Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
பொலிசார் கண்டுகொள்ளாமல் இருப்பது சட்டத்தை மீறும் செயல்:இளம் வழக்கறிஞர் சங்கம்
குற்றச் செயல் ஒன்று பட்டப்பகலில், பகிரங்கமாக, பலரும் பார்த்திருக்க நடைபெறும் போது, தடுத்து நிறுத்தாது பார்த்துக் கொண்டிருப்பது, “சட்டத்தை மீறும் செயல்“ அல்ல. சட்டத்தை மீறியோரைத் தடுத்து நிறுத்தாமை, குற்றச் செயலுக்கு உடந்தையாயிருந்தமை, சட்டத்தைப் புறக்கணித்தமை, கடமை யைச் செய்யத் தவறியமை, பொறுப்பை நிறைவேற்றாமை, உதாசீனம் செய்தமை, இனங்களுக்கிடையே அமைதியின்மை ஏற்படக் காரணமாயிருந் தமை, ஒரு இனம் பாதிப்புக்குள்ளாக உதவியாயிருந்தமை, நாட்டுக்கு அவப்பெயர் உண்டாகக் காரணமாக இருந்தமை போன்ற பல குற்றங்களை உள்ளடக்கிய செயல் என்பதே பொருந்தும். சட்டத்தை மீறவிட்ட செயல் எனவும் கூறலாம்.
ஆனால், பாவம் இந்த போலிஸார், அவர்கள் என்ன செய்வர். ஆட்டுவிப்பவர் ஆட்டுவித்தால் ஆடாதோர் யாரோ? கடமையைச் செய்ய அவர்கள் முற்பட்டால், தண்ணீர் இல்லாத இடங்களில் சேவை செய்ய வேண்டியும் வரலாம்.
No comments:
Post a Comment