Wednesday, March 27, 2013

மாட்டிறைச்சி உணவுகளில் குதிரை இறைச்சி கலப்படம்


மாட்டிறைச்சி உணவுகளில் குதிரை இறைச்சி கலப்படம்  - 

CHEVALGATE

Findus நிறுவனம் தயாரித்த உணவகளில் மாட்டிறைச்சியுடன் குதிரை இறைச்சிக் கலப்படம் நடந்துள்ளதாக இங்கிலாந்துஆய்வகம் ஒன்று கண்டு பிடித்தது. சமையல் செய்யப்பட்ட உறை நிலை உணவுகளிலேயே இக்கலப் படம் கண்டுபிடிக்கப்பட்டது.  கலப்படம் Lasagnes Hachis Parmentier, Moussakas போன்ற உணவு வகைகளிலேயே கண்டுபிடிக்கப் பட்டு விற்பனையில் இருந்து முற்றாக நீக்கப்பட்டது. தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனைகளில் Panzani, Picard ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பு உணவுகளிலும் இக்கலப்படம் கண்டறியப் பட்டது. இதனால் சமைக்கப் பட்ட உறை நிலை உணவுகளின் விற்பனை 45 சதவீத சரிவைச் சந்தித் துள்ளது. இந்நிலை தொடரும் பட்சத்தில், இச் சரிவு 80 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் இறைச்சி வழங்குனர்களான Spanghero, மற்றும் Gel Alpesஆகியவையே இக் கலப்படக் காரணகர்த்தாக்கள் எனக் குற்றம் சாட்டி யுள்ளன. இவ் இரு வழங்குனர்களோ தங்கள் இறைச்சிக் கொள்வனவுத் தரகரை குற்றம் சாட்டினர். Spanghero,மற்றும் Gel Alpes நிறுவனங்களுக் கான தரகரைக் கண்டறிந்ததில், இவ்விரு நிறுவனங் களுக்கும் ஒரே தரகு நிறுவனமே இயங்கி வந்துள்ளது. அவர்கள் நெதர்லாந்தைச் சேர்ந்த Windmeijer நிறுவனமாகும்.

இவர்களே ருமேனியாவில் இருந்து தருவிக்கப்பட்ட மாட்டிறைச்சியுடன் குதிரை இறைச்சியைக் கலந்து விற்றுள்ளனர். ஏற்கனவே இத் தரகு நிறுவனத்தின் மீது தென் அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட குதிரை இறைச்சியை ஜோ;ஜேர்மன் HALAL மாட்டு இறைச்சி என்று விற்ற குற்றச்சாட்டு வேறு உள்ளது (2012). அது தனிக் கதை.

சுவீடனைச் சேர்ந்த தளபாட விற்பனை நிறுவனமான IKEA உணவகங்களில் விநியோகிக்கப்பட்ட ‘Boulettes de  Viande’  உணவிலும் குதிரை இறைச்சிக் கலப்படம் கண்டறியப்பட்டு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இப்படிக் கொத்துக் கொத்தாக கலப்படங்கள் பிடிபட்ட வண்ணம் உள்ளது. ஆனால் மாமிச உணவு மீதான பிரச்சினைகள் அல்லது கலப்படங்கள் இது ஒன்றும் முதல் தடவையல்ல.

2011 - சீனாவில் பன்றி இறைச்சியில் அமிலக் கலப்பு மூலம் மாட்டிறைச்சி யாக விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

2002 - ‘Buffalo Grill’ உணவகம் தடைசெய்யப்பட்டிருந்த இங்கிலாந்து மாட்டிறைச்சிகளை தங்கள் உணவகத்தில் உபயோகித்தது கண்டறியப் பட்டது.

1999 - பெல்ஜியக் கோழிப் பண்ணைகளில் உபயோகிக்கப்பட்ட கோழிக்கான உணவுகளில் ‘Dioxine’’ இரசாயனப் பொருள் கலக்கப்பட்டது கண்டறியப் பட்டது.
1996 - ‘Vache folle’ மாட்டு இறைச்சியிலிருந்து மனிதனுக்கு தொற்று நோயாகப் பரவி உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது எனப் பட்டியல் நீண்ட வண்ணமே உள்ளது.

தகவல்: நிலா 
பங்குனி - சித்திரை 2013
இது கிருஷ்ணா அச்சகத்தின் ஓர் விளம்பர வெளியீடு இல. 20

No comments: