Friday, March 29, 2013

போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளிக் கிளம்பியுள்ளது: ஹக்கீம்



Commented by nizamhm1944  on:
Lankamuslim.org
One World One Ummah

போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் 
வெளிக் கிளம்பியுள்ளது: ஹக்கீம்


இங்கு நடந்து கொண்டிருக்கும் ஈனச் செயல்களுக்கு தனியொருவரைத் தனிமைப்படுத்தி தாக்குதல் தொடுப்பது, அவரது சொந்த வாழ்கையை விமர்சிப்பது இஸ்லாமியரான நமக்கு தரப்பட்ட அனுமதியல்ல.  இந்நிலைக்கு அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்.

நமது கருத்துரைகள் ஆக்கபூர்வமானதாகவும், பிரதியீடு செய்யக் கூடிய வழிவகைகளைக் கூறுவதாகவும் இருந்தால் அது இன்றைய அசாதாரண நிலைக்குப் பரிகாரம் காண உதவும்.  அதைவிடுத்து ஒருவரை அனைவரும திட்டித் தீர்ப்பதால் பயனேதும் ஏற்படப் போவதில்லை.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்நிலைக்கு அவர் மட்டும்தானா குற்றவாளி?  நாமும் கூட வெவ்வேறு வகைகளில் குற்றவாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம் என்பதை ஆறஅமர யோசித்து, அவைகளையும் களையும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இல்லாத நிலையில் அல்லாஹ்வின் சோதனை பல்வேறு வழிகளில் வந்தே தீரும். எந்த  ஒரு சமுதாயத்தவரும்  தங்கள் நிலையை தாங்களே மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக, அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை.  இப்போதாவது நாம் நடந்து வந்த பாதை குர்ஆனின் அடிப்படையில் அமைந்திருந்தனவா என்பதை மீளாய்வு செய்து திருத்திக் கொள்ளும் வழிகளைக் காணலாம். நம்நிலையையும் உயர்த்திக் கொள்ளலாம்.

முஸ்லிம்கள் மேல் அடுத்த சமூகத்து்க்கு அச்சம் ஏற்படக் காரணமாகவிருந்தவைகள் எதுவும் உளவா என்பதை நாம் குர்ஆனிய அடிப்படையில் உரைத்துப் பார்த்து சரிசெய்து கொள்ள வேண்டும்.

காரணம் முஃமின்களுக்கு எதிராக நிராகரிப்போருக்கு எவ்வழியையும் அல்லாஹ் ஏற்படுத்த மாட்டான்,  அல் குர்ஆன் 4:141 இப்படிக் கூறும் போது, நமக்கு நடப்பவைகளுக்கான காரணம் இலகுவாக அறிந்து கொள்ளக் கூடியதே.

உதாரணமாக அவர்களின் குற்றச் சாட்டுக்களில் ஒன்று, இந்நாடு இன்னும் சில வருடங்களுக்குள் இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் நம்மால் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் கூறுவதே. அது பொய்யான இட்டுக்கட்டலாக இருந்தாலும் கூட அதனை குர்ஆன் வழியில் நாம் பதில் கூறி அவர்கள் வாயை அடக்கலாம்.

அதற்கான சிறு குர்ஆனிய பதிலை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

“நீர் எவ்வளவுதான் பேராசை கொண்டாலும், பெரும்பாலோர் ஈமான் கொள்ளவே மாட்டார்க்ள“  அல் குர்ஆன் 12:103.

“எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்“ 13:1

“நீர் விரும்பியவை நிச்சயமாக நீர் நேர்வழியில் செலுத்திட முடியாது. எனினும் அல்லாஹ், தான் நாடியவர்களையே நேர்வழியில் செலுத்துகிறான். மேலும், நேர்வழி பெறுகின்றவர்களை அவன் மிக அறிந்தவன்“ - அல் குர்ஆன் 28:56

“மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை“  2:256

மேலும்  34:28, 17:89, 13:31, 73:19, 72:23 போன்ற வசனங்கள் நிறையவே உள்ளன. இதனடிப்படையில் உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் இஸ்லாம் ஆக வேண்டும் என்று விரும்பினாலும் கூட அது நடைபெறாது.

மேலும் உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் ஒருவரைக் கூட மதமாற்றம் செய்துவிட முடியாது.

அல்லாஹ்வின் வசனங்களை உலகில் எவராலும் பொய்யாக்கிடவோ, அவனை இயலாமல் ஆக்கிடவோ முடியாது.  இவற்றை முழுமையாக நம்புபவர்களே முஸ்லிம்களாகிய நாம் என்பதை வெளிபபடுத்தலாம்.

அ்தனால் எவரும் இலங்கை ஒரு  இஸ்லாமிய நாடாக ஆகிவிடும் என்பது பற்றிச்  சிறிதும் அச்சமோ, சந்தேகமோ  கொள்ளத் தேவையில்லை என்பதை விளக்கமாக மூன்று பாஷைகளிலும் எழுதி துண்டுப்பிரசுரமாகக் கூட விநியோகிககலாம்

இறுதியாக, 15:3 கூறும், “அவர்களை நீர் விட்டுவிடுவீராக!  அவர்கள் உண்ணட்டும், சுகம் அனுபவிக்கட்டும், இன்னும், அவர்களை, வீணான எண்ணம் பராக்காக்கி விட்டது. விரைவில் அவர்கள் அறிந்து கொள்வார்கள். இதுகூட அவர்களுக்கு சிறிது எரிச்சலை ஊட்டினாலும், இஸ்லாத்தின் நிலை எ்ன்ன என்பதை  உணரவைக்கும்.

இதுவும் கூட அல்லாஹ் கடமையாக்கியுள்ள எத்திவைத்தலின் பாற்பட்டதே !









No comments: