மனிதர் மறதியில் புறக்கணித்தவர்களாகவே உள்ளனர்
அல்குர்ஆன் 21:1 ” மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு நெருங்கி விட்டது. அவர்களோ மறதியில் புறக்கணித்தவர்களாகவே உள்ளனர்.“
இது ஓர் அபாய அறிவிப்பு. ஆம் மறைவான எச்சரிக்கையுடன் கூடியது. மறதியில் உள்ளவர்கள் நாம் என்ற நம் குறையைச் சுட்டிக்காட்டி, நாம் மறந்த எதையோ ஞாபகப்படுத்துமாறு மனிதரைத் தூண்டிக் கொண்டிருக் கும் பண்புடன், தனது கிருபா கடாட்சத்தை வெளிப்படுத்தி நிற்கும் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலாவின் நெருங்கிவிட்ட மறுமையையும். அங்கு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டி இருப்பதையும் பறை தட்டும், அருளும் பொருளும் பொதிந்த அற்புதமான அழைப்பு.
மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு நெருங்கிவிட்டது எனக் கூறும் முறை, இவ்வுலகு சீக்கிரம் அழியப் போகின்றது என்ற அபாய அறி விப்பைச் செய்கின்றது. மறுமையில் நடக்கவிருக்கும் கேள்வி கணக்கிற்கு நம்மிடம் என்ன இருக்கின்றது? என்ற கேள்வியை எழுப்பிய வண்ணம் உள்ளது. நம்மிடம் கேட்கப்படவுள்ள கேள்வியும், தீர்க்கப்படவுள்ள கணக்கும்தான் என்ன?
முதுமானிப் பட்ட இறுதிப் பரீட்சை நெருங்கிவிட்டது என்றஅறிவிப்பை கல்லூரி விடுக்குமாயின், அப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் எதை நினைப்பர்? தாம் பரீட்சையில் என்ன கேள்வி வந்தாலும் பதிலிறுக்கும் வகையில் ஆயத்தமாயுள்ளோமா என்பதை தமக்குள்ளேயே கேள்வி யாய்க் கேட்டு, அதற்கான ஆயத்தங்களைச் செய்ய மாட்டார்களா? அல்லது பரீட்சை வந்தால் வரட்டுமே, குடியா மூழ்கிவிடப் போகின்றது என வாளாவிருப் பார்களா? விடை உங்கள் கைகளில்!
ஆம், நம்மிடமும் இவ்வாறான அறிவிப்பே விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அறிவிப்புக்கு மேலாக, ஓர் உண்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த உண்மைதான் இங்கு நமக்கு அறிய வேண்டிய முக்கியமான ஒன்றாக வுள்ளது. காரணம், கேள்வி கணக்கைக் கூறிய அல்லாஹ் அவனது வாயா லேயே, அதே வரியிலேயே கூறியுள்ள, “அவர்களோ மறதியில் புறக்கணித் தவர்களாகவே உள்ளனர்“எனக்கூறியுள்ள ஞாபகமூட்டல் தான் அது.
நாம் வந்த வேலை என்ன? அதனை முடித்து விட்டோமா? மறுமையை எதிர்கொள்ள ஆயத்தமாயுள்ளோமா? என்பதையெல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாய் வட்டமிடச் செய்கின்றது. என்ன கேள்வி, தீர்க்கப்படவுள்ள கணக்கு எது, என்றெல்லாம் அலைமோதிய உள்ளத்துக்கு சற்று ஆறுதல் தருவதாக வுள்ளது, “மறதியில் புறக்கணித்தவர் களாகவே உள்ளனர் என்ற வசனம். இப்போது நாம் மறதியில் எதைப் புறக்கணித்துள்ளோம் என அறிய முற்பட வேண்டிய கட்டாயத்தை. உணர்த்துகின்றது அதன்படி உணர் வோமேயானால் மட்டுமே, மறதியில் புறக்கணித்த விடயத்தை ஞாபகப்ப டுத்தி, கவனத்துக்குக் கொணர்ந்து அதனை நிறைவேற்ற வேண்டிய வழிகளில் அதனை எதிர் கொண்டு, கேள்வி கணக்கிற்கு ஆயத்தமாக முடியும்.
நமது தேடலில் இப்போது சில குர்ஆனிய ஆயத்துக்கள் ளெிவருகின்றன. அவை,7:172- ”இன்னும் உம்முடைய ரப்பு, ஆதமின் மக்களாகிய அவர்களின் முதுகுகளிலிருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்தபோது, ’நான் உங்கள் ரப்பு அல்லவா?’ ’ஆம் நாங்கள் சாட்சி கூறுகிறோம்’ என்று அவர்கள் கூறி யதை, நினைவூட்டும். ஏனென்றால், ’நிச்சயமாக நாங்கள் இதனை விட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்’ என்று மறுமை. நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக.”
நாம் மறந்திருந்தது எது என்பதையும் கருணைக்கடலாகிய அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா நமக்கு நபிமார்களை, தூதுவர்களை, வேதங் களை அனுப்பி நாம் மறந்ததை நினைவுபடுத்தி, அச்சமூட்டி எச்சரித்த வண்ணமே இருக்கின்றான். எவ்வாறு நினைவுகூர்வது என்பதை இலகுபடுத்துவதற்காக தொழுகையைக் கட்டாய கடமையாக்கி, அதனை நிலைநிறுத்தும்படி கூறு கிறான். ஆம் தொழுகை நிலைநிறுத்தப்படுதல் என்பது சரியான விளக்கத்தைப் பெற தன்னைநினைவுகூர்தல் என்பதை வெளிப்படையாகவே வலியுறுத்தி யுள்ளான்.
29:45 - இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் ஓதிக் காட்டு வீராக! இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாகத் தொழு கையாகிறது, மானக்கேடானவைகளை விட்டும், வெறுக்கப்பட்டதை விட்டும் தடுக்கும். மேலும், அல்லாஹ்வ நினைவு கூர்வது மிகப் பெரிய தாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கு அறிகிறான்.”
இதற்கு மேலும் தெளிவைத் தருவான் வேண்டி, 20:14 வசனத்தை இறக்கி யருளியுள்ளான். “நிச்சயமாக, நான்தான் அல்லாஹ். என்னையன்றி நாய னில்லை. ஆகவே என்னையே அறிவீராக! மேலும் என்னை நினைவு கூர்ந்திட, தொழுகையை நிலைநிறுத்துவீராக! “
இத்தனைக்கு மேலும், நாம் அறியாத நிலையில் உள்ளோம் என்பதை, மறைவானதையும் அறியும் வல்ல நாயன் அல்லாஹ் அறிகிறான். நமது நிலை எப்படி உள்ளது என்று அவனது வசனங்களிலேயே காண்போமா?
18:101 -”அவர்கள் எத்தகையோரென்றால், என்னை நினைவு கூர்வதை விட்டும் அவர்களது கண்கள் திரைக்குள் இருந்தன. மேலும், செவியேற்கச் சக்தியற்ற வர்களாக ஆகிவி்ட்டனர்.” அதன் விளைவை, ‘தொழுகையாளிகளுக்குக் கேடுதான்’ என்ற அவனது சாபம் நமக்கு நன்கு விளக்கும்.
இது நாம், லா இலாஹ இல்லல்லாஹு அதாவது அல்லாஹ்வைத் தவிர எதுவுமில்லை என்பதை தீர்க்கமாக அறிந்து சாட்சி கூறி இஸ்லாமியனாவதே!
அறிதலுக்காக சில ஆயத்துக்கள்.
4:142 - “நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்கின்றனர். ஆனால் அவனோ, அவர்களை வஞ்சிப்பவனாக இருக்கிறான். மேலும், தொழுகைக்கு அவர்கள் நின்றார்களாயின் சோம்பேறிகளாக மனிதர்களுக்குக் காண்பிப்பவர் களாகவே நிற்கின்றனர். இன்னும் அவர்கள் மிகக் குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.“
4:103- “நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால், பிறகு நின்றவர் களாகவும், அமர்ந்தவர்களாகவும், உங்களின் விலாப்புறங்களின் மீது அல்லாஹ்வை நீங்கள் துதி செய்யுங்கள். பின்னர் அமைதிபெற்று விட்டால், அப்பொழுது தொழுகையை நீங்கள் நிலை நிறுத்துங்கள். நிச்சயமாக தொழுகையானது இறை நம்பிக்கையாளர்கள் மீது நேரங் குறிப்பிடப்பட்ட கடமையாகும்.“
27:81- “குருடர்களுக்கு அவர்களது வழிகேட்டை விட்டும் நேர்வழி காட்டு பவராக நீர் இல்லை. நம்முடைய வசனங்களைக் கொண்டு ஈமான் கொள் பவர்களைத் தவிர, நீர் செவியேற்கச் செய்திட முடியாது. இவர்கள்தான் முஸ்லிம்கள். “
29:49- “எனினும் இது கல்வியறிவு கொடுக்கப்பட்டார்களே அத்தகையவர் களின் நெஞ்சங்களில் தெளிவான வசனங்களாகும். அநியாயக்காரர் களைத் தவிர நம்முடைய வசனங்களை மறுக்கமாட்டார்கள்.“
41:42- “இதற்கு முன்னும், பின்னும் பொய் வந்து சேராது. தீர்க்க ஞானத்திற்கும், புகழுக்கும் உரியவனிடமிருந்து இறக்கப்பட்டுள்ளதாகும்“
16:4- தெளிவான ஆதாரங்களைக் கொண்டும், மனிதர்களுக்கு – அவர்களுக்காக இறக்கப்பட்டதை, நீர் விளக்குவதற்காக திக்ரை உம்பால் நாம் இறக்கி வைத்தோம். அவர்கள் சிந்திப்பவர்களாக ஆகிவிடலாம்.
16:102-நம்பிக்கை கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், முஸ்லிம் களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நற்செய்தியாகவும் உண்மையைக் கொண்டு இதனை உம்முடைய ரப்பிடமிருந்து ரூஹுல் குத்தூஸ் இறக்கி வைத்தார் என்று நீர் கூறுவீராக!
No comments:
Post a Comment