Wednesday, May 22, 2013

சிங்கள ஆண்கள் வட இந்தியாவிற்கும், சிங்கள பெண்கள் தென்னிந்தியாவிற்கும் செல்ல வேண்டும்: மனோ



Commented by nizamhm1944 on:

Lankamuslim.org

சிங்கள ஆண்கள் வட இந்தியாவிற்கும், சிங்கள பெண்கள் தென்னிந்தியாவிற்கும் செல்ல வேண்டும்: மனோ



தீர்க்கதரிசனமின்றி அன்று 1972இல் அறிமுகப்படுத்தப்படட யாப்பில் காணப்பட்ட சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் 29ஆவது ஷரத்து நீக்கப்பட்டு 15 வருடங்களில் மாகாண சபை ஒன்றே உருவாகக் காரணமாகியது. 

இந்த மாகாண சபை, நாடு பிரிந்து போகும் நிலையில் இருந்ததைத் தடுத்துக்கொள்வதற்காக 1987 இல் இந்திய அனுசரனையுடன் 13ஆவது திருத்தச் சட்டம் யாப்பிற்கு உட்படுத்தப் பட்டது.  இதிலுள்ள அதிகாரங்களே போதாதென்ற நிலையில் ஜனாதிபதி 13 பிளஸ பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது , இது நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து இன, மத விரோதி களால், தீர்க்கதரிசனமற்று முன்வைக்கப்படு கின்றது. எது உருவாகக் கூடாது என்று இது அறிமுகப்படுத்தப் பட்டதோ, அதுவே உருவாக இக்கூப்பாடு காரணமாகிவிடும். 

அதற்கு அனுசரணையாகவே முஸ்லிம்களுக்கும்  கிறிஸ்தவர்களுக்கும் எதிரான மதவிரோத நடவடிக்கைகள் பகிரங்காகமாக முன்னெடுக்கப்படுகின்றன. பௌத்த நாடு என்ற பொது  பல சேனாவின் கோரிக்கையை ஏற்காதோர் வெளி‌யேற வேண்டும் என்ற கோரிக்கை வேறு.

பொது பல சேனாவின் அமெரிக்க விஜயத்தைத் தொடர்ந்து, பௌத்த நாடு என்பதை ஏற்காதோர் வெளியேற வேண்டும் என்ற பகிரங்கக் கூப்பாடும், அதே வேளை இங்கு கத்தோலிக்கரும் முஸ்லிம்களும் வாழ முடியா நிலை ஏற்பட்டுள்ளது என்ற அமெரிக்கா வின் விசனமும், குற்றச்சாட்டும் அரசின் கவனத்தை ஈர்த்தால் இதனுள் வேறு எதுவும் சதிகள் அமைந்திருக்கின்றனவா என்ற உணமைகள் வெளிப்படும். 

இந்நிலை, ஏற்கனவே மனித உரிமை மீறல் என்ற பொறியுள் மாட்டுவதற்காக நடத்தப்படும் நடவடிக்கைகளுக்கு உரமாக, ஊன்றுகோலாக அமையும். அதனால், அமெரிக்கா முதல் ஐநா சபை வரை இந்நாட்டில் நுழைந்து இனங்களைக் காப்பாற்று கிறோம், மதங்களை காப்பாற்று கிறோம், சிறுபான்மையினர் சுதந்திரம்  என்ற தொனியில், இந்நாட்டில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவர், அன்றேல், இனங்கள் சுதந்திரமாக வாழத்க்கவாறு இந்நாட்டைத் துண்டாடிச் செல்வர். உலகின் சில பகுதிகளில் நடைபெற்றவை நமக்குப் பாடமாக அமையா விட்டால்,அதற்கான விலையை இந்நாடு கொடுக்க  வேண்டி வரும். 

ஆதலால், இவ்வாறான நிலைகளை உருவாக்கி வரும் விஷக்காளான்கள் எவராயினும், உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும. இதற்கு உடந்தையான சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் தடை செயப்பட வேண்டும். சிறுபான்மையினரின் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று, அரசியல் இலாபங்களைப் புறந்தள்ளி, காத்திரமான முறையில் அறிமுகப்படுத்த வேண்டும. சிறுபான்மை இந்து,  கத்தோலிக்க, முஸ்லிம்கள் சமவுரிமையோடு வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். 

மேலும், ஒன்றை இந்த இனவாதிகள் மனதிற் பதிய வைக்க வேண்டும்.  மதங்கள்தான் இநநாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டதே தவிர, மக்களல்ல. இறக்குமதியான மதங்களை இங்கு வாழ்ந்தவர்கள் பின்பற்றினர். அன்று வாழ்ந்த அவர்கள் அனைவரினதும் சந்ததிகளே  இன்றும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின் றனர். 

மனிதர்கள் இங்கு குடியேறிதாகக் கூறுவோமாயின், அது விஜயனினதும், அவனது நண்பர்களான எழுநூறு பேரின் வருகையே தவிர, வேறல்ல என்பதை வரலாறு கூறிக் கொண்டிருக்கின்றது. இது தவிர, இந்நாட்டை வளப்படுத்த காலனித்துவவாதிகளால் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சா வழியினர். இவை வரலாறு. 

No comments: