Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
தெருவோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து மதங்களையும் சார்ந்த சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டதாகவே தெரிகிறது.
தெய்வங்களினதோ, மதத் தலைவர்களினதோ ,மதகுருக்களினதோ சிலைகள் தெருக்களில் வைக்கப்படுவனவல்ல. அவை புனிதமானவை. வணங்கப்படுபவை. ஆதலால் அவற்றுக்குரிய இடம் வணக்கத்தலங்களே தவிர, தெருவோரங் களும், சுற்று வட்டங்களுமல்ல. அவை அலங்காரப் பொருட்களுமல்ல. பட்டினத்தை அழகுபடுத்துவதற்கு எவ்வளவோ வழிகள் உண்டு. அதற்காக தெய்வங்களை தெருவிற்குக் கொணர்ந்து, மலிவான பெருமையைத் தேடிக் கொள்ளாதீர்கள். இது இறை நிந்தனையுள் அடங்குவது.
எப்போதாவது கோவில்களில் தெய்வங்களைக் காணும் போதே பயமோ, பக்தியோ ஏற்படும். அதைத் தெருவில் அடிக்கடி காணக் கிடைக்கும் போது, அவற்றின் மேல் இயற்கையாகவே உள்ள பக்தியும் அற்றுப் போகும். அதனால்தானோ என்னவோ இப்போதெல்லாம் மதகுருக்கள் குழப்பத்தை உண்டு பண்ணுபவர்களாக உள்ளனர். காரணம் அவர்கள் எப்போதும் கோயில்களுக்கள் இருந்து தெய்வங்களைக் கண்டதனால்,அவர்களிடம் பயபக்தி இ்ல்லாமல் போய்விட்டது போல் தெரிகிறது.
அருமையாகக் காணும்போது கிடைக்கும் கௌரவமும், மரியாதையும், அடிக்கடி காணும் போது கிடைப்பதில்லை என்பதை யாவரும் அறிவர். கோயிலுக்குள் இருக்கும் போது கும்பிடப்படும் தெய்வங்களின் சிலைகள், கும்பிடப்படாமல், தெருவோரங்களில் காட்சிப் பொருளாக மட்டுமே பார்க்கப்படுவதை யாரும் மறுக்கமாட்டார்கள்.
மிகச் சிறந்த பொருட்கள்கூட பாவனைக்குதவாத போது, அவை குப்பைகள் போன்று தெருக்கோடிகளில் குவிக்கப்படு கின்றன. குப்பைகளையும் யாரும் கண்டு கொள்வதில்லை, அதுபோல் தெருவோரச் சிலைகளையும் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதே யதார்த்தம். இது யாரையும் புண்படுத்தவல்ல, யதார்த்தத்தை உணர்த்த.
Lankamuslim.org
One World One Ummah
புத்தர் சிலை மனக்கசப்பை ஏற்படுத்தும்:
பிரதமருக்கு கடிதம்

No comments:
Post a Comment