Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
மகிந்த சிந்தனை ஆபத்தில் உள்ளது, கோட்டா சிந்தனை மூலம் அது நிழலடிப்புச் செய்யப்படுவது
நாட்டில் தோன்றியுள்ள நோயை இனங்கண்டுள்ளார் தயான் அவர்கள். அதன் முடிவையும் ஓரளவு தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ளார். நோயாளியான நாட்டை மீட்க வேண்டிய நல்ல மனிதராக நாட்டின் ஜனாதிபதி உள்ளதாகக் கூறுபவர், அவர் தனது அதிகாரத்தைப் பரவலாக்கி உள்ளார் எனவும், அதனால் அது ஆபத்தை நோக்கியதாகவும் உ்ளளதாகக் கூறுகிறார். இவற்றில் எல்லாம் உண்மை இல்லாமல் இல்லை.
தலைவர் என்ற ரீதியில், ஜனாதிபதி நல்லவர் மட்டுமல்ல வல்லவராகவும் தன்னை அடையாளப்படுத்தி இருந்தாலும், தற்போது, தான் கொண்ட வெற்றியைத் தாரைவார்க்கும் நிலைக்கு தள்ளப்படுவதை அவர் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
என்ன காரணத்தால், இந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் உருவானதோ, அக்காரணங்கள் தீர்க்கப்படுவதற்கு மாறாக, மேலும் இனங்களுக்கான முரன்பாடுகள் தோற்றுவிக்கப் படுவது, தயான் அவர்கள் கூறுவது போல் நாடு் துண்டாகும் என்ற ஆரூடத்தை, ஜனாதிபதி தன் காலத்திலேயே காட்சியாகக் காண வேண்டி வந்து விடுமோ என நினைக்கவே தோன்றுகிறது.
நல்லவர், வல்லவர் என்பதெல்லாம், நாட்டில் புரையோடிப் போன புற்று நோயைக் குணப்படுத்துவதன் மூலமே தக்க வைத்துக் கொள்ளலாம். யுத்தத்தால் கிடைத்த வெற்றி இந்நாட்டின் சௌஜன்ய வாழ்வை நிரந்தரமாக்கப் போவதில்லை.
மாறாக, யுத்தத்துக்கான காரணம் களையப்பட்டு, இனங்களுக்கான நல்லுறவும் அமைதி வாழ்வும், அனைவரும் இந்நாட்டின் மக்களே, அனைவருக்கும் சுதந்திரமாக வாழும் உரிமையுண்டு என்பதை நிலைநிறுத்துவதிலேயே தங்கியுள்ளது. சட்டமும் ஒழுங்கும் சரியான முறையில் பாரபட்சமின்றி காக்கப்படுவதுடன், மக்கள் அச்சமற்ற வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும்.
பிரச்சினைகள் தீர்க்கப்ட்டால் மட்டுமே போரராட்ட உணர்வுகள் தலை தூக்கா என்பதையும், அடக்கு முறையும், அதிகார துஷ்பிரயோகமும் மக்கள் மனத்தில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் விளங்க வேண்டும். நம்பி வாக்களித்த மக்களைக் காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பை ஜனாதிபதி அவர்கள் எக்காரணத்தாலும் தாரை வார்த்துவிட முடியாது.
No comments:
Post a Comment