Commented by nizamhm1944 on
Lankamuslim.org
One World One Ummah
ஜாதிக ஹெல உறுமயவின் பிரேரணை: மஹிந்த- ரணில் சிக்கலில்
ஏலவே கி ழக்கில் தேர்தல் நடத்தப்பட்டு ஓரு புலியே மாகாண முதலமைச் சராகவும் கடமை பார்த்து விடடுச் சென்றுள்ளது. ஆயினும் அங்கு அப்படியான ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவி்லலை.
மேலும், பொலிஸை நியமிக்கும் அதிகாரம் ஒன்றும் நாட்டைத் துண்டாடுவது இல்லை என்பதை நன்றாக அறிந்தே இந்த யாப்பு அப்போது உருவாக்கப் பட்டது.
அடுத்து அம்மாகாணத்துக்கு உள்ளே இருக்கும் காணியில் அம்மாகாணம் அதிகாரம் கொண்டிருப்பதில் தவறு ஏதுமி்ல்லையே.
மேலும், மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர் ஒருவரின் கட்டுப்பாட்டி லேயே கருமங்கள் நடைபெறகின்றன.
எப்போது ஒரு மாகாண சபை அரசியல் யாப்பை மீறி, மத்திய அரசுக்கும் நாட்டுக்கும் பிரச்சினை கொடுக்கின்றது என்ற நிலை ஏற்படும் போது, அச்சபையைக் கலைக்கும் அதிகாரமும் கவர்னருக்கு உ்ண்டு என்ற நிலையில், தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பி, இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வழிகளை ஏற்படுத்துவோரை அரசு சரியர்ன முறையில் கையாள வேண்டும். அன்றேல் பிரிவினைக்கு தூபமிடுவதாகவே இவர்களது செயல்கள் அமையும் என்பதை இங்கு கூறாமல் இருக்க முடியவில்லை.
No comments:
Post a Comment