Sunday, June 30, 2013

The Secrets of the Qur’an’s Miracles, Website of AbdulDaem Al-Kaheel

The Secrets of the Qur’an’s Miracles, Website of AbdulDaem Al-Kaheel


KNOW MORE SCIENTIFIC FACTS FROM QURAN

New Secrets 2

New Secrets 2

( Comment of Nizamhm1944:  Know the Scientific facts from Quran )

According to a recent scientific research, it has been found that visiting patients boosts the immune system of the visitor for man's immune system is extremely sensitive to what it sees and considers. Visiting patients and checking on them, therefore, boosts such system. That’s why Prophet Mohammad, PBUH, told us that we should visit patients since Imam Muslim and Imam Bukhari reported: the messenger of Allah said: “The rights of the Muslim upon the Muslim are six: When you meet him, give him the greeting of peace, when he invites you, respond to his invitation, when he seeks your advice, advise him, when he sneezes and praises Allah, supplicate for mercy upon him, when he becomes ills, visit him, and when he dies follow him (i.e. his funeral)."

முஸ்லிம் பெண்களில் ”கோணிபில்லா” (புர்கா / நிகாப்) முறை நாட்டின்தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்: முஸம்மில்

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம் பெண்களில் ”கோணிபில்லா” (புர்கா / நிகாப்) முறை நாட்டின்தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்: முஸம்மில்


//  சுமார் 700 வருட கால வாரலாற்றைகொண்ட இந் நாட்டின் முஸ்லிம்கள் ஆரம்ப காலம் தொட்டே இந் நாட்டின் சிங்கள பாரம்பரிய கலாசாரத்தை அடியோட்டியே தமது முஸ்லிம் கலாசார தனித்துவத்தை பேணி வந்துள்ளார்கள். // 

யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போன்றுள்ளது தங்கள், “700 வருட கால வரலாறு கொண்ட இந்நாட்டின் முஸ்லி்ம்கள்“ என்ற கருத்து.  

எதில் உங்களுக்குத் தீர்க்கமான ஞானமில்லையோ அதனைப் பின்பற்றாதீர்கள் என்பது குர்ஆனின் போதனை. அத்தோடு  மெய்யோடு பொய்யைக் கலக்காதீர்கள் என்பதும் குர்ஆன் மொழியே! அப்படி இருக்க,  முகத்திரை பற்றிப் பேச வந்த நீங்கள்  முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழத் தொடங்கிய காலம் என்ற பிழையான சிந்தனையை உருவாக்க முயல்வது சமூகத்துக்குத் தாங்கள் இழைக்கும் பெரும் துரோகமாகும்.  

முஸ்லிம்கள் கிபி 600 களில் இங்கு மினாரா என அழைக்கப்படும் நெடிய மாடங்களைக் கட்டி  வெளிச்ச வீடுகளாகப் பாவித்துள்ளார்கள். இதனை ஆங்கிலத்தில் “Minarets'  அழைப்பர். அவை இன்னும் இலங்கையின் கடற்கரைப் பிர‌தேசங்களான மன்னார் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.  இது பற்றி பேராசிரியர் கலாநிதி சு.ிவித்தியானந்தன் கூ்ட தனது ஆராய்ச்சி நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும். இன்றும் கடற்கரைப் பிரதேசங்களான, மன்னார், சிலாபம், திரிகோணமலை, போன்ற பல இடங்களில் காணப்படும் (40) நாற்பது முழ நீளமான அவ்லியாக்கள் என அழைக்கப்படும், அல்லாஹ்வின் நேசர்களின் அடக்க ஸ்தலங்கள், முஸ்லிம்களின் இருப்புக்குரிய காலத்தை நிர்ணயிக்க உதவுவது. அப்படி இருக்க தாங்கள், உங்கள் அரசியல் காரணங்களுக்காக புதிய பொய்களை அவிழ்த்து விடாதீர்கள்.  முதல் மனிதன் ஆதம் அலை அவர்கள் பூமியில் காலடி வைத்ததும் இலங்கையிலே என்பதை மறந்து விடாதீர்கள். 

தென்னிந்திய இந்துப் பாரம்பரியங்கள் சில முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு வருவது உண்மையே  தலையை மறைத்து முக்காடு போடுவது இந்து பாரம்பரியம். இன்றும் இந்துப் பெண்கள் முக்காடு  போடுவதை இந்தியாவில் காணமுடியும்.  

நிகாப் அரேபியரின் பாரம்பரியம். அங்கு காலத்திற்குக் காலம் வீசும் மண் புயலில் இருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காக அவர்கள் அணிந்து கொண்டவை.  தலைப்பாகை ஜுப்பா எல்லாம் அதே பாணியில் அணியப்பட் ட‌வையே!

இவ்வுடை அணிந்து கொண்டிருந்த அரேபியர் மத்தியிலே, குர்ஆன், பெண்களுக்கான ஆடையைப்  பரிந்துரை செய்துள்ளது. அதனால், முகத்திரை பேடுவோர் தாம் குர்ஆன் கூறியதையா அல்லது அரேபியர் செய்து, குர்ஆனால் முஸ்லிம்களுக்கு அங்கீகரிக்கப் படாத ஆடையை பின்பற்றப் போகின்றார்கள் என்பதுவே  நம்முன் நிற்கும் கேள்வி!

நிகாப் பற்றி,  அல் அஷ்ஹர் இமாம் அவர்கள்,  Nikab is only a tradition. It has nothing to with Islam'  என பத்வா கொடுத்துள்ளதுடன், அதனை அணிவதைத் தடையும் செய்துள்ளார். 

குர்ஆன் பரிந்துரைத்த பெண்களுக்குரிய  ஆடையுமல்ல நிகாப், என்பதுடன், அதற்கு மாறானதும் கூட.  “அடையாளம் காணப்படுவதற்கு நெருக்கமாகும்“ எ்னற  குர்ஆனின் நிய‌தியை முகத்திரை மீறுகிறது.  

சமூகத்தோடு சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காக மத விடயங்களை விட்டுக் கொடுக்க வேண்டு்ம் என்ற அடிப்படையில் நாம் நடக்க விழைவோமானால் இஸ்லாத்தில் இருந்து பிறழ்ந்து விடுவோம். குர்ஆனை் புறக்கணித்தவர்களாகி விடுவோம்.  மேலும், அதுவே, முஸ்லிம்களின் அழிவின் ஆரம்பமாகவும் அமைந்து விடும் என்பதைசற்று சிந்தித்தால் புரியும். 

Wednesday, June 26, 2013

Commented by Nizamhm1944 on: Lankamuslim.org One World One Ummah திரிவு படுத்தப்பட்ட செய்திகள் தொடர்பில் யாழ் முஸ்லிம்கள் விசனம்

Commented by Nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

திரிவு படுத்தப்பட்ட செய்திகள் தொடர்பில் யாழ் முஸ்லிம்கள் விசனம்

ஊடக பயங்கரவாதம் உலகலவிய ரீதியில் இஸ்லாமியருக்கெதிராக திட்டமிடப்பட்ட வகையில் முடுக்கி விடப்பட் டுள்ளது. அவற்றின் முக்கிய நோக்கம் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாக சித்தரப்பதும், அவர்கள் பின்பற்றும் புனித குர்ஆனை அதற்கான வழிகாட்டியாக பார்வைப்படுத்த முயல்வதுமே! அதற்காக அவைகள் ஊடக தர்மத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு எந்த அளவுக்கு கீழ்த்தரமான வழிகளைத் தமது நோக்கத்தை நிறைவு செய்யப் பாவிக்க முடியுமோ அந்தளவுக்கும் மேலாகவே செயற் படுத்தி வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் இங்கு நடைபெறுவதும். 

முப்பது வருடங்கள் தொடர்ச்சியாக பயங்கரவாதம் இடம் பெற்ற வடக்கில் ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கண்டெடுக்கப்படுவது ஆச்சரியத்துக் குரிய விடயமல்ல. ஆனால் 22 வருடங்களுக்கு மேலாக அங்கிருந்து துரத்தப்பட்டு, எங்கோ அகதிகளாக வாழ்ந்து, தற்போது மீள்குடியேறிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி முஸ்லிம்களை, கண்டெடுக்கப்படும் வெடி மருந்துகளோடும், ஆயுதங்களோடும் சம்பந்தப்படுத்த முயல்வது ஊடகங்க ளின் வக்கிர புத்தியைக் காட்டுவதுடன் புரியாத புதிராகவுமுள்ளது.  

தமிழ் அழிந்து கொண்டிருக்கும் பொறுப்பைத் தமிழரே ஏற்க வேண்டும்

தமிழ் அழிந்து கொண்டிருக்கும் பொறுப்பைத்                    தமிழரே ஏற்க வேண்டும்


மொழிக்கு சட்டரீதியான அந்தஸ்துக்கள் கொடுப்பதனால் அதனைப் பாதுகாக் கலாம் என யாராவது எண்ணுவாரேயாகில் அவர்கள் நிஜவுலகில் வாழாமல் கற்பனையுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்து கிறார்கள் என்று துணிந்து கூறலாம். வருடமொரு முறை தமிழாராய்ச்சி மாநாடுகள் என்ற பெயரில் விழாக்கள் நடத்தப்படுவதால் தமிழ் வளர்கின்றது என நினைப்பதும் முன்னையதைப் போன்றதே. ஆவணங்களாக்கப்படுபவை ஓர் காலத்தில் தடயங்களாக, சுவடுகளாக, ஆதாரங்களாக, மொழி என்ற ஒன்று இருந்ததாக நிரூபிக்க உதவுவதாக இருக்கலாம். தவிர மொழி வாழ்வதற்கு அது எவ்வகையிலும் உதவிடப் போவதில்லை. 

மொழி என்பது பேச்சை முழுமுதலாகக் கொண்டது. மனிதன் தோன்றிய காலத்திலேயே, எழுத்துருப் பெறும் முன்னரே மொழிகள் தோன்றிவிட்டன. ஆரம்பத்தில் இறைவன் ஆதம் என்ற முதல் மனிதனுக்கு பொருட்களின் பெயரைக் கற்றுக் கொடுத்தாகத் தெரிகிறது. இதிலிருந்து, மனித படைப்பின் ஆரம்பத்திலிருந்தே மொழிகள் இருந்தமை தெளிவாகின்றது. அடுத்தவருக்கு அதன் வெளிப்பாடு ஆரம்பத்தில் சைகை மூலமாக சென்றடைந்து இருந் திருக்கும். இவை சைகை மொழியாக வளர்ந்திருக்கும். இன்றும் சைகை மொழிகள் உலகெங்கும் காணப்படுவது இதனை மெய்ப்பிக்கும். இக்காலத் தில் செவிப்புலன் அற்றோருக்காக இவை பாவிக்கப்படுகின்றன. 

உணவு தேடும் உந்துதலால் இடம் பெயரல் தொடங்கியவுடன்,  தொடர் பாடலுக்கு, பாவனையில் இருந்த, ஒலிவடிவ மொழியும்,  சைகை மொழியும் பயன் தந்திருக்காது. அச்சந்தர்ப்பத்தில் வேறு மாற்று வழிகள் காண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த அறிவின் உதவியுடன் அப்பொருட்களைச் சித்திர வடிவமாக மனிதன் மாற்றித் தன் கருத்தை வெளியிட்டிருப்பான். அது விளங்கிக் கொள்வதில் கஷடத்தையும், கால விரயத்தையும் ஏற்படுத்தி இருந்துள்ளதோடு, எல்லோராலும் பின்பற்ற முடியாததாகவும் இருந்திருக்கலாம். பின்னர்  தூரத் தொடர்பாடல்களுக்காக உருவாக்கப்பட்ட வழக்கில் இருந்த  மொழிகளுக்கான குறியீடுகள் எழுத்துரு வைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வெழுத்துக்களுக்கு ஒலியுருவும் கொடுக் கப்பட்டி ருத்தல் வேண்டும். அந்த ஒலியுரு இறைவன் கற்றுக் கொடுத்த தாகவே இருந்திருக்க வேண்டும். அதன்  தொடர்ச்சியாகக் காலப் போக்கில் அவற்றில் மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டு தற்போதைய எழுத்துரு நிலையை மொழிகள் அடைந்திருக்க வேண்டும். அதன் பின்னர் பொதுமையில் இருந்து இலக்கணங்கள் உருவாகியிருக்கும். இது ஓர் சிந்தனையே தவிர முடிபல்ல. 

மேற்கண்ட உண்மைகள், மொழி என்பது பேச்சு வழக்கைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதை விளக்குகின்றன. எழுத்துருவிலான பேச்சற்ற மொழிகள் சித்திரம் என்ற வரையறையுள் அடக்க மாகிவிடும். எழுத்துரு வற்ற எந்த மொழியானாலும்கூட, அது பேச்சு வழக்கில் இருக்குமாயின் அது வாழும் மொழியாகிவிடும். ணுயசயவாரளாவi னுயசi  என்ற பாரசீகத்தில் பேசப்படும் மொழி அது போன்றதே.   ஒரு மொழி உயிருள்ள மொழியாகக் கருதப்படுவது பேச்சு வழக்கில் அது இருப்பதால் மட்டுமே. இறந்த பாiஷகள் (னநயன டயபெரயபநள) என சமஸ்கிருதம், பாளி போன்றவைகள் கூறப்படுவதற்குக் காரணம் அவை பேச்சு வழக்கில் இல்லாததே. அப்பாiஷகளில் இன்னும் எழுத்துருவிலான ஏடுகள் உள. இந்து சமய நூல்கள் சமஸ்கிருதத்திலும்,  புத்த காவியங்கள் பாளி மொழியிலும் காணப்படுகின்றன.  கோவில்களிலும், பாஞ்சாலைகளிலும் அவர்களது வேத மந்திரங்கள் அவ்வப் பாiஷகளிலேயே நடைபெற்றாலும் அவை இறந்த மொழிகளாகவே கருதப்படுகின்றன. இதற்குக் காரணம் அம்மொழிகள் பேச்சு வழக்கில் இல்லாமற் போனமையே என்பதை மேற்கண்ட தகவல்கள் நிரூபிக்கின்றன. 

தற்போதைய நிலையில், அரச ரீதியாகத் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டதாக தமிழ் நாட்டில் எல்லோரும் பெருமையாகப் பேசிக் கொள்கின்றனர். இவ்வாறான பெருமைகளோ, அல்லது சட்ட ரீதியாக மத்திய அரசில் இருந்து கிடைத்த செம்மொழி, இன்னபிற அந்தஸ்துக்களோ ஒரு மொழியை உயிருடன் வைத்திருக்கப் போதா. அம்மொழி  உயிருடன் இருப்பதாகக் கருதப்படுவதற்குக் காவியங்கள், புராணங்கள், இதிகாசங் கள், இலக்கியங்கள் இருப்பது உதவப் போவதில்லை. அவை எல்லாம் முற்காலத்தில் இருந்து அழிந்து போன மொழிகள் கல்வெட்டுக்களிலும் இன்னபிறவற்றிலும் இருந்து, அம்மொழிகள் இருந்ததாக ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்த உதவுவதற்குப் பாவிக்கப் படுவதைப் போன்று இருக்குமே தவிர, வாழும் மொழியாகத் தமிழை வைத்திருக்க உதவப் போவதில்லை. ஆக வாழும் மொழியாக இருக்க வேண்டுமாயின்,  அம்மொழி பேச்சு வழக்கில் உருமாறா நிலையில் இருக்க வேண்டும். தமிழ் என்ற போர்வையில் ஓர் புதிய மொழியின் உருவாக்கம் தானாகவே நடந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பேஜாராப் போச்சு, கசுமாளம், மச்சோ, பிகுரு, அல்பம் போன்றவை என்ன பாiஷ என்பது தெரிகிறதா!

உலகில் இன்றும் பல்வேறு மொழிகள் வழக்கில்; உள. அவை அத்தேச மக்களால் பேசப்படு கின்றன. அவர்கள் பேசும் மொழியை வைத்தே அந்நாடுகள் இனங்காணப்படுகின்றன. உதாரணமாக, ருஷ;ய மொழி பேசும் நாடு ருஷ;யா,  சீன மொழி சீனா, தாய் மொழி தாய்லாந்து, பிரெஞ்சு மொழி பிரான்ஸ், ஜெர்மன் மொழி ஜெர்மனி, ஜப்பானிய மொழி ஜப்பான், அரபு மொழி அரேபியா, மலே மொழி மலேசியா, நோர்வே மொழி நோர்வே, ஸ்பானிய மொழி ஸ்பெய்ன், பார்ஸி பாரசீகம், அரபு மொழி அரேபியா  என வழங்கப்படுவதால் அறியலாம். 

இந்தியாவுக்குள் எனப் பார்க்கினும், தென் மாநில நாடான கேரள மொழி பேசும் பகுதி கேரளா எனவும், மற்றைய மாநிலங்களான மராட்டி, குஜராத்தி, தெலுங்கு,  போன்ற மொழிகள் பேசப்படும் ஊர்கள் அந்தந்த மொழியைக் கொண்டே அழைக்கப்படுவதையும் காணக் கிடக்கின்றது. தமிழகம் என ஒரு நாடு இருக்கவில்லை என்பதால், தமிழ் மொழிக்கென்று ஒரு நாடு இருந்திருக்கவில்லை என்றே கருத இடமுண்டு. சில வருடங்களுக்கு முன்னர், இதனை உணர்ந்ததாலோ என்னவோ இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான மதராஸைத் தலைப்பட்டினமாகக் கொண்ட பகுதிக்கு 1969 இல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டினர். ஆதியிலேயே அவ்வாறான நிலை காணப் படாமைக்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. சில வேளை அக்காலங்களில் ஆட்சியில் இருந்த தமிழ் மன்னர்கள் தமிழை வளர்க்கப் பாடுபட்ட அதே வேளை தமது பெயர்களை முன்வைத்தே சேர, சோழ, பாண்டிய என்றவாறாக நாட்டை அறிமுகம் செய்துள்ளமை காரணமாக இருக்கலாம். அப்படியாயின் அவை பதவி, அதிகாரம் போன்றவைகளின் ஆதிக்க மேம்பாடாகக் கருதிக் கொள்ளக் கூடியதாயுள்ளது. எப்படியோ உலகில் தமிழைப் பெயராகக் கொண்ட ஒரு பிரதேசம், தற்போதாவது இந்தியாவின் தென் மாநிலத்தில் இருப்பது சற்று ஆறுதலாகவும், சந்தோஷம் தருவதாகவும் உள்ளது. 

கட்டுரையின் தலைப்பிற்கு வந்தால்,முன் பந்தியின் பிற்பகுதியில் கூறிய ஆறுதலும் சந்தோஷமும் நீடித்து நிலைக்கக் கூடிய அறிகுறிகள் தென்பட வில்லை. அதற்கான மூல காரணம், தமிழ் மக்களின் தற்போதைய மன நிலை. அதாவது, உலகில் தமது பாஷையைப் பேசுவதற்குக் கூச்சப்படும் ஓர் இனம் உண்டாயின் அது தமிழ் இனமே என்பதை வருத்தத்துடன் கூறி வைக்க விரும்புகிறேன். ஏனெனில் ஆங்கிலம் பேசுவதையே நாகரிகமாக வும், பேசுபவர்களையே உயர்ந்த சமூகமாகவும் தமிழர் கற்பனையில் வாழ் கின்றனர். அத்தோடு விட்டால் பரவாயில்லை. தமிழ் பேசுவோர் ஏதோ தரங் குறைந்தவர்கள் போலவும், கல்வி அறிவற்ற, நாகரிகமற்ற பிரகிருதிகள் போலவும் தமிழர்களாலேயே பார்க்கப் படுகின்றனர். ஆங்கிலம் தெரியாத வர்கள்கூட ஆங்கிலத்தில் சில சொற்களையாவது சேர்த்துப் பேச எத்தனிக் கிறார்கள். தங்களைத் தமது குழந்தைகள் டடி, மம்மி என்று அழைப்பதை விரும்பாத தமிழர் இருந்தால் அது மிக அரிதான நிகழ்வாகவே இருக்கும். 

தங்கள் குழந்தைகளைக் கூட, பெயர் சொல்லி அழைப்பதற்குப் பதிலாக பேபி, பபா, சூட்டி, நோனா என்றே அழைக்கின்றார்கள். இவை அந்நிய ஆங்கிலேய ஆட்சியின் அடிமைத் தனத்தின் எச்ச சொச்சங்களா என்றால் அதுவும் இல்லை. எச்ச சொச்சங்கள் என்பது இல்லாமல் அழிந்து போகும் வழியில் இருப்பது. ஆனால் இந்நிலையோ இங்கு ஏறுமுகமாகவே உள்ளது. 

அக்காலத்தில் இருந்து இக்காலம் வரையான தமிழ்க் கவிஞர், புலவர் எனப்படுவோர், தமிழ் பற்றி வெறும் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் பாணியில், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய முது தமிழ் எனவும், சிவன் தந்த தமிழ் என்றும், கடல் குடித்த குடமுனியாலும் கரைகாண முடியாத தமிழ் எனவும், இனிய தமிழ், இன்பத் தமிழ், தேமதுரத் தமிழ் என்றும் உதவாக் கற்பனைகளை வெளிப்படுத்தி கைதட்டலைப் பெற்றுக் கொள்ள, தமது எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்துள்ளனரே தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. யுனெஸ்கோ நிறுவனம் உலக மொழிகளில் இனிய மொழியாக வங்காள (பெங்காலி) மொழியைத் தேர்ந்துள்ளது.  

மேலும், தமிழர் தமக்குத் தாமே, உலகத்தை இணைத்து பட்டங்கள் வழங்கிக் கொண்டார்கள். அகில உலக கவிச் சக்கரவர்த்தி, கவிப்பேரரசு, புரட்சித் தலைவன், புரட்சிக் கவிஞர், மக்கள் திலகம், நடிகர்;  திலகம், கப்பலோட்டிய தமிழன், சிபி சக்கரவர்த்தி, உலகப் பொது மறை, உலகத் தமிழர் தலைவன், உலக உத்தமர்,  அகில உலக தமிழர் தலைவன், அகில உலகக் கதாநாயகன், அகில உலக தமிழ்ப் பேரவை போன்றவை அவற்றிற் சில... அண்மையில் எங்கோ ஓர் பத்திரிகையில் ஒருவர், தேர்தல் முறையை உலகுக்குத் தந்தவர்கள், தமிழர் என எழுதியுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் எங்கோ ஓர் இடத்தில் வாழ்ந்த தமிழர் அந்நாளில் லாட்டரி போன்று குலுக்கல் முறை யில்  தம் தலைவர்களைத் தெரிவு செய்தமையைக் காட்டுகிறார். குலுக்கல் மூலம் தெரிவு செய்வது எப்படி தேர்தல் முறையுள் வருமோ? குலுக்கல் முறையில் பெயர் எழுதப்பட்ட ஒரு நறுக்கொன்றைத் தேர்ந்ததைத் தேர்தல் என்கிறாரோ! இதே பாணியில்தான் தமிழ் வளர்க்கப்பட்டதே தவிர வேறல்ல.

தொழில் நுட்பமும், விஞ்ஞானமும் வளர்ந்த போது புதிய படைப்புக்கள் தோன்றின. அவைகளுக்குத் தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்படவில்லை. தட்டச்சு, ஒலிபெருக்கி, வானொலி, மிதிவண்டி, இரயில் வண்டி, பலகனி, கார், ரயில், பஸ், சைக்கிள், டெலிபோன் போன்றவை.  அப்படி உருவாக்கப் பட்டவை கூட மொழி வழக்கில் இல்லை. பாவனைக்கு உதவாத சொற்களா கின.  உதாரணம்;. மோட்டார் இரதம், தொடரூர்ந்து, தொடர்மாடி, ஈருருளி, பேரூந்து, முண்டக்கூவல் போன்றவை. ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப் படுத்த முனைந்தவர்கள் அவற்றுக்கு ஓர் புதிய இலகுவான பெயர்களை (சொற்களை) உருவாக்கி இருக்கலாமே!  அக்காலத்தில் வக்கீல், அலவாங்கு, அலுமாரி, ஆலம், கடவுள், ஆகமம் போன்ற பிற மொழிச் சொற்கள் தமிழில் உள்வாங்கப்பட்டது போலாவது செய்திருக்கலாம். 

ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும், ஸ்பானியரும் தமது பாஷைகளை உலகின் பெரும்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளனர். கல்தோன்றி மண் தோன்றா... எனக் கூறிக்கொண்டிருக்கும் தமிழினமோ, தமிழை எங்கும் வளர்த்ததாகத் தெரியவில்லை. அவர்கள் தாம் போன இடங்களில் வழக்கிலுள்ள பாஷையைப் பேசுவோராகவே மாறியிருக்கின்றனர். 

700 கோடி மக்களில் ஏழு கோடியினரால்கூடத் தமிழ் பேசப்படுவதில்லை என்பதே உண்மை. இதனை அறிந்ததனால்தானோ என்னவோ பாரதியார், 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' எனப் பாடிச் சென்றார். பட்டி மன்றங்களும், சங்கங்களும் வைத்து தமது பெருமைகளையும், போட்டா போட்டிகளையும் காட்டிக் கொண்டிருந்தனர் அக்காலப் புலவர் பெருமக்களாகக் கருதப்பட்டோர். ஓரிருவரைத் தவிர, வயிறு வளர்ப்பதற்காகவே தமிழைப் பயன்படுத்தி கவிதைகள் யாத்ததாகவே தெரிகிறது. அவற்றில் அதிகமானவை அக்கால அரசரைப் புகழ்வதற்காகவே யாக்கப்பட்டவையாகத் தெரிகின்றன. 'வென்றி வளவன் விறல் வேந்தன் எம்பிரான் என்றும் முதுகுக்கிடான் கவசம்...' எனத் தொடங்கும் செய்யுள் இதனை விளக்கப் போதுமானதாகும்.   விவாத மேடைகள் கூட இவ்வகைத் தனவே. தமிழைப் புகழ்வதில், புழுகுவதில் அவர்கள் செலவழித்த சக்தியை, காலத்தை தமிழை வளர்க்கும் பாணியிலான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து இருக்கவில்லை. 

சுவாமி வேதாசலமும், சூரியநாராயண சாஸ்திரியாரும், பாலசுப்பிரமணி யமும் கூட தனித் தமிழை வளர்ப்பதாகக் கூறித் தம்பெயரை முறையே மறை மலை அடிகள்,பரிதிமாற் கலைஞன், இளமுருகன்  என மாற்றிச் சென்றார்களே தவிர மக்கள் மனதை மாற்றிட முடியாமல் போய்விட்டது. முயலவில்லையா? முடியவில்லையா? தமிழுக்கு இலக்கணம் கூட ஒரு ஆங்கிலேயரான J.K.Pope என்பவரால் எழுதப்பட்டிருந்தது இந்நிலையை மேலும் விளக்கும். 'தனி ' கூட தமிழ் இல்லையே! தனி என்ற இச்சொல் சிங்களத்திலும் இதே கருத்தோடு பாவிக்கப்படுகிறது. ஆக பாளியிலும் இச்சொல் இருக்கலாம்.

ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் தமிழில் பாடியதனால் தமிழை வளர்ப்பதாக நினைத்தார்கள். ஆனால் அவைகளே தமிழர்தம் கதைகள் என்றவாறான மாயையை மட்டுமே ஏற்படுத்தி இருக்கின்றன. தமிழுக்கு உயிரான ஐம்பெருங் காப்பியங்கள் கூட பௌத்த, சமணர்களால் எழுதப்பட்ட வையே என்பதுகூடத் தமிழர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

இன்னொன்றையும் இங்கு கூறியே செல்ல வேண்டியுள்ளது. தமிழ் இந்து சமயத்தவர்களின் மொழி என்று உரிமை கொண்டாடும் வகையில் தமிழரின் செயற்பாடுகள் அமைந்திருந்தமையும், தமிழ் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கக் காரணமாயின. இந்தியாவில்  வாழும் 90 வீதத்துக்கும் அதிகமான இந்துக்கள் தமிழ் பேசுவோரல்லர். தமிழ் காப்பியங்கள் பெரும் பாலானவை இந்து சமய நூல்களாக இருந்தமையும், தமிழைக் கற்பதில் மற்றைய சமயம் சார்ந்தோர் பின்னிற்கும் நிலையை உருவாக்கி இருக்க லாம். பிற சமயத்தவரைத் தமிழராக உள்வாங்கும் மனோ நிலையும் இவர் களிடம் இருக்கவில்லை. தமிழ் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே உரியது என்ற மனப்பாங்கும் காரணமாக அமைகின்றது தமிழின் தற்போதைய நிலைக்கு. 

இதனை இலங்கையின் வடக்கில் பரம்பரையாகத் தமிழ் பேசிக் கொண்டு சௌஜன்யமாக வாழ்ந்து கொண்டு இருந்த அமைதி விரும்பிய ஒட்டுமொத்த முஸ்லிம்களை, அவர்கள்தம் பிறந்தகத்தை விட்டே ஈவிரக்கமின்றி, அவர் களது சொத்துக்களை அபகரித்துக் கொண்டு தமிழருக்கு விடுதலை பெற்றுத் தருவதாகக் கூறி, போராட்டம் நடத்திக் கொண்டிருந்த புலிகள் (தமிழரான முஸ்லிம்களை ) விரட்டியடித்தது நிரூபித்துக் கொண்டிருக்கிறது. 

தமிழ் வருடப் பிறப்பு என சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அதனை இந்துக்கள் மட்டுமே மதத்தோடு சம்பந்தமுள்ளது போன்று கொண்டாடுகின்றனர். தமிழ் பேசும் கிறிஸ்தவர்களோ, முஸ்லிம்களோ அதனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அதே வேளை தை முதலாம் திகதியை சாதி, சமய  வேறுபாடின்றி உலகில் அனைவரும் கொண்டாடுகின்றனர் என்பது அம்மக்கள் புதுவருடத்தை சமயம் சார்ந்ததாகக் காட்டிக் கொள்ளாததே காரணம். 

பொருளாதார, வர்த்தக நோக்கு கொண்டதாகவே நாட்டு நடப்புகள் அமைந் திருந்ததால், தமிழகத்திலேயே கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை கொடுத்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் துறை என்பது தமிழை ஒரு பாஷையாகக் கற்பிப்பதற்காக மட்டும் பாவிக்கப்படுவதே தவிர, தமிழ் வளர்ச்சிக்காக அனைத்துத் துறைகளும் தமிழில் கற்பிக்கப்படுவதில்லை. தமிழர்களுக்கும் தமது மொழியில் இருக் கும் பற்றைவிட அதிகமாக ஆங்கிலத்தில் கற்று, அயல் நாடுகளில் வேலை செய்து பொருளாதார ரீதியில் உயர்வான இடத்தைப் பிடிக்கும் போக்கே மேலோங்கி நிற்பதால், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும்கூட தமது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள வர்த்தக நோக்கில் மக்களின் தேவைக்கு இரைபோடுவதால், தமிழும் தானாகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படு கின்றது.  

சுப்பிர மணிய பாரதி கூறியபடி பிறநாட்டு நூல்கள் தமிழ் மொழியில் பெயர்க் கப்பட்டு இருந்தால், தமிழர் ஆங்கிலம் படித்துத்தான் தம் அறிவைப் பெருக் கிக் கொள்ள வேண்டும் என்ற இழிநிலை இன்று ஏற்பட்டிராது. தமிழில் அனைத்துத் துறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப நூல்களும் யாக்கப்பட்டு, கற்றலும் நடந்து, தொழில் வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டி ருந்தால் தமிழில் கற்கும் நிலை தோன்றி இருக்கும். அதனை விட்டுத் தமிழை வளர்ப்பதாக மேடைகள் போட்டு முழங்குவதால் தமிழை அதன் அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது. தமிழை ஒரு குறுகிய வட்டத்துள் வைத்துக் கொண்டமையே இவ்விழி நிலைக்குக் காரணம். செம்மொழி அந்தஸ்து பெற்றுக் கொள்வதை விடுத்து, பல் வேறு துறை சார்ந்த சிறந்த நூல்களைத் தமிழில் மொழி மாற்றம் செய்து, அத்துறைகளில் கற்கை நெறிகளையும் வேலைவாய்ப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கலாம். 

தற்போது தமிழில் கடிதம் எழுதுவோர் எண்ணிக்கைகூட வெகுவாகக் குறைந்து கொண்டு போகின்றது. தமது கோரிக்கைள், பிரச்சினைகள்கூட வேற்று மொழியான ஆங்கிலத்திலேயே முன் வைக்கப்படுகின்றன. இதற்கு அரசின் தமிழ் புறக்கணிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் தமது கையெழுத்தைக் கூட ஆங்கிலத்தில் எழுதுவதே பெருமையாகக் கொள்ளப் பட்டு, அதுவே நடைமுறையிலும் உள்ளது. கையெழுத்தை ஆங்கிலத்தில் போடுமாறு யாரும் நிர்ப்பந்தித்து உள்ளார்களா? அது தமிழின் மேல் தமிழ ருக்கு இருக்கின்ற அக்கறையை வெளிப்படுத்துகின்றது. தமது தொழில் ஸ்தாபனங்களுக்கு எத்தனை பேர் தமிழில் பெயர் வைத்துள்ளனர், இந்நிலை எந்த நிhப்பந்தத்தினால் ஏற்பட்டது? 

தமிழுக்காகப் போராடிய அனைத்து இயக்கங்களும் கூடத் தமது பெயரை ஆங்கிலத்திலேயே வைத்திருக்கின்றன என்பதை அறியாதோர் யாரோ? LTTE, TELO, EPRLF, EPDP, PLOTE போன்றவை நல்ல உதாரணங்கள். தமது நாய்க்குக் கூட tiger, sheefa, browny, blacky ோன்ற பெயர்களை இடுவதிலேயே பெருமை கொள்கிறார்கள்.  தங்கள் வீட்டு நாய்க்கும்,  வேலைக்காரனுக்கும்கூட English தெரியும் எனத் தம் போலி உயர்வை வெளிப்படுத்துகின்றனர். வீட்டுக்கு முன்னால் நாய்கள் கவனம் என எழுதார்.Beware of dogs, please do not park, stick no bills எனவே எழுதுவர். 

கோவணம் அல்லது மார்க்கச்சை, சொக்காய் என்றால் எத்தனை பேருக்கு விளங்கும்?panty, brassier, shirt, banian என்றால் சிறு குழந்தையும் அறிந்து விடும். அந்தளவு தமிழை விட்டு, நாம்- தமிழர் தூரச் சென்று கொண்டு இருக்கின் றோம். 'நாம் தமிழர்' எனக் கட்சிகள் உருவாக்கி தமிழர் எனக் கூறிக் கொள் ளும் அபாக்கிய நிலை இப்போதே தமிழகத்தில் தோன்றியுள்ளது. இதற்குப் பின்னர் 'நாம் தமிழர்' என சத்தியக்கடதாசி முடித்து மார்பில் தொங்கவிடும் நிலை தோன்றாதிருந்தால் சரியே! இந்தியாவில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான மொழிகள் தற்போது அழியும் நிலையை அடைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சரி அது போகட்டும், தமது ஆடைகளிலாவது தமிழ் மணங் கமழ்கின்றதா எனப் பார்க்கின் அது கூட ஆங்கில மோகத்தின் அழுத்தத்தையே பிரதிபலிக் கின்றது. தமது பெயர்களைக் கூட எத்தனையோ பேர் தற்போது ஆங்கில உச்சரிப்பாகத் தெரியும் வண்ணம் மாற்றிக் கொண்டுள் ளனர். உதாரணத் துக்கு  ஒன்று இரண்டு மட்டும். பெரிய சாமி அல்லது பெரிய தம்பி என்பதைச் சுருக்கி 'பெரி' என வைத்துக் கொண்டு உள்ளார்கள். கிரிதரன் என்பதைச் சுருக்கி Giri 'கிரி', ஹரிதரன் Hari,  மரியதாசன் என்பதை Mari 'மரி' (செத்துப் போ)என வைத்துள்ளார்கள்.  இவர்கள் தாங்கள் தமிழர் என்று சொல்வதற்குக் கூட வெட்கப்படுகின்றார்கள் என்ற அவல நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது, தமிழர்களாலேயே என்பது இதிலிருந்து தெரியவில்லையா? தங்கள் பிள்ளை களுக்குக்கூட ஆங்கில் பெயர்கள், சமஸ்கிருதப் பெயர்கள். தெய்வங்களின் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்கள் என்பதனால்தானோ என்னவோ ஈவேரா பெரியார் தமிழருக்கு கடவுள் இருக்கவில்லை. கடவுள் என்ற பெயரே கூட வடமொழி எனக்கூறிச் சென்றார். 

தமிழ் ஊடகங்கள் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் எத்தனை ஊடகங்கள் தமது பெயரையாவது தமிழில் வைத்துக் கொண்டுள்ளனர்? நேத்ரா, சக்தி, வசந்தம் இவைகள் வடமொழிச் சொல்லல்லவா! இவர்கள் சமஸ்கிருதம்தான், தமிழ் என்ற மாயையில் உள்ளனரா எனத் திகைக்க வைக்கிறது. போனால் போகட்டும் என அதனை விட்டால், அவர்களின் அத்தனை நிகழ்ச்சிகளும் ஆங்கிலத்தில்தான் எழுதப்படுகின்றன, பேசப்படு கின்றன. இதனை யாராவது தமிழ் வளர்ச்சிக்கான அறிகுறியாக அல்லது ஆரோக்கிய நிலை எனக் கூறலாமா? மேலும் இவற்றைத் தமிழ் ஊடகங்கள் எனவாவது கூறத் துணிவார்களா? அறிவிப்பாளர், நிகழ்ச்சிகளை நடத்துவோர் பற்றிக் கேட்கவே வேண்டாம். இவர்களும் தாம் தமிழர் என்பதை மறந்து விட்டார்களோ அல்லது தமிழரெனச் சொல்லிக் கொள்ள  வெட்கப்படுபவர் களோ?அவர்களின் உச்சரிப்பைப் பற்றிப் பேசத் தேவையில்லை. இவர்கள் அனைவரும் வர்த்தக நோக்கம் கொண்டவர்களே. அதனாலேயே தமிழ் படாதபாடுபடுகிறது அவர்களது வாய்களில் ஆலைவாய்க் கரும்பாக! யானை கால் வாழையாக!

அச்சூடகங்கள் தமிழில் எழுதியே தீரவேண்டும் என்பதற்காக எழுதுகிறார்கள். தமிழ் பத்திரிகைகள் தமது பெயர்களை தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினமணி, தினத்தந்தி   என்றே வைத்துள்ளன. சிங்களவருக்கு சிங்களத்தில் உள்ள பற்றுக்கூட தமிழர்களுக்கு இல்லையே! சில சமயங்களில் இவர்களின் தமிழிலும் பிழைகள் காணப்படுவதுண்டு. உள்ளடக்கத்தின் கருத்தை திரிபு படுத்தும் வகையில் தலையங்கங்கள் எழுதப்படுகின்றன. தமிழ்ப் பத்திரிகை கள் என்ற வகையில் தமிழ் இலத்திரனியல் ஊடகங்களில் தமிழ் புறக்கணிக் கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் இவர்கள் கண்டுங் காணா மல் இருந்து கொண்டிருக் கின்றார்கள். நமது வேலை செய்தி வெளியிடுவது தானே என்று வாளாவிருக்கின்றனரோ தெரியவில்லை. தமிழைக் காப்பது இவர்களது கடமையில்லையா? ஊடகங்கள் கூட தமிழ் என்றால் இந்து சமயம் என்ற மாயையில் அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்கின்றன. 

இப்போதெல்லாம் ஒரு வசனம் தமிழில் பேசுவதாயின், எப்படியோ ஓரிரு தமிழ்ச் சொற்கள் அவ் வசனத்தில் இடம் பெறுகிறதே என நினைந்தே ஆறுதல் கொள்ள வேண்டியுள்ளது. அந்தளவுக்கு அவர்களுக்குத் தமிழ் சொற்கள் பஞ்சமாகிவிட்டதா? அன்றேல், ஆங்கிலம் கலக்காது பேசுவது அநாகரிகம் என நினைந்துள்ளனரா? நாகரிகமற்றவர்களின் அதாவது பெரியார் கூறுவது போன்று காட்டுமராண்டிப் பாஷைதானா? என்னைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு சொற் பஞ்சமும், ஆங்கிலம் கலக்காவிடில் அநாகரிகம் என நினைக்கும் தாழ்வு மனப்போக்கும் என்பேன். பரவாயில்லை அவர்கள் தாம் பாவிக்கும் ஆங்கிலச் சொற்களையாவது சரியாக உச்சரிக்கத் தெரிந்து வைத்திருக்கின்றனரா என்றால் அதுவும் அவர்கள் பாஷையில் Zero ஸீரோவே. உதாரணத்துக்கு ஒரு சொல்,  எல்லோராலும் எப்போதும் பிழை யாக உச்சரிக்கப்படுவது, மூன்று ஏழுகள் எனக் கூறும் ஆங்கில வார்த்தை Triple  ட்ரிப்ள். இதனை Treble (ட்றிBள்) என்பது. காகம் அன்னம் போல் நடக்கப் போய் தன்னடையையும் இழந்தது என்றோர் பழமொழி (பழைய மொழி) அல்ல எனக்கு ஞாபகம் வருகிறது.

பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. நாம் தமிழர் என்போர்கூட ஹெப்பி பர்த் டே happy birth day to you  என ஆங்கிலத் தில் song பாடியே, English  Cake ஐ knife ல் cut பண்ணுகிறார்கள்.  ஊடகங்களும் போதாக்குறைக்கு எமது தமிழ் மக்களுக்காக பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுகின்றார்கள் English song பாடி! 

இவர்கள்தான் இப்படியென்றால், தமிழ் கற்பிக்கும் ஆசான்கள் தமிழை அழிப்பதிற் செய்யும் சேவையோ அளப்பரியது. உச்சரிப்பென்றால் அவர் களுக்கு என்ன என்றே தெரியாது. அது என்ன விலை எனக் கேட்காதிருந் தால் சரியே! அவர்கள் எப்படி எழுதுகின்றார்களோ இறைவனுக்கே வெளிச் சம். நீங்கள் எந்த வகுப்பு ஆசிரியர் எனக் கேட்டால், ஐந்தாந்தர பொறுப்பாசிரி யர் எனக் கூறார் Grade five class teacher எனவே கூறுவர். 

ஆசிரியரைக் காணும் மாணவர்கூட Good morning sir, Thank you sir, yes sir, no sir, three bags full sir  னக் கூறும்படியே புகட்டப்பட்டிருக்கின்றனர். முன்னிலைப் பாடசாலை கள் மொன்டிசூரி. அதற்கு தமிழென ஓர் பாஷை     இருப்பதே தெரிவதில்லை. twinkle twinkle little star,  Ba ba blackship விர உலகமே இல்லை. என் தகப்பனார் காலத் துக்கு முன்னரும் இதே rhym தான். இதனைப் படிப்பதையே தமிழரும் பெருமையாக நினைத்துக் கொண்டுள்ளனர். 

அரசின் புத்தக வெளியீட்டுக் குழுவும் விட்டேனா பார் என கங்கணம் கட்டிக் கொண்டு தமிழ்க் கொலை முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள் ளனர். தரமற்றவர்களும், தரங் கெட்டவர்களும் அக்குழுவில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனரோ என எண்ண வைக்கின்றது.

தற்போதைய தமிழ் சினிமாப் பாடல்கள் தமிழைக் கொலை செய்வதற்காகவே புனையப்படுவதாகத் தெரிகின்றது. 'கொலவெரி' விளங்குகின்றதா? கலாசாரச் சீரழிவு வேறு.  சின்னத்திரை நாடகங்கள் சிறிது பரவாயில்லை. ஆனால் வன்செயல், பிறர் மனை கவர்தல் என்ற கட்டுக்கோப்புள்ளும் சிக்காதவை மிக அரிதாகவே உள்ளன. இவற்றில் இருந்தெல்லாம் தமிழ் தப்பிப் பிழைத்து வாழும் மொழியாக நிலைக்கும் என்பது கேள்விக் குறியே! எப்படி ஐயா தமிழ் வாழும்?

Good morning, Good  evening, Good night போன்ற ஆங்கில வாழ்த்துக்களே ஏறத்தாழ அனைத்துத் தமிழர்களின் வாயிலிருந்தும் வருபவை என்பதை யாராவது மறுக்கப் போகிறார்களா? மேலும்,Hi, Bye, yeah, hello,  ok, very good, very bad, fine, nice,  super,  well done, so sorry, sir, madam, fantastic, see you, I dont care, thank you, take care, have a nice day, wish you all the best, best of luck, I love you, god bless you, January, February , Monday, Tuesday, school, college, tution, results, exam, time table, slipper, shoe, brush, paste, soap, hotel, lunch, dinner, breakfast, bed, table, TV, Radio, Computer, one, two, three, ten o clock,  uncle, aunty, cousin, brother, sister, master, student, teacher, principal, vaction, holiday, trip, tour, art, music, history, geography, science, maths, book, pencil, pen, eraser, ruler, bag, water bottle, uniform, tie, desk, chair, blackboard, white board, chalk, marker, exam, term, time table, holiday, vacation, tour, etc., etc.   போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களும் சொற்றொடர்களுமே தமிழரின் வாழ்வில் பின்னிப் பிணைந்து நாளாந்தப் பாவனையாகி உள்ளன. அவற்றை எழுதப்புகின் அது முடிவற்றுப் போய்விடும். out of sight is out of mind என்ற ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்த விரும்புகின்றேன். பார்வை யில் இல்லாதது என்பது புழக்கத்தில் இல்லாததே. அப்படியானவை மனதை விட்டும் மறைந்துவிடும். இது பாவனையற்றுப் போய்விடும் என்பதையே வலியுறுத்தும் உண்மை. தமிழும் அது மக்களை விட்டு ஒதுங்கிவிடும். மறக்கப்பட்டு விடும். அழிவை அடைந்துவிடும், அதுவும் தமிழர்களாலே! ஒரு காலத்தில் தமிழன் என்றோர் இனமிருந்தது எனப் பாடவேண்டிவருமோ! 

Transliteration என்றொரு வழக்கு ஆங்கிலத்தில் காணப்படுகின்றது. ஒரு பாஷை    யை வேறோர் வரிவடிவத்தைப் பாவித்து எழுதும் முறை. மனிதன் என்பதை Manithan என்பது போல். அக்காலத்தில் அரேபியர் இந்தியா, இலங்கையில் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்குத் தெரிந்த தமிழ்  மொழியின் ஒலி வடி வைப் பாவித்து, 'அரபுத் தமிழ்' என்ற ஒன்றை உருவாக்கி, நிறைய அறிவு சார்ந்த புத்தகங்களை ஆக்கிச் சென்றுள்ளனர். அவர்கள் தமிழை எழுத வாசிக் கத் தெரியாத நிலையில், பேச்சு வழக்கைப் பாவித்து சிறப்பான தமிழ்ப் பாஷை  ஒன்றை அரபியில் ஆக்கித் தந்து சென்றுள்ளார்கள். இன்றும் அப்படி யான புத்தகங்கள் இஸ்லாமியரிடையே புழக்கத்தில் உள்ளன. அரபு எழுத்தில் இருக்கும் புத்தகங்கள் வாசிக்கும் போது கருத்துச் செறிந்த தமிழ் ஒலி வரி களாக வெளிவரும். இவ்வாக்கம் மூலம் தமிழ் அரேபியாவுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அவர்கள் வளர்த்த அளவிலாவது நாம் செய்திருக்கிறோமா? தற்போது இந்நடைமுறை ஆங்கிலம் தெரியாத தமிழர்களாலும், தமிழில் இலத்திரணியல் சாதனங்களில் எழுதும் திறன் அற்றவர்களாலும், தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதும் நிலை தோன்றியுள்ளது. இது தமிழ் எழுத்துக்கள் வழக்கிழந்து போகும் நிலையைத் தோற்றுவித்தாலும், தமிழ்ப் பேச்சு வழக்கை இல்லா தொழிக்காது என்ற வகையில் சிறிது ஆறுதல். முன்னைய காலங்களில் இங்கிலாந்து சர்வகலாசாலையில் இளமானித் தேர்வுக்குத் தமிழை ஒரு பாடமாக எடுப்பவர்கள், இதே ட்ரான்ஸ்லிற்ற ரேஷன் முறையிலேயே விடை எழுதியதாகத் தெரிகிறது. ஆனால், தற் காலத்திலோ தமிழ் பற்றிய ஆராய்ச்சி கூடத் தமிழில் செய்யப்படுவதாகத் தெரியவில்லை. ஆய்வறிக்கைகள் ஆங்கிலத்தில், வாசிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.  

இன்று உலகளாவிய ரீதியில், புலம் பெயர்ந்தோர் என்ற பெயரில், புலிக ளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, தமிழர் உரிமை பற்றி வாய் கிழியக் கத்திக் கொண்டு திரிபவர்களது குழந்தைகள், நோர்வே, ஜெர்மன், பிரெஞ்சு, டெனிஷ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் கற்றுக் கொண்டும், பேசிக் கொண்டும் திரிகின்றார்கள் என்பது  பதிவாக்கப்படுகின்ற அவலம். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் வீடுகளில் பேசும் பாஷை  கூட தமிழ் அல்ல என்பதே வெட்கத்துடன் முன்வைக்கப்படுகின்றது.தமிழ்த் தாயும் தனது தமிழ்ப் பிள்ளைகளும் தமிழில் உரையாட முடியாமல் அந்நிய பாஷைகளில் உரையாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது புதிய விடயமுமல்ல, நமக்கு அதிர்ச்சியைத் தரவுமில்லை. 

காரணம் இலங்கையில் பல்லாண்டு காலமாக இருந்த, தற்போதும் இருந்து கொண்டிருக்கின்ற நடைமுறை. மேல் மட்டச் சமூகம் தமது வீட்டுப் பாஷை    யாக ஆங்கிலத்தைக் கொண்டு, தம் பிள்ளைகளுடன் தினமும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருப்பதே அது. முன்னவர்கள், காலச் சக்கரத்தின் பிடியில் அகப்பட்டு அங்கலாய்ப்போர். பின்னவர்கள், தமிழில் பேசுவதை அந்தஸ்து குறைவாக நினைப்போர். தமிழில் தமது பிள்ளைகளுடன் பேசு வோர்கூட பிறருக்கு முன்னால் தமது குழந்தைகளுடன் ஆங்கிலத்தில் உரையாடும் பண்பை பெருமையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 

தமிழர் தற்போது உலகில் பல பாகங்களில் வாழ்ந்து வருவது என்னவோ உண்மைதான். அத்தோடு அந்நாடுகளில் கணிசமான அரசியல் ஆதிக்கம் பெற்றிருப்பது கூட மறுக்க முடியாததே. பொருளாதாரத்தில்கூட அவர்கள் குறிப்பிடக்கூடிய அளவு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், இவைகளை வைத்துக் கொண்டு தமிழ் வாழ்கின்றது எனக் கூறலாமா? இலங்கை பற்றிய பிரச்சினைகளின் போது தமிழர்கள் தமது இருப்பை அந் நாடுகளில் தக்க வைத்துக் கொள்வதற்கான ஓர் ஆயுதமாகப் பாவிப்பதற்கே தமிழுக்காக, தமிழருக்காகக் குரல் கொடுக் கிறார்களே தவிர,தமிழின் வளர்ச்சி சம்பந்தமாக அவர்கள் எவ்வித முயற்சிகளும் மேற்கொண்டிருக்கவில்லை என்பன அந்நாடுகளில் எத்தனை தமிழ்ப் பாடசாலைகள் தோன்றியுள்ளன? எத்தனை தமிழ் பத்திரிகைகள் பிரசுரமாகின்றன? எத்தனை வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கின்றன? என்பதனால் பெறப்படும். அப்படியே ஒன்றிரண்டு தோன்றி இருந்தாலும் அவைகள் தமது, சுயதேவைகளை, குழு மோதல்களை, தற்காலிக இலங்கை எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே இயங்குபவையாகக் காணப் படுகின்றன.  சாதாரண காலங்களில் தாமேகூட தமிழைப் பேசுவதில்லை என்பதே உண்மை. தமிழ் பேசும் சூழல் அந்நாடுகளில் இல்லாதிருப்பதே காரணம் எனக் கூறுவதையும் கண்டிருக்கிறேன். வீட்டிலும் அச்சூழல் இல் லாமற் போனது விந்தையே! அன்று புலவர்கள் வயிறு வளர்ப்பதற்காக கவிதை பாடினர். ஆனால் இன்றோ வயிறுவளர்க்க தம் பாஷையையே கைவிட்டு விட்டார்கள். 

தமிழ் தெரியாத தமிழர் எனத் தம்மைப்  பெருமையாகக் கூறிக் கொள்வோ ரும் வெளிநாடுகளில் இன்றும் உள்ளனர். பிஜி, மொரீஸியஸ் போன்ற நாடு களில் வாழ்வோர். பாவம் இவர்களது முன்னோர்கள் வறுமை காரணமாக, வெள்ளைக்கார ஆட்சியில் அடிமைகளாகக் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஏற்றுமதி செய்யப்;பட்டவர்கள். இப்போது இவர் களின் சந்ததியினரே, தாம் தமிழர் என்பதை மட்டும் அறிந்து வைத்துள்ளனர் என்பதை நினைக்கும் போது தமிழ் என்றோர் மொழி இருந்தது, நமது முன்னோர் எல்லோரும் அப்பாஷையைப் பேசியவர்கள் என இனிவரப்  போகும் சமுதாயம் கூறிக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுமோ என நினைக் கத் தோன்றுகிறது. இங்கும் சிங்களவர்களுடன் திருமண பந்தத்தில் ஈடுபட் டுத் தமிழை இழந்து நிற்போர் குறிப்பிடக்கூடிய அளவு இல்லாவிட்டாலும், அவர்களின் சந்ததியினர் தமிழ் தெரியாத தமிழராக வாழ்ந்து கொண்டு இருக் கின்றார்கள் என்பது வெளிப்படாதிருக்கும் உண்மை.  

இன்னும் தமிழ்த் தலைவர்களின் ஆடைகள், அவர்கள் பேசும் மொழிகள், கலாசாரங்கள்,  தமிழ்க் கல்லூரிகளின் பெயர், அங்கு ஆங்கிலம் பேசாதோர் புறக்கணிக்கப்படும் நிலை, தமிழ் பாடசாலைப் புத்தகங்களில் தமிழ்க் கொலை, உணவைக்கூட தமிழர் உணவாகச் சாப்பிடுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, உண்ணும் முறையில்கூட ஆங்கில நாகரிகம் போன்றவை களினால் தமிழ் அழிக்கப்படுவதை எழுதிக் கொண்டே போகலாம். கட்டுரை வளர்ந்துவிடும் என்பதால் இறுதியாக ஒன்றைக் கூறி விடை பெறுகிறேன். இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழுக்காகப் பல்லாயிரம் உயிரைத் தமிழரும் ஏனையோரும் இந்நாட்டில் பலி கொடுத்துள்ளமை ஏன் எனத் தெரியவில்லை? இதற்கு தமிழ் தவிர்ந்த புறக் காரணிகள் காரணமாகலாம். யாருக்காவது புரிகின்றதா? அரசியல்வாதிகளாவது தமது இருப்புக்கு ஏதாவது பிரச்சினைகளை முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தம்! அப்பாவி மக்களுக்கு என்னவோ? 

பின்வரும் ஆலோசனை தலைப்புக்கு பொருத்தம் இல்லாவிடினும், தமிழ ரின் சிறப்பு வாழ்வுக்கு உகந்ததாகக் கொள்ளக் கூடியது. இன்று இலங்கைத் தீவில் தமிழர், சிங்களவர் என்ற பிரச்சினை கொழுந்து விட்டெரிந்து, யுத்தம் முடிந்தாலும்,  அணையா நெருப்பாக நீறுபூத்துக் கொண்டு இருக்கின்றது. வெளிநாடு சென்ற தமிழர்கள் தமது  நல்வாழ்வுக்காக தமது சுற்றம், சூழலை மறந்து, தமிழையும் இழந்து, அந்நிய மொழியைத் தம்மொழியாகக் கொண்டு வாழ முடியும் என்றால், உங்கள் நாட்டில், உங்கள் சகோதரர்களாக, வாழும் சிங்களவருடன் அவர்களது மொழியைக் கற்று சீரான, சிறப்பான வாழ்க் கையை மேற்கொள்ளலாமே. 

முஸ்லிம்கள் தமது மார்க்கத்தையும், கலாசாரத்தையும் பேணிக் கொண்டு, தமிழையும் புறக்கணிக்காது, சிங்களம் பேசிக் கொண்டு சிங்களவருடன் ஒற்றுமையாக இரண்டறக் கலந்து வாழ்கிறார்களே! இலங்கை முழுவதும் தமிழ் மூலப் பாடசாலைகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதற்கும் முஸ்லிம்களே காரணம் என்பதை மறுப்பவர் யாரோ? 

சிங்களம் பேசும் கத்தோலிக்கரும் பிரச்சினைகளற்று ஏனைய சிங்களவ ருடன் சேர்ந்து வாழ்வதும் அறிதற்குரியதே. அது போன்றே பர்கர் (Burgers) எனப்படும் பறங்கியரும், மலே மொழி பேசும் (Malays) மலாயர்களும், சீன மொழி பேசும் (Chinese) சீனர்களும் சிங்களத்தையும் ஏன் சிலர் தமிழையும் கூடப் பேசிக் கொண்டு அமைதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனரே அவர்களிடம் பாடம் படித்தால் என்ன? தமிழும் வாழும், தமிழரும் வாழ லாமே! சிங்களவரையும் தமிழைப் பேச வைக்கலாமே! 

பேச்சு வழக்கில் உள்ள மொழி அழியாது, அது வாழும் மொழியாகும் என்ற அடிப்படையில்  சிங்களவரையும் தமிழைப் பேச வைப்பதன் மூலமும் தமிழை அழியாது காப்பாற்றலாமே! முயற்சிப்போமா! தமிழ் வாழ வேண்டு மெனின் தமிழரின் கவனத்தைப் பெற வேண்டிய ஓர் கருத்து. உங்கள் கண்களைத் திறக்க வைப்பதற்காக, 'தாய்மொழி என்பதற்கு யுனெஸ்கோ தரும் விளக்கம்' பதிவாகின்றது. ஊன்றிக் கவனிப்பின் இதனை அபாய ஒலியாகக் கொள்ள முடியும். தமிழகத்திலும், இங்கும் ஹிந்தி, சிங்கள எதிர்ப்பும், அழிப்பும் நடத்திக் கொண்டிருப்பதால் நமது தமிழ் வாழுமா? அன்றேல் வேற்றுமையில் ஒற்றுமையை வளர்த்து அவர்களையும் நமது மொழியைப் பயில, பேச வைத்து தமிழை வாழும் மொழியாக இவ்வையகத் தில் மிளிர வைக்கலாமே! அமைதி வாழ்க்கை வாழலாமே! நம்மில் ஏற்படும் சிறு மாற்றம் உலகிலேயே பெரும் மாற்றங்களை ஏற்படுது;திவிடலாம். முயலலாமா?

அ). ஒருவன் சிறுவயதில்  கற்றுக்கொண்டதும், சிந்திக்கவும், கருத்துக்களைப் பரிமாறவும் இயல்பாக ஒருவனுக்கு உதவுவதும் ஆகிய ஒன்றே தாய்மொழி  

ஆ). தன்னைப் பற்றியும், உலகைப் பற்றியும் கருத்துக்களை முதன் முதல் உருவாக்கவும், வெளியிடவும் உதவுவது தாய்மொழி.

இ). இவ்வாறாகப் பயன்படும் மொழி தாய்-தந்தையரின் மொழியாக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை.

ஈ). ஒருவனின் வாழ்க்கையில் தாய்மொழிகள் மாறிக்கொண்டு போகலாம்.

அண்மையில் தமிழ் சமூகம் என்ற பெயரில் எழுதப்பட்ட அறிக்கை ஆங்கிலத் தில் எழுதப்பட்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகக் கூறப்படுவது மேற் கண்ட கருத்தைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.

அறிதலுக்காக சில உண்மைகள்:


UNESCO distinguishes four levels of endangerment in languages, based on inter-generational transfer:
Vvulnerable: Most children speak the language, but it may be restricted to certain domains (e.g., home).
Ddefinitely endangered: Children no longer learn the language as mother tongue in the home.
Sseverely endangered: Language is spoken by grandparents and older generations; while the parent generation may understand it, ttthey do not speak it to children or among themselves.
Ccritically endangered: The youngest speakers are grandparents and older, and they speak the language partially and infrequently.
While there are somewhere around six or seven thousand languages on Earth today, about half of them have fewer than about 3,000 speakers. Experts predict that even in a conservative scenario, about half of today's languages will go extinct within the next fifty to one hundred years. Accordingly, the list above presents only a sample of the approximately 3,000 currently endangered languages.
The Effects of a Dominant Language
"A language is said to be dead when no one speaks it any more. It may continue to have existence in recorded form, of course--traditionally in writing, more recently as part of a sound or video archive (and it does in a sense 'live on' in this way)--but unless it has fluent speakers one would not talk of it as a 'living language.' . . . (David Crystal, Language Death. Cambridge Univ. Press, 2002)
"Every 14 days a language dies. By 2100, more than half of the more than 7,000 languages spoken on Earth--many of them not yet recorded--may disappear, taking with them a wealth of knowledge about history, culture, the natural environment, and the human brain."
(National Geographic Society, Enduring Voices Project)

"I am always sorry when any language is lost, because languages are the pedigree of nations."
(Samuel Johnson, quoted by James Boswell in The Journal of a Tour to the Hebrides, 1785)
       

                                                                                                               -  ep`h -

Sunday, June 23, 2013

புற்று நோயைக் குணப்படுத்த, தடுக்க மாற்றுவழி

புற்று நோயைக் குணப்படுத்த, தடுக்க மாற்றுவழி

மனித உடல் கலங்களால் ஆக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவீர்கள். இக்கலங்களுள் தீமை பயக்கத்தக்க கலன்களும்,  நன்மை பயக்கத்தக்க கலங்களும், தீயவைகளை அழிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த கலன்களும் நிறைந்தே காணப்படுகின்றன. நம் உடல் அடையும் பல்வேறு மாற்றங் களுக்கு  முக்கிய காரணமாயமைபவையும் இக்கலன்களே. இவைகளுள்ளே நாமறியாமலே நம்மனைவரது உடலிலும் புற்று நோயை உருவாக்கக் கூடிய கலன்களும் உண்டு. இவை நமக்குத் தெரிவதில்லை. தரமான வைத்திய பரிசோதனைகளின் போதுகூட இவை தெரிய வருவதில்லை. இக்கலன்கள் பல பில்லியன்களாக பெருகும் வரை அவை கண்டு பிடிக்கப்படுவதில்லை. மேலும் இந்நோயால் தாக்கப்பட்டோரைச் சிகிச்சையின் பின்னர் பார்வை யிடும் வைத்தியர், நடைபெற்ற வைத்திய பரிசோதனை அறிக்கைகளின்படி இனி அந்நோயாளிக்குப் புற்று நோய் வராது. அதற்கான கலன்கள் எதுவு மில்லை என்று கூறுவர். ஆனால் அது உண்மையுமல்ல. அந்த வைத்தியர் கூறியது பொய்யுமல்ல. ஆக வைத்திய பரிசோதனையில் கண்களுக்கு அகப்படாத கலன்கள் நம்முடலுள் இருக்கும் என்பது யதார்ததம். அத்தகு கலன்கள் பல்கிப் பெருகியோ அன்றி வளர்ச்சியடைந்தோ பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கக்கூடிய அளவை அடைந்த பின்னரே இந்நோய்க் கலன்கள் நம்முடலில் இருப்பது தெரிய வருகிறது. 

நம்மை அறியாமலே நம்மைத் தாக்கி இறுதிவரை வெளிக்காட்டாமலும், அன்றி இறுதி நிலையில் வெளிக்காட்டியும் துன்பத்தில் துவளவைப்பவை இக்கலன்கள். இந்நோயைக் கட்டுப்படுத்த அல்லது சுகப்படுத்த தற்போது Chemotheraphy  எனப்படும் மருந்தூட்டல் முறையும்  Radiotheraphy எனப்படும் கதிர் வீச்சுக்களைப் பயன்படுத்தி அவ்வாறான கலன்களை அழிக்கும் சிகிச்சை யும் மேற்கொள்ளப்படுகிறது. இவையிரண்டோடு அறுவை சிகிச்சை தவிர தற்போதைக்கு வேறு வைத்திய வசதிகள் இல்லை. இந்த முதல் இரண்டு வகைச் சிகிச்சை முறைகளும் புற்று நோய்க் கலன்களை அழித் தொழிக்கும் முறையே. இம்முறையிலான சிகிச்சைகளின் போது நமதுடலில் காணப் படும் நோய் எதிர்ப்புச் சக்திகளைக் கொண்ட கலன்களும் கூடவே அழிந்து போகின்றன. இத்தாக்கங்கள் மேற்கண்ட சிகிச்சைகளின் போது தவிர்க்க முடியாமல் நடைபெறுவது. இது நம்முடலின் இயற்கையான நோய் எதிர்ப் புக் கலன்களின் அழிவை உண்டுபண்ணுவதால், ஒவ்வோர் ஷணமும் எந்த நோயாலும் பாதிக்கப்படும் நிலையை நோயாளி அடைகிறான். அதனால் புற்று நோய் கண்ட நோயாளி தொடர்ச்சியாக ஏற்படும் பல்வேறு நோய்களின் தாக்கங்களுக்கும் இலகுவாக ஆளாகித் துன்பத்திலுழலுகின்றான்.  இந்நிலை யைப் போக்கு வதற்குத் தற்போது இயற்கையோடு ஒட்டிய உணவுப் பழக்கங் களையும், சுகாதாரப் பழக்கங்களையும், உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை யும் நன்மை தருவனவாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

அதாவது நமது உடலை  உணவு, காற்று, உடற்பயிற்சி போன்றவை வளர்க்கின்றன. அப்படி வளர்க்கப் படும் போது புற்று நோய்க் கலன்களும் நம்முணவுகளிற் சிலவால் வளர்க்கப்படுகின்றன. ஏற்கனவே நமதுடலில் காணப்படும் தீய கலன்களை அழித்தொழிக்கும் நல்ல கலன்கள் பலம் பெற்றிருந்தால் அப்புற்று நோய்க் கலன்கள் அழிவைச் சந்திக்கின்றன. இதற்கு மாறான நிலையில், புற்று நோய்க் கலன்கள் பல பில்லியன்களாகப் பெருகியும், வளர்ச்சி அடைந்தும் வந்துள்ளமையை வெளிப்படுத்தும். அதாவது புற்றுநோய்த் தாக்கத்துக்கு ஆளாகிறோம்.  எப்போது நமதுடலை புற்று நோய் தாக்கிற்றோ அப்போது நமதுடலில் காணப்பட்ட எதிர்ப்புத் தன்மையின் குறைவு பல மடங்காகப் பெருகி உள்ளமையை வெளிப் படுத்தும். போஷனைக்குறைவால் இந்நிலை ஏற்படுவதால் இக்குறை விலிருந்து நம்மை காப்பாற்றுவது முக்கியமாகின்றது. அதற்கான உணவு வகைகளை அறிவதையும், அத்தகு உணவுப் பழக்கத்தையும் மேற்கொள்ளும் அதே வேளை, புற்று நோயை வளர்க்கும் உணவுகள் பற்றிய அறிவும் இன்றியமையாததாகின்றது. இவ்வறிவு அந்த நோய்க் கலன்களை அழிக்கும் நடவடிக்கைக்கு உதவும் என நம்பலாம். இதனால் இந்நோயின் தாக்கத்தைக் குறைக்கவும், இயற்கை வழியிலே இதனை அழித்தொழிக்கும் வேலையை யும் செய்யலாம். அத்தோடு தற்போது நடைமுறையிலுள்ள இருவகை சிகிச்சை முறைகளினால் நமதுடலின் நன்மை பயக்கும் கலன்கள் அழிக்கப்படுவதிலிருந்தும் தப்பிக்க லாம். அதன் மூலம் நம்வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளலாம். எதிர்ப்புச் சக்தி குறைவதால் ஏற்படும் நோய்களிலிருந்தும் அதன் துன்பங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்ளலாம். 

நமது உணவில் அதிக பங்கை வகிக்கும் சீனி புற்றுநோய்க் கலன்களை வளர்ப்பதில் பெரும் பணியாற்று கிறது. ஆதலின் சீனிப் பாவனையைத் தவிர்த்து கருப்பஞ் சாறு அருந்துவதும், Manuka Honey எனப்படும், நியூஸிலாந் தில் காணப்படும் ஓர்வகை வாசனைத் தன்மையான இலைகளைக் கொண்ட மரங்களின் சாறை அருந்துவதும் அதன் இலைகளை தேநீராகப் பருகுவதும் விதந்துரைக்கப்படுகிறது. தொற்று நோய்க் கலன்களின்  வளர்ச்சியில் முக்கிய பங்கை ஏற்பவைகளில் பாலும் ஒன்று. பால் நமதுடலில் பாதுகாப்புக் கருதி, கணையங்கள், Mucus எனப்படும் ஓர் வகைப் பசைத்தன்மை கொண்ட சளிபோன்ற திரவப்பொருளைச் சுரந்து உதவுகிறது. இந்த Mucus புற்றுநோய்க் கலன்களை ஊட்டி வளர்ப்பன. ஆகவே பாலருந்துவதைத் தவிர்ப்பது இப்பயங்கர நோய்க் கலன்களை பட்டினி நிலைக்குக் கொண்டுபோய் அழிவைச் சந்திக்க வைக்கும். நமதுடலுக்குத் தேவையான பாலை நாம்  சோயாவினால் தயாரிக்கப்படும் பாலை அருந்துவதன் மூலம் மாற்றீடாகப் பெற்றுக்கொள்ளலாம். 

அமிலங்கள் புற்றுநோய்க் கலன்களுக் குத் தீனி போட்டு வளர்ப்பன.  அதனால் புற்றுநோய்க் கலன்கள் துரிதமாக உருவாகும். அந்த அமிலங்கள் நமதுடலில் அதிகம் உருவாக வழிசமைப்பவை மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன் றவை. அதனால் இந்த இறைச்சி வகைகளை முற்றாகத் தவிர்த்து சிறிய அளவில் கோழி இறைச்சியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனைத் தவிர்க்க  அமிலமற்ற உணவான  மீனை முடிந்த அளவில் உண்பது மிகவும் நன்று. இந்நோய் கண்டவர்கள் தமது உணவின் 80%  பச்சைக் காய்கறிகளின் மூலமும் சாறுகள் (Juice) மூலமும் நிறைவு செய்யலாம். மிகுதி 20% சமைத்த உணவாக அமைவதை நிர்ணயப்படுத்திக் கொள்ளலாம். தினமும் பச்சைக் காய்கறிகளையும், அவற்றின் சாற்றையும் இரண்டு மூன்று வேளை அருந்து வது நன்மை பயக்கும். அதன் மூலம் புற்று நோய்க் கலன்கள் பரவுவதற்கேது வான அமிலத் தன்மையை உடலில் குறைக்கலாம். காய்கறிகளினால் தயாரிக்கப்படும் சாறை அருந்துவதன் மூலம் பதினைந்தே நிமிடங்களில் உறிஞ்சப்பட்டு நமதுடலின் நுண்ணிய பகுதிகளுக்கும் ஒட்சிசனை கொண்டு சென்று போஷிக்கிறது எனவும் இத்துறை சார்ந்த நிபுணர்களால்  தற்போது கண்டறியப்பட்டு, சிபார்சு செய்யப்பட்டுள்ளது. மேசை உப்பு இரசாயன மாற்றங்களுக்கு உட்படுவதால் கடலுப்பைப் பாவிப்பது சிறந்தது. 

உடலில் நல்ல கலன்களை உருவாக்கக்கூடிய என்சைம்ஸ் enzymes  என்ற ஓர்வகை பொருளை அதிகரிக்கக் கூடியதான பச்சை காய்கறிகளின் சாற்றைப் பருகுவது சிறந்த பலனைக் கொடுக்கும். அதற்காக Beans எனப்படும் மொச்சை இனம் பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை முளைவிட்ட மொச்சை இனம் உட்பட்ட பச்சைக்காய்கறிச்சாறு அருந்துவது சிறப்பானது. சமையலின்போது 104 பாகை வெப்பத்தில் மேற்கூறிய என்சைம்ஸ் அழிந்து போய்விடும் என்பது ஞாபகத்தில் இருத்தப்பட வேண்டியது. 

புற்றுநோய்க் கலன்களின் மேற்பகுதி பலம் மிகுந்த புரதத்தினால் ஆனதென் பதால் அதனை அழிப்பதற்கு அதிக அளவில் என்சைம்ஸ் தேவைப்படும். அதனால் அந்நிலையைத் தவிர்க்க இறைச்சி வகையை நீக்குவதால்  என்சைம்ஸ் விரயத்தைத் தவிர்க்கலாம்.  மேலும் கோப்பி, தேநீர், சொக்க லேற்று போன்ற வைகளை முற்றாக விலக்கலாம். இவற்றுக்கு மாற்றீடாக Green Tea எனப்படும் தேநீரை அருந்தலாம். இதில் புற்றுநோய்க் கலன்களை அழிக்கும் சக்தி காணப்படுகின்றது. சுத்தமான நீரை அதிகம் அருந்துவது நன்று. அமிலத் தன்மை வாய்ந்த Distilled Water எனப்படும் வடிகட்டிய நீரைத் தவிர்க்க வேண்டும். இறைச்சிப் புரதம் எளிதில் சமிபாடடைவதில்லை. அத்தோடு அதன் சமிபாட்டுக்கு அதிக அளவிலான என்சைம்ஸ் தேவைப் படுகின்றது. சமிபாடடையாத இறைச்சி பழுதடைவதுடன் குடலில் தங்கி தேவையற்ற நச்சுத்தன்மையை உருவாக்கும்.

அடுத்தது நல்ல தேகப்பயிற்சிகளை மேற்கொள்வது. அத்தோடு சுத்தமான நல்ல ஒட்சிசன் மிகுந்த காற்றைச் சுவாசிப்பது. ஆழ்ந்த  சுவாசத்தினால் னுநநி டீசநயவாiபெ உடலின் நுண்ணிய பகுதிகட்கெல் லாம் ஒட்சிசன் இலகுவாகச் சென்றடைவதனால் நுண்ணிய பகுதிகளில் காணப்படும் புற்றுநோய்க் கலன் களை அழிக்கக் கூடியதாகவுள்ளது. ஒட்சிசன் தெரபியும் புற்றுநோய்க் கலன்களை ஒழிக்கும் சாதனமே. 

