Wednesday, May 1, 2013

‘பெசன் பக்’ வழக்கை வாபஸ் பெறச் சொன்னதாக என் மீது பழி சுமத்துகின்றனர்: பைசர் முஸ்தபா



Lankamuslim.org
One World One Ummah

‘பெசன் பக்’ வழக்கை வாபஸ் பெறச் சொன்னதாக என் மீது பழி சுமத்துகின்றனர்: பைசர் முஸ்தபா



குற்றச் செயல் ஒன்று நடை பெற்று பாதிக்கப்பட்டவர் விட்டுக் கொடுப்பதோ, மன்னிப்பதோ ஏற்புடையதே! ஆனால் நாட்டின் சட்டமும், சட்டத்தைப் பாதுகாப்போரும் அதனை விட்டுக் கொடுக்க முடியுமா? 

உதாரணமாக ஒரு கொலை நடந்துள்ளது என வைத்துக் கொண்டால், பாதிக்கப்பட்ட குடும்பத்தவர் ஏதோ காரணங்களால், பயமுறுத்தலாகவும் இருக்கலாம், சந்தேகமற்ற அக்கொலையாளியை மன்னிப்பதாகவோ, விட்டு்க் கொடுப்பதாகவோ கூறினால், கொலையாளி விடுவிக்கப்படலாமா! அதனை சட்டம் அனுமதிக்கிறதா?  

குற்றச் செயல் ஒன்றை மன்றுக்குக் கொண்டு சென்ற ‌போலிஸார்,  தமக்குப் போதிய ஆதாரம் இருக்கும் வரை அக்குற்றச் செயலுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை மீளப் பெறாத முடியாதவர்கள் என்ற நிலையில், பாதிக்கப்பட்டவர் விட்டுக் கொடுக்கின்றார் என்பதனால், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டால், சட்டமும், அதனைப் பாதுகாப்பவர் நிலையும் பரிதாபத்துக்குரிய நிலை அடையாதா? 

தனிநபர் பதிவு செய்யும் குற்றவியல் வழக்கில், போலிஸார் சம்பந்தப்படாததனால், விட்டுக் கொடுப்புகள் நடைபெற்றால், வேண்டுமாயின், எதிர்த் தரப்பினர் விடுதலை செய்யப்படலாம்.  ஆயினும் அது கூட கோர்ட்டாரின் நேரத்தை வீணடித்த குற்றத்தை வருவிக்கும். 

சட்டமும் ஒழுங்கும் காப்பாற்றப்பட வேண்டுமானால், வழக்கு நடைபெற்று குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட பின்னர், வேண்டுமாயின் அவ்வழக்கை பொது மன்னிப்பு ஒன்றுக்காக சிபாரிசு செய்வது ஏற்கப்பட்ட நியதி. 

குர்ஆனிய சட்டத்தில், நன்மை கருதி பாதிக்கப்பட்டவர் தனக்களிக்கப்பட்ட பழிவாங்கும் உரிமையை விட்டு்க் கொடுப்பது, பாதிப்புக்கு எதிராக உதவி தேடுவதைத் தவிர்ப்பது, மன்னிப்பது, நட்டவீட்டைப் பெற்று விட்டுக் கொடுப்பது போன்றவை ஏற்கப்பட்டு உள்ளன. 

இந்நாட்டின் சட்டத்தில் இதே நடைமுறை உண்டா என்பதை நீதி அமைச்சர் ஒரு நீதித்துறை சார்ந்தவர் என்பதால் விளக்கலாமே! இந்நடைமுறை பேணப்படுமாயின் அது குர்ஆனிய சட்டம் பின்பற்றப்படுவதாகவே அமையும்.  அல்லாஹ் வெகுநுட்பமாக விடயங்களை நடைமுறைப்படுத்தி விடுகிறான். 

இஸ்லாத்தை அழிப்பதற்காகக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவர்கள் மூலமே அல்லாஹ் தனது சட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளான் என்பது பகுத்துணரத்தக்கது. 

No comments: