Monday, August 12, 2013

நீர் பற்றி நான்

நீர் பற்றி நான் 

நீள்நிலமும் பாழாகும் நீரின்றேல் அக்கணமே 
ஆளில்லாக் கிரகமாம் அறி

தோன்றும் மறையும் துயர்துடைத்து காக்கும்
என்றுமே அழிவில்லை அறி

சேற்றிலும் சங்கமம் காற்றிலும் பவனி
கூற்றம் காணாது காண்

மலையிலும் உறைந்து மடுவிலும் மறைந்து
உழைப்பதே நீரின் கடன்

கள்ளமில்லை பள்ளம்தேடும் கருணையின்றி வெள்ளமாகும்
உள்ளபடி காட்டும் முகம்

அழிவில்லை இழிவில்லை கழிவில்லை காய்ப்புமில்லை
பொழிந்திடுமே மழையாகி நீர்

அகிலத்தில் ஆவியாகி சூழுற்று காற்றிலே
முகிலாகி மழையாகும் நீர் 

எல்லோரையும் கழுவி இன்புறுமே ஞான்றும்
இல்லை இழப்பு பின்

ஆறாகும் கடலாகும் கிணறாகும் குளமாகும்;
நாறிடும் நீpரின்றேல் ஞாலம்

நீரின் பெருமையை நிறையவே கூறிடினும்
பாரில் முடிவுறாதான் பயன்  
  
 – என் குறள் -

1. நீரின்றேல் உயிரினங்களே இல்லை
2. நீரை யாரும் நிரந்தரமாக அசுத்தமாக்கிட முடியாது
3. அனைத்தையும் சுத்தம் செய்யும் நீரினால், தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ள முடியாது
4. தன்னை அழுக்காக்கிப் பிறரைச் சுத்தம் செய்கிறது நீர்
5. மண்ணில் விழுந்தாலும் தண்ணீர்தன் மகத்துவத்தை இழந்து விடுவதில்லை 
6. விண்ணுக்குச்சென்றாலும் தண்ணீர் மண்ணை மறப்பதில்லை
7. மண்ணிற்குச் சென்றாலும் விண்ணைத் துறப்பதில்லை
8. தண்ணீர் கள்ளமற்றது, உள்ளதை உள்ளபடி காட்டிவிடுவது
9. விழுந்தால் நீர் எனப் பெயர் பெறும்
10. எழுந்தால் நீர் ஆவி எனப்பெயர்பெறும்
11. குளிர்ந்தால்  பனிக்கட்டி எனப்படும்
12. தண்ணீர் கொதிப்படைந்தால் வெந்நீராகும், பின்னும் தன்னையே இழந்துவிடும்
13. தண்ணீர்உள்ளங் குளிர்ந்தால் கல்லாய்ச் சமைந்துவிடும்
14. தண்ணீர் இடத்துக்கேற்றபடி தன்னை மாற்றிக்கொள்வதில் பச்சோந்தியையும் மிஞ்சிவிடும்
15. தண்ணீரின் உபயோகத்தை விஞ்ச உலகில் வேறெதுவும்  இல்லை
16. நீரின் தோற்றமின்றேல் உலகில் உயிரினங்களே தோன்றியிருக்க முடியாது
17. சில மணித்திpயாலங்களிலே நம்மை, ஊறி, உப்ப வைத்திடும் தண்ணீர், பத்து மாதங்கள் தாய்வயிற்றில் சிசுவை    ஊறாது, உலராது, ஊறுகள் ஏற்படாது கவசமாய்க் காத்துவருகிறது
18. நீரற்ற ஒன்று ( ஓரறிவு உயிரினங்கள்கூட ) ஸ்பரிசத்தை உணராது
19. நெருப்பு அனைத்தையும் அழித்ததும் தானும் அவிந்து அழிந்துவிடும். ஆனால் நீர் அனைத்தையும் வளர்த்து தான் அழியாது மறைந்துவிடும்
20. இரண்டறக் கலந்தாலும் இயல்பை இழக்காது
21. கண், காது, வாய், மூக்கு, தோல், இரத்தம் உட்பட அனைத்து உள்ளுறுப்புக்களிலும் நீரின் ஆக்கிரமிப்பு தவிர்க்கப்பட முடியாதுளது.
22. எதையும் சேர்க்க, கலக்க, பிசைய, கரைக்க உதவி ஈற்றில் உலர்ந்துவிடும்
23. காற்றிலும் இருக்கும். மேகத்திலும் இருக்கும்.
24. கக்கூஸிலும் comode அடைப்பானாய்  செயற்பட்டு SMELL PROOF ஆவதுடன், நம்மையும் தூய்மையாக்குகின்றது
25. சேவையில் சமத்துவம் காப்பது.
26. கருமுதல் கல்லறை வரை நீரின் தேவை இன்றியமையாதது

