Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
முஸ்லிம் அரசியல், சமூக தலைமைகள் செயலற்ற நிலையில் முஸ்லிம்கள் விரக்தியில்
கட்சி பேதமின்றி முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் மாண்புமிகு ஜனாதிபதியைச் சந்தித்தபோது, இனி வருங்காலத்தில் இவ்வாறான நிலை காணப்படுமாயின் அவற்றை சட்டத்துக்கு முன் தான் கொண்டு வருவதாகக் கூறியிருந்தமை, முன்புள்ள அனைத்தும் நடிவடிக்கைக்கு உட்படுத்தப்படப் போவதி்ல்லை என்பதை வெளிப்படை யாகவே தெரிவித்திருக்கின்றன. அப்போது இந்த அரசியல்(வியா) வாதிகள் வேறு எதையும் பேசியதாக செய்திகளில காணப்படவில்லை. இதிலிருந்து நடப்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டியதுதான்.அதற்கு முன்னர், தனக்கு இவ்விடயங்கள் அறிவிக்கப்படவில்லை பகிரங்கமாக மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்ததும் கவனத்துக்கு உரியதே! இவற்றில் எல்லாம் முஸ்லிம்கள் பாடம் படிக்கவில்லை என்றால் நம் தலைவிதியை யாரிடம் கூறி அழுவது.
13:11 - ”.... எந்த ஒரு சமூகத்தவரும் தங்கள் நிலையைத் தாங்களே மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக, அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை....”
முஸ்லிம்கள் யாரையும் நம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பது தற்போது வரலாறு கற்றுத் தந்த பாடம். ஆதலால் தனவந்தர்களும், புத்திஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து சட்டபூர்வமாக நமது உரிமையை நிலைநாட்ட முன்வர வேண்டும். இப்போதைக்கு உடன் செய்யக்கூடிய நடவடிக்கை அது ஒன்றே! நம்முன்னோர்கள் சில உரிமைகளை அப்படித்தான் அன்று பெற்றுள்ளார்கள் எனபது வரலாறு.
ஜனாபதியின் கருத்துக்கள் கூட மறைமுகமாக சட்டத்தின் மூலம் செய்வதையே வெளிப்படுத்தி இருக்கின்றது. அதனை நம்மவர்கள் உணரத் தவறிவிட்டார்களா அல்லது தமது பதவிகளுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்று பாம்பும் சாதகாமல் தடியும் உடையாமல் அறிக்கை விட்டுத் தம்மைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களா தெரியவில்லை.
தற்போதைய முஸ்லிம்களின் வரலாறு ஆதம் அலைஹிஸ்ஹலாம் அவர்கள் இத்தீவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து தொடங்குகின்றது. அம்மலை அழிக்க முடியாத ஆவணமாக உள்ளது. இது அல்லாஹ்வின் ஏற்பாடு. ஏக தெய்வக் கொள்கையைக் கொண்டிருந்த ஆதம் என்ற முதல் மனிதனின் வழிவந்தவர்களே இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அறுபது அடி உயரமுள்ள மனிதர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே இந்த ஏக தெய்வக் கொள்கையை உடையவர்கள், அதாவது இராவணன் காலம் முதல், வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதற்கு, இல்ங்கையின் பல பகுதிகளிலும் காணப்படும் அறுபது அடி (நாற்பது முழம்) நீளமுள்ள சியாரங்கள் ஆதாரமாகிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் அனைவரும் அவ்லியாக்கள் எனப்படும் இறைநேசர்களே. இந்த அடக்க ஸ்தலங்கள் முஸ்லிம்களாலேயே இற்றைவரை நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவர்களின் பெயர்கள் கூட இஸ்லாத்தை ஒட்டியதே! அவர்களின் சந்ததியினரே இஸ்லாத்தை அரேபியரின் வருகையோடு ஏற்று வந்திருக்கின்றார்கள்.
இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டின் ஆதிக்குடிகளின் வாரிசுகள். அவர்கள் வந்தேறு குடிகளல்லர். புத்தசமயம் எப்படி 2500 வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டுக்கு இறக்குமதியானதோ அப்படியே இஸ்லாமும் அரேபியர் மூலம் இறக்குமதி ஆகியுள்ளது. ஆக, பௌத்தமும், இஸ்லாமும் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தாலும், அதனைப் பின்பற்றியோர் இங்கு வாழ்ந்த ஆதிக்குடிகளே.
No comments:
Post a Comment