Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
போப் இராஜினாமா - மறைக்கப்பட்ட உண்மைகள்
இஸ்லாமியருக்கு, தம்மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு இப்படியான ஓர் ஆய்வு தேவைதானா? கத்தோலிக்க உயர்பீட, ஆத்மீக தலைவர் போப்பாண்டவர் அவர்கள் பதவி விலகியதில் மறைக்கப்பட்ட உண்மைகள் உண்டென அறிவதிலும், அது பற்றி எழுதுவதிலும் இஸ்லாமோ, இஸ்லாமியரோ, அன்றி கத்தோலிக்கரோ கூட என்ன நன்மையை அடைந்துவிடப் போகிறார்கள்?
எதில் நமக்கு தீர்க்கமான ஞானம் இல்லையோ அதில் தீர்ப்புக் கூற முனைவதும், எவனோ ஒரு தீயவன் (பததிரிகைகள்) கொணர்ந்த செய்தியை வைத்துக் கொண்டு, ஓர் மதத் தலைவரது பதவி விலகலில் மறைக்கப்பட்ட உண்மைகள் உண்டு எனக் கூறுவதும், துருவித் துருவி ஆராயாதீர்கள் என்ற குர்ஆனிய அறிவித்தல்களை மீறுவதாக மாறிவிடும். புறம் பேசிய குற்றமாகவும் ஆகிவிடும்.
மேலும், தீர்ப்புக்கள் யாவும் குர்ஆனில் இருந்து கொடுக்கப்பட வேண்டுமே தவிர, யாரோ எழுதியதை வைத்துக் கொண்டல்ல. அதுவும் தீர்ப்புக்காக அவை நம்மிடம் வந்திருக்க வேண்டும். அல்லாஹ் பொய்களுக்கு மேல் உண்மையை போட்டுவிடுகிறான் என்றே கூறகிறான். மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களைவதனுள் இந்நடவடிக்கை அமையாது, தேவையற்ற பிரச்சினைகளையே உருவாக்கும்.
மேலும், போப்பாண்டவர் இஸ்லாம் பற்றிக் கூறிய கருத்துக்கள் வெளிப்படையாக இஸ்லாத்துக்கு ஆதரவானது போல் தோற்றமளித்தாலும், குர்ஆன் அதிகமன இடங்களில் கூறிக் கொண்டிருக்கும், இந்த குர்ஆனை பெரும்பான்மையானோர் ஏற்க மாட்டார்கள் என்ற கருத்துக்கு எதிரானதே!
கத்தோலிக்கர் புரியாததேனோ என்ற கேள்வியை எழுப்பு முன், குர்ஆன் கூறும், “வழிகாட்டல் அல்லாஹ்விடம் இருந்தே தவிர இல்லை“ என்பதை அறியதாததேனோ?
யேசு நாதர் பிறப்பு பற்றிய செய்திகள் அதிகமானோர் கத்தோலிக்கர்அறிந்த செய்திகளே. அவரது பிறந்த திகதியும் கூட திருச்சபை அக்காலத்தில் தீர்மானித்ததே தவிர யாதார்த்தமல்ல. அந்த உண்மையைத்தான் அவர் கூறினார். அதில் புரட்சி எதுவுமில்லை. ஆதலால் அவை எல்லாம் அவருக்கு எதிர்புண்டானது என்று கூறுவதற்கான காரணமாகிவிடாது.
மொத்தத்தில் மறைந்துள்ள, பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட குர்ஆனியக் கருத்துக்களை மக்கள் முன் வைப்பதை விடுத்து, அடுத்த மதத்தவர்கள் பற்றிய ஆராய்வில், விமர்சனத்தில எவ்வித பயனையும் முஸ்லிம்கள் அடையப் போவதில்லை.
குர்ஆனிலுள்ள நல்ல கருத்துக்கள் வெளியானால், அல்லாஹ் நாடினால் இஸ்லாமியரும் இஸ்லாமல்லாதவருங்கூட வழிகாட்டப்படுவர்.

No comments:
Post a Comment