மேலும் அதன் குணங்களும், பண்புகளும்:

விழும், எழும், ஆவியாகும், உறையும், கட்டியாகும், அவியும், அவிக்கும், சுடும், குளிரும், ஓடும், தவழும், அரிக்கும், அழிக்கும், வளர்க்கும், வெட்டும், கலங்கும், தெளியும், கலக்கும், காட்டும், ஆழ்;த்தும், உயர்த்தும், தள்ளும், துள்ளும், துவளும், உயரும், பணியும், உறங்கும, ஆடும், அலையும், அடங்கும், அடங்காது, உருமாறும், உறையுளாகும், கறைபோக்கும், கறைப்படுத்தும்,  கழுவும்;;;;, கரைக்கும், உருளும்;, புரளும்,  உருட்டும், புரட்டும், பெரிpதாக்கும், எதையும் ஏற்கும், ஒதுக்கும், சேர்க்கும், சிதைக்கும், முட்டும், மோதும், கூடும், குறையும், ஊறும், வற்றும், பறக்கும், 

இசைக்கும், அசைக்கும், விசையாகும், பசையாகும், உணவாகும், படுக்கையாகும், தோண்டும், மூடும், துளைக்கும், நுரைக்கும், நுழையும், ஒழுகும், அடைக்கும், உடைக்கும், மட்டங்காட்டும், நிரவும், மறைக்கும், சேறாக்கும், சோறாக்கும், நீறாக்கும், அழுகவைக்கும், ஊறவைக்கும், நாறவைக்கும், உப்பவைக்கும், மிதக்கும், மிதக்க வைக்கும், அளவு காட்டும், நீளும், அகலும், கசியும், பசி போக்கும், மயக்கம் தீர்க்கும், வடியும், உலரும்,

பிணி போக்கும், பனியாகும், குளிக்க உதவும், குடிக்க உதவும், நீந்த உதவும், இடம் பெயரும், வெள்ளம் போடும,; சக்தியாகும், காவியாகும், சுமக்கும், காக்கும், அரணாகும், இரையும், காற்றிலும் கலந்திருக்கும், பிடிக்குள் அடங்காது, அழிவற்றது, கழிவாவது, பழியேற்பது, உப்பாகும், புளிப்பாகும், இனிப்பாகும், கசப்பாகும், உறைப்பாகும், உவர்ப்பாகும், கழுவும், களியாகும், சுழியாகும், நாறும், நிறம் மாறும், அணைக்கும், இணைக்கும், பிரிக்கும், பிளக்கும், வேகம் காட்டும், சோகம் காட்டும், போகத்திலும் உதவும், வழுக்கும், வளுவளுப்பாக்கும், பளபளக்கும், தெறிக்கும், துமிக்கும், விம்பம் காட்டும், தெம்பு தரும், இயக்கும், அமுங்காது, கிழிக்கும், ஒன்று சேர்க்கும், சொட்டும், துளியாகும், விலையாகும், வளையும், தணிக்கும், தாக்கும், கொல்லும், அடக்கும,; பிடுங்கும,; கழற்றும், சுழற்றும், குமிழ்விடும், ஒளியைத் தெறிக்க வைக்கும், மினுங்கும், வீழும், வீழ்த்தும், ஆறாகும், கிணறாகும், குளமாகும், கடலாகும், சமுத்திரமாகும். கட்டிலில் மெத்தையுமாகும்.  பாட்டிலில் மதுவுமாகும்.     
                         
- நிஹா -

 25.02.2009

No comments: