Monday, May 6, 2013

அறியாமையுடன் வாழ்வது இஸ்லாத்தில் மிகப் பெரிய குற்றம்


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah

அறியாமையுடன் வாழ்வது இஸ்லாத்தில் மிகப் பெரிய குற்றம்

குர்ஆன் முழு மனித குலத்துக்கும் இறக்கியருளப்பட்டது.  அதனை ஏற்று, அறிந்து, அதன்படி நடந்து உய்வடையாது, அதனை எவ்வுருவிலாவது மறுப்போர் நிராகரிப்பாளரே!  

அறிவீனர்களைப் புறக்கணித்துவிடுவீர்களாக 7:99  என்பதும் கூட, அறிவீனர்களில் நான் ஆவதை விட்டும் பா‌துகாப்புத் தேடுகிறேன் எனக் கூறியதை நினைவு கூருமாறு 2:67இல்  பணிப்பதும்  கூட அல்லாஹ்வின் அருள் வாக்கே!

ஈமான் கொள்வதற்கும் அறிதலே அவசியமாகின்றது. அல்லாஹ்வை, வானவர்களை, வேதங்களை, ரசூல்மார்களை, மறுமையை, களா, கத்றை அறியாமல்? ”ஈமான் கொண்டோம்” என்பது கூட அல்லாஹ்மேல் பொய“கூறிய குற்றத்தை வருவிக்குமேயல்லாது, விடிவை ஏற்படுத்தப்ப போவதில்லை.  

கலிமாவில் கூறப்பட்டதை அறியாமல், எப்படி சாட்சியம் கூறுவது? அப்படிக் கூறும் சாட்சியம் ஏற்கப்படக் கூடியதா? அது பொய் சாட்சி சொன்னதாக அமையாதா? இம்மையிலும், மறுமையிலும் தண்டனையைப் பரிசாகப் பெற்றுக் கொள்ளதா? 

நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில், தன்னைத் தவிர எதுவுமில்லை என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான். அவ்வாறே வானவர்களும், அறிஞர்களும் சான்று பகர்கின்றனர் என்ற 3:18 வசனத்தின் மூலம் வெளிப்படுத்தி யதில் இருந்து ,  அல்லாஹ்வை அறிந்து சாட்சியம் கூறுபவன் அறிஞனாகவே இருக்க முடியும் என்பதும், அல்லாஹ்வை யும், மற்றுமுண்டானதையும் அறிதலின் அவசியமும் புலப்படும். 

தொழுகையில் கடமையாக்கிய நினைவுகூர்தலை நிறைவேற்றுவதற்கும்,  நினைவுகூர்வீராக என அடிக்கடி நமக்கு விடுக்கப்படும் அழைப்பை நடைமுறைப்படுத்துவதற்கும் அறிந்திருக்க வேண்டியதன் அவசியம் பெறப்படுகின்றது. 

அறியாத ஒன்றை நினைவு கூர முடியா‌தென்பதால், அவ்வழைப்பின் மூலம், நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதையும், மறந்திருக்கிறோம் என்பதையு்ம் தெளிவாகவே அல்லாஹ் வெளிப்படுத்துகின்றான். அதனால்தான் மனிதர்களை அவன் மறதியாளர் என்றும் அழைக்கின்றான்.  அதனை ஞாபகத்துக்குக் கொண்டு வருவதற்காகவே, நபிமார், ரசூல்மார், வேதங்கள், வேதக்கட்டளைகள் என்றெல்லாம் அனுப்பி நாம் அறிந்திருந்ததை மீண்டும் நினைவிற்குக் கொண்டுவருமாறு தூணடியுள்ளான். இவற்றால்,  அறிதலின் அடிப்படையிலேயே இஸ்லாம் கட்டி எழுப்பப்ப்ட்டுள்ளதை அறியலாம். 

21: 10 - திட்டமாக உங்கள்பால் ஒரு வேதத்தை இறக்கி வைத்தோம். அதில் உங்களுடைய நினைவுகூர்தல் இருக்கிறது. நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா? இதுவும் அறிதலை அடிப்படையாகக் கொண“டதே!

அறிவின்றி அல்லாஹ்வின் விடயத்தில் வீண் தர்க்கம் 22:3,8 , அறியாமை காரணமாக மற்றவர்களையும் வழிகெடுத்தல் 6:119 போன்றவை அறிதலை வேண்டி நிற்பதை அவதானிக்கலாம். 

அறிதலின்றேல் இஸ்லாமே இல்லை என்பது மிகை கூற்றல்ல. இதனை வலுப்டுத்த, நபிகளாருக்கே கூறப்பட்டதை அல்லாஹ்வின் வாயால் கேட்போம். 17: 36 - நபியே! எதனைக்  குறித்து உமக்குத் தீர்க்கமான ஞானமில்லையோ அதனை நீர் பின்பற்றாதீர். மேலாக, அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறும் போது பல இடங்களில் யாவும் அறிந்தவன் எனக் கூறியிருப்பது நமக்கு அறிதல் பற்றிய உண்மையை வெளிப்படுத்தவல்லது. 

No comments: