிலைக்கும் என்பது கேள்விக் குறியே! எப்படி ஐயா தமிழ் வாழும்?
Good morning, Good evening, Good night போன்ற ஆங்கில வாழ்த்துக்களே ஏறத்தாழ அனைத்துத் தமிழர்களின் வாயிலிருந்தும் வருபவை என்பதை யாராவது மறுக்கப் போகிறார்களா? மேலும்,Hi, Bye, yeah, hello, ok, very good, very bad, fine, nice, super, well done, so sorry, sir, madam, fantastic, see you, I don’t care, thank you, take care, have a nice day, wish you all the best, best of luck, I love you, god bless you, January, February… , Monday, Tuesday…, school, college, tution, results, exam, time table, slipper, shoe, brush, paste, soap, hotel, lunch, dinner, breakfast, bed, table, TV, Radio, Computer, one, two, three…, ten o’ clock, uncle, aunty, cousin, brother, sister, master, student, teacher, principal, vaction, holiday, trip, tour, art, music, history, geography, science, maths, book, pencil, pen, eraser, ruler, bag, water bottle, uniform, tie, desk, chair, blackboard, white board, chalk, marker, exam, term, time table, holiday, vacation, tour, etc., etc. போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களும் சொற்றொடர்களுமே தமிழரின் வாழ்வில் பின்னிப் பிணைந்து நாளாந்தப் பாவனையாகி உள்ளன. அவற்றை எழுதப்புகின் அது முடிவற்றுப் போய்விடும். out of sight is out of mind என்ற ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்த விரும்புகின்றேன். பார்வை யில் இல்லாதது என்பது புழக்கத்தில் இல்லாததே. அப்படியானவை மனதை விட்டும் மறைந்துவிடும். இது பாவனையற்றுப் போய்விடும் என்பதையே வலியுறுத்தும் உண்மை. தமிழும் அது மக்களை விட்டு ஒதுங்கிவிடும். மறக்கப்பட்டு விடும். அழிவை அடைந்துவிடும், அதுவும் தமிழர்களாலே! ஒரு காலத்தில் தமிழன் என்றோர் இனமிருந்தது எனப் பாடவேண்டிவருமோ!
Transliteration என்றொரு வழக்கு ஆங்கிலத்தில் காணப்படுகின்றது. ஒரு பாஷை யை வேறோர் வரிவடிவத்தைப் பாவித்து எழுதும் முறை. மனிதன் என்பதை Manithan என்பது போல். அக்காலத்தில் அரேபியர் இந்தியா, இலங்கையில் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்குத் தெரிந்த தமிழ் மொழியின் ஒலி வடி வைப் பாவித்து, 'அரபுத் தமிழ்' என்ற ஒன்றை உருவாக்கி, நிறைய அறிவு சார்ந்த புத்தகங்களை ஆக்கிச் சென்றுள்ளனர். அவர்கள் தமிழை எழுத வாசிக் கத் தெரியாத நிலையில், பேச்சு வழக்கைப் பாவித்து சிறப்பான தமிழ்ப் பாஷை ஒன்றை அரபியில் ஆக்கித் தந்து சென்றுள்ளார்கள். இன்றும் அப்படி யான புத்தகங்கள் இஸ்லாமியரிடையே புழக்கத்தில் உள்ளன. அரபு எழுத்தில் இருக்கும் புத்தகங்கள் வாசிக்கும் போது கருத்துச் செறிந்த தமிழ் ஒலி வரி களாக வெளிவரும். இவ்வாக்கம் மூலம் தமிழ் அரேபியாவுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அவர்கள் வளர்த்த அளவிலாவது நாம் செய்திருக்கிறோமா? தற்போது இந்நடைமுறை ஆங்கிலம் தெரியாத தமிழர்களாலும், தமிழில் இலத்திரணியல் சாதனங்களில் எழுதும் திறன் அற்றவர்களாலும், தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதும் நிலை தோன்றியுள்ளது. இது தமிழ் எழுத்துக்கள் வழக்கிழந்து போகும் நிலையைத் தோற்றுவித்தாலும், தமிழ்ப் பேச்சு வழக்கை இல்லா தொழிக்காது என்ற வகையில் சிறிது ஆறுதல். முன்னைய காலங்களில் இங்கிலாந்து சர்வகலாசாலையில் இளமானித் தேர்வுக்குத் தமிழை ஒரு பாடமாக எடுப்பவர்கள், இதே ட்ரான்ஸ்லிற்ற ரேஷன் முறையிலேயே விடை எழுதியதாகத் தெரிகிறது. ஆனால், தற் காலத்திலோ தமிழ் பற்றிய ஆராய்ச்சி கூடத் தமிழில் செய்யப்படுவதாகத் தெரியவில்லை. ஆய்வறிக்கைகள் ஆங்கிலத்தில், வாசிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
இன்று உலகளாவிய ரீதியில், புலம் பெயர்ந்தோர் என்ற பெயரில், புலிக ளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, தமிழர் உரிமை பற்றி வாய் கிழியக் கத்திக் கொண்டு திரிபவர்களது குழந்தைகள், நோர்வே, ஜெர்மன், பிரெஞ்சு, டெனிஷ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் கற்றுக் கொண்டும், பேசிக் கொண்டும் திரிகின்றார்கள் என்பது பதிவாக்கப்படுகின்ற அவலம். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் வீடுகளில் பேசும் பாஷை கூட தமிழ் அல்ல என்பதே வெட்கத்துடன் முன்வைக்கப்படுகின்றது.தமிழ்த் தாயும் தனது தமிழ்ப் பிள்ளைகளும் தமிழில் உரையாட முடியாமல் அந்நிய பாஷைகளில் உரையாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது புதிய விடயமுமல்ல, நமக்கு அதிர்ச்சியைத் தரவுமில்லை.
காரணம் இலங்கையில் பல்லாண்டு காலமாக இருந்த, தற்போதும் இருந்து கொண்டிருக்கின்ற நடைமுறை. மேல் மட்டச் சமூகம் தமது வீட்டுப் பாஷை யாக ஆங்கிலத்தைக் கொண்டு, தம் பிள்ளைகளுடன் தினமும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருப்பதே அது. முன்னவர்கள், காலச் சக்கரத்தின் பிடியில் அகப்பட்டு அங்கலாய்ப்போர். பின்னவர்கள், தமிழில் பேசுவதை அந்தஸ்து குறைவாக நினைப்போர். தமிழில் தமது பிள்ளைகளுடன் பேசு வோர்கூட பிறருக்கு முன்னால் தமது குழந்தைகளுடன் ஆங்கிலத்தில் உரையாடும் பண்பை பெருமையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
தமிழர் தற்போது உலகில் பல பாகங்களில் வாழ்ந்து வருவது என்னவோ உண்மைதான். அத்தோடு அந்நாடுகளில் கணிசமான அரசியல் ஆதிக்கம் பெற்றிருப்பது கூட மறுக்க முடியாததே. பொருளாதாரத்தில்கூட அவர்கள் குறிப்பிடக்கூடிய அளவு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், இவைகளை வைத்துக் கொண்டு தமிழ் வாழ்கின்றது எனக் கூறலாமா? இலங்கை பற்றிய பிரச்சினைகளின் போது தமிழர்கள் தமது இருப்பை அந் நாடுகளில் தக்க வைத்துக் கொள்வதற்கான ஓர் ஆயுதமாகப் பாவிப்பதற்கே தமிழுக்காக, தமிழருக்காகக் குரல் கொடுக் கிறார்களே தவிர,தமிழின் வளர்ச்சி சம்பந்தமாக அவர்கள் எவ்வித முயற்சிகளும் மேற்கொண்டிருக்கவில்லை என்பன அந்நாடுகளில் எத்தனை தமிழ்ப் பாடசாலைகள் தோன்றியுள்ளன? எத்தனை தமிழ் பத்திரிகைகள் பிரசுரமாகின்றன? எத்தனை வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கின்றன? என்பதனால் பெறப்படும். அப்படியே ஒன்றிரண்டு தோன்றி இருந்தாலும் அவைகள் தமது, சுயதேவைகளை, குழு மோதல்களை, தற்காலிக இலங்கை எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே இயங்குபவையாகக் காணப் படுகின்றன. சாதாரண காலங்களில் தாமேகூட தமிழைப் பேசுவதில்லை என்பதே உண்மை. தமிழ் பேசும் சூழல் அந்நாடுகளில் இல்லாதிருப்பதே காரணம் எனக் கூறுவதையும் கண்டிருக்கிறேன். வீட்டிலும் அச்சூழல் இல் லாமற் போனது விந்தையே! அன்று புலவர்கள் வயிறு வளர்ப்பதற்காக கவிதை பாடினர். ஆனால் இன்றோ வயிறுவளர்க்க தம் பாஷையையே கைவிட்டு விட்டார்கள்.
தமிழ் தெரியாத தமிழர் எனத் தம்மைப் பெருமையாகக் கூறிக் கொள்வோ ரும் வெளிநாடுகளில் இன்றும் உள்ளனர். பிஜி, மொரீஸியஸ் போன்ற நாடு களில் வாழ்வோர். பாவம் இவர்களது முன்னோர்கள் வறுமை காரணமாக, வெள்ளைக்கார ஆட்சியில் அடிமைகளாகக் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஏற்றுமதி செய்யப்;பட்டவர்கள். இப்போது இவர் களின் சந்ததியினரே, தாம் தமிழர் என்பதை மட்டும் அறிந்து வைத்துள்ளனர் என்பதை நினைக்கும் போது தமிழ் என்றோர் மொழி இருந்தது, நமது முன்னோர் எல்லோரும் அப்பாஷையைப் பேசியவர்கள் என இனிவரப் போகும் சமுதாயம் கூறிக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுமோ என நினைக் கத் தோன்றுகிறது. இங்கும் சிங்களவர்களுடன் திருமண பந்தத்தில் ஈடுபட் டுத் தமிழை இழந்து நிற்போர் குறிப்பிடக்கூடிய அளவு இல்லாவிட்டாலும், அவர்களின் சந்ததியினர் தமிழ் தெரியாத தமிழராக வாழ்ந்து கொண்டு இருக் கின்றார்கள் என்பது வெளிப்படாதிருக்கும் உண்மை.
இன்னும் தமிழ்த் தலைவர்களின் ஆடைகள், அவர்கள் பேசும் மொழிகள், கலாசாரங்கள், தமிழ்க் கல்லூரிகளின் பெயர், அங்கு ஆங்கிலம் பேசாதோர் புறக்கணிக்கப்படும் நிலை, தமிழ் பாடசாலைப் புத்தகங்களில் தமிழ்க் கொலை, உணவைக்கூட தமிழர் உணவாகச் சாப்பிடுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, உண்ணும் முறையில்கூட ஆங்கில நாகரிகம் போன்றவை களினால் தமிழ் அழிக்கப்படுவதை எழுதிக் கொண்டே போகலாம். கட்டுரை வளர்ந்துவிடும் என்பதால் இறுதியாக ஒன்றைக் கூறி விடை பெறுகிறேன். இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழுக்காகப் பல்லாயிரம் உயிரைத் தமிழரும் ஏனையோரும் இந்நாட்டில் பலி கொடுத்துள்ளமை ஏன் எனத் தெரியவில்லை? இதற்கு தமிழ் தவிர்ந்த புறக் காரணிகள் காரணமாகலாம். யாருக்காவது புரிகின்றதா? அரசியல்வாதிகளாவது தமது இருப்புக்கு ஏதாவது பிரச்சினைகளை முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தம்! அப்பாவி மக்களுக்கு என்னவோ?
பின்வரும் ஆலோசனை தலைப்புக்கு பொருத்தம் இல்லாவிடினும், தமிழ ரின் சிறப்பு வாழ்வுக்கு உகந்ததாகக் கொள்ளக் கூடியது. இன்று இலங்கைத் தீவில் தமிழர், சிங்களவர் என்ற பிரச்சினை கொழுந்து விட்டெரிந்து, யுத்தம் முடிந்தாலும், அணையா நெருப்பாக நீறுபூத்துக் கொண்டு இருக்கின்றது. வெளிநாடு சென்ற தமிழர்கள் தமது நல்வாழ்வுக்காக தமது சுற்றம், சூழலை மறந்து, தமிழையும் இழந்து, அந்நிய மொழியைத் தம்மொழியாகக் கொண்டு வாழ முடியும் என்றால், உங்கள் நாட்டில், உங்கள் சகோதரர்களாக, வாழும் சிங்களவருடன் அவர்களது மொழியைக் கற்று சீரான, சிறப்பான வாழ்க் கையை மேற்கொள்ளலாமே.
முஸ்லிம்கள் தமது மார்க்கத்தையும், கலாசாரத்தையும் பேணிக் கொண்டு, தமிழையும் புறக்கணிக்காது, சிங்களம் பேசிக் கொண்டு சிங்களவருடன் ஒற்றுமையாக இரண்டறக் கலந்து வாழ்கிறார்களே! இலங்கை முழுவதும் தமிழ் மூலப் பாடசாலைகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதற்கும் முஸ்லிம்களே காரணம் என்பதை மறுப்பவர் யாரோ?
சிங்களம் பேசும் கத்தோலிக்கரும் பிரச்சினைகளற்று ஏனைய சிங்களவ ருடன் சேர்ந்து வாழ்வதும் அறிதற்குரியதே. அது போன்றே பர்கர் (Burgers) எனப்படும் பறங்கியரும், மலே மொழி பேசும் (Malays) மலாயர்களும், சீன மொழி பேசும் (Chinese) சீனர்களும் சிங்களத்தையும் ஏன் சிலர் தமிழையும் கூடப் பேசிக் கொண்டு அமைதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனரே அவர்களிடம் பாடம் படித்தால் என்ன? தமிழும் வாழும், தமிழரும் வாழ லாமே! சிங்களவரையும் தமிழைப் பேச வைக்கலாமே!
பேச்சு வழக்கில் உள்ள மொழி அழியாது, அது வாழும் மொழியாகும் என்ற அடிப்படையில் சிங்களவரையும் தமிழைப் பேச வைப்பதன் மூலமும் தமிழை அழியாது காப்பாற்றலாமே! முயற்சிப்போமா! தமிழ் வாழ வேண்டு மெனின் தமிழரின் கவனத்தைப் பெற வேண்டிய ஓர் கருத்து. உங்கள் கண்களைத் திறக்க வைப்பதற்காக, 'தாய்மொழி என்பதற்கு யுனெஸ்கோ தரும் விளக்கம்' பதிவாகின்றது. ஊன்றிக் கவனிப்பின் இதனை அபாய ஒலியாகக் கொள்ள முடியும். தமிழகத்திலும், இங்கும் ஹிந்தி, சிங்கள எதிர்ப்பும், அழிப்பும் நடத்திக் கொண்டிருப்பதால் நமது தமிழ் வாழுமா? அன்றேல் வேற்றுமையில் ஒற்றுமையை வளர்த்து அவர்களையும் நமது மொழியைப் பயில, பேச வைத்து தமிழை வாழும் மொழியாக இவ்வையகத் தில் மிளிர வைக்கலாமே! அமைதி வாழ்க்கை வாழலாமே! நம்மில் ஏற்படும் சிறு மாற்றம் உலகிலேயே பெரும் மாற்றங்களை ஏற்படுது;திவிடலாம். முயலலாமா?
அ). ஒருவன் சிறுவயதில் கற்றுக்கொண்டதும், சிந்திக்கவும், கருத்துக்களைப் பரிமாறவும் இயல்பாக ஒருவனுக்கு உதவுவதும் ஆகிய ஒன்றே தாய்மொழி
ஆ). தன்னைப் பற்றியும், உலகைப் பற்றியும் கருத்துக்களை முதன் முதல் உருவாக்கவும், வெளியிடவும் உதவுவது தாய்மொழி.
இ). இவ்வாறாகப் பயன்படும் மொழி தாய்-தந்தையரின் மொழியாக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை.
ஈ). ஒருவனின் வாழ்க்கையில் தாய்மொழிகள் மாறிக்கொண்டு போகலாம்.
அண்மையில் தமிழ் சமூகம் என்ற பெயரில் எழுதப்பட்ட அறிக்கை ஆங்கிலத் தில் எழுதப்பட்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகக் கூறப்படுவது மேற் கண்ட கருத்தைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.
அறிதலுக்காக சில உண்மைகள்:
UNESCO distinguishes four levels of endangerment in languages, based on inter-generational transfer:
Vvulnerable: Most children speak the
language, but it may be restricted to certain domains (e.g., home).
|
Ddefinitely endangered: Children no longer learn the
language as mother tongue in the home.
|
Sseverely endangered: Language is spoken by
grandparents and older generations; while the parent generation may
understand it, ttthey do not speak it to children or among themselves.
|
Ccritically endangered: The youngest speakers are grandparents
and older, and they speak the language partially and infrequently.
|
While there are somewhere around six or seven thousand languages on Earth today, about half of them have fewer than about 3,000 speakers. Experts predict that even in a conservative scenario, about half of today's languages will go extinct within the next fifty to one hundred years. Accordingly, the list above presents only a sample of the approximately 3,000 currently endangered languages.
The Effects of a Dominant Language
"A language is said to be dead when no one speaks it any more. It may continue to have existence in recorded form, of course--traditionally in writing, more recently as part of a sound or video archive (and it does in a sense 'live on' in this way)--but unless it has fluent speakers one would not talk of it as a 'living language.' . . . (David Crystal, Language Death. Cambridge Univ. Press, 2002)
"Every 14 days a language dies. By 2100, more than half of the more than 7,000 languages spoken on Earth--many of them not yet recorded--may disappear, taking with them a wealth of knowledge about history, culture, the natural environment, and the human brain."
(National Geographic Society, Enduring Voices Project)
"I am always sorry when any language is lost, because languages are the pedigree of nations."
(Samuel Johnson, quoted by James Boswell in The Journal of a Tour to the Hebrides, 1785)
The Effects of a Dominant Language
"A language is said to be dead when no one speaks it any more. It may continue to have existence in recorded form, of course--traditionally in writing, more recently as part of a sound or video archive (and it does in a sense 'live on' in this way)--but unless it has fluent speakers one would not talk of it as a 'living language.' . . . (David Crystal, Language Death. Cambridge Univ. Press, 2002)
"Every 14 days a language dies. By 2100, more than half of the more than 7,000 languages spoken on Earth--many of them not yet recorded--may disappear, taking with them a wealth of knowledge about history, culture, the natural environment, and the human brain."
(National Geographic Society, Enduring Voices Project)
"I am always sorry when any language is lost, because languages are the pedigree of nations."
(Samuel Johnson, quoted by James Boswell in The Journal of a Tour to the Hebrides, 1785)
No comments:
Post a Comment