Saturday, August 10, 2013

நாட்டின் சில பகுதிகளில் பெருநாள் தொழுகை: ACJU மறுப்பு

Comented by nizamhm1944 on:  http://tinyurl.com/kh3ue4g

Lankamuslim.org
One World One Ummah

நாட்டின் சில பகுதிகளில் பெருநாள் தொழுகை: ACJU மறுப்பு


6:153 - அன்றியும், நிச்சயமாக  இது என்னுடைய நேரான வழியாகும். இதனை நீங்கள் பின்பற்றுங்கள். வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனது வழியைவிட்டும் உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சம் உடையோர் ஆவதற்காக இவற்றை அவன் உங்களுக்கு வஸியத்துச் செய்கிறான். 

2:189 - பிறை பற்றி மிகத் தெளிவான கருத்தைத் தருகின்றது. ”உம்மிடம் பிறைகளைப் பற்றிக் கேட்கிறார்கள். அவை மனிதருக்கும், ஹஜ்ஜுக்கும் நேரங்களைக் குறிப்பிடுபவை என்று நீர் கூறும். ... ”  

They ask thee concerning the New Moon. Say, They are but signs to mark fixed periods of time...

2:185 - ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், இன்னும் நேர்வழியில் இருந்தும், பிரித்தறிவிக்கக் கூடியதிலிருந்தும், தெளிவாக்கக்கூடிய சான்றுகளைக் கொண்டதுமான குர்ஆன் இறக்கி அருளப்பட்டது. 

குறிப்பிடப்பட்ட விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் விடப்பட்ட நோன்பைப் பிறை பார்த்தா கழாச் செய்வதற்குக் கூறப்பட்டுள்ளது. ”ஆகவே, எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால், பிறகு எண்ணி வேறு நாட்களில் நோற்றிட வேண்டும்.” என்றுதானே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. 

இவை, மாதத்தைத் தீர்மானிக்கப் பயன்படுவது பிறை என்ற கருத்‌தை வெளிப்படுத்துவனவே, தவிர ‌பிறை பார்த்து நோன்பு பிடிக்க வேண்டு மென்ப‌தை வலியுறுத்துவன வல்ல என்ற உண்மையை வெளிப்படுத்து கின்றன. ஒரு தடவை முஹர்றம் தீர்மானிக்கப்பட்ட பின்பு மாற்றம் சாத்திய மில்லை.  அப்படியே விதிவிலக்குகள் ஏற்படுமாயின் அது நமது குற்றமாகிட முடியாது. 

இதிலிருந்து, பிறை என்பது மாதத் தொடக்கத்தை தலைப் பிறையின் மூலமும், அதன் வளர்ச்சியை, முழுமையை அதாவது நோன்மதியை, தேய்வுகளை, மறைவை அதாவது அமாவாசையை காட்டுவன.  அவை ஒரு முறை காணப்பட்டால், அந்த சந்திரனின் நகர்வில் மாற்றங்கள் ஏற்படாது என்பது இறைவாக்கும், விஞ்ஞான உண்மையும் ஆகும்.  காலநிலைக்கு ஏற்ப அவை பார்வைக்குத் தென்படுவதில் பிரச்சினைகள் எழலாமே தவிர, அவை அவற்றின் தங்குமிடங்களை மாற்றிக் கொள்வதில்லை. அந்த அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசை தப்பாமல் கணிக்கப்பட்டுள்ள குறிப்பிடப்பட்ட நாட்களில் அனுசரிக்கப்படுகின்றமை நமக்குப் படிப்பினையாக அமையலாம்.  

”எண்ணப்பட்ட நாட்களே” -   "for a fixed number of days" எனவே, நோன்பு பற்றி குர்ஆன் குறிப்பிடு கிறதே தவிர அல்ல.  ரமழான் மாதம் வந்துவிட்டால் நோன்பை எண்ணிப் பிடியுங்கள் என்ற கருத்தும், பிறை பார்த்துப் பிடிக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துவனவல்ல. 

பிறை மாதத்தை தீர்மானித்து விடுகிறது என்ற அடிப்படையில், அமாவாசை முடிந்ததும், அடுத்த நாள் தலைப்பிறை தோன்றும் நாளே என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆகையினால் ஷஃபான் மாதம் முடிந்து விட்டது என்பதை அமாவாசை என்ற இருட்டு மூலம் நமக்கு சந்தேகமின்றி நாளை தலைப் பிறை தோன்றப் போகின்றது என்ற உண்மைச் செய்தியைத் தரும் வாய்ப்பை, மனிதருக்கு சிரமத்தைத்தர விரும்பாத வல்ல நாயன் அல்லாஹ் அளித்துள்ளான். அது போன்றே ஷவ்வால் மாத தலைப் பிறையும், றமழானின் அமாவாசைக்கு அடுத்த நாள் வருவதே! இதைவிட வழிகாட்டல் தேவையா?

பிறை பார்த்தல் என்ற நாயக வாக்கு அன்றைய நிலையில் அத்தியாவசிய மானதே. அது அக்கால மக்களுக்கு இலகு வழியாகக் கூறப்பட்டிருக்கலாம். பிறை பார்த்துப் பிடியுங்கள், பிறை பார்த்து விடுங்கள் என்ற ஹதீஸ், சில சந்தர்ப்பங்களில், எண்ணிப் பிடியுங்கள் என்ற இறைவாக்கை மீறும் சந்தர்ப்பத்தையும், அதனால் எண்ணப்பட்ட நாட்கள்  "for a fixed number of days" என்ற கருத்துக்கு முரணாகின்றது.   அத்தோடு, சில வேளைகளில் தவிர்க்கப்பட்ட பெருநாள் தினத்தன்று நோன்பு ‌வைக்கும் குற்றத்துக்குள்ளும் புகுத்திவிடுகிறது. 

கடமையான நோன்பு, றமழான் மாதத்தில் அனுஷ்டிக்கப்படல் வேண்டும் என்பதே இறை கட்டளை. தவிர பிறை பார்ப்பது என்பதல்ல. இந்த சிக்கலை விடுவித்தால், நோன்பு தீர்மானிப்பது என்ற பிரச்சினையே எழ வாய்ப்பில்லை.

இரவையும் பகலையும் மனிதரால் அச்சொட்டாகத் தீர்மானிக்க முடியாது என்பது இறைவாக்கு. அந்த நிலையில் கூட தொழுகை நேரங்களை கணிப்பீட்டின்  அடிப்படையில் தீர்மானிக்க முடியும் என்றால், எண்ணிப் பிடிக்கும்படி கூறப்பட்ட நோன்பை ஏன் கணிப்பீட்டின் அடிப்டையில் தீர்மானிக்கக் கூடாது. 

No comments: