Sunday, August 4, 2013

'வடக்கு முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொண்டே கூட்டமைப்பில் போட்டியிடுகின்றோம்'

Commented by nizamhm1944 on: http://tinyurl.com/omtbya7

 Lankamuslim.org

 'வடக்கு முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொண்டே கூட்டமைப்பில் போட்டியிடுகின்றோம்'


வடக்கில் அபிவிருத்தி நடந்து கொண்டிருக்கினறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அது நடக்க வேண்டியதே! 30 வருட அழிவுக்கு முகம் கொடுத்த ஒரு மாகாணத்தில் நடப்பதை அபிவிருத்தி என்ற கருதுகோளுக்குள் அடக்கிவிட முடியாது.  மீள்கட்டமைப்பு என வேண்டுமானால் கூறலாம்.  அபிவிருத்தி எனக் கூறுவது வெறும் ஏமாற்றே! 

இந்நாட்டில் நடந்த போர், அபிவிருத்தி வேண்டி தொடுக்கப்பட்டதல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்காக நடத்தப்பட்ட உரிமைப் போராட்டம். அப்போராட்டம் வேண்டு மானால் தடம் மாறி தன்னழிவுக்குக் காரணமாகி இருக்கலாம். 

ஆனால், அம்மக்களின் உரிமையை தக்கவைப்பதற்கான அதிகாரப் பரவலாக்கல் என்ற தேவை நீர்த்துப் போகவில்லை என்பதை உணரவேண்டும். அது நீறுபூத்த நெருப்பே! அதனை அணைப்பதற்கு அபிவிருத்தி என்ற மந்திர நீரை வேண்டுமானால் சில காலத்துக்குத் தெளித்து ம்க்களை மயக்கி வைத்துக் கொள்ளப் பயன்படுத்தலாம். அதனால், அந்த வேட்கையை அழித்து விடலாம், அது மீண்டும் புகைந்து பெருநெருப்பாக மாறாது என நினைப்பதுதான் மடமை! தெரிந்தே செய்தால் அது இந்நாட்டுக்குச் செய்யும் துரோகம்!

முஸ்லிம்களைப் பொறுத்து அம்மாகாணத்தின் மீள்கட்டமைப்பு ஒன்றும் அவர்களது புரையோடிப்போன புண்ணுக்கு மருந்தாகிவிட முடியாது. அப்புண்ணுக்கு மருந்து உரிய முறையில் போடப்படாத வரை, அம்மக்களின் வாழ்வு அழிவின் விளிம்பில்தான்  இருந்து கொண்டு இருக்கும்.  அழிவே அவர்களின் முடிவு ஆகிவிடுவதை தடுக்க முடியாது. 

தேர்தலில் பெற்றுவிடும்  வெற்றியை வைத்து யாரும், நாட்டில் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டி விடலாம் என நினைக்கக் கூடாது, ‌தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினையின் தீர்வே நாட்டின் நிரந்தர முன்னேற்றமும், நீடித்த அமைதியுமாகும். அத்தோடு முஸ்லிம்களுக்கு ஆகாயத்தில் இருக்கும் நிலவைக்காட்டி வெளிச்சம் வந்துவிட்டது எனக் கூற நினைப்பதும் துரோகமே ! அவர்களின் ஈடு செய்து கொள்ள முடியா இழப்புக்களை முழுமையாகக் கொடுத்து விட முடியா விடினும், நியாயமான முறையிலான பொறிமுறையினை உருவாக்கி அவர்களுக்கு இழப்பீடுகள் அளிக்கப்படுவதற்கான உறுதி மொழிகள் கொடுக்கப்படல்  வேண்டும். 

மேற்கண்ட சிறுபான்மையினர் (தமிழ்-முஸ்லிம்)  உரிமைகளை பாதுகாக்கும் அதிகாரப் பரவலாக்கமும், முஸ்லிம்களின் வாழ்வாதாரப் பிரச்சினையும் மனிதாபிமானமான முறையில் அணுகப்பட வேண்டும் என்ற ரீதியிலேயே இந்த தேர்தலை அனைத்துக் கடசிகளும் அணுக வேண்டும.  அதனை விடுத்து தமக்கு பதவிகளை எடுப்பதற்காகவும், அதன் சலுக‌ைகளையும், வரப்பிரசாதங்களையும் அனுபவிப்பதற்குமான தேர்தலாக நினைத்து விடுவதும், தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்ந்து விட்டதாக உலகுக்குக் காட்ட முனைவது மக்களுக்கும், இந்நாட்டின் நிரந்தர அமைதிக்கும் செய்யும் துரோமாகவே வரலாற்றில் பதிவாகும்

No comments: