Tuesday, March 12, 2013

உள்நாட்டில் விற்பனையாகும் உற்பத்திகளுக்கு ஹலால் இலச்சினை பொறிக்கப்படமாட்டாது


Commented by nizamhm1944 on lankamuslim.org

உள்நாட்டில் விற்பனையாகும் உற்பத்திகளுக்கு ஹலால் இலச்சினை பொறிக்கப்படமாட்டாது


மிகச் சரியான கருத்து.
முஸ்லிம்கள் இப்போதாவது, குர்ஆன் என்ன கூறியிருக்கிறது என்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும். முஸ்லிம்களின் வழிகாட்டி குர்ஆனே தவிர வேறெதுவும் இல்லை. முஸ்லிம்களின் பாதுகாவலன் அல்லாஹ்வே தவிர இல்லை. நமது கண்மணி நாயகம் பின்பற்றியதும், அவர்களுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதுகாப்பளித்ததும், அவர்களின் எதிரிகளை அழித்ததும கூட அல்லாஹ்தான் என்பதை நம்ப வேண்டும். அந்த ஈமான நமக்கு வருமாயின் நம்மை உலகில் வெல்ல முடியாது. அவனது சொல்லில் அவர்களே வெற்றியாளர்.
”அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவு படுத்துகின்றான்……“ 6:125
குர்ஆனிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உலகில் யாராலும் இடைஞ்சலையோ, தடையையோ ஏற்படுத்திவிட முடியாது. அப்படியான சட்டங்களையே அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். யாராவது நமக்கு குர்ஆனை நடைமுறைப் படுத்துவதில் இடைஞ்சல் தருகின்றார்கள் என்றால், அது நாம், அதனைச் செயற்படுத்தியதில் ஏற்பட்ட தவறின் காரணமாகவே இருக்க வேண்டும் என்பதை ஏற்று, நமது நடவடிக்கைகளை மீளாய்வு செய்து, உண்மையை உணர்ந்து, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி, நமது பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
குர்ஆனியச் சட்டங்கள் முழு மனித சமுதாயத்திற்கும், உலக அழிவு வரை செயற்படுத்தப் படுவதற்காக பூரணத்துவம் பெற்றதாக, தெளிவானதாக, இலகுபடுத்தப்பட்டதாக, நடைமுறைச்சாத்தியமானதாக, நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்டதாக, மாற்றங்களை ஏற்படுத்த முடியாததாக, யாரும் பங்களிப்புச் செய்ய முடியாததாக, உதாரணங்களுடன் இலகுவில் விளங்கிக் கொள்ளும் முறையில் அமைக்கப்பட்டதாக, இயற்கையோடு ஒட்டியதாக, அதனை பின்பற்றுவோர் துன்பத்துக்கு ஆளாகாத தன்மை கொண்டதாக, சிரமத்தைத் தராததாக, உய்த்துணர்வோருக்கு படிப்பினைகள், அத்தாட்சிகள் கொண்டதாக, சிந்திப்போருக்கு சிறந்தவற்றை கண்டுகொள்ளக் கூடியதாக, நாம் பின்பற்றுவதால் அடுத்தவருக்கு இடர்பாடுகள் ஏற்படுத்தாததாக ….. அல்லாஹ் நமக்கு அருளி, அவற்றை ஏற்று நடக்கும் தன் அடியார்கள் தன் பாதுகாப்பில் உள்ளதாகக் கூறிக்கொண்டிருக்கின்றான். அதனால் அது யாராலும் தடைக்கு உள்ளாக்கப்பட முடியாதது.
மேலாக, இந்த மார்க்கத்தைக் காப்பது தனது கடன் என 15:9 வசனத்தில் கூறியபடி தனது மார்க்கத்தைக் காத்துக் கொண்டான். “நிச்சயமாக நாமே இவ்வேதத்தை – நினைவூட்டலை – இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம்.“ அல்லாஹ்வை எவரும் இயலாமல் ஆக்கிவிட முடியாது என்பதையும் வெளிப்படுத்திவிட்டான்.
நல்லவை போல் தெரிவதில் தீமையையும், தீமை போல் தெரிவதில் நன்மையையும் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருப்பதை அறிவோர், அவனது நுண்ணறிவை, அவன் காரியங்களை செயற்படுத்துமாறைக் கண்டு கொள்வர். அவன் இரவைப் பகலிலும், பகலை இரவிலும் புகுத்துபவனல்லவா!

No comments: