Saturday, August 3, 2013

சிங்களபௌத்த நாடான இலங்கையில் முஸ்லிம்கள் வந்தேறு குடிகளே – ஞானசார தேரர்!

Commented by nizamhm1944 on: http://tinyurl.com/pzku5kz

http://berunews.wordpress.com/

சிங்களபௌத்த நாடான இலங்கையில் முஸ்லிம்கள் வந்தேறு குடிகளே – ஞானசார தேரர்!

தேரர் தனது குறைபாடுகளை, குற்றங்களை மறைத்துக் கொளவதற்காக அவ்வப்போது ஏதாவது கூப்பாடு போட்டுக கொணடிருக்கின்றார். இது ஓர் வகை மனோவியாதியே தவிர வேறில்லை. ஆங்கிலத்தில் இதனைத் தற்போது ISLAMAPHOBIA  என்றழைக்கின்றனர்.  இது, தனது மதத்தைப் பின்பற்றி ஆன்ம உயர்வைப் பெற்றுக் கொள்ளாத தனால் ஏற்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. அக்குறைபாடு தனது மதம் குறைபாடுகளை உடையது. அதனால் அந்த இடத்தை இன்னொரு மதம் பிடித்துக் கொள்ளப் போகின்றதோ என்ற ம‌னப்பயமே! அதனால்தான் இஸ்லாத்தைக் கண்டதும் சிங்கத்தைக் கண்ட கழுதைகள் வெருண்டோடுவது போன்று குழம்பிப் போய் இல்லாததும் பொல்லாததுமான பொய்களை, அவதூறுகளை, குற்றச்சசாட்டுக்களை இஸ்லாத்தின் மீதும், குர்ஆனின் மீதும் சுமத்திக் கொண்டும், தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணமும் உள்ளார். 

நாட்டுக்கு பௌத்தம் மகிந்த தேரரால் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதை தேரர் அறியாமல் இருந்தால் அதையாவது முதலில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும. மேலும் விஜயனும் அவனது தோழர்களும் அவனது தகப்பனாரால் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டு இந்நாட்டை வந்தடைந்தவர்கள் என்பதும் சரித்திரம். இந்த வரலாறாவது தேரருக்குத் தெரிந்திருக்கிறதோ எனத் தெரியவில்லை. 

ஆனால், ஏகதெய்வ வணக்கவாளர்களான இறைநேசர்கள், மனித உருவம் அறுபது அடியாக இருந்த காலமுதல் இந்நாட்டில் வாழ்ந்து மறைந்ததற்கான தடயங்களாக அவர்களின் கல்லறைகள் தற்போதும் காணப்படுகிறது. இஸ்லாம் தளிர்விடும் முன்னரே இங்கு வாழ்நத் இறைநேசர்களின் சந்ததியினரே இங்கு தற்போது முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருப்போர். மேலும், அராபியர் சிலரினதும், தென்னிந்திய முஸ்லிகளின் வழ்சாவழியினரில் சிலரும் கூட வாழ்கின்றனர்.  

முஸ்லிம்கள் அவர்களது சட்டத்தைப் பேணுவதைத் தடைசெய்ய வேண்டும் என்று கூறும் தகுதியை இந்த தேரருக் கொடுத்தது யார்? இது இந்நாட்டின் யாப்பின் மூலம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை. 

பௌத்தம் அரசியல்வாதிகளால் 1972இல் இந்நாட்டின் பிரதான மதமாகப் பிரகடணப்படுத்தப்பட்டது என்பதிலிருந்து இந்நாடு எப்போதும் பல்லினம் மக்கள் வாழும் ஒரு நாடாகவே இருந்து வந்துள்ளது என்பது தெளிவாகின்றது. பெரும்பான்மை சமுதாயமாக பௌத்தர்கள் வாழ்கின்றனர் என்ற கருதுகோள், இந்நாட்டில் வேற்று மதத்தவர் வாழக்கூடாது எ்னபதற்கோ, அவர்கள் தமது கலை, கலாசாரங்களை, மதச்சட்டங்களைப் பின்பற்றக்கூடாது என்பதற்கோ கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 

இதுவரை இந்நாட்டில் அமைதிக்குப் பங்கத்தையும், அவப்பெயரையும் ஏற்படுத்தி, சட்டத்தையும் ஒழுங்கையும் மீறும் செயல்களையும் செய்து, இந்நாட்டின் ஜீவநாடியான அரசியல் யாப்பை அவமதித்துக் கருத்துக் கூறிக் கொண்டும், மிதித்துக் கொண்டும, இனங்களுக்கிடையே பமைமை உணர்வை வளர்த்துக் கொண்டுமிருக்கும் இந்த தேரருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காதிருப்பதேன்? இவரால இந்நாட்டில் ஏற்படவுள்ள அனர்த்தங்களுக்கு அரசும் பொறுப்பை ஏற்கவேண்டியே வரும் என்தை அறியாதிருக்கின்றனரா ஆட்சியாளர்! இவ்வாறான விடயங் களைக் கையாள வேண்டிய பொலிஸார் மௌனம் சாதிப்பதேன்? இக்கேள்விகள் அமைதி விரும்பும் பற்றாளர்கள் மததியில் எழுந்த வண்ணமேயுள்ளது. 

No comments: