Wednesday, May 15, 2013

பொதுபல சேனாவின் அமெரிக்கா பயணத்தின் பின்னரான கருத்துக்கள் தொடர்பில் அமீன்



Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

பொதுபல சேனாவின் அமெரிக்கா பயணத்தின் பின்னரான கருத்துக்கள் தொடர்பில் அமீன்



புத்த தர்மம் பின்பற்றப்பட்டு, தனியாள் நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதன் மூலம் மனித வாழ்வு சீரடைய வேண்டும். தவிர புத்த மதத்தைக் காப்பாற்றுவதாகக் கூறி அடுத்தவர் மதத்தை ஊறுபடுத்தி அழகு பார்க்கக் கூடாது.

பஞ்ச சீலத்தின் அடிப்படையில் அமைந்துள்ள புத்த போதனை பின்பற்றப்படுவதற்கான அமைப்பு, புத்த மதத்தைத் தன்  அரச மதமாகக் கொண்டுள்ள இந்நாட்டில் காணப்பட வில்லை என்பதே உண்மை.

இந்த நாட்டின் மூலை முடுக்குகளில்  எல்லாம் மதுபான நிலையங்கள், சூதாட்ட கிளப்புகள், றேஸ் கிளப்புகள், மஸாஜ் நிலையங்கள் என்ற பெயரில் மாது சேவை நிலையங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து கொண்டிருக்கின்றன. இவ்விடங்களுக்கு செல்வோரில் 90 வீதத்துக்கு மேலானோர் புத்த போதனையை ஏற்றவர்களே!

உண்மையில் பொது பல சேனா புத்த தர்மத்திலும், அம்மக்களிலும் அக்கறை கொண்டவர்களாயின் மேற்கண்டவற்றை  அழிக்கும் வழிவகைகளைக் கண்டறிந்து  அதன்படி நடக்கலாமே! செய்வார்களா!

No comments: