Friday, May 24, 2013

சமாதானத்தை வாதிடும் குழப்பவாதிகள்


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah

சமாதானத்தை வாதிடும் குழப்பவாதிகள்



அறியாமையால் ஏற்படுத்தப்படும் குழப்பம். இன்னொன்று அறிந்து கொண்டே வேண்டுமென்றே ஏற்படுத் தப்படும் குழப்பம். இதனைத்தான் அல்லாஹ், 6:119... மேலும், நிச்சயமாகப் பெரும் பாலோர் அறியாமையின் காரணத் தாலும், தங்களது மனோஇச்சைகளின் காரணத்தாலும் திட்டமாக வழி கெடுக்கின்றனர், எனக் கூறியுள்ளான். 

ஒரு பொருளுக்கு,நடப்பிற்கு, செயலுக்குப் பல பார்வைகள் உண்டு. அவை பார்ப்பவர் மனோநிலை, அறிவு, அனுபவம், தேவை,  போன்ற வற்றுக்கு ஏற்ப வெவ்வேறு கருத்தைக் கொடுக்கும். அவை அவ்வவற்றுக் குரிய இடங்களில் பொருத்தமாக இருக்கும். எல்லா இடங்களிலும் பாவிக்க முற்படின் முரன்பாடுகளைத் தோற்றுவிக்கும். குழப்பங்‌களை உருவாக்கும். அதனை விளக்க இவ்விடம் போதாதது.

சுருக்கமாக, செயல் ஒன்றைப் பார்க்கும் ஒருவரின் அறிவை, உளப் பாங்கைப் பொறுத்து, அச்செயல் குழப்பமாகவோ, சீர்திருத்தமாகவோ பொருள் கொடுக்கப்படுகின்றது. அதனால் உண்மை நிலையை விளங்கு வதில் மக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். அப்போது பொறுமையும் கூட அவர்களிடம் காணப்படுவதில்லை, இதுவே குழப்பமாக உருவெடுத்து விடுகிறது. இதன் மூலமான, பின்னணிக் காரணம் அறியாமையே. 

இதனைத்தான் குர்ஆன்,   உங்களுக்கு எதில் ஞானமில்லையோ, அதில் உங்களால் பொறுமையாக இருக்க முடியாது என தீர்ப்புக் கூறுகிறது. அதனால்தான் கற்றறிந்த மனிதரிடம், அவர் கற்றுக் கொண்டதில் சிலவற்றைப் பெற்றுக் கொள்ளச் சென்ற மூஸா அலை அவர்கள் குழப்பமடைந்து பிரிய வேண்டி வந்தது. மூஸா அலை அவர்களுக்கு குழப்பமாகவும், அநியாயமாகவும், அக்கிரமமாகவும் தெரிந்த அந்த கற்றறிந்த மனிதரின் செயற்பாடுகள் உண்மையில் எதிர்காலத்தில் நடை பெறவுள்ள குழ்பங்களை,அநீதிகளை இல்லாதொழிப்பதற்காக முன் கூட்டியே செய்யப்படுபவை. இவை தீர்க்கதரிசன செயற்பாடுகள். எல்லோராலும் விளங்கிக் கொள்ளப்படுவதில்லை.

இவ்வறிய‌ாமையை நீக்கும் வழியாகவே, நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எனக் குர்ஆன் கூறியிருப்பதும். அறிந்தவர்களைத் தேடுவதில், இனங்காண்பதில் உள்ள கஷ்டத்தை நீக்கி, நம்பகத் தன்மையை அடைவதற்காகவே இக்கட்டுரையில் குறித்துச் சொல்லப்பட்ட பின்வரும்கட்டளை கொடுக்கப் படுகின்றது.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல் குர்ஆன் 4:59)

மேற்கண்ட வசனம், நீங்கள் வழிப்பட்டிருந்த அதிகாரம் பெற்றவர் களுக்கும் உங்களுக்கும் இடையில் இஸ்லாத்துக்குள் பிணக்கு ஏற்படு மாயின், அதன் தீர்ப்புக்காக அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் செல்லும்படி பணிக்கின்றது.  அத்தோடு,  ஓர் அறிவுறுத்தலையும் விடுகிறது 4:105 வசனம். அது, “அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கிடவே, உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம்பால் நிச்சயமாக நாம் இறக்கியுள்ளோம். சதிகாரர்களுக்கு வழக்காடுபவராக நீர் ஆகிவிடாதீர். 

மொத்தத்தில், மனித மேம்பாட்டை அடிநாதமாகக் கொண்டு, முழு மனித குலத்துக்கும் வழிகாட்டியாயாகவும், அனைத்துக் காரியஙகளுக்கும் தீர்வாகவும் அருளப்பட்ட குர்ஆனுக்கு மாற்றமாக  நடைபெறும் எக்காரிய மும் குழப்பமானதே! சில ஆரம்பத்தில் நல்லவை! போல் காட்சிப்படுத் திடினும் முடிவு தீமையாகவே இருக்கும்.

குழப்பமற்ற நிலையில் உலகில் சீர்திருத்தத்தை உருவாக்கும் நோக்கிலேயே, குர்ஆனியக் கருத்துக்கள் 23 வருட கலமாக, மார்க்கத்தில் நி்ர்ப்பந்தமில்லை என்ற கோட்பாட்டுடன் இறக்கியருளப்பட்டது. அடிமைத்தளை யாருக்கும் நோவின்றி, இருந்த இடம் தெரியாது இல்லாதொழிக்கப்பட்டது. மது, சூது, விபச்சாரம் போன்றவை எதிர்ப்பின்றி தடைக்காளாகியதுஉணவில் ஹறாம் நியாயபூர்வத்துடன், நிர்ப்பந்தம் என்ற விதிவிலக்குடன் நிறைவேறியது. றிபா இல்லாதொழிக்கப் பட்டது. தர்மம் விருப்புடன் வளர்க்கப்பட்டது. அநியாயக் கொலைகள் தடுக்கப்பட்டது. பழிக்குப்பழி என்பது கூட பெருமனது கொண்டு மன்னிக்கும் மனப்பான்மை உருவாக்கப்பட்டது. மானத்தைக் காக்கும் அலங்காரமான, அழகிய உடைகளின் அறிமுகம். முறையான மஹர் கொடுக்கும் திருமணம், பெண் மானத்தையும், பிறக்கும் குழந்தையினது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் இத்தா, மறுமணத்தின் மூலம் விதவை களுக்கு வாழ்வு,சகோதரத்துவம் நடைமுறைப்படுத்தப் பட்டது. பெண்ணுரிமை பேணப்பட்டது. சொத்துரிமை, பாகப்பிரிவினை, சொத்தில் இல்லாதோருக்கும் பங்கு என்ற பண்பு அறிமுகம். மெளட்டீகம் மறக்கடிக்கப்ட்டது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவை எதனை நமக்குக் காட்டுகிறதென்றால், சீர்திருத்தம் கூட குழப்பத்தை உருவாக்காத நிலையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதையே! அல்லாஹ்வே சீர்திருத்தவாதி. குர்ஆனே உலகின் சீர்திருத்தத்துக்கான உண்மைகள் கொண்ட ஆவணம்

No comments: