Sunday, May 19, 2013

தமிழில் அறிக்கை விடுவதை விடுத்து உருப்படியான ஊடக மாநாட்டை கூட்டுங்கள்



Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

தமிழில் அறிக்கை விடுவதை விடுத்து உருப்படியான ஊடக மாநாட்டை கூட்டுங்கள்



ஒரு சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும்  ஒரு கட்சி என்ற வகையில் எழுந்தமானமாக எதையும் செய்துவிட முடியாது. அதற்குப் பல்வேறு பொறுப்புகள் உண்டு. அவைகளை சரியான முறையில் கையாள்வதற்கு ஏற்றவாறே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆயிரம் அறிவுரைகள், ஆலோசனைகள் ‌கொடுக்கப்பட்டாலும், அவற்றில் ஒன்றைத்தான் செயற்படுத்த முடியும். ஆதலால் தலைமைத்துவத்துக்கு உள்ள பாரிய பொறுப்புக்களை சில்லறை விடயங்களைக். கூறிக் கொச்சைப்படுத்த முயலக் கூடாது.

இப்படி எழுதுவதற்காக நான் அவர்களுக்குப் பக்கச்சார்பாக எழுதுகிறேன் எனக் கருத வேண்டாம். பிழைகள் எல்லோராலும் விடப்பட்டுள்ளன. ஹலால் விவகாரமும் அவ்வாறனதே. அவற்றை எல்லாம் வெளிப்படுத்த முயன்றால் பிரச்சி‌னை மாறி நம் தம் தலையில் மண்ணை வாரிக் கொட்டிக் கொண்டதாகவே இருக்கும்.

ஹலால் தனியாள் பிரச்சினை. ஹலாலான உணவு முதல், அன்றாட வாழ்வின் அனைத்துக் காரியங்களும் ஹலாலான வழியில் மேற்கொள்ளுதல் அவரவர் கடமை. இதில் விருப்புடன் வேண்டுமென்றே தவறுவோர் நிராகரிப்புக்கு உள்ளாகி அல்லாஹ்விற்கு மறுமையில் பதில் கூறுவர். தண்டனை பெறுவர்.

ஆதலால், ஹலால் என்ற வார்த்தையைக் காரணமின்றி பாவித்து, சான்றிதழும், முத்திரையும் பொறிக்க முற்பட்டு, மூக்குடைபட்டு, அதனால் முஸ்லிம்களின் இருப்புக்குக் கூட ஏற்பட்ட பயங்கரம் ஏற்பட்டு, இப்போது சற்று ஆறுதல் அடைந்துள்ள நிலையில், அரசியலை மையப்படுத்தி அதற்கு ஹலாலைக் கருப்பொருளாக்கி மீண்டும் இந்நாட்டில் முஸ்லிம்கள் அச்சத்துடன், அவமானத்துடனும் வாழும் நிலையை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று அல்லாஹ்வின் பெயரால் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

வடக்கு கிழக்கிற்கு வெளியே சிங்கள பெளத்த மக்களுடன் இரண்டறக் கலந்து வாழும் பெருமளவு முஸ்லிம்கள் பற்றி, அவர்கள் முகம் கொடுக்கும் கஷ்டங்கள் பற்றி சிறியளவாவது சிந்திக்க வேண்டும்.

ஹறாமான என அல்லாஹ் கூறும் நான்கையும் ஒதுக்கி வாழ்ந்தால், ஹலாலான உணவு தேடி கஷ்டப்பட வேண்டிய தில்லை. ஹலால் முத்திரை பார்த்து உண்ணும் பாரம்பரியம் தோற்றுவிக்கப்படுவது, நமக்கு நாமே பயங்கரக் குழியைத் தோண்டிக் கொள்வதை ஒத்ததே. அது இறை மறுப்பும் கூட. நமது வருங்காலச் சந்ததியினரை இருட்டில் தள்ளிவிடும் அபாயத்தைத் தருவது.

ஆதலால் முஸ்லிம்கள் !400 வருடங்களு்க்கு மேலாகக் கைக்கொண்ட முறைகளில் தமது ஹலால் உணவைத் தேடிக் கொள்வதே அல்லாஹ் வகுத்த, நபிகளார் முதல் நம்மவர் அனை வரும் பின்பற்றிய சுன்னா.

No comments: