Wednesday, May 22, 2013

வடமாகாண சபை தேர்தல் 13வது திருத்த சட்டத்திற்கு அமைவாகவே நடத்தப்படும்:


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

வடமாகாண சபை தேர்தல் 13வது திருத்த சட்டத்திற்கு அமைவாகவே நடத்தப்படும்:

ஆட்சியாளரின் அணுகு முறையால் தமிழ் அரசியல் அமைப்புகள் தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்படும் போதெல்லாம், அந்தப் பொறிக்குள் தானாகவே போய் மாட்டிக் கொள்கின்றன. புலி வாலைப் பிடித்தவர்கள் போன்று, மாற்று அரசியல் தீர்வைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், நடைமுறையிலுள்ள யாப்பின்படி நடத்தப்படும் தேர்தல்களுக்கு முகம் கொடுக்கின்றன.  இது அவர்களின் கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்து விடுகின்றது.

நாட்டின் ஒருமை பற்றிய ஆறாவது திருத்தச் சட்ட‌த்தை எதிர்த்துப் பாராளுமன்றை விட்டு வெளியேறியதாலேயே உள்நாட்டுப் பிரச்சினை சர்வதேசப் பிரச்சினையாகி, இந்தியா இந்நாட்டின் வான் பிரதேசத்துள்ள புகுந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை வெளியிட வைத்தது படிப்பினை   தருவது.

நாட்டின் எந்த ஒருமைச் சட்டத்தை ஏற்காது பாராளுமன்றைப் புறக்கணித்தார்களோ, அதே ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்று பாராளுமன்றத்தில் தற்போது அமர்கிறார்கள்.  சட்டம் பழசாகப் போனால் ஏற்பதில் தவறில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.

ஆதலால், ‌தமிழ் தேசிய கூட்டமைபபு தமக்கான ஒரு ஸ்திரமான கொள்கையைக் கடைப்பிடித்து அதனை அடையும் வரை அதிலேயே நிலைத்து நிற்க வேண்டும். அல்லாத வரை அது எந்த நன்மையையும் சிறுபான்மையினருக்குப் ‌பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.

ஆதலால், தேர்தலை அடிப்படையாக வைத்து கொள்கைகளை உருவாக்காமல், மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு, சிறுபான்மையினர் பிரச்சினைக்கு சரியான தீர்வைப்பெற்று, இந்நாட்டில் அவர்களும் சமவுரிமையோடு வாழத்தக்கதாக போராட்ட வியூகங்களை மாற்றியமைக்க வேண்டும.

No comments: