Wednesday, May 29, 2013

புதிய அரசியலமைப்பிற்கான யோசனையை UNP முன்வைத்துள்ளது

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

புதிய அரசியலமைப்பிற்கான யோசனையை                               UNP முன்வைத்துள்ளது


உண்மையில் இந்நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்ற 1978இல் அறிமுகமான யாப்பு, இதுவரை 18 திருத்தங்களைப் பெற்றும், குழப்பத்தை குறைக்கும் தன்மை காணப்படாத நிலையையே நாம் காண்கின்றோம். இது இந்நாட்டில் சரியானதொரு யாப்பு இல்லாத நிலையைத் தெளிவாக்குகின்றது.  

தனிப்பட்ட நோக்கங்களை, தமது அபிலாசைகளை நிறைவேற்றும் குறிக்கோளற்ற, முழுமையாக நாட்டினதும், அனைத்து மக்களினதும் கௌரவமான வாழ்வுக்கு வழிசமைக்கும் வகையிலான யாப்பே இன்றைய தேவையாகும் 

தெ‌ரிவு செய்யப்ட்ட ஆட்சியாளர் தமது ஆட்சிக் காலத்துள், நாட்டைப் பிழையான முறையில் ஆளுகின்றார்கள்,  தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தமது கடமைகளைச் செய்யத் தவறுகிறார்கள் அல்லது அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்க கருதப்படுமிடத்து, அவர்களை முறையே ஆட்சியில் இருந்து,  பாராளுமன்றில் இருந்து நீதிமன்றின் துணையுடன் வெளியேற்றக் கூடியவான வசதிகளைக் கொண்ட விதிகளையும் கொண்டிருத்தல் அவசியம் என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

No comments: