வட்டி – ஓர் சிறப்புப் பார்வை...
புனித குர்ஆனில் காணப்படாத இச்சொல் கையாளப்படும் நிலைமைக ளும் குர்ஆனிய தடையும் பற்றிய பக்கச்சார்பற்ற ஓர் ஆய்வே இவ் வாக்கம். வட்டி என்ற சொல் குர்ஆனில் காணப்படாத நிலையில்> அது அறிமுகமாகியுள்ள வழியைக் காண்பது> உண்மை நிலையை> அதன் செல்லுபடியாகும் தன்மையை> அதன் நேரடி> பக்க விளைவுகளை கூடிய ளவு அறிய வைப்பதுடன்> அது தொடர்பான பிரச்சினைகளை இனங்கண்டு குர்ஆனிய வழியில் தீர்வைக் கண்டறிய உதவும். குர்ஆனியச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் உண்டான பிரச்சினை எனக் கொண்டால்> உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகவே இறக்கியருளப்பட்ட புனித குர்ஆன்> பிரச்சினைகளை உண்டாக்கி இருக்குமா? இதுவே இவ் வாய்வுக்கான காரணமாக அமைந்தது.
எந்தச் சட்டத்தால் பிரச்சினைகள் தோன்றியுள்ளன எனக் கருதுகின் றோமோ> அந்தச் சட்டத்தை ஆராய்வதே அறிவுடமை என்பதுடன்> விவேக மானதும்> ஏற்புடையதும் என்பதனாலும்> மேலாக குர்ஆனியச் சட்டங் களில் பிரச்சினை இருப்பதாகத் தோற்றினால் குர்ஆனைத் தவிர வேறு எதுவும் ஏற்கப்படாது என்பதனாலும்> அப்பிரச்சினை பற்றிய குர்ஆன் வசனங்களை ஆய்வு செய்ய வேண்டிய கடப்பாடுள்ளது.
அந்த அடிப்படையில் புனித மாமறை 3:130 இல் காணப்படும் வசனம் ஒன்றே> வட்டி என்ற வகையில் நாம் கைக்கொள்ளுவதற்கு ஆதாரமாகக் காணக்கூடிய ஓரே வசனமாக உள்ளது. இதுவே கொடுக்கல் வாங்கலில் நடைபெறும் மிகப் பெரும் அநியாயம் ஒன்றினைத் தடைசெய்யும் கட்ட ளையாக உள்ளது. ஆல இம்றான் 3:130
–
'இறைநம்பிக்கையாளர்களே! இரட்டிப்பாக்கப்பட்ட பன்மடங்காகிவிடும் வட்டியை நீங்கள் தின்னாதீர்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங் கள்'. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் அறிவது தெளிவைத் தரும். ‘O ye who
believe! Devour not usury, doubled and multiplied; but fear Allah; that ye
may (really) prosper.’
இது றிபா வுக்கு (அல்லாஹ் கொடுத்திருக்கும் அளவு கடந்த அநியாய வட்டியைக் குறிக்கும்) 'யூஸரி' யை உட்கொள்ளாதீர்கள் என்ற கருத்தைத் தருகிறது. மேலாக குர்ஆன் மூலமொழி பயன்படுத்தி உள்ள வார்த்தை இவ்விடத்தில் அதிகாரபூர்வமானது.அரபி மொழியில் குர்ஆன் கையாண்ட சொல் றிபா Riba. இந்த' 'றிபா' (Riba ) என்ற அரபிச் சொல்லுக்கு ஆங்கில மொழி பெயர்ப்பாளர் அனைவரும் USURY என்ற சொல்லையே பயன் படுத்தி உள்ளனர். தமிழ் மொழி பெயர்ப்புகள் மட்டுமே வட்டி என்ற சொல்லை 'றிபா' வின் கருத்தாகத் தந்துள்ளனர். வட்டி என்பதற்கு வழக் கிலுள்ள ஆங்கில வார்த்தை Interest என்ற சொல்லே என்பது சிறு குழந் தையும் அறிந்ததே நாம் முன்னர் கருதியது போன்று குர்ஆனிய வசனம் வட்டி என்ற சொல்லை உபயோகிக்கவில்லை என்பதுடன் குர்ஆனியச் சட்டம் எற்படுத்தி உள்ள பிரச்சினை அல்லவென்பது. உடனடியாகவே அறியக் கூடியதாயுள்ளது.
உண்மையை அறிய விழைவோர் சொற்களைப் பார்ப்பது அவசியமற்றது. எச்சொற்கள் கையாளப்பட்டாலும்> அச்சொற்கள் குறிக்கும்; உண்மை> நோக்கம் என்பனவே அறியப்படல் முக்கியம். பாதைக்குக் குறுக்கே மஞ்சள் கோடு போடப்பட்டிருந்தால்> போக்குவரத்து விதிகளில் ஆகக் குறைந்தளவு அறிவுள்ளவனும்> அது பாதசாரிகள் பாதுகாப்பாக அப்பாதை யைக் கடப்பதற்காகப் போடப்பட்டுள்ளது என்பதையும்> அதில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமையையும் அறிவான். அதே நேரம் வாகனச் சாரதிகள் கூட> மஞ்சள் கோட்டில் ஒருவரைக் கண்டால்> அப்பாதையில் தொடர்ந்து செல்லும் உரிமை தற்காலிகத் தடைக்கு ஆளாவதை அறிவான். உண்மையில் அம்மஞ்சள் கோட்டுக்கு என்று ஒரு பொருளும் கிடையாது. பாவிக்கப்பட்ட இடம் அதற்குப் பொருளையும்> பெறுமதியை யும்> உபயோகத்தையும் தருகிறது. ஆனால் அம்மஞ்சள் கோட்டை வீதி ஒழுங்கு என்ற புத்தகத்தில் அச்சிட்டு அது பாவிக்கப்படும் காரணம்> நோக்கம்> தேவை போன்றவற்றைப் போடும் போது அக் கோட்டிற்குப் பொருள் கிடைக்கிறது. அந்தப் பொருளில் அதற்குரிய பாதையில் போடும் போதுதான் அதன் பலன்.
அது போன்றதே அல்லாஹ்வின் சட்டங்களைப் பாவிப்பதும். அதாவது ஜனரஞ்சகமான> வாகனப் போக்குவரத்து அதிக மான பாதையில் அதனை இடாது> அதற்குப் பொருத்தமில்லாத எங்கோ போட்டால்> அது பொருளை இழப்பதோடு பயனற்றதாகவும்> வீணாகவும் மாறிவிடும். அல்லது வாகனமே ஓடாத> அல்லது மனித நடமாட்டமே அற்ற வீதியில் போடுவது கேலிக்குரியதாகிவிடும்.
நாம் இதுகாலவரை அறிந்துள்ளபடி> வட்டி (INTEREST) என்ற பதம்> பணக் கொடுக்கல்-வாங்கலில்> கொடுக்கப்பட்ட முதலுக்கு மேலதிகமாக சிறு தொகையைப் பெறுவது> அத்தொதையை இலாபமாகப் பெறுவதற்காக ஓர் முதலைக் கொடுப்பது> அந்நடவடிக்கை தொடர்பாகக் கணக்குப் பார்ப்பது> போன்ற அதற்கு உடந்தையான காரியங்களில் ஈடுபடுவது அனைத்துமே வட்டி என்ற பெயரால்> தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவமாகக் கூறப் படுகிறது. இதனையே இற்றைவரை முஸ்லிம்கள் விரும்பியோ> விரும்பா மலோ செய்து வருவதாகக் கூறுகின்றனர். அறிந்த வரையில் இச்சட்டம் மீறப்பட்டு வருவது கண்கூடாக காணக்கூடியதே. மேலும்>இந்நிலை வட்டி பெறுவதில் இருந்து மட்டும் முஸ்லிம்கள் தவிர்ந்துள்ள நிலையை அறியக்கூடியதாகவும் உள்ளது. இச்செயல் சட்டத்தை மதிக்கும் முறை யெனக் கருத முடியவில்லை. மாறாக> கடன் கொடுப்பதைத் தவிர்த் துள்ளதால் ஏற்பட்டுள்ள சாதக விளைவே ஆகும். பணத்தேவை உள்ளவர் களுக்கு> ஏதாவது வகையில் கொடுப்பனவு நடந்திருந்தால் தானே முதலீட்டுக்கு மேலதிகமாகக் கிடைக்கும் வட்டி பெறப்பட்டிருக்கும். இன்னொரு வகையில் கூறின்> கடன் கொடுக்கப்படுவதில்லை என்ற தன்மையே.
வட்டி என்பது ஆங்கிலத்தில் interest என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. இதன் கருத்து Oxford
Dictionary யில் பின்வருமாறுள்ளது. The extra money you pay back when you borrow
money or that you receive when you invest money. அதாவது கடனுக்கு மேலாகவோ வைப்பீட்டுக்கு மேலாகவோ கொடுக்கப்படும் அல்லது பெறப்படும் பணத்தைக் குறிக்கின்றது. இதிலிருந்து முதலீட்டுக்கு இலாபம் பெறுவது றிபா அல்ல அது வட்டி என்பது தெரிகிறது. முதலீட்டுக்கு அதாவது வியாபாரத்துக்கான முதலீட்டுக்குக் கிடைக்கும் இலாபம் றிபா அல்ல. இந்தக் கருத்தைக் கொண்ட வட்டி என்ற சொல் எந்த வகையிலும் குர்ஆன் தடைசெய்துள்ள 'றிபா'வோடு சம்பந்த மில்லாதது. றிபாவை வட்டி என்ற கருதுகோளுக்குள் அடக்குவோ மாயின்> வியாபாரத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு பெறப்படுவதும் வட்டிக்குள் அடங்குகின்றது. இதனை அல் குர்ஆன் 2:275 வியாபாரமும் றிபாவைப் போன்றதே எனக் கூறுவதைக் கண்டிக்கின்றது.
அதாவது நான் முன்னர் குறிப்பிட்டவாறு வட்டி பெறுவதில் இருந்து மட்டுமே முஸ்லிம்கள் விலகி உள்ளனர் என்பது தெளிவு. இது அவர்கள் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும்> வட்டி பெறப்படும் ஒரு தொகையைக் கடனாக> முஸ்லிம் அல்லாதோரிடம் அல்லது அந்தத் துறையில் ஈடுபட்டுள்ள தாபனங்களில் இருந்து பெற்று வருகிறார்;கள் என்பதையும் வெளிப்படுதுகிறது.அதாவது கடன்படுதல் என்ற நடவடிக்கை முஸ்லிம்களிடமும்> கடன் கொடுத்தல் என்ற பண்பு முஸ்லிம் அல்லா தோரிடமும் காணப்படுகின்றது. இந்நிலை இஸ்லாம் கடன் கொடுப்பதைத் தடை செய்துள்ளதோ என்ற எண்ணத்தையும் வளர்க்கும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன்> இலங்கையில் வெளிவரும் பிரபல தமிழ் வார வெளியீட்டில்> இஸ்லாமிய பக்கத்தில்> முஸ்லிம்களின் பெயர்கொண்ட ஒருவர் எழுதியிருந்த கட்டுரையில்> இஸ்லாத்தில் கடன் பெறுவது பாவம் என எழுதியிருந்தார். வாசித்ததும் திகைப்படைந்த நான் உடனடியாக ஓர் மறுப்பை> புனித குர்ஆனின் அடிப் படையில் விளக்கமாக எழுதி> அப் பத்திரிகை ஆசிரியருக்கும்> அதன் ஒரு பிரதியைக் கட்டுரையாளரின் பெயருக்கு (அவரது விலாசம் தெரியா மையால்) அதே பத்திரிகைக்கும்> இன்னொன்றை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபைக்கும் பதிவுத் தபால்களில் பெரும் பொறுப்புடன்;> எதிர்பார்ப்புடன் அனுப்பினேன். பத்திரிகை எனது நியாயமான மறுப்பைத் தம் பத்திரிகையில் வெளியிட வில்லை (வெளியிட வேண்டியது கடமையும்> பத்திரிகா தர்மமும் கூட) என்ற வேதனையைவிட> ஜம் இய்யத்துல் உலமா சபையினரிடம் இருந்து 'பெற்றுக்கொண்டோம்' என்ற பதில்கூட வரவில்லை (அது அதிகாரம் பெற்ற மார்க்க அறிஞர் சபை என்ற வகையில் அவர்தம் பொறுப்பு) என்ற நிலை> குர்ஆனியக் கருத்துக் களுக்கு எதிரான விடயங்கள் முஸ்லிம்களாலேயே தேசியப்பத்திரிகை ஒன்றில் வெளியானது சுட்டிக்காட்டப்பட்ட பின்பும் வாளாவிருந்த அலட்சியப் போக்கே என்னைத் திகைப்படைய> அதிர்ச்சியடைய> விரக்தி யடைய வைத்தது (இது ஒரு சட்டத்தை மதிக்கும் பிரஜையின் நியாயமான உரிமை- எதிர்பார்ப்பிற்கு ஏற்பட்ட புறக்கணிப்பு) அச்சபை யினருக்கு> கட்டுரையில் குறிப்பிட்டது போன்ற பிழையான கருத்துக்கள்; மறுப்பின்றி வெளிவரும்போது> பாமர முஸ்லிம்கள் பிழையான வழியில் நடக்கவும்> முஸ்லிம் அல்லாதோர் இஸ்லாத்தைத் தரக் குறைவான மார்க்கமாகக் கொள்ளவும் இடமுண்டு. அதனால்> விசேடமாக முஸ்லிம் கள் எழுதும் இஸ்லாமியக் கட்டுரைகள் அந்நிய மதத் தாரால் வெளியிடப் படும் பத்திரிகைகளில் வெளிவரும்போது> அவர்தம் அறியாமையால் குர்ஆனுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெறாது பார்ப்பதை அவர்கள் உறுதி செய்யும்படியும் எழுதியிருந்தேன். ஆனால் பலனோ பூஜ்யம்.
விடயத்துக்கு வந்தால்> குர்ஆனில்> இன்னோர் இடத்தில் இறைவன் வட்டியை அழித்துவிட்டு தர்மத்தை வளர்ப்பதாகக் கூறியுள்ளான். நாம்> முஸ்லிம்கள் (இஸ்லாத்தை அல்லது குர்ஆனைக் கூறவில்லை) எதனை வட்டி என்று கருதிக் கொண்டுள்ளோமோ? அது இன்று வளர்ந்துள்ள அளவை யாரும் குறைத்து எடைபோட முடியாது. இதனை மறுப்பவரும் எவரும் இல்லை. சுருங்கக் கூறின்> முழுவுலகுமே அந்த வட்டியில் மூழ்கிக் கிடக்கின்றது. இப்போது (தற்போது பின்பற்றப்படும் தடை செய்யப்பட்ட வட்டி பற்றிய சட்டத்தால் ) இறைவனின் பேச்சு பொய்யாகி உள்ளமை போல் தெரிகிறது. (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக). அடுத்து> முன்னொரு போதும் இல்லாதவாறு> இஸ்லாமியரும்> அல்லா தாரும் சம்பந்தப்பட்டு உள்ள தர்ம ஸ்தாபனங்கள் நிறையவே தோன்றி யுள்ளமைமையும் யாரும் மறந்துவிடவோ> மறுத்துவிடவோ முடியாது. இந்த அபரித வளர்ச்சி அல்லாஹ்வின் வார்த்தையை உண்மைப்படுத்தும் வேளை> வட்டியை அழிப்பது என்ற முன்னைய பகுதியில் தோல்வியைத் தழுவியவாறான தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கான காரணம்> (நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் சட்டம் என்பதால் அது) ஆராயப்பட வேண்டி யதே. குர்ஆனில் செய்யப்படும் அவ்வாராய்வே நமது வட்டி பற்றிய தற்போதைய கருதுகோளின் பொய்மையை> செல்லுபடியாகாத் தன்மை யை> நமது அறியாமையை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி விடியலை நல்கி வழிகாட்டிட வல்லது.
முஸ்லிம்களின் வட்டி பற்றிய தற்போதைய நடைமுறை> படுதோல்வி யைக் கண்டுள்ள அதே வேளை> அல்லாஹ் சுபுஹானஹுவதஆலாவின் பேச்சையும் பொய்ப்பித்துள்ள (பிர)மை தெளிவாகிறது. இது. ஒன்று நமது கருதுகோளின் பிழையாக இருக்க வேண்டும். அன்றேல் உலக நடை முறையும்> வல்ல அல்லாஹ்வும்கூட பிழையாக இருக்க வேண்டும். (அல்லாஹ் மன்னிப்பானாக) உலக நடைமுறையை வேண்டுமானால் பிழையெனக் கருதித் தூக்கி வீசிவிடலாம் உண்மையில் அது குர்ஆனியச் சட்டமாயின்.
ஆனால் அல்லாஹ்வின் வசனமே பொய்யாகியுள்ளதை> உண்மை முஸ்லிம்கள் எனக் கூறிக் கொண்டிருக்கும் நாம் முன்னை யதைப் போன்று தூக்கி வீசிவிட முடியுமா? அல்லது அலட்சியம் செய்யத்தான் முடியுமா? வீச முடியவில்லை என்றால் நாம் பின்பற்றி கொண்டுள்ள வட்டி பற்றிய மனித சட்டம் பொருத்தமற்றது என்பதை ஏற்றேயாக வேண்டும்.
நாம் பின்பற்றுவது குர்ஆனினதும்> ஹதீஸ்களினதும் அடிப்படையிலும்> அறிஞர் பெருமக்களென நாம் ஏற்றுக்கொண்டுள்ள சட்ட மேதைகள் சிலராலும் காலத்தின் தேவை கருதி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் யாக்கப்பட்ட சட்டங்கள். அவற்றை நாம் ஷரீஆ சட்டங்கள் என ஏற்றுள் ளோம். நாம் ஏற்றுள்ள வட்டி பற்றிய சட்டம் மேற்கண்ட இமாம்கள் சிலரால் ஆக்கப்பட்டவை. இவைகூட சர்ச்சைக்கு உரியனவாகவே கருதப் படுகிறது! ஆதலால்> அச்சட்டங்கள் பற்றிய அறிதல் ஒன்றே இச்சந்தர்ப் பத்தில் தேவைப்படுவதாகவும்> பிரச்சினையை விளங்கித் தீர்வுக்கான வழிகளை குர்ஆனின் அடிப்படையிலேயே காணக் கூடியதாகவும் இருக்கும். நிச்சயமாக மேற்கண்ட சட்டங்களை யாத்த சட்டவல்லுநர் களான இமாம்கள் குறைத்து மதிப்பிடக் கூடியவர்கள் அல்லர் என்ப தையும் நமது ஆய்வின் போது கருத்திலிருத்துவது> நமது ஆய்வு சரியான வழியில் செல்ல உதவும். இன்றேல் ஓரே வசனத்தில் ஷரீஆ சட்டத்தை யாத்த இமாம்கள் பிழை விட்டுள்ளனர் என்ற அளவோடு ஆய்வை நிறுத்தித் தீர்ப்பைக் கண்டிருக்கலாம். நான் முன்னர் கூறியது போல் உண்மை நிலையை அறிவது என்பதிலிருந்து> தடம் புரண்டு மீண்டும் வேறொரு பிழைக்குள் புகுத்திவிடும். இது சட்டியிலிருந்து நெருப்பில் வீழ்வதை என்பதை ஒக்கும்.
தற்போதைய கையறு நிலை ஷரீஆச் சட்டத்தைப் பின்பற்றுவதால் ஏற் படுகின்றது என்பது தெளிவாக விளங்கும் நிலையில்> அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை முன்னர் கூறினேன். நாம் முற்பந்தியில் அறிந்தது போல் அச்சட்ட இமாம்கள் பிழையான சட்டத்தை இயற்றி இருக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் இயற்றி இருந்தால்> உலகம் அவர் களை இத்தனை காலமும் ஏற்றிருக்காது. இறைதண்டனைகூட அவர் களுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடைபெற்றிர வில்லை. இந்த வகையில் அவர்கள் இயற்றிய சட்டம் குர்ஆனுக்கு முரணானதாக இருந்திராது. அது நிட்சயமாகக் குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு> அன்றைய றிபா வைத் தடைசெய்துள்ள இறை கூற்றை விவரிக்கும் வகையில்> அன்று நடைமுறையில் இருந்த றிபா வெனக் குறிப்பிடப்பட்ட நடவடிக்கையைத் நடைமுறைப்படுத்துவதற்காகக் கூறப் பட்டதாகவே இருந்திருக்கும்.
அந்த வகையில்> சுருக்கமாக> ஷரியாவின்படி> கூறுவதாயின் 'ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை> குறிப்பிட்ட காலத்துக்கு> குறிப்பிட்ட விகிதத்தில் இலாபம் தரப்பட வேண்டும்' என்ற பொருத்தத்தில் கொடுக்கல் வாங்கல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அச்சட்ட வாக்கத்தின் முழு நோக்கமும் இறைவன் தடைக்குக் காரணமாக அமைந்துள்ள> அப்போது கொடுக்கல் வாங்கலில் நிலவிய அநியாயத் தைக் களைவதற்கான வகையில் தொடுக்கப்பட்டதாகவே இருக்கும். இன்னும் சிறிது விளக்கின்> அன்று இரட்டிப்பாகும் பன்மடங்காகும் என்பதற்கு> விளக்கமாக> அன்றைய நடைமுறையில் உள்ளபடி விளக்கம் பெறலாம். காரணம்> அன்று பெறப்பட்ட 'றிபா' மனிதாபிமானமற்ற> மிகப் பெரும் அநியாயமான> அளவு கடந்த விகிதாசாரத்தைக் கொண்டிருந்தது. அதுவே யூஸரி USURY என்ற ஆங்கிலச் சொல்லால் விளக்கப்படுவது. இதனைச் சரியாக விளங்கிக் கொள்ள அக்காலத்தில் நடைமுறையில் இருந்த 'றிபா' வை அறிவது நன்மை தருவது.
அதாவது> அக்காலத்தில் ஒருவர் தனது கஷ்ட நிலையில்> அதிலிருந்து விடுபடுவதற்காகப் பெறப்பட்ட கடனே> அந்த மனிதருக்குப் பெருஞ் சுமையாகி> மீளவே முடியாத நிலையில் ஓட்டாண்டி ஆக்கிவிடும். கடனிலிருந்து மீள முடியாததனால்> குற்றவாளியாகவும் ஆக்கப்பட்டுத் தண்டனையைக் கூடப் பெற்றுத்தரும். இந்நிலை ஒருவரது> சாதாரண இயல்பு வாழ்வையும்> அந்தஸ்தையும்> முழுக் குடும்பத்தையும் பாதிப் படையச் செய்வதோடு அவமானத்தையும் உருவாக்கிவிடும். இந்நடை முறையையே வல்ல அல்லாஹ்வும் கடுமையாகத் தடை செய்துள்ளான். மாறாக> நியாயமான கடன் முறையைத் தடை செய்யவில்லை என்பதை 2:282 ஐ நடுநிலை தவறாது> ஊண்றிக் கவனித்து உய்த்துணர்ந்தால் உண்மை அறியலாம். அறியாமைத் திரை விலகும். இறைவனின் கடன் சட்டம் முழு உலகையும் வாழவைக்கும்.
RIBA என்ற அரபுச் சொல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பான USURY யின் பொருள் Oxford Dictionary apy; gpd;tUkhWs;sJ. The practice of lending
money to people at unfairly high rates of interest ( New Oxford Advanced
Learner’s Dictionary). Lending of money at exorbitant or illegal
rates of interest ( The Oxford Dictionary of current English). Usury: In law,
the crime of charging an unlawfully high rate of interest. In old English law,
the taking of any compensation whatsoever was termed USURY. With the expansion
of trade in the 13th century the demand for credit increased, necessitating a
modification of term. In 1545 England fixed a legal maximum interest, a
practice later followed by other Western nations.
ஒக்ஸ்போர்ட் அகராதி> 13ஆம் நூற்றாண்டிலே கடன் தேவை அதிகரித் ததாகக் கூறி மாற்றுவழி காண விழைந்துள்ளது. 16ஆம் நூற்றாண்டில்> அறவிடப்படக்கூடிய வட்டியைத் தீர்மானித்து;ளது. ஆனால் புனித மாமறையோ> ஏழாம் நூற்றாண்டில்> 'றிபா' USURY என்ற அநியாய வட்டி யைத் தடை செய்ததுடன்> கடன் கொடுக்கல் வாங்கல் எப்படிச் செய்யப்பட வேண்டும் என்றும் கண்டிப்பான சட்டத்தை>உலக அழிவுவரை காலாவதி யாகி> வழக்கொழியாத வகையில் ஆக்கித் தந்துள்ளது.
எது எப்படியோ குர்ஆன் தடைசெய்துள்ள நடைமுறை அல்லாத ஒன்றை> சட்டமாக்குவதோ> அப்படியான சட்டம் யாக்கப்பட்டிருந்தால்> அத்தகு சட்டங்களைப் பின்பற்றுவதோ ஏற்க முடியாதது. எந்தச் சட்டமும்> யாரால் யாக்கப்பட்டது> எப்போதிலிருந்து> எங்கிருந்து> வழக்கிலிருந்தது போன்ற வற்றையும் இன்னபிற தகுதிகளையும் கொண்டிருந்தாலும்> அவை குர்ஆனொடு முரண்படுமாயின் அவை குப்பைக் கூடைக்கு உரியனவே என்பதை முஸ்லிம்களாகிய நாம் மறந்துவிடலாகாது. அதற்கு அவனது தூதர்களுக்குக் கூட அனுமதி இல்லை.
அல்லாஹ் தனது அதிகாரங்களை யாருக்கும் பங்கிட்டதில்லை. குர்ஆன் வசனத்தில் சிறு மாற்றமாவது ஏற்படுத்த நினைத்தாலோ> நிலைதோன்றி னாலோ கூட இறைவன் அதனைப் பார்த்துக் கொண்டு வாளாவிரான் என்பதை> வலது கையைப் பிடித்துக் கொண்டு> உயிர் நரம்பையே துண்டித்து விடுவேன் என எச்சரித் துள்ள திருவசனம் உணர்த்தும். இது தனது சட்டங்கள் எந்த வகையிலும் பிழையாக மக்களைப் போய்ச் சேரக் கூடாது என்பதில் கொண்டுள்ள அல்லாஹ்வின் உறுதியைக் காட்டும். அதே வேளை அவ்வாறான நிலையால் அடியார்கள் சிறிதும் பாதிக்கப் படக்கூடாது என்ற கண்டிப்பு> இறைவன் நம்மீது கொண்டுள்ள கருணை யையும் கரிசனையையும் வெளிப்படுத்தும்.
வட்டி ஆரம்பிக்கும் இடம், கடன் என்பதால் கடன் பற்றிய அல்லாஹ்வின் நிலைப்பாட்டை அறிய வேண்டியுள்ளது. இத்தருணத்தில்> நடைமுறை வாழ்க்கைத் திட்டத்தை ஊக்குவிக்கும் குர்ஆன்> வறியவர்கள் மத்தியில் சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் அத்தியாவசியமான பல்வேறுபட்ட தேவை களை> அவ்வப்போது நிறைவேற்றிக் கொள்ள அடுத்தவர் உதவி தேவைப் படும் என்பதை அறிந்து> கருத்திலிருத்தி> அதற்கான விதிமுறைகளுடன் கடன் பெறலை> கடன் கொடுத்தலைச் சட்டமாக்கியுள்ளதை அல்குர்ஆன் 2:282. இல் அழகாக விவரித்துள்ளதை நினைவுகூருவது> றிபா வைத் தடை செய்த வேளை அதற்கு மாற்றீடாகக் கூறியுள்ளமையின் இன்றியமை யாமையை அறிய உதவுகிறது. யாவுமறிந்தவனும்> கருணையாளனும் அல்லவா வல்ல அல்லாஹ். மேலும்> கடனை அல்லாஹ் அழகிய கடன் என வர்ணித்துள்ளமை வெறும் வார்த்தையல்ல. ஆழ்ந்து சிந்திப்பின் அதன் அருமை> பெருமைகளை> தாரதம்மியத்தை> தாற்பரியத்தை> தூர நோக்கை> சமூக ஒற்றுமையை> உதவும் மனப்பாங்கை> குழுவாக இயங்க வேண்டியுள்ளதை> பல்வேறு தரத்தாருக்குமுள்ள கடமையைப் பொறுப்பை அறிய உதவும்.
குர்ஆன். அல் குர்ஆன் அல் பகரா வசனம் 2:282, கடன் முறைமையை மிகச் சுருக்கமாக ஆனால் மிகத் தெளிவாகச் சட்டமியற்றி உள்ளது. 'இறைநம்பிக்கையாளர்களே! நீங்;கள் குறிப்பிட்ட தவணை வரை> கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வீர்களாயின் அதனை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மேலும்> எழுதுபவர் உங்களுக்கிடையில் நீதமாக எழுதட்டும். எழுதுகிறவர் எழுதுவதற்கு மறுக்கக் கூடாது. அல்லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்தது போன்று> அவர் எழுதிக் கொடுக்கட்டும். இன்னும் எவர் மீது உரிமையுள்ளதோ அவர் வாசகம் கூறட்டும். தமது ரப்புவான அல்லாஹ்வை அவர் அஞ்சிக் கொள்ளட்டும். இன்னும் அதிலிருந்து எதனையும் அவர் குறைத்துவிட வேண்டாம். எனவே கடன் வாங்கியவர் எழுத்தறிவு இல்லாதவராக> அல்லது பலவீன ராக> அல்லது வாசகம் சொல்வதற்கு இயலாதவராக இருப்பராயின் அவரது பொறுப்பாளர் நீதமான முறையில் வாசகம் கூறவேண்டும். உங்களிலுள்ள ஆண்களில் இரு சாட்சியாளர்களை நீங்கள் சாட்சிகளாக் கிக் கொள்ளுங்கள். அவ்விருவரும் ஆண்களாக இல்லையாயின்> சாட்சி யாளரில் நீங்கள் பொருந்திக் கொண்டோரில் ஓர் ஆணும்> இரு பெண் களும் அவ்விருவரில் ஒருவர் மறந்துவிடுவதை அவ்விருவரில் ஒருவர் மற்றவருக்கு நினைவூட்டுவதற்குத்தான். மேலும் சாட்சிகள் அழைக்கப் படும் போது அவர்கள் மறுக்கக் கூடாது. மேலும் கொஞ்சமாக இருந்தா லும்> மிகுதமாக இருந்தாலும் அதன் தவணை வரை எழுதுவதற்குச் சடையாதீர்கள். உங்களுக்கு அது அல்லாஹ்விடத்தில் மிக்க நீதியானதும்> சாட்சியத்திற்கு மிக்க உறுதியானதும்> சந்தேகம் எழாமல் இருப்பதற்கு மிக நெருங்கியதாகவும் இருக்கிறது. நீங்கள் உங்களுக்கிடையே ரொக்க மாக நடத்தும் நேரடி வியாபாரமாக இருப்பின்> அதனை நீங்கள் எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்கள் மீது குற்றமும் இல்லை. மேலும் வியாபாரம் செய்யும் போது நீங்கள் சாட்சியை ஏற்படுத்திக் கொள்ளுங் கள். மேலும்> எழுதுபவரோ> சாட்சியாளரோ துன்புறுத்தப்படக் கூடாது. அவ்வாறு செய்வீர்களாயின் நிச்சயமாக அது உங்களால் விளைந்த கெடுதியாகும். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்தான் உங்களுக்கு வழிமுறைகளைக் கற்றுக் கொடுக்கிறான். மேலும்> அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் நன்கு அறிந்தவன்'.
மேற்கண்ட குர்ஆன் வசனம்> 'றிபா' வினால் தடைசெய்யப்பட்டதற்கு> மாற்று வழியாகக் கைக்கொள்ளப்பட வேண்டிய கொடுக்கல் வாங்கல் முறை கருத்தில் எடுக்கப்படாமையினால்;> அல்லது முன்னைய வட்டி பற்றிய பிழையான கருத்தியலால் கடன் கொடுக்கும்படி கூறிய இறை சட்டம்> முஸ்லிம்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடன் சட்டத்தை ஆழ்ந்து ஆராய்ந்தால்> கடன் கொடுப்பதில்> பல நிபந்தனை களும்> ஒப்புதல்களும் பெறப்பட வேண்டும் என்பதும்> அவை நியாயபூர்வ மானதாக இருக்க வேண்டும் என்பது புலனாகின்றது> நீங்கள் குறிப்பிட்ட தவணைவரை கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வீர்களாயின் என்பது> தேவைக்கேற்ப கால நிர்ணயம் செய்யப்பட வேண்டியுள்ளதையும்> அக் கால நிர்ணயத்தில் பிண்ணனியில் மறைந்துள்ளவற்றையும்> எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்பதால் கடன்தொகை மட்டுமல்லாது வேறும் விடயங்கள் சேர்க்கப்பட உள்ளன என்பதும்>எழுதுபவர் உங்களுக்கிடையே நீதமாக எழுதட்டும் என்பது> எழுதுவதற்குப் பொதுவான மனிதர் தேவை என்பதையும்> அவர் பக்கச் சார்பற்று செயற்பட வேண்டியதில் மறைந்து உள்ளவையும்> அவை எழுத்து மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதையும்> அல்லாஹ் அவருக்குக் கற்றுக்கொடுத்தபடி என்பதால்> அக்கடன் ஒப்பந்தம் றிபா வை வருவிக்காதிருப்பதை உறுதி செய்து கொள்வதையும்> எவர்மீது உரிமையுள்ளதோ அவர் அல்லது பொறுப்பாளர் வாசககம் சொல்ல வேண்டும் என்றதில் மறைந்துள்ள நடைமுறைச் சாத்தியக் கூறுகளையும்> கடன் பெறுபவர் தானே மனம் விரும்பி நிறை வேற்றவுள்ள கடப்பாடுகளையும்> அவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள் ளட்டும் இன்னும் அதிலிருந்து எதனையும் அவர் குறைத்துவிட வேண் டாம் என்பதிலிருந்து அதனுள் தொக்கி நிற்பதையும்> மேலும் சாட்சி யாளர்> நினைவுடுத்தல் என்பதிலும்> சாட்சியத்துக்காக அழைக்கப்படும் போது மறுக்கக்கூடாது என்பதில்> பிணக்குகள் ஏற்படவுள்ள சந்தர்ப்பங் களையும் அச்சமயம் நடந்து முடிந்தவை பற்றி எடுத்துரைக்க வேண்டிய தையும்> கொஞ்சமாக இருந்தாலும் மிகுதமாக இருந்தாலும் அத்தவணை வரை எழுதச் சடையாதீர்கள் என்பதில் செறிந்துள்ள உண்மைகளையும்> ரொக்கமாக நடத்தும் நேடி வியாபாரமாக இருப்பின் அதை நீங்கள் எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்கள் மீது குற்றமும் இல்லை என்பதில் உள்ள வெளிப்படையான தன்மையும்> எடுதுபவரோ> சாட்சியோ துன்புறுத்தப்படக் கூடாது என்பதில் இச்செயற்பாட்டில் நிர்ப்பந்தமோ> வற்புறுத்தலோ> வன்முறையோ கூட இடம் பெறலாகாது என்பதையும் மிகவும் துலாம்பரமாகத் தெரிவிக்கிறது.
மேற்கண்டவற்றில் பொதிந்துள்ள உண்மைகளை> நியாயபூர்வமான நடை முறைச் சாத்தியங்களை வல்ல நாயனின் கடன் சட்டத்தின் மகத்துவம் விளங்கும். தற்போதைய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வாகும். இருப் பவன் இல்லாதவனுக்குக் கொடுத்து எல்லோரும் வாழவழி வகுக்கும். வறுமை> இல்லாமை> அதனால் ஏற்படும்> விபச்சாரம்> களவு> கொலை> கொள்ளை> வன்செயல்> வஞ்சனை> நிந்தனை> போன்றவை ஒழிந்து> உலகே தாருஸ் ஸலாம் ஆகிவிடும். இது பற்றி எழுதுவதாயின் அது ஓர் தனிக் காவியமாகிவிடும்> நம் சீவியமும் அதற்குப் போதாது.
வட்டி ஆரம்பிக்கும் இடம் கடன் போல> கடன் ஆரம்பிக்கும் இடம் எதிர் பாராத் தேவைகள். தேவைகளில் பெரும்பாலானவை> இக்கால கட்டத்தில் பணத்தால் மட்டுமே பெற்றுக் கொள்ளக்கூடியவை. விஞ்ஞான முன்னேற் றங்களால்> தொழில் நுட்ப வளர்ச்சியால்> உலகம் இன்று கிராமம் என்ற சிறு வட்டத்துக்குள் அடக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றம்> அன்று போல் பண்டமாற்றைக் கொண்டிராது> பணத்தை ஊடக மாகக் கொண்டுளது. அப்பணப்பரிமாற்றம் கூட இலத்திரனியல் செயற் பாடாக மாறி> முழுமையாக வங்கிகளில் தங்கியுள்ள கட்டாய நிலையுள் அடக்கமாகி உள்ளது.
இன்னும் பல வகைகளில் பணத்தேவை ஏற்படும் போது> ( பணத்தைத் தொலைத்த> களவுகொடுத்த> பறிகொடுத்த> பற்றாக்குறை ஏற்பட்ட> வழிப் போக்கனாகிய நிலை போன்றவை ) அவற்றை ஒருவர்> அறிமுகமில்லாத புதிய ஊரில் தனியாள் ஒருவரைத் தேடித் தனது கஸ்டத்திற்குத் தேவை யான பணத்தைப் பெறமுடியாது. அதற்காக அவ்விடத்தில் ஒரு வங்கி இருக்குமேயானால்> தமது ஊரிலுள்ள வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெறும் வாய்ப்பு உண்டு. அப்படியே வங்கிக் கணக்கு இல்லாதவர்கூட> தன்னிடம் இருக்கும் வங்கி ஏற்றுக் கொள்ளும் ஒன்றைக் கொடுத்து> அல்லது எங்காவது கொடுத்து சிறு பணத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடும். அல்லது வீட்டாரொடு தொடர்பு கொண்டு> சிறு பணத்தை அனுப்பி வைக்கும்படி செய்ய முடியும். இவ்வாறான சேவைகளை எல்லாம் நாம் ஏதோ ஒப்பந்த அடிப்படையிலேயே பெறலாம். அதற்காக அச்சேவையை, உதவியைச் செய்பவர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவு ஒன்றைச் செய்யவே வேண்டும். வெறும் 'சும்மா' என்ற வட்டத்துள் எந்த வகை யிலும் உதவுபவர்களால் செயற்படுத்தவோ> உதவி பெறுபவர்களால் எதிர் பார்க்கவோ முடியாது. நடைமுறைச் சாத்தியம் அற்றதுங்கூட. ஸதக்கா> ஸக்காத் முறைமை சரியாக> குர்ஆன் கூறியுள்ளது போன்று> நடைபெறு மாயின் சில வேளை இச்சந்தர்ப்பத்தில் சிறிய அளவில் உதவி பெறுவதற் காக கடன்படுவதைத் தவிர்க்கலாம்.
அடுத்து 'மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை' (2:256) என்பதும்> நாம் நடை முறைப்படுத்தப்பட வேண்டிய அல்லாஹ்வின் சட்டம் என்பதை மறந்து விடலாகாது. ஓன்றை நடைமுறைப்படுத்தும் போது இன்னொரு குர்ஆனியச் சட்டம் தவிர்க்கப்படவோ> பொருத்தமற்றது என்ற நிலையை யோ உருவாக்குவது> இறைவனது வார்த்தைகளுக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது மிக முக்கியமாகக் கவனிக்கப்படுதல் அவசியம். அது அல்லாஹ் மேல் நாம் கொண்ட ஈமானையே ஈடாட்டம் காண வைத்து விடும். மேற்கண்ட சந்தர்ப்பங்களில் ஷரீஆ சட்டம் ஈடு கொடுக்காது> மாறாகத் தடைக்கல்லாக மாறியுள்ளது. இது மனித சட்டங்கள் காலாவதியாகும் இடங்கள் என்பதை நாம் ஏற்றே ஆக வேண்டும்.
நாம் பார்க்க வேண்டியதெல்லாம் இவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு தீர்வுகாண முடியாத சட்;டங்களைக் குர்ஆன் ஏற்படுத்தி உள்ளதா? அதுவும் மனித சட்டத்தைப் போன்று காலாவதியாகி விட்டனவா? என்பதே. அல்லாஹ் நம் அனைவரையும் இப்படி நினைப்பதில் இருந்தும் காப்பானாக. ஆனால்> ஷரிஆவின் காலத்துக்கொவ்வாத சட்டம் வங்கி நடவடிக்கைகள் இஸ்லாத்துக்கு மாறானது போன்ற பிரமையை உண்டாக்கி> ஹறாமான செயலாகக் கருத வைத்துள்ளது.
இக்குறை தீர்க்கப்பட குர்ஆனை ஆராய்ந்திருக்க வேண்டுமே அல்லாது மாற்று வழிகள் கண்டிருக்கக் கூடாது. அவை இறை சட்டத்தை மதியாத தன்மையையும்> குறுக்கு வழி தேடுவதையும் ஒத்ததாக அமையும்> அப்படி யாகத் தோன்றியுள்ள இஸ்லாமிய வங்கிகள் குர்ஆனை ஆய்ந்தறிந்த தால் ஏற்படுத்தப்பட்டவையாகத் தெரியவில்லை. மாறாக மாற்று வழியை மேற்கொள்பவைகளாக அவர்களின் விளக்கங்களில் இருந்தும்> நோக்கங் களில் இருந்தும்> நடைமுறைகளில் இருந்தும் தெரிய வருகின்றது.
இவ்வங்கிகளின் தொழிற்பாட்டில்> பாவனையிலுள்ள சொற்களில் பெயர் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதனைச் சுருங்கக் கூறுவதாயின் புதிய மொந்தையில் பழைய கள்ளு எனலாம். செயற்பாடு வேறு உருவம் பெற்றுள்ளது. உண்மையாக வட்டி தடைசெய்யப்பட்டது என்ற கருது கோளுக்குள்> தற்போதைய செயலை வியாபாரம் என்ற பெயரில் அடக்க முனைவதை ஒத்ததே. இல்லை> வைப்புப் பணத்திற்கு (வட்டி என்ற பெயருக்கு மாற்றம்) இலாபமாகக் கொடுக்கப்படும் பணத்தை> வைப்புப் பணத்தை வியாபாரத்தில் விட்டுப் பெறுகிறோம் என்றால்> நாம் ஒரு வரிடம் சிறு தொகையைக் கடனாகப் பெற்று அதில் பெற்ற இலாபத்தில் ஒரு பகுதியை முதலீட்டாளரான அக்கடன் தந்தவருக்குக் கொடுத்தால் என்ன? இது இஸ்லாமிய வங்கி என்ற பெயரால் நிறுவனம் மட்டும்தான் செயற்படுத்த முடியுமா?
இந்நடைமுறை ஒன்றே போதும் கடன் கொடுப்பதன் இன்றியமையாமை யை அறிந்து கொள்வதற்கு. இத்தகு கடனையே அல்லாஹ்வும் வலி யுறுத்தி உள்ளான். மிகத் தெளிவான குர்ஆனியச் சட்டமும் உண்டு. ஆனால் அது முஸ்லிம்களால் நடைமுறைப்படுத்தப்படாது ஒதுக்கப்பட்டு உள்ளது. காரணம்> மேற்சொன்ன பணமாகப் பெற்று தொழில் செய்து பெற்ற இலாபத்தில் சிறு பகுதியை மனம் விரும்பி> ஒப்புதலுடன் கொடுப்பதையும் வட்டி என்ற பதத்தால் கட்டுப்படுத்தியதே. தற்போது இஸ்லாமிய வங்கி என்ற பெயரில்> வாடிக்கையாளரிடம் பணம் பெற்று> வியாபாரத்தில் முதலீடு செய்து குறித்தளவு இலாபத்தை வைப்பாளருக் குக் கொடுப்பது பணக் கொடுக்கல் வாங்கலில் இருந்து வேறுபட்டதா? இதனையே தனிப்பட்டவர் செய்தால் றிபாவாகுமா!
விளக்கத்திற்காக சில கொடுக்கல் வாங்கலை நோக்கலாம். சொந்தப் பணம் இல்லாத நிலையில்> ஒரு தனவந்தரின் பெட்டியுள் தூங்கிவழியும் பணத்தை ஒருவர் பெற்று> ஏற்கப்பட்ட வகையில்> வியாபாரம் செய்து வந்த இலாபத்தில் சிறு பகுதியை முதலுடன் சேர்த்துக் கொடுக்கிறார். இன்னொரு வகையில் வியாபாரம் செய்து பணம் ஈட்டுவதில் வல்ல வரான ஒருவர்> முதலீடு இன்றி> அன்றாட அடிப்படை வாழ்க்கையையே நடத்துவதற்கு வழியற்று இருக்கிறார். அதனை அறிந்த பரோபகாரி> அந்த மனிதரை அழைத்து> தன்னிடமிருந்த பணத்தில் கொஞ்சத்தைக் கொடுத்து அவரை வியாபாரம் செய்து உழைத்து அவரது கஷ்டத்தைப் போக்குமாறு கூறுகிறார். பணத்தைப் பெற்றவரும்> கவனமாகத் தொழில் செய்து தனது தேவைக்கும் அதிகமாக இலாபம் சம்பாதிக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் மனமுவந்து> தனக்கு வலிந்து பண உதவி செய்த அப்பரோபகாரிக்கு> மனம் விரும்பி> தான் பெற்ற மிகை இலாபத்தில் ஒரு பகுதியைக் கொடுக்கிறார். இந்தச் செயற்பாட்டில் கடன் கொடுத்து உதவியவருடைய பணம் திரும்பி வருவதற்கு உத்தரவாதம் தேவைப்படுகிறது. இந்நிலை யில்> தனது முதலுக்குப் பொறுப்பாக ஏதாவது பொருளை அடைமான மாகவோ> அன்றேல் கடன் பெறுபவர் பெற்ற கடனைத் திரும்பத்தர வேண்டும் என்பதற்காக இரு சாட்சிகளையோ நியமித்துக் கொள்வது தவறா? மேலும்> இருவரும் ஒப்பந்த அடிப்படையில்> அம்முதலீட்டால் பெறப்படும் எதிர்பார்க்கப்பட்ட தொகையைப் பங்கிட்டுக் கொள்வதாகச் செய்து கொள்ளும் வழி தவறா?
ஒரு பாரிய தொழிலில்> சில எதிர்பார்க்கப்பட்ட> இலாப விகிதத்தை பெறும் அடிப்படையில்> பலர் ஓர் நிறுவனமாகச் செயற்பட்டு ஒரு தொழிலை மேற்கொள்வது தவறா? போன்றவை விடை காணப்பட்டால் பல் வேறு நன்மைகள் தரக்கூடியவற்றுக்கு குர்ஆன் முரண்பட்டிராத தன்மையை உணர முடியும்.
இத்தகைய இறைசட்டத்தை உய்த்துணர்ந்து பரந்த நோக்குடன்> நுணுக்க மாக சிந்திப்போர் அவற்றில் பல உண்மைகளையும், நன்மைகளையும் கண்டு கொள்வர். ஆனால் நடைமுறை எதிர்மாறாகியுள்ளது. கடன் கொடுக்கும்படி கூறப்பட்ட அல்லாஹ்வின் ஏவல் முற்றாக கைவிடப் பட்டுள்ளது. அதனால் தமது தேவையைப் பூர்த்தி செய்ய> தடுக்கப்பட்ட தாக நம்பப்படும் வழிகளில்> கடன் பெறுவதற்கு முஸ்லிம்கள் அல்லா தோரின் பக்கம் நெருங்க வேண்டியுள்ளது. இந்நிலை இஸ்லாம்> நடை முறை வாழ்க்கைக்கு உதவாத சட்டங்களைக் கொண்டுள்ளது என்ற அபகீர்த்தியை உருவாக்கவல்லது. முஸ்லிம்களும் இன்றைய நிலையில் வழிதவறியோர் போன்றும்> குற்றச் செயல்களைச் செய்பவர்களாகவும் எண்ணப்படுகின்றனர். ஏவலைச் செய்யாதவர்களாகவும் உள்ளதோடு விலக்கலைத் தவிர்க்காதோர் போலவும் உள்ளனர்.
- நிஹா -
No comments:
Post a Comment