சிங்களவர்களின் இனப்பெருக்கத்தை தடுக்கவே கருத்தடை ஊசி மருந்துகள் : பொதுபலசேனா
பொது பல சேன சொல்வதைப் பார்த்தால், இந்நாட்டில் கருத்தடை மாத்திரைகளோ, ஊசிகளோ இல்லாதது போலவும், கருத்தடைகளே நடைபெறாதது போலவும், யாரோ ஓர் பாகிஸ்தானியர் அவைகளைக் கடத்திக் கொண்டு வந்து சிங்கள மக்களுக்கு கருத்தடை செய்வதாகவும், அதற்கு இலங்கையில் வசிக்கும் முஸ்லிம்களே குற்றவாளிகளாகவும் உள்ளது போன்றும் கருத்து வெளிப்படும் விதத்தில் குற்றஞ்சாட்டுகிறார்.
நல்ல காலம் அன்று ETHONOL கடத்தி வந்தது ஒரு முஸ்லிம் பெயருள்ளவராக இருந்திருந்தால், அதுவும் சிங்களவர்களை அழிப்பதற்காக முஸ்லிம்கள் செய்த சதி எனக் கூறியிருப்பார்கள். அன்றேல் மது விற்பனையை முஸ்லிம்கள் செய்திருந்தாலும், அவர்கள்தான் திட்டமிட்டு இவைகளைக் கடத்திக் கொண்டுவரச் செய்திருக்கிறார்கள் எனக் கூறியிருப்பர்.
இனி இந்நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்கள் அனைத்துக்கும் இது போன்ற முலாம் பூசப்பட்டு, முஸ்லிம்கள் மேல் சேற்றைவாரி இறைத்து, இனவிரோத எண்ணங்களை உருவாக்கி, நாட்டின் அமைதிக்கு, சகவாழ்வுக்குப் பங்கம் விளைவித்துக் கொண்டே இருப்பர் இந்த பொது பல சேன.
நாட்டில் குழப்பத்தை, இனங்களுக்கிடையில் விரோதத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது குற்றமென்றால், இவர்கள் ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடாது? ஏன் இவ்வமைப்பு தடை செய்யப்படக் கூடாது? என்ற கேள்விகள் மக்கள் மனதில் தோன்றியுள்ளமையை நியாயமானதாகவே கருத வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment