Wednesday, March 20, 2013

முஸ்லிம் பெண்ணொருவரின் பர்தாவை அகற்ற முயற்சி


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org

முஸ்லிம் பெண்ணொருவரின் பர்தாவை அகற்ற முயற்சி


எவரையும் குறைகூறி, திட்டி  யாருக்குத்தான் எழுதிட முடியாது.  இதனால் யாருக்கு என்ன பயன் ஏறபட்டுவிடப் போகிறது?

சமூகப் பொறுப்பும்,  நல்லெண்ணமும் இருந்தால், குர்ஆனிய கருத்துக்களைப் பின்பற்றுவதில் ஏற்படும் தடங்கல்களாயின், அதனடிப்ப்படையில் வழிவகை‌களை ஆராயந்து, மக்கள் முன் வைக்கலாம்.  மற்றவரைக் குறைகூறி வாழ்வதைவிடுத்து, நம்மாலான வழிகளில், பிரச்சினகளுக்கு சாத்வீக ரீதியில் பரிகாரம் காண விழைய வேண்டும். சில விஷமிகளின் செயற்பாடுகளுக்கு அவர்களின் வழியில் நாம் தீர்வு காண முடியாது. ஏனென்றால் நாம் அல்லாஹ் கூறியவாறு வாழ வேண்‌டியோர்.

இவ்வாறான பிரச்சினைகள் உருவாகக் காரணமாக அமைந்தவற்றை பக்கச் சார்பற்று ஆய்ந்து, அறிந்து, அவற்றைக் களைவதற்கான சீரான முயற்சிகளில் ஈடுபடுவதே சிறப்பான காரியம். அவையே பிரச்சினைகளுக்கு சிறப்பான நிரந்தரமான தீர்வாகவும் அமையும்.

நமது செயற்பாடுகள் அல்லாஹ் கூறியபடி உள்ளனவா என்பதை  உறுதி செய்து கொள்ளல், நம்மைச் சரியான பாதையில் இட்டுச் செல்லும். அல்லாஹ்வின் அனுக்கிரகமும் கிடைக்கும்.

மிகச் சிற்ந்த நன்மையகை் ‌கொண்டே தீமையைக் களையும்படி அல்லாஹ் அறிவுறுத்தியள்ளான்.  துன்பங்கள் அனைத்தும் நமது கரங்களால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவை என அல்லாஹ் கூறுவது நம்மைச் சிந்திக்க, நம்மை மீளாய்வு செய்ய வலியுறுத்துவது.

தற்போது பொது பல சேனா என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்படும் துவேஷ நடவடிக்கைகளில், முஸ்லிம்கள்பற்றி அவர்கள் கொண்டுள்ள அச்சங்களுக்கும், சந்தேகங்களுக்கும்  காரணங்களாக அவர்கள் மக்களுக்குக் கூறுவனவற்றை பொய்யானவை என நிரூபிக்க வேண்டும். அதனை அரசைக் கொண்டோ, அன்றி நிதான போக்கைக் கொண்ட அதிகாரபூர்வ பௌத்த பீடாதிபதிகளைக் கொண்டோ வெளிப்படுத்தலாம்.  அத்தோடு அவர்கள் கொண்டுள்ள சந்தேகங்கள் , அச்சங்கள், குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்பதை ஆதாரபூர்வமாக மக்கள் மயப்படுத்த வேண்டும்.  அது ஒன்றே இன்றைய நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படுவது  ஒளியைப் பாய்ச்சி இருளை அகற்றுவது அல்லாஹ்வின் நடைமுறையே!

No comments: