Friday, March 29, 2013

தாக்குதல் சம்பவமானது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது: BBS



Commented by nizamhm1944 on:

தாக்குதல் சம்பவமானது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது: BBS

http://lankamuslim.org/2013/03/29/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D/#comment-8922



BBS இன் தற்போதைய போக்கு சிறிது ஆறுதல் தருவதாக உள்ளது.  சிறு சிறு சச்சரவுகள் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு அவ்வப்போது நடைபெற்றிருந்தாலும், அவை கட்டுப்பாட்டுள் கொணரப்பட்டு, மக்கள் இன சௌஜன்யத்துடன் வாழ்ந்தே வந்தனர்.

பகிரங்கமாக பட்டப்பகலில் கூட முஸ்லிம்களின் வழிபாட்டு நிலையங்கள் கூட தாக்கபபடும் இவ்வபாக்ய நிலை ஏற்படக் முக்கிய காரணமாக இருந்தவர்கள்  BBS என்பதனால், அவர்களேதான் இந்நிலைக்குப் பரிகாரம் காண வேண்டியவர்கள். அது அவர்கள் மீது தார்மீகக் கடமையுங்கூட.

மேலும், தங்களை உத்தியோகப் பற்றற்ற பொலிஸாராக கூறிக் கொண்டிருப்போர், 400 பேர் கலந்து கொண்டு நடத்திய தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.   இப்போதுகூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. கண்டனங்கள் தெரிவிப்பதனால் எதுவும் நன்மை நடந்து விடுவதில்லை.ஆதலால் தக்க பரிகாரம் காணப்படுவதும், இதன் பின்னராவது, இது போன்ற காடைத்தனங்கள் நடைபெறாது பார்ப்பதும், நடந்து முடிந்தவைகள் அநியாயமாக நடைபெற்றவை தான் என்பதை நீங்கள் உணர்வதாயின், அவர்களைச் சட்டத்தின் பிடியில் கொணர்வதன் மூலம், இந்த நாட்டிற்கும், புத்த மதத்துக்கும் அண்மைக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள களங்கத்தை, அபகீர்த்தியை, வரவிருக்கும் கலவரங்களைத் தடுத்து நிறுத்துவதற்கானஅத்னை முயற்சிகளிலும் நீங்கள் ஈடுபடவேண்டும்.

அவரவர் மதங்களைப் பின்பற்றுவதும், அவற்றைப் பாதுகாப்பதும் முக்கியமானதே என்பதுடன், மற்றைய மதங்களையும், அவற்றை பின்பற்றுவோரையும் இந்நாட்டின் பிரஜைகளாக, மனிதர்களாக மதித்து நடக்க வேண்டும். அதுவே புத்தபிரானை மகிழ்வடையச் செய்வது.இன்றேல் காலப்போக்கில் பௌத்த மக்களாலேயே நீங்கள் பகிரங்கமாக நிந்திக்கப்படுவீர்கள்.

மக்கள் மத்தியில் காணப்படும் சந்தேகங்கள் போக்கப்பட்டு, அச்சங்கள் களையப்பட்டு, அவரவர் கெளரவம் காப்பாற்றப்படுவதன் மூலமே இந்நாட்டைக் கட்டி எழுப்ப முடியம். அதுவே இப்போதைய அவசியத் தேவை.

வீண் சந்தேகங்களும், அச்சங்களும் பிரச்சினைகள் வருவதற்கு வழிகோலுவன. அப்படியான சந்தர்ப்பங்களில் சம்பந்தப்ப்ட்டோருடன் கலந்து பேசி அவற்றப் போக்கிக் கொள்ள முயல வேண்டும். அதுவே நாம் மதங்களைப் பின்பற்றுபவர்கள் என்பதை வெளிப்படுத்தும்.  மற்ற அனைத்தும் அராஜகத்தின்பாற் பட்டதே.

No comments: