Wednesday, March 6, 2013

யாழ் முஸ்லிம் பிரதிநிதிகளை நோர்வே தூதுவர் சந்திப்பு

Commented by nizamhm1944 on Lankamuslim.org

யாழ் முஸ்லிம் பிரதிநிதிகளை நோர்வே தூதுவர் சந்திப்பு


// புலிகள் விட்டுச் சென்ற பொழுது நல்ல நிலையில் இருந்த வீடுகள், இராணுவ கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த நிலையிலேயே சூறையாடப் பட்டன. வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், நிலைகள், கூரைகள், கல்லுகள் என அனைத்தும் சூறையாடப்பட்டு, சோனகதெரு மயானம் போன்று காட்சியளித்தது. //

மேற்கண்ட கூற்றின்படி, இராணுவமே ‌முஸ்லிம்களின் சொத்துக்களின் அழிவுக்குக் காரணம் என்ற கருத்தைத் தருகின்றது.

 // யாழ்ப்பாணம் சொனகதேருவிற்கு இந்த நிலைமை ஏற்பட யார் காரணம் என்று அயல் பிரதேச தமிழர்களை விசாரித்ததில், யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சில முஸ்லிம்கள், தமிழ் கூலித் தொழிலாளிகளைக் கொண்டு வீடுகளை இடித்து, கட்டிடப் பொருட்களை செம்மாதெரு வீதியில் போட்டு விற்றதாக அறிய முடிகின்றது.//

இப்பந்தி, யாழில் ஆதியில் மீள்குடியேறிய சில முஸ்லிம்களைக் குற்றவாளிகளாகக் காட்டுகின்றது.  ஆனால், இந்தச் செய்தியில் உள்ள உண்மைகள் தீர்க்மானவை அல்ல. அவை யாரோ சில அயலூரவர் கூறியதாகக் கூறுகிறது.  இவ்வாறான வதந்திகளை, ஆதாரமற்ற ‌குற்றச்சாட்டுக்களை வைத்துக்கொண்டு ஒரு சமூகம் பாதிக்கப்பட்ட, இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்ட விடயத்தை விமர்சனம் செய்ய, மதிபீடு செய்ய முனைவது, எரிகிற வீட்டிற்கு எண்ணெய் ஊற்றியதையே ஒத்தது. மொத்ததில், உங்கள் கருத்தின் சாராம்சம்,  புலிகள் யாழ் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு அழிவை ஏற்படுத்தவில்லை என்பதாகின்றது. இதன் மூலம் தாங்கள் எதைக் கூற விழைகிறீர்கள் என்பதுதான புரியாத புதிராகவுள்ளது.

தாங்கள் கூறுவது உண்மையென்றால், 1990இல் யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, 1995வரை புலிகளின் ஆட்சியில் யாழ்ப்பாணம் இருந்தபோது முஸ்லிம்களின் சொத்துக்கள் அப்படியே இருந்ததென்றால், பின்னர், 1997இல் முஸ்லிமகள் 19 பேர் கொண்ட குழு அங்கு சென்ற போது அனைத்தும் நல்ல நிலையில் இருந்திருந்ததென்றால், அதனை காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையில் முஸ்லிம்கள் அக்கறை எடுக்காத‌தேன் என்ற கேள்வியும் எழுகின்றது.

1990முதல் 1997 வரை யாழ் முஸ்லிம்களின் உடமைகள் அப்படியே இருந்ததென்பது கோமாளித்தனமாக, முரண்பாடாக,   உள்ளெண்ணத்தோடு எழுதப்பட்டதாக இல்லையா!

மேலும், புலிகள் முஸ்லிம்களை விரட்டிய பின்னர் முஸ்லிம்களின் சொத்துக்களைப் பகிரங்க ஏலத்தில் விற்று விட்டதாக அப்போதைய செய்திகள் தெரிவித்திருந்தமை பற்றி என்ன கூறுவீர்கள்?

No comments: