Saturday, March 30, 2013

மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அரசு வேண்டுகோள்


Commented by nizamhm18944 on:

Lankamuslim.org
One World One Ummah

http://lankamuslim.org/2013/03/29/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/#comment-8930

மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அரசு வேண்டுகோள்

உண்மையில் தகவல் திணைக்களம் தான் கூறுவது யாதார்த்தமானது என்றால், அதன் பின்னணியில் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்திருக்கு மானால் மக்களைப் பொறுப்புடன் அவதானமாக இருக்குமாறு கூறுவதற்கு மேலாக, அரசுக்கு இப்பயங்கரவாதங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்கி, அந்த நாசகாரச் சக்திகளை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

தகவல் திணைக்களத்தின கடமை அரசின் விடயங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்து வதோடு நின்றுவிடாது, இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றை அரசுக்கும் தெரிவித்து அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

நடந்து முடிந்த அராஜகங்களும், அதனோடு ஒட்டிய நடவடிக்கைகளும் பெரும்பாலும், பட்டப்பகலில் தெருக்களிலும், மேடைகளிலும் மதத்தைக் காப்பற்ற முனைகிறோம் என்ற அடிப்படையில், முஸ்லிம் சமூகத்தின் உள்ளங்களையும், மத அனுஷ்டானங்களையும் ஊறுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டவையே!

ஆதலின், கைப்புண்ணுக்குக் கண்ணாடி தே‌வை இல்லை என்பதற்கொப்ப, இனத்தின் மதவிவகாரங்களிலும், அவர்களின் அடிப்படை உரிமைகளிலும், அவர்களின் வர்த்தகத்தை அழிப்பதையும் மையமாக வைத்து, பல்வேறு உத்திகளைப் பாவித்து தாக்குதல் நடத்துவதிலும், இந்நாட்டின் அரசியல் யாப்பையே தெருவில் போட்டு மிதிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதிலும் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுபவர்கள் பகிரங்கமாகவே அவற்றைச் செய்து வருகின்றனர்.

இவர்களில் சிலர் அரசிலும் ஆட்சியிலும் முக்கியமான இடங்களில் அமர்ந்திருப்பவர்கள்.  பெளத்தமத குருமாராகவுள்ள இனவாதக் கட்சிகளின் தலைவர்கள். மேலும் பிற்போக்கு வாத ஊடகங்கள் இலத்திரணியல் உட்பட.

தகவல் திணைக்களம் கூறுவது உண்மை என்றால், இந்த நிகழ்ச்சி நிரலை நடத்திக் கொண்டிருப்போர்தான் அந்த உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இப்போது அரசின் கையிலேதான் அதனைக் கட்டுப்படுத்தும் கடமை தங்கியுள்ளது என்பது தெளிவாகின்றது.

அரசு நாட்டின் ந‌லனை, இன ஐக்கியத்தை பேணுவதை முன்னிறுத்தி, அரசியல் யாப்பில் கூறப்பட்டவைகளை அனைவரும் சமமாக அனுபவிப்பதற்கும், அச்சமற்று அவர்களது வாழ்வை, மதத்தை. தொழிலை மேற்கொள்வதற்குமான இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும்.

30 வருட பயங்கரவாதத்தை ஒழித்த அரசுக்கு இது ஒரு பெரிய சவாலல்ல என்பதே அனைவரதும் கருத்தாகவுள்ளது.

No comments: