Monday, March 25, 2013

“ஜெனீவா தீர்மானம் குறித்து வடபகுதிச் சமூகம் ஏமாற்றம் அடைந்தள்ளது! – பேராயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை”



Commented by nizamhm1944 on Voice of Mannar:

“ஜெனீவா தீர்மானம் குறித்து வடபகுதிச் சமூகம் ஏமாற்றம் அடைந்தள்ளது! – பேராயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை”


http://voiceofmannar.com/2013/03/25/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/#comment-849


இதிலிருந்து தெரிய வருவது,
ஒன்று வட பகுதி சிவில் சமூகம் வற்புறுத்திய விடயங்கள் ஆதாரமற்றவை, அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவினரால் ஒப்புதல் கொடுக்கப்படாமை, அல்லது திடீரென்று தோற்றம் பெற்ற வட பகுதி சிவில்சமூகம் அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்படாமை
அமெரிக்கா இந்நாட்டின் தமிழர்களில் கொண்டுள்ள கரிசனையைவிட இந்நாட்டில் தங்கள் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள, இல்ங்கைப் பிரச்சினையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதான தன்மை, அல்லது
நமது அண்டை நாடான இந்தியாவின் வேண்டுகோள்கள, நிர்ப்பந்தங்கள், நிபந்தனைகள் காரணமாக அமெரிக்காவின் வரைவுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை, அல்லது
இவை அனைத்துமாகவும் இருக்கலாம். இதனை வட பகுதி சிவில் சமூகம் உணராமல் இருக்கின்றதா என எண்ண வேண்டியுள்ளது.
// அத்துடன் கள்வனிடமே களவு தொடர்பில் விசாரணை செய்யும் படி கோருவது எந்தவிதத்தில் நியாயமாகும் என்று ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார். // இந்தக் கேள்வி யாரோ வடக்கு தமிழர்களுக்கு ஆதரவற்றவர்கள் கள்வனிடம் புகார் கொடுத்து விசாரனை நடத்துமாறு வேண்டியது ‌போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றது. முன்னைய பந்திக்கு முரணானதாகக் காணப்படுகின்றது.
முறைப்பாட்டை முன்வைக்குமுன்னர் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவற்றை விட்டுவிட்டு, பின்னர் விமர்சனங்கள் செய்வதால் பயனேதும் ஏற்படப் போவதில்லை. மாறாக கொஞ்ச நஞ்ச ஆதரவுகளையும் இழக்கவே வேண்டிவரும். இவை முட்டிக் குனியும் நடைமுறைகளை ஒத்ததாகவே காட்டுகிறது இச்செய்தி.

No comments: