Saturday, August 3, 2013

மஹியங்கனை நகரில் முஸ்லிம் பள்ளிவாசல் இருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்

Commented by nizamhmq944 on :  http://tinyurl.com/kavzocl

Lankamuslim.org
One World One Ummah

மஹியங்கனை நகரில் முஸ்லிம் பள்ளிவாசல் இருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்

தேரர் செய்யும் பிழைகள் நிரூபிக்கவா வேண்டும்! அவர் உளறிய கருத்துக்கள் மட்டுமே போதும் அவர் கொண்டிருக்கும் புனித பதவியை துறந்து செல்ல. அவர் செய்யம் பிழைகளுக்கு அந்த அப்பாவி காவியுடை என்ன செய்யும்! அதனை தூக்கி எறிவேன் எனக் கூறுமளவுக்கு அக்காவியுடை செய்த பாவமென்ன! 

மஹியங்கனை புனித பூமி, காவியுடை கழற்றி எறியும் இடமல்ல. அது காவியுடை தரிக்க வைக்கும் புனித விகாரை என்பதைக் கூடவா தேர் அறியாமல் இருக்கிறார்!

அமைச்சர் ஹக்கீம் அவர்கள் 21 வருடங்களாக மஹியங்கனையில் பள்ளிவாசல் இருப்பதாகத்தான் கூறினார். 40 வருடம் என்பது தாங்கள் இட்டுக்கட்டிச் சுமத்தும் அபாண்டம். 

இல்லாத பள்ளிவாசலை மூடும்படி உத்தரவிடும் அமைச்சர் பற்றி என்ன கூறுவது. 

அது பள்ளிவாசல் என்பதால்தானே பன்றியின் கழிவுகளை அங்கு வீசினர் கொடியோர். கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்பது போல் பன்றியைத் தின்றுவிட்டு கழிவுகளை பள்ளியில் வீசினால் பாவம் தீர்ந்து விடுகிறதா!

பள்ளிவாசல் என்ற ஒன்று அங்கு இல்லாவிடில், ஒருவரைப் பிடித்து அங்கு பள்ளிவாசல் இருக்கவில்லை. எமது குடும்பத்தவர் தொழுமிடமாகவே அதனப் பாவித்தோம் என ஏன் கடிதம் பெற வேண்டும்!

அங்கு பள்ளிவாசல் இல்லாமல் இருந்திருந்தால், மஹியங்கனையில் பள்ளிவாசல் இருந்ததாகப் பதிவு இல்லை என்பதை ஏன் கூறவேண்டும்?  இல்லாத ஒன்றுக்குப் பதிவிராது. பதிவில்லை எனக் கூறின் பள்ளிவாசல் இருக்கிறது என்றுதானே அர்த்தம். 

மேலும், பிறமதத்தவருக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யுமுன் அவற்றில் மூன்று முறை துப்பிய பின்னரே விற்க வேண்டும் எனக் குர்ஆனில் கூறப்படடுள்ளதாகவும், அதன்படியே முஸ்லிம் வியாபாரிகள் செய்வதாகவும் கூறினீர்களே!  அதனை உங்களால் நிரூபிக்க முடியாவிட்டால், இவ்வளவு பெரிய அபாண்டத்தை ஒரு மதத்துக்கு மேல் கூறி, மக்களை வழிகெடுத்து, நாட்டில் இன ஒற்றுமையை அழிக்க முனையும் உங்களுக்குப் பொருத்தமான ஆடையைத் தேடுவதுதான தாங்கள்  சார்ந்த தர்மத்துக்கும், மனித சமுதாயத்துக்கும் நல்லது. உங்களுக்கும் நல்லது.  

No comments: