Wednesday, May 29, 2013

தீக்குளிப்பதற்கு மேலும் ஆயிரக்கணக்கான தேரர்கள் தயாராம்: ஞானசார தேரர்

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

தீக்குளிப்பதற்கு மேலும் ஆயிரக்கணக்கான தேரர்கள் தயாராம்: ஞானசார தேரர்

அழிவுகள் என்று வரும்போது உலகின் எந்த சக்திகளும் அவற்றைத் தடுத்து நிறுத்திட முடியாது. அவை காரண காரியங் களுடன் முன்னெடுக்கப்படும். சூழ்ச்சியாளர்களுக் கெல்லாம் சூழ்ச்சியாளன் இறைவன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

எந்த மதங்களும், தற்கொலைகளை அனுமதிக்கவில்லை. புத்த தர்மமும், மற்றைய மதங்களும்கூட அநியாயமாக உயிர்கள் கொல்லப்படுவதை ஏற்கவில்லை. இந்நிலையில் தீமூட்டித் தற்‌கொலை செய்பவர்கள் எந்த மதத்தையும் சார்ந்தவர்களாகக் கொள்ள முடியாது.

// தீக்குளித்தது தற்கொலை செய்துகொண்ட  போவத்தே இந்திர ரத்ன தேரர் அவரின் மரணத்துக்கு மூன்று  நாட்களுக்கு முன்னர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்று  சிங்கள இணையத்தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திர ரத்ன தேரர் முன்னர் பிரதேச சபை உறுப்பினராக இருக்கும்போது, மின்சார சபையில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 20 இலட்சமும் ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாகக்கூறி 10 இலட்சமும் பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் . இவ்விடயத்தில் பிக்குவை கைதுசெய்ய பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என குறித்த சிங்கள இணையத்தளம்  தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் அது வெளியிட்டுள்ள தகவலில் , தம்புள்ளை பள்ளிவாசலை உடைக்க வந்தபோது, பிக்குகள் கூட்டத்திலிருந்து கூச்சலிட்டவர்என்றும் , பாதுகாப்பு படையினருக்கு தான் அணிந்திருந்த சிவுறவை அவிழ்த்துக் காட்டினார் என்றும் கடந்த வருடம் வீரகெட்டியவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல், அதே ஊரில் இவ்வருடம் பள்ளிவாசல் மீது தாக்குதல் ஆகியவற்றை குறித்த தேரர் நடாத்தியுள்ளார் என்றும் அந்த சிங்கள இணையத்தளம்  தகவல்களை வெளியிட்டுள்ளது. //

சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் மேற்கண்ட குற்றச்சாட்டுக் களுக்கு தேரர் கூறும் பதில் யாது? இவை உண்மையாயின் இவ்வாறு கூச்சலிடுவோரின் பின்னணிகள் ஆராயப்பட வேண்டியதே! மேலும், பயமின்றி, பக்கசார்பின்றி உண்மையைக் கூறும் ஊடகங்கள் இருப்பது பற்றி பெருமைப்பட வேண்டும். 

No comments: