Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
அமைச்சரவை உப குழுவின் முடிவு இன்னும் ஓரிரு தினங்களில்
முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சமூகத்தின் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து செல்வதற்கு மேலாக, தாம் சமர்ப்பிக்கவுள்ளவை சம்பந்தமான குர்ஆனிய அறிவுறுத்தல்களை அறிந்து செல்வது, சரியான தீர்மானங்களை எடுக்க உதவும். இன்றேல், தமது சமூகத்தை வழிகெடுத்த குற்றத்தை இம்மையிலும் மறுமையிலும் சுமக்க வேண்டிவரும்.
6:119 - “அல்லாஹ்வின் பெயர் எவற்றின் மீது கூறப்பட்டுள்ளதோ அவற்றிலிருந்து நீங்கள் புசிக்காமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள எதன் பக்கம் நிர்ப்பந்திக்கப்ட்டீர்களோ அதனைத் தவிர, எதை உங்களின் மீது தடுத்துள்ளானோ அதை அவன் உங்களுக்கு விவரித்துக் காட்டியுள்ளான். மேலும், நிச்சயமாக பெரும்பாலோர் அறியாமையின் காரணத்தாலும், தங்களது மனோஇச்சைகளின் காரணத்தாலும் திட்டமாக வழிகெடுக்கின்றனர். நிச்சயமாக உம்முடைய ரப்பு வரம்பு மீறுவோரை மிக்க அறிந்தவன். “
கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களை உங்கள் அறிதலுக்காகவும், நடவடிக்கைக்காகவும் பதிவாக்கியுள்ளேன்.
4:105, 17:36, 49:6, 49:12, 6:116, 29:49. 28:50, 5:3,
அஇஜஉ வின் தலைவரின் இறுதி நேரக் கருத்துக்களின்படி,
1. ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை தங்களால் உருவாக்கப்பட்டதல்ல. வியாபாரிகளின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக தம்மால் ஆரம்பிக்கப்பட்டது.
2. ஹலால் முத்திரை இல்லாமல் முஸ்லிம்கள் தமது உணவைத் தேர்வதில் கஷ்டம் இல்லை, அவர்கள் பொதிகளில் காணப்படும் List of Ingredients ஐப் பார்த்து, தமது உணவைத் தேர்ந்து கொள்வர்.
மேற்கண்ட நடைமுறையின் மார்க்க ரீதியான தகுதி இவ்வசனங்களின் மூலம் தெரிய வருகிறது. இவையே போதும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண. முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் அண்மைக்காலத்தில் இழைக்கப்பட்ட துன்பங்களின் காரணங்கள் கவனத்திற் கொள்ளப்படுதல், தீர்வுக்கு பக்கபலமாக இருக்கும்.
ஹலால் முத்திரையுடன் பன்றி இறைச்சி விற்கப்படும் நிலையையே அது உருவாக்கியுள்ளமை அதன் பயங்கரத்தை வெளிப்படுத்தப் போதுமானது.
ஆதலால், முஸ்லிம்கள் குர்ஆனிய ஆணைப்படி தமது ஹறாமைத் தவிர்த்து வாழ்ந்த காலங்களில் தற்போது போல் எநத பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. அதற்கு உலகின் அங்கீகாரமும் கிடைத்திருந்தது. மேலும், முழு உலகுமே முஸ்லிம்கள் இவற்றை உண்ணமாட்டார்கள் என்பதை அறிந்தும் இருந்தது. ஹறாமை அறிநது அவற்றைத் தவிர்த்து நடப்பதே அல்லாஹ்வின் சுன்னா.
No comments:
Post a Comment