Commented by nizamhm1944 on: http://tinyurl.com/myfxxq8
Lankamuslim.org
One World One Ummah
பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன. திருத்தம் வேண்டும்
Lankamuslim.org
One World One Ummah
பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன. திருத்தம் வேண்டும்
அல்லாஹ்வின் சட்டமே மாற்றப்படாதது. தவறற்றது. மனித சட்டங்களின் நிலை பரிதாபத்துக்கு உரிய நிலையை அடைவதை இங்கு எழுதத் தேவையில்லை. அதனால்தான் அல்லாஹ் நமக்கு தீ்ர்ப்புக்கள் யாவும் குர்ஆனின் அடிப்படையில கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்து கிறான்.
மேலும், மனிதன், பதட்டக்காரனாகவும், பலகீனனாகவும் படைக்கப்பட் டுள்ளான். அதற்கு றிஸ்வி முப்தி மட்டும் விலக்கல் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தவறுகள் ஏற்கப்பட வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் தவறுக்காக பதவி விலக்க வேணடும் எனக் கோருவது சாதாரண அரசியல் களத்தில் கூறப்படுவதாகவே பார்க்க வேண்டியுள்ளது. தவறை உண்ர்ந்து திருந்துவது என்பது அல்லாஹ் வழி. அதனைவிடுத்து பதவி விலகல், அதுவும் ஒரு முஸ்லிமின் கண்ணியத்துக்குக் களங்கம் கற்பித்து, அவரைப் பதவி விலகும்படி ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் தாங்கள் கேட்பது, ஆளுங்கட்சியைப் பதவி விலகக் கோரும் எதிர்கட்சியின்செயறபாடு போன்ற பண்பை வெளிப்படுததுகின்றது.
மேலும், றிஸ்வி முப்தியைப் பதவி விலக வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்து, அவருக்கு எதிராக எழுதுவதில் தீவிரம் காட்டும் முனைப்பில் ஒரு சதவீதத்தைக்கூட, அல்லாஹ்வின் பள்ளிகள் தகர்க்கப்படும் விடயத் தில் காட்டாமல் இருப்பது, கருத்துப் பதிவேற்றம் செய்யாதிருப்பதானது மார்க்கத்தில் அவர்களுக்கு உரிய அக்கறையை விட, றிஸ்வி முப்தியின் மேல் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாகவே நினைக்க வைக்கின்றது.
அவருடைய இடத்திற்கு இன்னொருவரை சிபாரிசு செய்திருப்பதும், அவர் மேலும், கருத்துரைகள் பதிவாகுதலும். புதிதாக ஒரு பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும், தேவையற்ற விமர்சனங்களுக்கு அவரை ஆளாக்கிய குற்றத்திற்கும் உட்படுகின்றது. நீங்கள் முன் மொழிந்தவரும் தவறிழைத் தவரே! அதைவிட றிஸ்வி முப்தி அவர்களின் தீர்ப்புக்கு எதிரானவரல்ல. அவரும் ஜம்மிய்யாவில் அங்கத்தவர் என்ற ரீதியில் கூட்டுப் பொறுப்பைச் சுமக்க வேண்டியவரே!
கருத்துக் கூறும் உரிமை குர்ஆனின் அடிப்படையில் அனைவருக்கும் உண்டே தவிர, அதற்கு மேல் வரம்பு மீறுவது என்பது இறை சுன்னாவாகாது. அல்லாஹ்வே நாயகமவர்களிடம் உமது பிழைகளுக்காகவும். உம்மத்துக் களின் பிழைகளுக்காவும். பிழை பொறுக்கத் தேடுமாறே கூறியிருக்கிறான்.
No comments:
Post a Comment