Commented by nizamhm1944 on:..http://tinyurl.com/lzwqka9
http://berunews.wordpress.com/
http://berunews.wordpress.com/
அனுமதி பெறப்படாத பள்ளிவாசல்கள் தொடர்பிலேயே பிரச்சினைகள் உருவாகின்றன – மஹிந்த!
நல்ல ஆலோசனையை கூறியுள்ளார் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள். அதன் மூலம் மஹிய்ஙகனையிலும் பள்ளிவாசல் ஒன்று இருக்கின்றது. ஆனால் அது உரிய அனுமதியைப் பெற்றிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி யுள்ளார். அந்த வகையில் ஜனாபதிபதி பாராடடுக்கு உரியவர். காரணம் அங்கு பள்ளிவாசலே இருக்கவில்லை என்றல்லவா ஊடகஙக்ள் மூலம் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர்!
ஆனாலும், பள்ளிவாசல் ஒன்று மெத்தனத்ததால், அல்லது நயவஞ்சகத் தனத்தால் பதிவு செய்யப்டவில்லை என்ற காரணத்தைக் கொண்டு மாகாண அமைச்சர் ஒருவர் அதனை மூடுமாறு பணித்துள்ளமைதான் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இக்கோட்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முயன்றால் நாட்டில் பல மதத் தாபனங்கள் மூடுவிழா வைச் சந்திக்கும்.
பதிவுகள் பெற்றிராத அனைத்து வணக்க ஸ்தலங்களுக்கும் ஒரு காலக்கெடு வைக் கொடுத்து, அவற்றைப் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தலாம். அத்தோடு தற்போது வணக்கஸ்தலங்களாக இருப்பவற்றை, பதிவு செய்வ தில் இழுத்தடிப்புச் செய்ய வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக் குக் கட்டளை பிறப்பிக்கலாம். அல்லது ஒரு கமிட்டியை நியமித்து எங்கெல் லாம் பதிவ செய்யப்படாத வணக்கத் தலங்கள் உள்ளன எனக் கண்டுபிடித்து, அவைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் நாட்டில் மதவிரோத சக்திகளால் ஏற்படுத்தப்படும் அநாவசியப் பிரச்சினை களை, அமைதியின்மையை. இனமுரண்பாட்டை இல்லாதொழிக்கலாம்!
No comments:
Post a Comment