புற்றுநோய் பரம்பரை, சூழல், உணவு, வாழ்க்கை முறை போன்றவற்றால் ஏற்படுவது. கீமோதெரபி புற்றுநோய்க் கலன்களை அழிப்பதுடன்,  எலும்பு மச்சை, சமிபாட்டுறுப்புக்கள் போன்றவற்றிலுள்ள ஆரோக்கியமான கலன் களையும்  அழித்துவிடுகிறது. அத்தோடு உடல் உள்ளுறுப்புக்களான ஈரல், கிட்ணி, இதயம், சுவாசாசயம் போன்றவற்றையும் சேதப்படுத்திவிடுகிறது. கதிர் வீச்சு முறையும் இது போன்றே புற்றுநோய்க் கலன்களை அழிப்பதுடன், ஆரோக்கியமான, ஆபத்தை விளைவிக்காத கலன்களையும், மென்சவ்வு களையும், உள்ளுறுப்புக்களையும் சேதப்படுத்திவிடுகிறது. ஆரம்பத்தில் இவ்விரு சிகிச்சைகளும்  புற்றுநோய்க் கட்டிகளை (Tumor) அழித்தாலும், அதே சிகிச்சை தொடர்ச்சியாகச் செய்யப்படும் போது எதிர்பார்த்த அளவு பலனைத் தருவதில்லை. இவ்விரு சிகிச்சைகளினால் உடலில் அதிகரித்துள்ள நச்சுத் தன்மை (Toxic burden)  உடலின் எதிர்ப்புச் சக்தியை இணக்கத்திற்கு  (Compromise) கொணர்ந்து ஒத்துப் போகும் தன்மைக்குப் பழக்கப்படுத்தி விடும், அதாவது எதிர்ப்புச் சக்கியை இயக்கமறச் செய்துவிடும், அல்லது அழித்துவிடும். அதனால் இந்நோய் கண்டவர் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாவார். அத்தோடு இவ்விரு சிகிச்சைகளுக்கும் ஈடுகொடுக்கும் வண்ணம் புற்று நோய்க் கலன்கள் தாம் மாறுபட்டு அழிக்க முடியாத தன்மையை அடைந்து விடுகின்றன. சத்திர சிகிச்சைகூட மற்றைய பகுதிகளில் இக்கலன்கள் வளரும் வாய்ப்பை உருவாக்கிவிடுகின்றன. ஆக புற்றுநோய்க் கலன்களை பட்டினி போட்டுக் கொல்லும் வகையே மிகச் சிறந்ததாகக் காணப்படுகின்றது. அதாவது  புற்றுநோய்க் கலன்களை வளர்க்கும் உணவு வகைகளை முற்றாகத் தவிர்த்தல். 

மேலும் உடலும், மனமும், ஆத்மாவும் சம்பந்தப்பட்டதாகப் புற்றுநோய் காணப்படுவதால் அதிக கோபம், மன்னிகாத தன்மை, கசப்புணர்வு போன்றவை உடலில் திரவத் தன்மையை (Acid) உருவாக்குவதால், அதுவே புற்றுநோய்க் கலன்களை வளர்ப்பதில் பெரும்பங்கேற்பதால்  அதனைத் தவிர்க்க அன்பு செலுத்தல், மன்னித்தல் போன்ற நற்பண்புகளை வளர்த்தும் புற்றுநோய் வராது  காத்துக் கொள்ளலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.                   

– நிஹா- 


Wednesday, June 19, 2013

நாயகத்தின் தியாகம் வையகத்தில் இஸ்லாம்

நாயகத்தின் தியாகம் வையகத்தில் இஸ்லாம்



வையகம் தழைக்க உலக மையத்திலே உதித்த உத்தமர் நாயகத்திருமேனி நபிகள் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முன்னர்  வல்ல நாயன் 124,000 நபிமார்களையும், தூதர்களை யும் அவர்கள் மூலம் புனித மார்க்கங்களையும் அனுப்பி அறியாமையென்ற இருளில் மூழ்கி தம்மனோ இச்சைகளைத் தெய்வமாக்கி அனாச்சாரங்களை, மாச்சாரியங்களை வாழ்க்கையாகக் கொண்டிருந்த மக்களை நல்வழிப்படுத்து மாறு அவ்வப்போது அவர்களை அறிவுறுத்திக் கொண்டிருந்தான். 

ஆதம் (அலை) அவர்கள் முதல் ஈஸா (அலை) அவர்கள் வரை மார்க்கங் களைக் கொடுத்தபோது, அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு முன் வந்த வேத வசனங்களை மெய்ப்படுத்தியே வந்துள்ளதாக அவ்வவ் வேதங்களிலும் தன் இறுதி மாமறையின் பலஇடங்களிலும் கூறியிருப்பது குறித்துணர வேண்டியதே. அந்த அடிப்படையில் வந்த அனைத்துத் தூதர்களும் இறைவன் தமக்குத் தந்த மார்க்கச் சட்டங்களை வெளிப்படுத்தினர். அதனால் அவர்கள் பலத்த எதிர்ப்புக்கு முகம் கொடுத்திருந்தனர். தூஷிக்கப்பட்டிருந் தனர், துன்புறுத்தப்பட்டிருந்தனர், நிராகரிக்கப்பட்டிருந்தனர். சிலர் கொல்லப் பட்டிருந்தனர்.  தூதர்கள் அனைவரதும் மார்க்க போதனைகளின் அடிநாதமாக ஓரே இறைக் கொள்கையே இருந்து வந்துள்ளமையை உற்று நோக்கும் யாரும் சற்றும் ஐயமின்றி அறிந்து கொள்ளலாம். கல்லை, மண்ணை, நெருப்பைக்கூட அவர்கள் தமது தெய்வமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களது வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்பதைக் கூறாமலே யாரும் தெரிந்துகொள்ளலாம். 

மேலும் அன்றைய போதனைகள் யாவும் அனைத்து தூதர்களாலும் சித்தாந்த ரீதியாகவே வெளிப்படுத்தப்பட்டன. மேலும் அந்தத் தூதர்கள் தமது போதனையின் போது  மக்களைக் கவரும் உத்திகளாக, தாம்  இறை வேதத்தைப் பரப்ப இறைவனால்  அனுப்பப்பட்டவர்களே என்பதை வெளிப்படுத்துவான் வேண்டியும், அதன் மூலம்  தமது போதனைகளின் மேன்மையை அறிய வைத்து அம்மக்களை நல்வழிப்படுத்தும் முயற்சியாக வும் பல்வேறு அற்புதங்களை இறையருளால்  நடத்தியுள்ளனர். அப்படியான பல சம்பவங்கள்  குர்ஆனில் பல இடங்களில் பதிவாகியுள்ளன. 

இந்த வழியில் அந்தகார அரேபியாவில் வந்துதித்த சிந்தனைச் சிற்பியான இறுதித் தூதர் எந்த அற்புதங்களையும் செய்து காட்டி மக்களை நல்வழிப் படுத்த முயலவில்லை. மாறாக புதிய ஓர் யுக்தியாக, போதனையைச் சாதனப்படுத்தும் சிறப்பு முறை அவர்களுக்கு இறைவனால் அறிமுகப்படுத் தப்பட்டது. அதனாலேயே அண்ணாரை இறைவனே தன் மாமறையின் பல இடங்களில் அழகிய முன்மாதிரியெனக் குறிப்பிடுகிறான். அன்று மக்கா நிர்வாகத்தை நடத்தும் பெருமைமிக்க உயர் கோத்திரமான ஹாஷிம் குடும் பத்தைச் சேர்ந்தவராயிருந்தார் முஹம்மது அவர்கள்.  

ஆக முன்மாதிரிகள் பற்றிய மதிப்பீட்டின் போது ஒருவர் எப்போதும் ஓர் விடயத்தை எப்படியெல்லாம் கையாளலாம் என்பதை விளக்கும் தோரணை யில் செயற்படுபவராக இருப்பார் என்பது கவனத்துக்கு எடுக்கப்படுவதோடு அதுவே மிகவும் முன்னுரிமை பெறும்   பண்பைக் காப்பது அவசியம். அச்சந் தர்ப்பத்தில் அம்முன்மாதிரியாகத் திகழ்பவர் தனது தனியாள் ஆளுமை யிலிருந்து வேறொரு பாத்திரத்தை ஏற்கிறார் என்பது உணரப்படாத வரை மதிப்பீடுகள் எதிர்மாறான தன்மையைக் கொண்டதாகக் காணப்படும். உண்மைகள் வெளிப்படா. அது அப்பாத்திரத்தின் கண்ணியத்துக்குக் களங்கம் கற்பிக்காததை மட்டுமல்ல அப்பாத்திரத்தை ஏற்றவரின் நடத்தையின் மகத்துவத்தை, சீர்மையை, உயர்பண்பை, தியாகத்தை உணர உதவும். 

இதன்படி, அனைத்துத் தூதர்களாலும் சித்தாந்த ரீதியில் வெளிப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறைகள் யாவையும் தாமும் வெறுமனே மெய்ப்படுத்திப் போதித்துவிட்டுச் செல்லாது தம்வாழ்வின் இறுதிக் காலக் கட்டங்களிலும் கூட அப்போதனைகளைத் தாமே நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டார். அப்புனித மார்க்கம் அரசன் முதல் ஆண்டிவரை, சிறுவர் முதல் பெரியோர் வரை, ஆண்- பெண், உயர்வு- தாழ்வு, பெரியோர்- சிறியோர்,மேலோர்- கீழோர், படித்தோர் - பாமரர் என்ற எந்த பேதமுமின்றி எவரும் நடைமுறைப்படுத்தி வாழ்க்கையைச் சீராக்கி இம்மையிலும் மறுமையிலும் வெற்றிகாண, இறை நெருக்கத்தைப்பெற வழிவகுக்கும் வற்றாத கருவூலமே என்பதை நிரூபித்துச் சென்றுள்ளார்கள். அதற்காக அம்மாமனிதர் தம்வாழ்க்கையையே முற்றுமுழுதாக அர்ப்பணித்துள்ளனர் என்பதை அறியும்போது நெஞ்சு நெகிழ்கின்றது. 

உலக மக்கள் உய்யப் பல்வேறு காலங்களில் பெருந்தகைகள் தோன்றிச் சீரிய பல தத்துவங்களை, வாழ்க்கை நெறிகளை அள்ளிவீசிச் சென்றுள்ளனர் என்றாலும், அவர்கள் எவரும் தாம் சொல்லிய  அனைத்தையும் தம்வாழ் நாளிலேயே நடைமுறைப்படுத்திச் செல்லும் நடைமுறை அன்றிருக்க வில்லை. முதல் மனிதர்ஆதம் (அலை) அவர்களால் ஓரே இறைவனைத் தொழுவதற்காகக் கட்டப்பட்டு, நூஹ் நபி (அலை) அவர்கள் கால ஜலப்பிரள யத்தால் அள்ளுண்டு போய், இபுறாஹிம் (அலை) அவர்களாலும் அவர் மகனாராலும்  மீண்டும் புனரமைக்கப்பட்டதே ஹறம்ஷரீப்.  இப்புனித ஹறம் ஷரீபாகிய கஹ்பாவில், தினமொரு தெய்வத்தை, ஆண்களும் பெண்களும் அம்மணமாக வலம் வந்து தம்பக்தியைக் காட்டிக்கொண்டிருந்த வேளையே நம்தூதர் நபிகள் நாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தோற்றம் பெற்றனர். 

பிறக்கும் போதே தந்தையை இழந்து, பிறந்து ஆறே வருடங்களில் தாயையு மிழந்து, அனாதையாகி, பாட்டனாரினாலும் பெரிய தந்தையாரினாலும் வளர்க்கப்பட்டாலும்கூட சிறந்த பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் போன் றவை இயற்கையாகவே அமைந்தவராகக் காணப்பட்டார். அவர்தம் உயர் குணமே அவருக்கு 'அல்-அமீன்' நம்பிக்கைக்குரியவர் என்ற உயர் அஸ்தஸ் தை அந்த அராபியர் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.புனித மாமறையில் இறைவனே நீர் உயர் குணத்தின் உன்னத நிலையிருக்கிறீர் என்று கூறுவதி லிருந்து அன்னாரின் உயர் குணம் உறுதிப்படுத்தப்படுகின்றது. 

அவர் முஹம்மது என்ற தனித்தகைமை கொண்ட மிக்காராயினும், மக்கா நகரைத் துறக்க வைத்தது, அவர் இறைவெளிப்பாட்டை வெளிப்படுத்தியது மட்டுமல்ல அதனையே நடைமுறைப்படுத்த முயன்றதே. அவர் போதித் ததைச் சாதிக்க முயன்றமையினால், அவரது போதனைகளைக் கேட்டோர் தாமும் அவ்வாறே தம் நடத்தையை மாற்றிக்கொண்டனர் என்ற விடயமே அக்கால அரேபியருக்கு தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவமானது. 

நாயகத்தைக் கொல்வதற்காக வாளேந்திப் புறப்பட்ட உமர் ஹத்தாப் அவர்கள் தன்னையே மாற்றிக் கொண்டது மட்டுமன்றி தம் வாழ்வை இஸ்லாத்துக் காகவே அர்ப்பணித்துக் கொண்டார் என்றால் நாயகத்தின் போதனை களினதும், சாதனைகளினதும் தாக்கம் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தி யிருக்கும். 

நீதிக்கு உதாரணமாகவும், நேர்மையின் சிகரமாகவும், சிறந்த அறிஞராகவும், துணிந்த வீரராகவுமிருந்த உமர் நாயகத்தின் ஆணையை அரங்கேற்றும் அற்புத மனிதராக மாறி விட்டார். அதற்கு மேல் தூதருக்குப் பின் முதல் கலீபாவான அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் மறைவுக்குப்பின் அவ்விரு வரது இடத்தையும் இரண்டாம் கலீபாவாகப் பதவியேற்றதன் மூலம் நிரவினார் என்றால் நாயக வாழ்வின் சாயலை அவரிலே அறிய முடிகிறது. 

இம்மாற்றங்களாலேயே, போற்றிப் புகழ்ந்த அந்த சீராளர் முஹம்மதை, அதே அராபியர் தூற்றித் துன்புறுத்தினர், பழித்து இகழ்ந்தனர், வன்செயலைக் கட்ட விழ்த்து விட்டனர். அண்ணலார் மட்டும் தம் போக்கில் சிறு தளர்வையாவது செய்ய ஒத்துக் கொண்டிருந்தால் மக்காவுக்கே அண்ணலாரை மன்னராக்கி இருப்பார்கள். தம் செல்வத்தை அவர்தாம் காலடியில் கொட்டிக் குவித்திருப் பார்கள். உயர்குடியில் பிறந்த அனைத்து அழகுச் சிலைகளையும் அன்னா ருக்கு அர்ப்பணம் செய்திருப்பார்கள். 

அன்னார் சில சமயம் முஹம்மதாகவே தம்வாழ்வைக் கடத்தியிருந்தால் அவ்வாழ்வை ஏற்றிருப்பார்களா என்பதை யாமறியோம். இதனை இறைவன் தன்திருமறையில,; நான் உம்மனதைத் திடப்படுத்தி இராவிட்டால் நீர் நிராகரிப்பாளர்களின் வலையில் வீழ்ந்திருப்பீர்கள் என்றவாறு கூறியுள்ளான். ஆனால் அவர்கள் இறைதூதராக, இறை செய்தியை ஏற்று அதை அப்படியே நடைமுறைப்படுத்தும் செயல்வீரராக, அல்லாஹ்வே சிலாகித்த அழகிய முன் மாதிரியாகவே வாழ்ந்தார்கள். அதனாலேயே ஓர்போழ்து அன்னாரின் இளம் மனைவியான மாதரசி ஆயிஷா நாயகி அவர்களிடம் அவர்தம் கணவர் பற்றி வினவியபோது அவர்கள் கூறிய பதில் நமது கட்டுரையின் தலைப்புக்கு அணிசேர்க்கிறது. அண்ணலார் வாழ்வு அவர்கள் போதித்த புனித குர்ஆனா கவே  இருந்தது என்பதே அந்த பதில். 

ஆம் அன்னார் தாம் ஏற்ற இறை தூதர் என்ற பாத்திரமாகவே மாறியிருந் தார்கள். அவருக்கென்று தனிப்பட்ட வாழ்வோ, எண்ணமோ, ஆசைகளோ, விருப்பங்களோ இருக்கவில்லை. குர் ஆன் கூறிய அனைத்துக் குணாதிசயங் களையும் உள்ளடக்கிய ஓர் தனியாள் -ஓரங்க நாடகம் போன்று- நடத்தை யாகவே இருந்தது. ஓர் தனியாள் 23 வருடங்களாகப் பல்வேறு பாத்திரங் களைத் தம் உண்மை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான திறமையோர் புறமிருக்க அதற்காக அவர்கள் செய்த தியாகத்தை நினைக்கும் போது அதை வடிக்க வார்த்தைகள் உண்மையாகவே எனக்குக் கிடைக்க வில்லை என்பதுவே நிதர்சனம்.

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என இறைவனே தன் திருமறையில் கூறியுள்ளபடியும், இதற்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்ட அனைத்து வேதங்களையும் மெய்ப்படுத்த வேண்டியிருந்ததாலும், தான் செய்யும் ஆகக் குறைந்த ஓர் செயல்கூட ஓர் முன்னுதாரணமாக உலகோர் மத்தியில் திகழ்ந்துவிடும் என்பதனால் அனைத்து நடவடிக்கைகளையும், தமதோ அன்றிப் பிறரதோ விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற் சென்றே உள்ளதை உள்ளபடி, உண்மையை உண்மையாக, அது எந்தளவு தன்னில் தனது முஹம்மது என்ற குணாதிசயத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்பன வற்றை எல்லாம் சற்றும் நினையாது அப்படியே வெளிப்படுத்திச் செய்து காட்டியிருந்தார் என்றால் அப்பெருந்தகை மனித இனத்தை உய்விப்பதற் காகச் செய்த மகத்தான தியாகம் மணம்  வீசுகிறது. அதனால் இன்று வையகம் சிறக்க வந்த இஸ்லாம் மெய்யறிவைத் தருகிறது. அதனால் நம் நெஞ்சு நெகிழ்கின்றது. விளக்கத்துக்காகச் சில. 

நாயகத்தின் மணவாழ்க்கை பற்றி அறியாதோர் யாருமிரார். அரேபியாவின் அனைத்துப் பெண்டிராலும் அன்று விரும்பப்பட்ட உத்தமரும், உயர் குடும்பத் தவரும், அழகருமான முஹம்மதை மணமுடிக்கப் பெண்கள் பலர் தவங் கிடந்தும், அந்த பெருந்தகையும் இளவலுமான அவர் இரண்டு தடவை மண முடித்துக் கணவனை  இழந்த நாற்பது வயதைத் தாண்டிய விதவையைத் தான், அகவை இருபத்தைந்தைத் தாண்டாத நிலையில் மணமுடித்திருந்தார் என்பது யாரும் நினைத்துப் பார்க்கவும் முடியாத விடயம். அது மட்டுமல்ல அதே விதவை மனைவியுடன் அம்மனைவி மரணிக்கும் வரை அதாவது தமது ஐம்பது வயது வரை வேறு திருமணம் முடிக்காமல் சீராக வாழ்ந்துள் ளார் என்றால் அவர் முஹம்மது என்ற சாதாரண மனிதனாகச் சிறப்பாக வாழ்ந்த சிறப்பு வெளிப்படுகின்றது. 

அன்னார் அதன் பின்னர் மணமுடித்த அனைவரும் விதவைகளாகவோ, நிராகரிப்புக் காரணமாக மணபந்தம் முறிந்தவர்களாகவோ, போர்க் கைதிகளா கவோதான் இருந்துள்ளனர். இவர்களுக்குத் தகுந்த பாதுகாப்போ அன்றி அந்தஸ்தோ கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அன்று நபிகளாருக்கு இருந்தது. தமது போனையின் போது இன்னொருவரை  இஸ்லாத்தை ஏற்பதாலோ, விதவையானதாலோ, மணபந்தம் முறிந்ததனாலோ, கைதியாக்கப்பட்ட தனாலோ அவர்கள் அநீதிக்கு ஆளாகவோ, நிந்தனைக்காளாகவோ, இழி நிலைக்குத் தள்ளப்படவோ, சமூகத்தில் ஒதுக்கப்பட்டவராகவோ இருக்கக் கூடாதென்ற ஓரே நோக்கிலும், அப்படியான பெண்கள் நபிகளாராலேயே மணமுடிக்கப்படுதல் அவ்வபலைகளுக்கு உயர் கௌரவத்தைத் தந்து மார்க்கத்தைத் தழுவும் மனநிலையை உண்டாக்கும் என்பதாலும் அவர்கள் அந்த திருமணங்களைச் செய்தனர். 

அடுத்ததாக ஒன்பதே வயது நிரம்பிய ஓர் சிறுமியை – ஆயிஷா நாயகி- மணமுடித்தார்கள். இச்செயல் பல நிராகரிப்பாளர்களுக்கு வாய்க்கு அவலாக மாறியிருப்பது அவர்களது குறுகிய நோக்கையும், அறியாமையையும், அவதூறு கூறும் அற்ப குணத்தையும் காட்டுகிறது. நான் ஏலவே கூறியதுபோல இஸ்லாம் இயற்கை மார்க்கம் என்பதால், இயற்கையில் ஓர் ஆணோ பெண்ணோ தமது ஒன்பது தொடக்கம் பதினான்கு வயதுகளில் பால்ய பருவத்தை அடைந்து சிருஷ்டிப்பிற்கு ஆயத்தமாகி விடுகின்றனர் என்பதை முற்றுமணர்ந்த, காருண்யவானான இறைவன் அறிந்தே அப்படியான ஓர் திருணமணங்கூடச் செய்து கொள்ளலாம் என்பதை உலகோருக்கு உணர்த்த,கங்கணம் கட்டியே தம்தூதர் மூலம் அவ்வுண்மையை நடைமுறைப்படுத்திக் காட்டினான். 

இவை அனைத்தும் நபிகளாரின் நபித்துவப்பணி தொடங்கிய இறுதிப் பதின் மூன்று வருடத்துள் நடந்தேறியவை. இம்மனைவிமார்கள் யாருக்குமே குழந்தைகள் இருக்கவில்லை என்பது உணரப்பட வேண்டியது. முதல் மனைவிக்குக் கிடைத்த ஆண் மகவும்கூட மரணத்தைத் தழுவிக் கொண்டது. இச்செய்திகளுள் மிக ஆழமான உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன.  இவை களை இன்ஷா அல்லாஹ் இன்னோர் சந்தர்ப்பத்தில் காண்போம். 

ஆக இறைவனின் நன்னோக்கு திருமண பந்தத்துக்கான காலம் பால்ய வயதான ஏறத்தாழ ஒன்பதிலேயே தொடங்கி விடுகிறது என்ற பேருண்மை யை வெளிப்படுத்துவதே தவிர வேறு காரணங்கள் இருக்கவில்லை என்பதை உணராதோர் அறிவற்றோராகவே இருக்க முடியும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை  என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

முகம்மது நபி (ஸல்) அவர்கள் பல போர்முனைகளை நேர்முகமாகவே சந்தித்திருந்ததும், பலவற்றை நடத்த படையனுப்பிய நிலையிலும் அதே உண்மைகளே காணப்படுகின்றன. பாதிக்கப்படுபவர் போரிடுவது, தற்காப்புக் காகப் போரிடுவது, நியாயத்தை நிலைநிறுத்தப் போரிடுவது, மக்கள் நன்மை கருதி உண்மைகளை வெளிப்படுத்த போரிடுவது போன்றவையே அன்னாரது நேர்முக, மறைமுகப் போருக்கான காரணிகளாகும். தவிர நாடு பிடிப்பதோ, கொள்ளையடிப்பதோ, நாசவேலைகளில் ஈடுபடுவதோ, போருக்கான காரணங்களாக இருக்கவில்லை. 

நாட்டைவிட்டு ஓடி மதினாமா நகரில் தஞ்சமாகிப் பலவருடங்கள் பல் வேறு போர்களைச் சந்தித்து வென்று, தோற்று இஸ்லாம் உலகளாவிய மார்க்க மான பின்னர், மிகப் பலம் பொருந்திய சக்தியாக மாறிய பின்னர் தமது தாய்நாடான, புனித கஃபா அமைந்திருந்த அப்புண்ணிய பூமியான மக்கமா நகருக்குள் நுழையும்போது ஒரு துளிக் குருதியைத்தானும் சிந்தாதே அதனைக் கைப்பற்றினர் என்றால் அது உலக அதிசயமாகக் கருதப்பட வேண்டியது மட்டுமல்ல நபிகள் நாதரின் மனப்பக்குவத்தை மனிதத் தன்மையையும், முன்மாதிரியையும் அங்கு காணமுடிகிறது. அவர்கள் அன்று நினைத்திருந்தால் தம்பகையாளிகளை, நிராகரிப்பாளர்களைத் துவம்சம் செய்திருக்க முடியும். ஆனால் அனைவரையும் அனைத்தார்கள், மார்க்கத்தில் பவந்தமில்லை எனப் பகன்றார்கள். இவையெல்லாம் உலகமாந்தருக்கு முன்னுதாரணமாகக் காட்டப்பட்டதே. 

அவர்களது அனைத்துச் செயல்களும் உலகோருக்கு முன்மாதிரியே அன்றி வேறில்லை. வாழ்ந்து காட்டி மற்றையோரை வாழும்படி வலியுறுத்திய வள்ளலே நாயகத் திருமேனி அப்துல்லா இப்னு முகம்மது. பேச்சு வேறு செயல் வேறு என்ற தத்துவத்தை தகர்த்த நபிகளார் பேசியதையே செய்தார்கள் செய்வதையே பேசினார்கள். இதில் அவர்களது சுயவிருப்பு சிறிதும் இடம்பெறவில்லை. 

எதையெல்லாம் இறைவன் மக்களுக்குப் போதிக்கும்படி கூறினானோ அவற்றையெல்லாம் நபிகளார் முழுமையாக ஏற்று, தாம் ஏற்ற பாத்திரத்தை நாயகம் (ஸல்) எந்த சலனமுமின்றி செய்துகாட்டினார்கள். இவ்வகையில் இறை ஆணைப்படி உலகமாந்தருக்காக வாழ்ந்து காட்டிய குர்ஆன் வாழ்க்கையில் அன்னாரது சீரிய தியாகத்தையே காண முடிகிறது. அவர்தம் வாழ்வின் சிறப்புக்கான பெருமை இறைவனின் அருள் மறையைச் சாரும். இன்று நாம் காணும் தீனுல் இஸ்லாம் அன்று நாயகம் (ஸல்) அவர்களது தியாக வாழ்வே.

- நிஹா -

வட்டி – ஓர் சிறப்புப் பார்வை...

வட்டி ஓர் சிறப்புப் பார்வை...


புனித குர்ஆனில் காணப்படாத இச்சொல் கையாளப்படும் நிலைமைக ளும் குர்ஆனிய தடையும் பற்றிய பக்கச்சார்பற்ற ஓர் ஆய்வே இவ் வாக்கம். வட்டி என்ற சொல் குர்ஆனில் காணப்படாத நிலையில்> அது அறிமுகமாகியுள்ள வழியைக் காண்பது> உண்மை நிலையை> அதன் செல்லுபடியாகும் தன்மையை> அதன் நேரடி> பக்க விளைவுகளை கூடிய ளவு அறிய வைப்பதுடன்> அது தொடர்பான பிரச்சினைகளை இனங்கண்டு குர்ஆனிய வழியில் தீர்வைக் கண்டறிய உதவும். குர்ஆனியச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் உண்டான பிரச்சினை எனக் கொண்டால்> உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகவே இறக்கியருளப்பட்ட புனித குர்ஆன்> பிரச்சினைகளை உண்டாக்கி இருக்குமா? இதுவே இவ் வாய்வுக்கான காரணமாக அமைந்தது

எந்தச் சட்டத்தால் பிரச்சினைகள் தோன்றியுள்ளன எனக் கருதுகின் றோமோ> அந்தச் சட்டத்தை ஆராய்வதே அறிவுடமை என்பதுடன்> விவேக மானதும்> ஏற்புடையதும் என்பதனாலும்> மேலாக குர்ஆனியச் சட்டங் களில் பிரச்சினை இருப்பதாகத் தோற்றினால் குர்ஆனைத் தவிர வேறு எதுவும் ஏற்கப்படாது என்பதனாலும்> அப்பிரச்சினை பற்றிய குர்ஆன் வசனங்களை ஆய்வு செய்ய வேண்டிய கடப்பாடுள்ளது

அந்த அடிப்படையில் புனித மாமறை 3:130 இல் காணப்படும் வசனம் ஒன்றே> வட்டி என்ற வகையில் நாம் கைக்கொள்ளுவதற்கு ஆதாரமாகக் காணக்கூடிய ஓரே வசனமாக உள்ளது. இதுவே கொடுக்கல் வாங்கலில் நடைபெறும் மிகப் பெரும் அநியாயம் ஒன்றினைத் தடைசெய்யும் கட்ட ளையாக  உள்ளது. ஆல இம்றான் 3:130 'இறைநம்பிக்கையாளர்களே! இரட்டிப்பாக்கப்பட்ட பன்மடங்காகிவிடும் வட்டியை நீங்கள் தின்னாதீர்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங் கள்'. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் அறிவது தெளிவைத் தரும்.  O ye who believe! Devour not usury, doubled and multiplied; but fear Allah; that ye may (really) prosper.’ 

இது றிபா வுக்கு (அல்லாஹ் கொடுத்திருக்கும் அளவு கடந்த அநியாய வட்டியைக் குறிக்கும்) 'யூஸரி' யை உட்கொள்ளாதீர்கள் என்ற கருத்தைத் தருகிறது. மேலாக  குர்ஆன் மூலமொழி பயன்படுத்தி உள்ள வார்த்தை  இவ்விடத்தில் அதிகாரபூர்வமானது.அரபி மொழியில் குர்ஆன் கையாண்ட சொல் றிபா Riba. இந்த' 'றிபா' (Riba ) என்ற அரபிச் சொல்லுக்கு ஆங்கில மொழி பெயர்ப்பாளர் அனைவரும் USURY என்ற சொல்லையே பயன் படுத்தி உள்ளனர். தமிழ் மொழி பெயர்ப்புகள் மட்டுமே வட்டி என்ற சொல்லை 'றிபா' வின் கருத்தாகத் தந்துள்ளனர். வட்டி என்பதற்கு வழக் கிலுள்ள ஆங்கில வார்த்தை Interest என்ற சொல்லே என்பது சிறு குழந் தையும் அறிந்ததே நாம் முன்னர் கருதியது போன்று குர்ஆனிய வசனம் வட்டி என்ற சொல்லை உபயோகிக்கவில்லை என்பதுடன் குர்ஆனியச் சட்டம் எற்படுத்தி உள்ள பிரச்சினை அல்லவென்பது. உடனடியாகவே அறியக் கூடியதாயுள்ளது.

உண்மையை அறிய விழைவோர் சொற்களைப் பார்ப்பது அவசியமற்றது. எச்சொற்கள் கையாளப்பட்டாலும்> அச்சொற்கள் குறிக்கும்; உண்மை> நோக்கம் என்பனவே அறியப்படல் முக்கியம். பாதைக்குக் குறுக்கே மஞ்சள் கோடு போடப்பட்டிருந்தால்> போக்குவரத்து விதிகளில் ஆகக் குறைந்தளவு அறிவுள்ளவனும்> அது பாதசாரிகள் பாதுகாப்பாக அப்பாதை யைக் கடப்பதற்காகப் போடப்பட்டுள்ளது என்பதையும்> அதில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமையையும் அறிவான். அதே நேரம் வாகனச் சாரதிகள் கூட> மஞ்சள் கோட்டில் ஒருவரைக் கண்டால்> அப்பாதையில் தொடர்ந்து செல்லும் உரிமை தற்காலிகத் தடைக்கு ஆளாவதை அறிவான். உண்மையில் அம்மஞ்சள் கோட்டுக்கு என்று ஒரு பொருளும் கிடையாது. பாவிக்கப்பட்ட இடம் அதற்குப் பொருளையும்> பெறுமதியை யும்> உபயோகத்தையும் தருகிறது. ஆனால் அம்மஞ்சள் கோட்டை வீதி ஒழுங்கு என்ற புத்தகத்தில் அச்சிட்டு அது பாவிக்கப்படும் காரணம்> நோக்கம்> தேவை போன்றவற்றைப் போடும் போது அக் கோட்டிற்குப் பொருள் கிடைக்கிறது. அந்தப் பொருளில் அதற்குரிய பாதையில் போடும் போதுதான் அதன் பலன்.

அது போன்றதே அல்லாஹ்வின் சட்டங்களைப் பாவிப்பதும். அதாவது ஜனரஞ்சகமான> வாகனப் போக்குவரத்து அதிக மான பாதையில் அதனை இடாது> அதற்குப் பொருத்தமில்லாத எங்கோ போட்டால்> அது பொருளை இழப்பதோடு பயனற்றதாகவும்> வீணாகவும் மாறிவிடும். அல்லது வாகனமே ஓடாத> அல்லது மனித நடமாட்டமே அற்ற வீதியில் போடுவது கேலிக்குரியதாகிவிடும்.
  
நாம் இதுகாலவரை அறிந்துள்ளபடி> வட்டி (INTEREST) என்ற பதம்> பணக் கொடுக்கல்-வாங்கலில்> கொடுக்கப்பட்ட முதலுக்கு மேலதிகமாக சிறு தொகையைப் பெறுவது> அத்தொதையை இலாபமாகப் பெறுவதற்காக ஓர் முதலைக் கொடுப்பது> அந்நடவடிக்கை தொடர்பாகக் கணக்குப் பார்ப்பது> போன்ற அதற்கு உடந்தையான காரியங்களில் ஈடுபடுவது அனைத்துமே வட்டி என்ற பெயரால்> தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவமாகக் கூறப் படுகிறது. இதனையே இற்றைவரை முஸ்லிம்கள் விரும்பியோ> விரும்பா மலோ செய்து வருவதாகக் கூறுகின்றனர். அறிந்த வரையில் இச்சட்டம் மீறப்பட்டு வருவது கண்கூடாக காணக்கூடியதே. மேலும்>இந்நிலை வட்டி பெறுவதில் இருந்து மட்டும் முஸ்லிம்கள் தவிர்ந்துள்ள நிலையை அறியக்கூடியதாகவும் உள்ளது. இச்செயல் சட்டத்தை மதிக்கும் முறை யெனக் கருத முடியவில்லை. மாறாக> கடன் கொடுப்பதைத் தவிர்த் துள்ளதால் ஏற்பட்டுள்ள சாதக விளைவே ஆகும். பணத்தேவை உள்ளவர் களுக்கு> ஏதாவது வகையில்  கொடுப்பனவு நடந்திருந்தால் தானே முதலீட்டுக்கு மேலதிகமாகக் கிடைக்கும் வட்டி பெறப்பட்டிருக்கும். இன்னொரு வகையில் கூறின்> கடன் கொடுக்கப்படுவதில்லை என்ற தன்மையே

வட்டி என்பது ஆங்கிலத்தில் interest என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. இதன் கருத்து Oxford Dictionary யில் பின்வருமாறுள்ளது. The extra money you pay back when you borrow money or that you receive when you invest money.   அதாவது கடனுக்கு மேலாகவோ வைப்பீட்டுக்கு மேலாகவோ கொடுக்கப்படும் அல்லது பெறப்படும் பணத்தைக் குறிக்கின்றது. இதிலிருந்து முதலீட்டுக்கு இலாபம் பெறுவது றிபா அல்ல அது வட்டி என்பது தெரிகிறது. முதலீட்டுக்கு அதாவது வியாபாரத்துக்கான முதலீட்டுக்குக் கிடைக்கும் இலாபம் றிபா அல்ல. இந்தக் கருத்தைக் கொண்ட வட்டி என்ற சொல் எந்த வகையிலும் குர்ஆன் தடைசெய்துள்ள 'றிபா'வோடு சம்பந்த மில்லாதது. றிபாவை வட்டி என்ற கருதுகோளுக்குள் அடக்குவோ மாயின்> வியாபாரத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு பெறப்படுவதும் வட்டிக்குள் அடங்குகின்றது. இதனை அல் குர்ஆன் 2:275 வியாபாரமும் றிபாவைப் போன்றதே  எனக் கூறுவதைக் கண்டிக்கின்றது.

அதாவது நான் முன்னர் குறிப்பிட்டவாறு வட்டி பெறுவதில் இருந்து மட்டுமே முஸ்லிம்கள் விலகி உள்ளனர் என்பது தெளிவு. இது அவர்கள்  வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும்> வட்டி பெறப்படும் ஒரு தொகையைக் கடனாக> முஸ்லிம் அல்லாதோரிடம் அல்லது அந்தத் துறையில் ஈடுபட்டுள்ள தாபனங்களில் இருந்து பெற்று வருகிறார்;கள் என்பதையும் வெளிப்படுதுகிறது.அதாவது கடன்படுதல் என்ற நடவடிக்கை முஸ்லிம்களிடமும்> கடன் கொடுத்தல் என்ற பண்பு முஸ்லிம் அல்லா தோரிடமும் காணப்படுகின்றது. இந்நிலை இஸ்லாம் கடன் கொடுப்பதைத் தடை செய்துள்ளதோ என்ற எண்ணத்தையும் வளர்க்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன்> இலங்கையில்  வெளிவரும் பிரபல தமிழ் வார வெளியீட்டில்> இஸ்லாமிய பக்கத்தில்> முஸ்லிம்களின் பெயர்கொண்ட ஒருவர் எழுதியிருந்த கட்டுரையில்> இஸ்லாத்தில் கடன் பெறுவது பாவம் என எழுதியிருந்தார். வாசித்ததும் திகைப்படைந்த நான் உடனடியாக ஓர் மறுப்பை> புனித குர்ஆனின் அடிப் படையில் விளக்கமாக எழுதி> அப் பத்திரிகை ஆசிரியருக்கும்> அதன் ஒரு பிரதியைக் கட்டுரையாளரின் பெயருக்கு (அவரது விலாசம் தெரியா மையால்) அதே பத்திரிகைக்கும்இன்னொன்றை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபைக்கும் பதிவுத் தபால்களில் பெரும் பொறுப்புடன்;> எதிர்பார்ப்புடன் அனுப்பினேன். பத்திரிகை எனது நியாயமான மறுப்பைத் தம் பத்திரிகையில் வெளியிட வில்லை (வெளியிட வேண்டியது கடமையும்> பத்திரிகா தர்மமும் கூட) என்ற வேதனையைவிட> ஜம் இய்யத்துல் உலமா சபையினரிடம் இருந்து 'பெற்றுக்கொண்டோம்' என்ற பதில்கூட வரவில்லை (அது அதிகாரம் பெற்ற மார்க்க அறிஞர் சபை என்ற வகையில் அவர்தம் பொறுப்பு) என்ற நிலை> குர்ஆனியக் கருத்துக் களுக்கு எதிரான விடயங்கள் முஸ்லிம்களாலேயே தேசியப்பத்திரிகை ஒன்றில் வெளியானது சுட்டிக்காட்டப்பட்ட பின்பும் வாளாவிருந்த அலட்சியப் போக்கே என்னைத் திகைப்படைய> அதிர்ச்சியடைய> விரக்தி யடைய வைத்தது (இது ஒரு சட்டத்தை மதிக்கும் பிரஜையின் நியாயமான உரிமை- எதிர்பார்ப்பிற்கு ஏற்பட்ட புறக்கணிப்பு) அச்சபை யினருக்கு> கட்டுரையில் குறிப்பிட்டது போன்ற பிழையான கருத்துக்கள்; மறுப்பின்றி வெளிவரும்போது> பாமர முஸ்லிம்கள் பிழையான வழியில் நடக்கவும்> முஸ்லிம் அல்லாதோர் இஸ்லாத்தைத் தரக் குறைவான மார்க்கமாகக் கொள்ளவும் இடமுண்டு. அதனால்> விசேடமாக முஸ்லிம் கள் எழுதும் இஸ்லாமியக் கட்டுரைகள் அந்நிய மதத் தாரால் வெளியிடப் படும் பத்திரிகைகளில் வெளிவரும்போது> அவர்தம் அறியாமையால் குர்ஆனுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெறாது பார்ப்பதை அவர்கள் உறுதி செய்யும்படியும் எழுதியிருந்தேன். ஆனால் பலனோ பூஜ்யம்.

விடயத்துக்கு வந்தால்> குர்ஆனில்> இன்னோர் இடத்தில் இறைவன் வட்டியை அழித்துவிட்டு தர்மத்தை வளர்ப்பதாகக் கூறியுள்ளான். நாம்> முஸ்லிம்கள் (இஸ்லாத்தை அல்லது குர்ஆனைக் கூறவில்லை) எதனை வட்டி என்று கருதிக் கொண்டுள்ளோமோ? அது இன்று வளர்ந்துள்ள அளவை யாரும் குறைத்து எடைபோட முடியாது. இதனை மறுப்பவரும் எவரும் இல்லை. சுருங்கக் கூறின்> முழுவுலகுமே அந்த வட்டியில் மூழ்கிக் கிடக்கின்றது. இப்போது (தற்போது பின்பற்றப்படும் தடை செய்யப்பட்ட வட்டி பற்றிய சட்டத்தால் ) இறைவனின் பேச்சு பொய்யாகி உள்ளமை போல் தெரிகிறது. (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக). அடுத்து> முன்னொரு போதும் இல்லாதவாறு> இஸ்லாமியரும்> அல்லா தாரும் சம்பந்தப்பட்டு உள்ள தர்ம ஸ்தாபனங்கள் நிறையவே தோன்றி யுள்ளமைமையும் யாரும் மறந்துவிடவோ> மறுத்துவிடவோ முடியாது. இந்த அபரித வளர்ச்சி அல்லாஹ்வின் வார்த்தையை உண்மைப்படுத்தும் வேளை> வட்டியை அழிப்பது என்ற முன்னைய பகுதியில் தோல்வியைத் தழுவியவாறான தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கான காரணம்> (நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் சட்டம் என்பதால் அது) ஆராயப்பட வேண்டி யதே. குர்ஆனில் செய்யப்படும் அவ்வாராய்வே  நமது வட்டி பற்றிய  தற்போதைய கருதுகோளின் பொய்மையை> செல்லுபடியாகாத் தன்மை யை> நமது அறியாமையை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி விடியலை நல்கி வழிகாட்டிட வல்லது.

முஸ்லிம்களின் வட்டி பற்றிய தற்போதைய நடைமுறை> படுதோல்வி யைக் கண்டுள்ள அதே வேளை> அல்லாஹ் சுபுஹானஹுவதஆலாவின் பேச்சையும் பொய்ப்பித்துள்ள (பிர)மை தெளிவாகிறது. இது. ஒன்று நமது கருதுகோளின் பிழையாக இருக்க வேண்டும். அன்றேல் உலக நடை முறையும்> வல்ல அல்லாஹ்வும்கூட பிழையாக இருக்க வேண்டும். (அல்லாஹ் மன்னிப்பானாக) உலக நடைமுறையை வேண்டுமானால் பிழையெனக் கருதித் தூக்கி வீசிவிடலாம் உண்மையில் அது குர்ஆனியச் சட்டமாயின்.

ஆனால் அல்லாஹ்வின் வசனமே பொய்யாகியுள்ளதை> உண்மை முஸ்லிம்கள் எனக் கூறிக் கொண்டிருக்கும் நாம் முன்னை யதைப் போன்று தூக்கி வீசிவிட முடியுமா? அல்லது அலட்சியம் செய்யத்தான் முடியுமாவீச முடியவில்லை என்றால் நாம் பின்பற்றி கொண்டுள்ள வட்டி பற்றிய மனித சட்டம் பொருத்தமற்றது என்பதை ஏற்றேயாக வேண்டும்.

நாம் பின்பற்றுவது குர்ஆனினதும்> ஹதீஸ்களினதும் அடிப்படையிலும்> அறிஞர் பெருமக்களென நாம் ஏற்றுக்கொண்டுள்ள சட்ட மேதைகள் சிலராலும் காலத்தின் தேவை கருதி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் யாக்கப்பட்ட சட்டங்கள். அவற்றை நாம் ஷரீஆ சட்டங்கள் என ஏற்றுள் ளோம்நாம் ஏற்றுள்ள வட்டி பற்றிய சட்டம் மேற்கண்ட இமாம்கள் சிலரால் ஆக்கப்பட்டவை. இவைகூட சர்ச்சைக்கு உரியனவாகவே கருதப் படுகிறது! ஆதலால்> அச்சட்டங்கள் பற்றிய அறிதல் ஒன்றே இச்சந்தர்ப் பத்தில் தேவைப்படுவதாகவும்> பிரச்சினையை விளங்கித் தீர்வுக்கான வழிகளை குர்ஆனின் அடிப்படையிலேயே காணக் கூடியதாகவும் இருக்கும். நிச்சயமாக மேற்கண்ட சட்டங்களை யாத்த சட்டவல்லுநர் களான இமாம்கள் குறைத்து மதிப்பிடக் கூடியவர்கள் அல்லர் என்ப தையும் நமது ஆய்வின் போது கருத்திலிருத்துவது> நமது ஆய்வு சரியான வழியில் செல்ல உதவும். இன்றேல் ஓரே வசனத்தில் ஷரீஆ சட்டத்தை யாத்த இமாம்கள் பிழை விட்டுள்ளனர் என்ற அளவோடு ஆய்வை நிறுத்தித் தீர்ப்பைக் கண்டிருக்கலாம். நான் முன்னர் கூறியது போல் உண்மை நிலையை அறிவது என்பதிலிருந்து> தடம் புரண்டு மீண்டும் வேறொரு பிழைக்குள் புகுத்திவிடும்இது சட்டியிலிருந்து நெருப்பில் வீழ்வதை என்பதை  ஒக்கும்.

தற்போதைய கையறு நிலை ஷரீஆச் சட்டத்தைப் பின்பற்றுவதால் ஏற் படுகின்றது என்பது தெளிவாக விளங்கும் நிலையில்> அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை முன்னர் கூறினேன். நாம் முற்பந்தியில் அறிந்தது போல் அச்சட்ட இமாம்கள் பிழையான சட்டத்தை இயற்றி இருக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் இயற்றி இருந்தால்> உலகம் அவர் களை இத்தனை காலமும் ஏற்றிருக்காது. இறைதண்டனைகூட அவர் களுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடைபெற்றிர வில்லை. இந்த வகையில் அவர்கள் இயற்றிய சட்டம் குர்ஆனுக்கு முரணானதாக இருந்திராது. அது நிட்சயமாகக் குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு> அன்றைய றிபா வைத் தடைசெய்துள்ள இறை கூற்றை விவரிக்கும் வகையில்> அன்று நடைமுறையில் இருந்த றிபா வெனக் குறிப்பிடப்பட்ட நடவடிக்கையைத் நடைமுறைப்படுத்துவதற்காகக்  கூறப் பட்டதாகவே இருந்திருக்கும்

அந்த வகையில்> சுருக்கமாக> ஷரியாவின்படி> கூறுவதாயின் 'ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை> குறிப்பிட்ட காலத்துக்கு> குறிப்பிட்ட விகிதத்தில் இலாபம் தரப்பட வேண்டும்' என்ற பொருத்தத்தில் கொடுக்கல் வாங்கல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அச்சட்ட வாக்கத்தின் முழு நோக்கமும் இறைவன் தடைக்குக் காரணமாக அமைந்துள்ள> அப்போது கொடுக்கல் வாங்கலில் நிலவிய அநியாயத் தைக் களைவதற்கான வகையில் தொடுக்கப்பட்டதாகவே இருக்கும். இன்னும் சிறிது விளக்கின்> அன்று இரட்டிப்பாகும் பன்மடங்காகும் என்பதற்கு> விளக்கமாக> அன்றைய நடைமுறையில் உள்ளபடி விளக்கம் பெறலாம். காரணம்> அன்று பெறப்பட்ட 'றிபா' மனிதாபிமானமற்ற> மிகப் பெரும் அநியாயமான> அளவு கடந்த விகிதாசாரத்தைக் கொண்டிருந்தது. அதுவே யூஸரி USURY என்ற ஆங்கிலச் சொல்லால் விளக்கப்படுவது. இதனைச் சரியாக விளங்கிக் கொள்ள அக்காலத்தில் நடைமுறையில் இருந்த 'றிபா' வை அறிவது  நன்மை தருவது.

அதாவது> அக்காலத்தில் ஒருவர் தனது கஷ்ட நிலையில்> அதிலிருந்து விடுபடுவதற்காகப் பெறப்பட்ட கடனே> அந்த மனிதருக்குப் பெருஞ் சுமையாகி> மீளவே முடியாத நிலையில் ஓட்டாண்டி ஆக்கிவிடும். கடனிலிருந்து மீள முடியாததனால்> குற்றவாளியாகவும் ஆக்கப்பட்டுத் தண்டனையைக் கூடப் பெற்றுத்தரும். இந்நிலை ஒருவரது> சாதாரண இயல்பு வாழ்வையும்> அந்தஸ்தையும்> முழுக் குடும்பத்தையும் பாதிப் படையச் செய்வதோடு அவமானத்தையும் உருவாக்கிவிடும். இந்நடை முறையையே வல்ல அல்லாஹ்வும் கடுமையாகத் தடை செய்துள்ளான். மாறாக> நியாயமான கடன் முறையைத் தடை செய்யவில்லை என்பதை 2:282 நடுநிலை தவறாது> ஊண்றிக் கவனித்து உய்த்துணர்ந்தால் உண்மை அறியலாம். அறியாமைத் திரை விலகும். இறைவனின் கடன் சட்டம் முழு உலகையும் வாழவைக்கும்

RIBA என்ற அரபுச் சொல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பான USURY யின் பொருள் Oxford Dictionary apy; gpd;tUkhWs;sJ. The practice of lending money to people at unfairly high rates of interest ( New Oxford Advanced Learners Dictionary). Lending of money at exorbitant or illegal rates of interest ( The Oxford Dictionary of current English). Usury: In law, the crime of charging an unlawfully high rate of interest. In old English law, the taking of any compensation whatsoever was termed USURY. With the expansion of trade in the 13th century the demand for credit increased, necessitating a modification of term. In 1545 England fixed a legal maximum interest, a practice later followed by other Western nations.

ஒக்ஸ்போர்ட் அகராதி> 13ஆம் நூற்றாண்டிலே கடன் தேவை அதிகரித் ததாகக் கூறி மாற்றுவழி காண விழைந்துள்ளது. 16ஆம் நூற்றாண்டில்> அறவிடப்படக்கூடிய வட்டியைத் தீர்மானித்து;ளது. ஆனால் புனித மாமறையோ> ஏழாம் நூற்றாண்டில்> 'றிபா' USURY என்ற அநியாய வட்டி யைத் தடை செய்ததுடன்> கடன் கொடுக்கல் வாங்கல் எப்படிச் செய்யப்பட வேண்டும் என்றும் கண்டிப்பான சட்டத்தை>உலக அழிவுவரை காலாவதி யாகி> வழக்கொழியாத வகையில் ஆக்கித் தந்துள்ளது

எது எப்படியோ குர்ஆன் தடைசெய்துள்ள நடைமுறை அல்லாத ஒன்றைசட்டமாக்குவதோ> அப்படியான சட்டம் யாக்கப்பட்டிருந்தால்> அத்தகு சட்டங்களைப் பின்பற்றுவதோ ஏற்க முடியாதது. எந்தச் சட்டமும்> யாரால் யாக்கப்பட்டது> எப்போதிலிருந்து> எங்கிருந்து> வழக்கிலிருந்தது  போன்ற வற்றையும் இன்னபிற தகுதிகளையும் கொண்டிருந்தாலும்> அவை குர்ஆனொடு முரண்படுமாயின் அவை குப்பைக் கூடைக்கு உரியனவே என்பதை முஸ்லிம்களாகிய நாம் மறந்துவிடலாகாது. அதற்கு அவனது தூதர்களுக்குக் கூட அனுமதி இல்லை.

அல்லாஹ் தனது அதிகாரங்களை யாருக்கும் பங்கிட்டதில்லை. குர்ஆன் வசனத்தில் சிறு மாற்றமாவது ஏற்படுத்த நினைத்தாலோ> நிலைதோன்றி னாலோ கூட இறைவன் அதனைப் பார்த்துக் கொண்டு வாளாவிரான் என்பதை> வலது கையைப் பிடித்துக் கொண்டு> உயிர் நரம்பையே துண்டித்து விடுவேன் என எச்சரித் துள்ள திருவசனம் உணர்த்தும். இது தனது சட்டங்கள் எந்த வகையிலும் பிழையாக மக்களைப் போய்ச் சேரக் கூடாது என்பதில் கொண்டுள்ள அல்லாஹ்வின் உறுதியைக் காட்டும்அதே வேளை அவ்வாறான நிலையால் அடியார்கள் சிறிதும் பாதிக்கப் படக்கூடாது என்ற கண்டிப்பு> இறைவன் நம்மீது கொண்டுள்ள  கருணை யையும் கரிசனையையும் வெளிப்படுத்தும்.

வட்டி ஆரம்பிக்கும் இடம், கடன் என்பதால் கடன் பற்றிய அல்லாஹ்வின் நிலைப்பாட்டை அறிய வேண்டியுள்ளது. இத்தருணத்தில்> நடைமுறை வாழ்க்கைத் திட்டத்தை ஊக்குவிக்கும் குர்ஆன்> வறியவர்கள் மத்தியில் சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் அத்தியாவசியமான பல்வேறுபட்ட தேவை களை> அவ்வப்போது நிறைவேற்றிக் கொள்ள அடுத்தவர் உதவி தேவைப் படும் என்பதை அறிந்து> கருத்திலிருத்தி> அதற்கான விதிமுறைகளுடன் கடன் பெறலை> கடன் கொடுத்தலைச் சட்டமாக்கியுள்ளதை அல்குர்ஆன் 2:282. இல் அழகாக விவரித்துள்ளதை நினைவுகூருவது> றிபா வைத் தடை செய்த வேளை அதற்கு மாற்றீடாகக் கூறியுள்ளமையின் இன்றியமை யாமையை அறிய உதவுகிறது. யாவுமறிந்தவனும்> கருணையாளனும் அல்லவா வல்ல அல்லாஹ். மேலும்> கடனை அல்லாஹ் அழகிய கடன் என வர்ணித்துள்ளமை வெறும் வார்த்தையல்ல. ஆழ்ந்து சிந்திப்பின் அதன் அருமை> பெருமைகளை> தாரதம்மியத்தை> தாற்பரியத்தை> தூர நோக்கை> சமூக ஒற்றுமையை> உதவும் மனப்பாங்கை> குழுவாக இயங்க வேண்டியுள்ளதை> பல்வேறு தரத்தாருக்குமுள்ள கடமையைப் பொறுப்பை அறிய உதவும்.

குர்ஆன். அல் குர்ஆன் அல் பகரா வசனம் 2:282, கடன் முறைமையை மிகச் சுருக்கமாக ஆனால் மிகத் தெளிவாகச் சட்டமியற்றி உள்ளது. 'இறைநம்பிக்கையாளர்களே! நீங்;கள் குறிப்பிட்ட தவணை வரை> கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வீர்களாயின் அதனை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மேலும்> எழுதுபவர் உங்களுக்கிடையில் நீதமாக எழுதட்டும். எழுதுகிறவர் எழுதுவதற்கு மறுக்கக் கூடாது. அல்லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்தது போன்று> அவர் எழுதிக் கொடுக்கட்டும். இன்னும் எவர் மீது உரிமையுள்ளதோ அவர் வாசகம் கூறட்டும். தமது ரப்புவான அல்லாஹ்வை அவர் அஞ்சிக் கொள்ளட்டும். இன்னும் அதிலிருந்து எதனையும் அவர் குறைத்துவிட வேண்டாம். எனவே கடன் வாங்கியவர் எழுத்தறிவு இல்லாதவராக> அல்லது பலவீன ராக> அல்லது வாசகம் சொல்வதற்கு  இயலாதவராக இருப்பராயின் அவரது பொறுப்பாளர் நீதமான முறையில் வாசகம் கூறவேண்டும். உங்களிலுள்ள ஆண்களில் இரு  சாட்சியாளர்களை நீங்கள் சாட்சிகளாக் கிக் கொள்ளுங்கள். அவ்விருவரும் ஆண்களாக இல்லையாயின்> சாட்சி யாளரில் நீங்கள் பொருந்திக் கொண்டோரில் ஓர் ஆணும்> இரு பெண் களும்  அவ்விருவரில் ஒருவர் மறந்துவிடுவதை அவ்விருவரில் ஒருவர் மற்றவருக்கு நினைவூட்டுவதற்குத்தான். மேலும் சாட்சிகள் அழைக்கப் படும் போது அவர்கள் மறுக்கக் கூடாது. மேலும் கொஞ்சமாக இருந்தா லும்> மிகுதமாக இருந்தாலும் அதன் தவணை வரை எழுதுவதற்குச் சடையாதீர்கள். உங்களுக்கு அது அல்லாஹ்விடத்தில் மிக்க நீதியானதும்> சாட்சியத்திற்கு மிக்க உறுதியானதும்> சந்தேகம் எழாமல் இருப்பதற்கு மிக நெருங்கியதாகவும் இருக்கிறதுநீங்கள் உங்களுக்கிடையே ரொக்க மாக நடத்தும் நேரடி வியாபாரமாக இருப்பின்> அதனை நீங்கள் எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்கள் மீது குற்றமும் இல்லை. மேலும் வியாபாரம் செய்யும் போது நீங்கள் சாட்சியை ஏற்படுத்திக் கொள்ளுங் கள். மேலும்> எழுதுபவரோ> சாட்சியாளரோ துன்புறுத்தப்படக் கூடாது. அவ்வாறு செய்வீர்களாயின் நிச்சயமாக அது உங்களால் விளைந்த கெடுதியாகும். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்  கொள்ளுங்கள்அல்லாஹ்தான் உங்களுக்கு வழிமுறைகளைக் கற்றுக் கொடுக்கிறான். மேலும்> அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் நன்கு அறிந்தவன்'. 

மேற்கண்ட குர்ஆன் வசனம்> 'றிபா' வினால் தடைசெய்யப்பட்டதற்கு> மாற்று வழியாகக் கைக்கொள்ளப்பட வேண்டிய கொடுக்கல் வாங்கல் முறை கருத்தில் எடுக்கப்படாமையினால்;> அல்லது முன்னைய வட்டி பற்றிய பிழையான கருத்தியலால் கடன் கொடுக்கும்படி கூறிய இறை சட்டம்> முஸ்லிம்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடன் சட்டத்தை ஆழ்ந்து ஆராய்ந்தால்> கடன் கொடுப்பதில்> பல நிபந்தனை களும்> ஒப்புதல்களும் பெறப்பட வேண்டும் என்பதும்> அவை நியாயபூர்வ மானதாக இருக்க வேண்டும் என்பது புலனாகின்றதுநீங்கள் குறிப்பிட்ட தவணைவரை கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வீர்களாயின் என்பது> தேவைக்கேற்ப கால நிர்ணயம் செய்யப்பட வேண்டியுள்ளதையும்> அக் கால நிர்ணயத்தில் பிண்ணனியில் மறைந்துள்ளவற்றையும்> எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்பதால் கடன்தொகை மட்டுமல்லாது வேறும் விடயங்கள் சேர்க்கப்பட உள்ளன என்பதும்>எழுதுபவர் உங்களுக்கிடையே நீதமாக எழுதட்டும் என்பதுஎழுதுவதற்குப் பொதுவான மனிதர் தேவை என்பதையும்> அவர் பக்கச் சார்பற்று செயற்பட வேண்டியதில் மறைந்து உள்ளவையும்>  அவை எழுத்து மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதையும்> அல்லாஹ் அவருக்குக் கற்றுக்கொடுத்தபடி என்பதால்> அக்கடன் ஒப்பந்தம் றிபா வை வருவிக்காதிருப்பதை உறுதி செய்து கொள்வதையும்> எவர்மீது உரிமையுள்ளதோ அவர் அல்லது பொறுப்பாளர் வாசககம் சொல்ல வேண்டும் என்றதில் மறைந்துள்ள நடைமுறைச் சாத்தியக் கூறுகளையும்> கடன் பெறுபவர் தானே மனம் விரும்பி நிறை வேற்றவுள்ள கடப்பாடுகளையும்> அவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள் ளட்டும் இன்னும் அதிலிருந்து எதனையும் அவர் குறைத்துவிட வேண் டாம் என்பதிலிருந்து அதனுள் தொக்கி நிற்பதையும்> மேலும்  சாட்சி யாளர்> நினைவுடுத்தல் என்பதிலும்> சாட்சியத்துக்காக அழைக்கப்படும் போது மறுக்கக்கூடாது என்பதில்> பிணக்குகள் ஏற்படவுள்ள சந்தர்ப்பங் களையும் அச்சமயம் நடந்து முடிந்தவை பற்றி எடுத்துரைக்க வேண்டிய தையும்கொஞ்சமாக இருந்தாலும் மிகுதமாக இருந்தாலும் அத்தவணை வரை எழுதச் சடையாதீர்கள் என்பதில் செறிந்துள்ள உண்மைகளையும்> ரொக்கமாக நடத்தும் நேடி வியாபாரமாக இருப்பின் அதை நீங்கள் எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்கள்  மீது குற்றமும் இல்லை என்பதில் உள்ள வெளிப்படையான தன்மையும்> எடுதுபவரோ> சாட்சியோ துன்புறுத்தப்படக் கூடாது என்பதில் இச்செயற்பாட்டில் நிர்ப்பந்தமோ> வற்புறுத்தலோ> வன்முறையோ கூட இடம் பெறலாகாது என்பதையும் மிகவும் துலாம்பரமாகத் தெரிவிக்கிறது.

மேற்கண்டவற்றில் பொதிந்துள்ள உண்மைகளை> நியாயபூர்வமான நடை முறைச் சாத்தியங்களை வல்ல நாயனின் கடன் சட்டத்தின் மகத்துவம் விளங்கும். தற்போதைய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வாகும். இருப் பவன் இல்லாதவனுக்குக் கொடுத்து எல்லோரும் வாழவழி வகுக்கும். வறுமை> இல்லாமை> அதனால் ஏற்படும்> விபச்சாரம்> களவு> கொலை> கொள்ளை> வன்செயல்> வஞ்சனை> நிந்தனை> போன்றவை ஒழிந்து> உலகே தாருஸ் ஸலாம் ஆகிவிடும்இது பற்றி எழுதுவதாயின் அது ஓர் தனிக் காவியமாகிவிடும்> நம் சீவியமும் அதற்குப் போதாது.

வட்டி ஆரம்பிக்கும் இடம் கடன் போல> கடன் ஆரம்பிக்கும் இடம்  எதிர் பாராத் தேவைகள். தேவைகளில் பெரும்பாலானவை> இக்கால கட்டத்தில்  பணத்தால் மட்டுமே பெற்றுக் கொள்ளக்கூடியவை. விஞ்ஞான முன்னேற் றங்களால்> தொழில் நுட்ப வளர்ச்சியால்> உலகம் இன்று கிராமம் என்ற சிறு வட்டத்துக்குள் அடக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருளாதார  மாற்றம்அன்று போல் பண்டமாற்றைக் கொண்டிராது> பணத்தை ஊடக மாகக் கொண்டுளது. அப்பணப்பரிமாற்றம் கூட இலத்திரனியல் செயற் பாடாக மாறிமுழுமையாக வங்கிகளில் தங்கியுள்ள கட்டாய நிலையுள் அடக்கமாகி உள்ளது.

இன்னும் பல வகைகளில் பணத்தேவை ஏற்படும் போது> ( பணத்தைத்  தொலைத்த> களவுகொடுத்த> பறிகொடுத்த> பற்றாக்குறை ஏற்பட்ட> வழிப் போக்கனாகிய நிலை போன்றவை ) அவற்றை ஒருவர்> அறிமுகமில்லாத புதிய ஊரில் தனியாள் ஒருவரைத் தேடித் தனது கஸ்டத்திற்குத் தேவை யான பணத்தைப் பெறமுடியாது. அதற்காக அவ்விடத்தில் ஒரு வங்கி இருக்குமேயானால்> தமது ஊரிலுள்ள வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெறும் வாய்ப்பு உண்டு. அப்படியே வங்கிக் கணக்கு இல்லாதவர்கூட> தன்னிடம் இருக்கும் வங்கி ஏற்றுக் கொள்ளும் ஒன்றைக் கொடுத்து> அல்லது எங்காவது கொடுத்து சிறு பணத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடும். அல்லது வீட்டாரொடு தொடர்பு கொண்டு> சிறு பணத்தை அனுப்பி வைக்கும்படி செய்ய முடியும்இவ்வாறான சேவைகளை எல்லாம் நாம் ஏதோ ஒப்பந்த அடிப்படையிலேயே பெறலாம். அதற்காக அச்சேவையை, உதவியைச் செய்பவர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவு ஒன்றைச் செய்யவே வேண்டும். வெறும் 'சும்மா' என்ற வட்டத்துள் எந்த வகை யிலும் உதவுபவர்களால் செயற்படுத்தவோ> உதவி பெறுபவர்களால் எதிர் பார்க்கவோ முடியாதுநடைமுறைச் சாத்தியம் அற்றதுங்கூட. ஸதக்கா> ஸக்காத் முறைமை சரியாககுர்ஆன் கூறியுள்ளது போன்று> நடைபெறு மாயின் சில வேளை இச்சந்தர்ப்பத்தில் சிறிய அளவில் உதவி பெறுவதற் காக கடன்படுவதைத் தவிர்க்கலாம்.

அடுத்து 'மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை' (2:256) என்பதும்> நாம் நடை முறைப்படுத்தப்பட வேண்டிய அல்லாஹ்வின் சட்டம் என்பதை மறந்து விடலாகாது. ஓன்றை நடைமுறைப்படுத்தும் போது இன்னொரு குர்ஆனியச் சட்டம் தவிர்க்கப்படவோ> பொருத்தமற்றது என்ற நிலையை யோ உருவாக்குவது> இறைவனது வார்த்தைகளுக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது மிக முக்கியமாகக் கவனிக்கப்படுதல் அவசியம். அது அல்லாஹ் மேல் நாம் கொண்ட ஈமானையே ஈடாட்டம் காண வைத்து விடும்மேற்கண்ட சந்தர்ப்பங்களில் ஷரீஆ சட்டம்  ஈடு கொடுக்காது> மாறாகத் தடைக்கல்லாக மாறியுள்ளது. இது மனித சட்டங்கள் காலாவதியாகும் இடங்கள் என்பதை நாம் ஏற்றே ஆக வேண்டும்.

நாம் பார்க்க வேண்டியதெல்லாம் இவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு தீர்வுகாண முடியாத சட்;டங்களைக் குர்ஆன் ஏற்படுத்தி உள்ளதா? அதுவும் மனித சட்டத்தைப் போன்று காலாவதியாகி விட்டனவா? என்பதே. அல்லாஹ் நம் அனைவரையும் இப்படி நினைப்பதில் இருந்தும் காப்பானாக. ஆனால்> ஷரிஆவின் காலத்துக்கொவ்வாத சட்டம் வங்கி நடவடிக்கைகள் இஸ்லாத்துக்கு மாறானது போன்ற பிரமையை உண்டாக்கி> ஹறாமான செயலாகக் கருத வைத்துள்ளது.

இக்குறை தீர்க்கப்பட குர்ஆனை ஆராய்ந்திருக்க வேண்டுமே அல்லாது மாற்று வழிகள் கண்டிருக்கக் கூடாது. அவை இறை சட்டத்தை மதியாத தன்மையையும்> குறுக்கு வழி தேடுவதையும் ஒத்ததாக அமையும்> அப்படி யாகத் தோன்றியுள்ள இஸ்லாமிய வங்கிகள் குர்ஆனை ஆய்ந்தறிந்த தால் ஏற்படுத்தப்பட்டவையாகத் தெரியவில்லை. மாறாக மாற்று வழியை மேற்கொள்பவைகளாக அவர்களின் விளக்கங்களில் இருந்தும்> நோக்கங் களில் இருந்தும்> நடைமுறைகளில் இருந்தும் தெரிய வருகின்றது.

இவ்வங்கிகளின் தொழிற்பாட்டில்> பாவனையிலுள்ள சொற்களில் பெயர் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதனைச் சுருங்கக் கூறுவதாயின் புதிய மொந்தையில் பழைய கள்ளு எனலாம். செயற்பாடு வேறு உருவம் பெற்றுள்ளது. உண்மையாக வட்டி தடைசெய்யப்பட்டது என்ற கருது கோளுக்குள்> தற்போதைய செயலை வியாபாரம் என்ற பெயரில் அடக்க முனைவதை ஒத்ததே. இல்லை> வைப்புப் பணத்திற்கு (வட்டி என்ற பெயருக்கு மாற்றம்) இலாபமாகக் கொடுக்கப்படும் பணத்தை> வைப்புப் பணத்தை வியாபாரத்தில் விட்டுப் பெறுகிறோம் என்றால்> நாம் ஒரு வரிடம் சிறு தொகையைக் கடனாகப் பெற்று அதில் பெற்ற இலாபத்தில் ஒரு பகுதியை முதலீட்டாளரான  அக்கடன் தந்தவருக்குக் கொடுத்தால் என்ன? இது இஸ்லாமிய வங்கி என்ற பெயரால் நிறுவனம் மட்டும்தான் செயற்படுத்த முடியுமா?

இந்நடைமுறை ஒன்றே போதும் கடன் கொடுப்பதன் இன்றியமையாமை யை அறிந்து கொள்வதற்கு. இத்தகு கடனையே அல்லாஹ்வும் வலி யுறுத்தி உள்ளான். மிகத் தெளிவான குர்ஆனியச் சட்டமும் உண்டு. ஆனால் அது முஸ்லிம்களால் நடைமுறைப்படுத்தப்படாது ஒதுக்கப்பட்டு உள்ளது. காரணம்> மேற்சொன்ன பணமாகப் பெற்று தொழில் செய்து பெற்ற இலாபத்தில் சிறு பகுதியை மனம் விரும்பி> ஒப்புதலுடன் கொடுப்பதையும் வட்டி என்ற பதத்தால் கட்டுப்படுத்தியதேதற்போது இஸ்லாமிய வங்கி என்ற பெயரில்> வாடிக்கையாளரிடம் பணம் பெற்று> வியாபாரத்தில் முதலீடு செய்து குறித்தளவு இலாபத்தை வைப்பாளருக் குக் கொடுப்பது பணக் கொடுக்கல் வாங்கலில் இருந்து வேறுபட்டதாஇதனையே தனிப்பட்டவர் செய்தால் றிபாவாகுமா!

விளக்கத்திற்காக சில கொடுக்கல் வாங்கலை நோக்கலாம். சொந்தப் பணம் இல்லாத நிலையில்> ஒரு தனவந்தரின் பெட்டியுள் தூங்கிவழியும் பணத்தை ஒருவர் பெற்று> ஏற்கப்பட்ட வகையில்> வியாபாரம் செய்து வந்த இலாபத்தில் சிறு பகுதியை முதலுடன் சேர்த்துக் கொடுக்கிறார். இன்னொரு வகையில் வியாபாரம் செய்து பணம் ஈட்டுவதில் வல்ல வரான ஒருவர்> முதலீடு இன்றி> அன்றாட அடிப்படை வாழ்க்கையையே நடத்துவதற்கு வழியற்று இருக்கிறார். அதனை அறிந்த பரோபகாரி> அந்த மனிதரை அழைத்து> தன்னிடமிருந்த பணத்தில் கொஞ்சத்தைக் கொடுத்து அவரை வியாபாரம் செய்து உழைத்து அவரது கஷ்டத்தைப் போக்குமாறு கூறுகிறார். பணத்தைப் பெற்றவரும்> கவனமாகத் தொழில் செய்து தனது தேவைக்கும் அதிகமாக இலாபம் சம்பாதிக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் மனமுவந்து> தனக்கு வலிந்து பண உதவி செய்த அப்பரோபகாரிக்கு> மனம் விரும்பி> தான் பெற்ற மிகை இலாபத்தில் ஒரு பகுதியைக் கொடுக்கிறார். இந்தச் செயற்பாட்டில் கடன் கொடுத்து உதவியவருடைய பணம் திரும்பி வருவதற்கு உத்தரவாதம் தேவைப்படுகிறது. இந்நிலை யில்> தனது முதலுக்குப் பொறுப்பாக ஏதாவது பொருளை அடைமான மாகவோ> அன்றேல் கடன் பெறுபவர் பெற்ற கடனைத் திரும்பத்தர வேண்டும் என்பதற்காக இரு சாட்சிகளையோ நியமித்துக் கொள்வது தவறா? மேலும்> இருவரும் ஒப்பந்த அடிப்படையில்> அம்முதலீட்டால் பெறப்படும் எதிர்பார்க்கப்பட்ட தொகையைப் பங்கிட்டுக் கொள்வதாகச் செய்து கொள்ளும் வழி தவறா?

ஒரு பாரிய தொழிலில்> சில எதிர்பார்க்கப்பட்ட> இலாப விகிதத்தை பெறும் அடிப்படையில்> பலர் ஓர் நிறுவனமாகச் செயற்பட்டு ஒரு தொழிலை மேற்கொள்வது தவறா? போன்றவை விடை காணப்பட்டால் பல் வேறு நன்மைகள் தரக்கூடியவற்றுக்கு குர்ஆன் முரண்பட்டிராத தன்மையை உணர முடியும்.

இத்தகைய இறைசட்டத்தை உய்த்துணர்ந்து பரந்த நோக்குடன்> நுணுக்க மாக சிந்திப்போர் அவற்றில் பல உண்மைகளையும், நன்மைகளையும்  கண்டு கொள்வர். ஆனால் நடைமுறை எதிர்மாறாகியுள்ளது. கடன் கொடுக்கும்படி கூறப்பட்ட அல்லாஹ்வின் ஏவல் முற்றாக கைவிடப் பட்டுள்ளதுஅதனால் தமது தேவையைப் பூர்த்தி செய்ய> தடுக்கப்பட்ட தாக நம்பப்படும் வழிகளில்> கடன் பெறுவதற்கு முஸ்லிம்கள் அல்லா தோரின் பக்கம் நெருங்க வேண்டியுள்ளது. இந்நிலை இஸ்லாம்> நடை முறை வாழ்க்கைக்கு உதவாத சட்டங்களைக் கொண்டுள்ளது என்ற அபகீர்த்தியை உருவாக்கவல்லது. முஸ்லிம்களும் இன்றைய நிலையில் வழிதவறியோர் போன்றும்> குற்றச் செயல்களைச் செய்பவர்களாகவும் எண்ணப்படுகின்றனர். ஏவலைச் செய்யாதவர்களாகவும் உள்ளதோடு விலக்கலைத் தவிர்க்காதோர் போலவும் உள்ளனர்.


- நிஹா -