Commented by nizamhm1944on:Lankamuslim.org
50 ஆண்டுகளில் இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற விசேட திட்டங்கள்:BBS
ஒவ்வொரு மதமும் தனது மதக் கருத்துக்களை வெளிப்படுத்துவது அவர்களின் தார்மீக உரிமையும், கடமையும் கூட. மதமாற்றம் ஏற்படுவது மனமாற்றத்தின் மூலமே. அப்படி ஏற்படும் மதமாற்றத்தை எந்த சக்தியும் தடுத்திட முடியாது. அம்மாற்றம் ஏற்பட, அதற்கு எவருடைய பங்களிப்பும் தேவையில்லை. அல்லாஹ்வின் ஆதரவே வேண்டும்.
அப்படி அல்லாத பொருளாதார சமூக அந்தஸ்து, திருமணம் போன்றவைகளால் ஏற்படும் மதமாற்றம் போலியானது. ஆதலால் இஸ்லாம் இவ்வாறான மதமாற்றம் செய்வதை தூண்டவில்லை.
எமது கடன் மார்க்கத்தில் உள்ள நல்ல கருத்துக்களை நடைமுறைப் படுத்துவதோடு, அவற்றை மக்கள் மயப்படுத்துவதே. இவை மிகக் குறைவாகவே நடைபெறுவதாக அல்லாஹ்வே கூறுகிறான். அல்லாஹ் நாடினாலன்றி எவரும் நம்பிக்கை கொள்ளார். வழிநடத்தப்படவும் மாட்டார்ர் என்பதில் முழுமையான நம்பிக்கை கொண்டோர் முஸ்லிம்கள்.
எவராவது இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுகின்றார் என்றால், அது குர்ஆனிய கருத்துக்களின் அடிப்படையிலாகவே இருக்கும். பெரும்பாலும் முஸ்லிம்களின் நடத்தையைப் பார்த்து எவரும் இஸ்லாத்தை இக்காலங்களில் தழுவியதில்லை. காரணம் முஸ்லிம்களிடமே இஸ்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் இஸ்லாத்தைத் தழுவுவோர் அநேகமாக அறிஞர், விஞ்ஞானிகள், மத போதகர்கள், ஆய்வாளர், உண்மையைக் காண விழைவோர் போன்றோரே என்பதைக் கொண்டு உண்மைகளை அறியலாம். அறிவீனர்களைப் புறக்கணிக்குமாறே குர்ஆன் கூறுகிறது.
இஸ்லாம் எண்ணிக்கையை வைத்து தன்னை அளப்பதில்லை. மாறாக நல்ல எண்ணங்களை, நம்பிக்கையானரை வைத்தே கணிக்கின்றது. பெரும்பான்மைக் கருத்தாயினும் அவை பிழை எனில் அதற்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதே அதன் மகத்துவத்தை வெளிப்படுத்துவது.
No comments:
Post a Comment