Jaffna Muslim: 'எல்லா முஸ்லிம்களும் கெட்டவர்கள்' - ஞானசார தேரர் த...: http://www.jaffnamuslim.com/2013/08/blog-post_7170.html - (பகுதி 1) 'ஹலால்' உணவு முறைமை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தீர்ப...
No use of commenting on the foolish, communal, uncivilized and unethical statements of third grades.
One think I have to say on your last sentence. Sri Lanka was once upon a time paradise, but now its moving fastly towards hell.
Wednesday, August 28, 2013
Tuesday, August 20, 2013
இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
Commented by nizamhm1944 on: http://tinyurl.com/k68fqr2
Lankamuslim.org
Lankamuslim.org
இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
தவறுகள் புரியப்படுவதற்கு ஓர் அறிவு தேவை, தன்னடக்கம் தேவை, பொறுப்பு தேவை, சுயவிமர்சனம் செய்யும் பண்பு தேவை, ஏற்கும் மனப்பான்மை தேவை! மேலாக தவறைத் தானே வெளிப்படுத்தும் தைரியம் தேவை.
தெரியாமல் செய்வன மட்டுமே தவறு என்பதும், தெரிந்து செய்பவைகள் குற்றங்கள் என்பதுவும், வேண்டுமென்றே செய்பவைகட்கு இறைவனிடம் மன்னிப்பு இல்லை என்பதும் வேறு!
தங்களது // தலைவர்கள் விமர்சிக்கப்படக்கூடாது என்றொரு வரையறை இஸ்லாத்தில் இருப்பதாக நான் அறியேன் ……..// என்ற தொடரில் அமைந்துள்ளவற்றை மறுப்பதற்கில்லை.
ஆயினும், எந்த விமர்சனமும், விமர்சனம் செய்யப்படுபவரது பதவி நிலையிலும், அவர்கள் செயற்பட்ட விதத்தில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவதாகவும், அவற்றுக்கு ஆக்கபூர்வமான மாற்றுவழிகளைக் கூறுவதாகவும் இருக்க வேண்டும். தவிர அவரைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சிப்பது ஆரோக்கியமற்றது என்பதற்கு மேல், வரம்பு மீறல் என்ற இறைநிராகரிப்பிலும் தள்ளிவிடும். ஒரு முஸ்லிமின் கண்ணியம் மிக முக்கியமானது. நாம் நடுநிலையான சமுதாயம் என அல்லாஹ்வால் பரிந்துரை செய்யப்பட்டோர் என்பதை மறவாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பொது வாழ்வை மேற்கொள்வோர் விமர்சனங்களை எதிர்கொள்ள, அவற்றி லுள்ள நல்ல கருத்துக்களை அலசி ஆராய, தன்னைப் புடம் போட, இன்னும் சிறந்த முறையில் சேவையாற்றும் வழிமுறைகளைக் கண்டறிய தயார் நிலையிலும், மனோபாவத்திலும் இருக்க வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்!
பதிவுகளில் காணப்படும் விமர்சனங்கள் நமது இழி நிலையை துலாம்பரமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
Sunday, August 18, 2013
ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை 08 ம் தேதியா? அல்லது 09 ம் தேதியா?
Commented by nizamhm1944 :http://tinyurl.com/n5av54q
Lankamuslim.org
One World One Ummah
பின்வரும் குர்ஆன் வசனங்களை அறிதலுக்காகப் பதிவிடுகிறேன். அறிவாளருக்கு இவை சிறந்த தெளிவைக் கொடுக்கலாம் இன்ஷா அல்லாஹ்.
றமழான் மாதம் தொடங்கிவி்ட்டால் நோன்பை எண்ணிப் பிடியுங்கள் என்ற இறை கருத்தினை அடைவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளை ஓரே நிமிடத்தில் அழித்துவிடலாம். அல்லாத வரை குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும் அதில், பலருடைய தலைகள் உருளவே செய்யும். காரணம் அல்லாஹ்விலிருந்து விலகிச் செல்வதே!
4:105 - அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கிடவே, உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம்பால் இறக்கினோம். சதிகாரர்களுக்கு வழக்காடுபவர்களாக நீர் ஆகிவிடாதீர்.
5:44 - .... எவர்கள் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்பபளிக்கவில்லையோ, அவர்கள் காபிர்கள்!
29:43 - ... அறிவாளிகளையன்றி இவற்றை விளங்கிக்கொள்ள மாட்டார்கள்!
10:15 - ... என்புறத்திலிருந்து நான் இதை மாற்றுவதற்கு எனக்கு உரிமையில்லை1 என் மீது வஹீஅறிவிக்கபடுவதைத் தவிர நான் பின்பற்றுவதில்லை. .....
9:13 - .... நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ், அவனே அஞ்சுவதற்கு மிக்க தகுதியானவன்
25:52 - ஆகவே நீர் நிராகரிப்போருக்கு வழி்பபடாதீர். அன்றி இதனைக்கொண்டு முயற்சி செய்வீராக!
25:63 - அவர்களிடம் கடின முயற்சியாகஅர்ரஹ்மானுடைய அடியார்கள்
எத்தகையவர்கள் எ்னறால், பூமியில் பணிவாக அவர்கள்
நடப்பார்கள். அறிவீனர்கள“அவர்களிடம் தர்க்கம் செய்ய நேர்ந்தால்
“ஸலாமுன்“ எனக்கூறிவிடுவார்கள்.
2:140- ....நீங்கள் அறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா ? என்று நீர்
கேட்பீராக! அ்ல்லாஹ்வின் புற்த்திலிருந்துதன்னிடம் வந்துள்ள
சாட்சியத்தினைமறைப்பவனைவிட மிக்க அநீதி இழைப்பவன் யார்?
மேலும், நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
42:24 - அல்லாஹ் பொய்யை அழித்து விடுகிறான். மேலும்,
தன்வார்த்தைகளால்உண்மையை நிலைநிறுத்துவான்!
40:83 - ஆகவே , அவர்களது தூதர்கள் அவர்களிடம் தெளிவான
அத்தாட்சிகளைக் கொண்டு வந்த சமயத்தில்,தங்களிடமுள்ள
கல்வியைக் கொண்டுபெருமகிழ்ச்சியை அடைந்து வந்தார்கள்.
39:18 - அவர்கள் எத்தகையோரென்றால், சொற்களைச் செவியுறுவார்கள்.
அதில் மிக அழகானவற்றைப்பின்பற்றுவார்கள். அவர்கள்
எத்தகையோரென்றால், அவர்களைஅல்லாஹ் நேர்வழியில்
செலுத்திவிட்டான்.மேலும்அவர்கள்தான் அறிவுடையோர்கள்.
3:18 - நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத்
தவிர வேறு யாருமில்லை என்றுஅல்லாஹ் சாட்சி கூறுகிறான் .
அவ்வாறே வானவர்களும், அறிஞர்களும் சாட்சி பகர்கின்றனர். ...
6:144- நீர் கேட்பீராக! அல்லது உங்களுக்கு அல்லாஹ் சட்டமாக்கி பொழுது
நீங்கள் ஆஜராகி இருந்தீர்களா? என்றும்,ஆகவே மனிதரை
வழிகெடுத்திட, அறிவின்றி அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை
செய்கின்றவனைவிட மிகப்பெரும் அநியாயக்காரன் யார்?
அநியாயக்கார கூட்டத்தினரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்
46:26 - ...ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை மறை த்துக்
கொண்டிருந்த காரணத்தால், அவர்களது செவியும், அவர்களது
பார்வைகளும், அவர்களது இதயங்களும் அவர்களுக்கு எத்தகைய பலனுமளிக்கவில்லை.
45:2- இது மனிதர்களுக்கு தெளிவான ஆதாரங்களாகவும், உறுதி
கொள்கின்றகூட்டத்தாருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கின்றது.
6:150 - நிச்சயமாக அல்லாஹ் இதனைத் தடுத்துள்ளான் என்பதற்கு சாட்சி
சொல்வார்களே அத்தகைய உஙகளதுசாட்சியாளரைக் கொண்டு
வாருங்கள் என்று நீர் கூறுவீராக! அப்பொழுது நீரும் அவர்களுடன்
சாட்சி கூறிவிட வேண்டாம்.
45:37 - வானங்களிலும். பூமியிலும் பெருமையனைத்தும் அவனுக்கே சொந்தமாகும்.
4:6:9 - என்பால் வஹீ அறிவிக்கப்படுவதைத் தவிர நான் பின்பற்றுவதில்லை.
Lankamuslim.org
One World One Ummah
ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை 08 ம் தேதியா? அல்லது 09 ம் தேதியா?
பின்வரும் குர்ஆன் வசனங்களை அறிதலுக்காகப் பதிவிடுகிறேன். அறிவாளருக்கு இவை சிறந்த தெளிவைக் கொடுக்கலாம் இன்ஷா அல்லாஹ்.
றமழான் மாதம் தொடங்கிவி்ட்டால் நோன்பை எண்ணிப் பிடியுங்கள் என்ற இறை கருத்தினை அடைவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளை ஓரே நிமிடத்தில் அழித்துவிடலாம். அல்லாத வரை குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும் அதில், பலருடைய தலைகள் உருளவே செய்யும். காரணம் அல்லாஹ்விலிருந்து விலகிச் செல்வதே!
4:105 - அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கிடவே, உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம்பால் இறக்கினோம். சதிகாரர்களுக்கு வழக்காடுபவர்களாக நீர் ஆகிவிடாதீர்.
5:44 - .... எவர்கள் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்பபளிக்கவில்லையோ, அவர்கள் காபிர்கள்!
29:43 - ... அறிவாளிகளையன்றி இவற்றை விளங்கிக்கொள்ள மாட்டார்கள்!
10:15 - ... என்புறத்திலிருந்து நான் இதை மாற்றுவதற்கு எனக்கு உரிமையில்லை1 என் மீது வஹீஅறிவிக்கபடுவதைத் தவிர நான் பின்பற்றுவதில்லை. .....
9:13 - .... நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ், அவனே அஞ்சுவதற்கு மிக்க தகுதியானவன்
25:52 - ஆகவே நீர் நிராகரிப்போருக்கு வழி்பபடாதீர். அன்றி இதனைக்கொண்டு முயற்சி செய்வீராக!
25:63 - அவர்களிடம் கடின முயற்சியாகஅர்ரஹ்மானுடைய அடியார்கள்
எத்தகையவர்கள் எ்னறால், பூமியில் பணிவாக அவர்கள்
நடப்பார்கள். அறிவீனர்கள“அவர்களிடம் தர்க்கம் செய்ய நேர்ந்தால்
“ஸலாமுன்“ எனக்கூறிவிடுவார்கள்.
2:140- ....நீங்கள் அறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா ? என்று நீர்
கேட்பீராக! அ்ல்லாஹ்வின் புற்த்திலிருந்துதன்னிடம் வந்துள்ள
சாட்சியத்தினைமறைப்பவனைவிட மிக்க அநீதி இழைப்பவன் யார்?
மேலும், நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
42:24 - அல்லாஹ் பொய்யை அழித்து விடுகிறான். மேலும்,
தன்வார்த்தைகளால்உண்மையை நிலைநிறுத்துவான்!
40:83 - ஆகவே , அவர்களது தூதர்கள் அவர்களிடம் தெளிவான
அத்தாட்சிகளைக் கொண்டு வந்த சமயத்தில்,தங்களிடமுள்ள
கல்வியைக் கொண்டுபெருமகிழ்ச்சியை அடைந்து வந்தார்கள்.
39:18 - அவர்கள் எத்தகையோரென்றால், சொற்களைச் செவியுறுவார்கள்.
அதில் மிக அழகானவற்றைப்பின்பற்றுவார்கள். அவர்கள்
எத்தகையோரென்றால், அவர்களைஅல்லாஹ் நேர்வழியில்
செலுத்திவிட்டான்.மேலும்அவர்கள்தான் அறிவுடையோர்கள்.
3:18 - நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத்
தவிர வேறு யாருமில்லை என்றுஅல்லாஹ் சாட்சி கூறுகிறான் .
அவ்வாறே வானவர்களும், அறிஞர்களும் சாட்சி பகர்கின்றனர். ...
6:144- நீர் கேட்பீராக! அல்லது உங்களுக்கு அல்லாஹ் சட்டமாக்கி பொழுது
நீங்கள் ஆஜராகி இருந்தீர்களா? என்றும்,ஆகவே மனிதரை
வழிகெடுத்திட, அறிவின்றி அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை
செய்கின்றவனைவிட மிகப்பெரும் அநியாயக்காரன் யார்?
அநியாயக்கார கூட்டத்தினரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்
46:26 - ...ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை மறை த்துக்
கொண்டிருந்த காரணத்தால், அவர்களது செவியும், அவர்களது
பார்வைகளும், அவர்களது இதயங்களும் அவர்களுக்கு எத்தகைய பலனுமளிக்கவில்லை.
45:2- இது மனிதர்களுக்கு தெளிவான ஆதாரங்களாகவும், உறுதி
கொள்கின்றகூட்டத்தாருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கின்றது.
6:150 - நிச்சயமாக அல்லாஹ் இதனைத் தடுத்துள்ளான் என்பதற்கு சாட்சி
சொல்வார்களே அத்தகைய உஙகளதுசாட்சியாளரைக் கொண்டு
வாருங்கள் என்று நீர் கூறுவீராக! அப்பொழுது நீரும் அவர்களுடன்
சாட்சி கூறிவிட வேண்டாம்.
45:37 - வானங்களிலும். பூமியிலும் பெருமையனைத்தும் அவனுக்கே சொந்தமாகும்.
4:6:9 - என்பால் வஹீ அறிவிக்கப்படுவதைத் தவிர நான் பின்பற்றுவதில்லை.
Wednesday, August 14, 2013
பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன. திருத்தம் வேண்டும்
Commented by nizamhm1944 on: http://tinyurl.com/myfxxq8
Lankamuslim.org
One World One Ummah
பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன. திருத்தம் வேண்டும்
Lankamuslim.org
One World One Ummah
பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன. திருத்தம் வேண்டும்
அல்லாஹ்வின் சட்டமே மாற்றப்படாதது. தவறற்றது. மனித சட்டங்களின் நிலை பரிதாபத்துக்கு உரிய நிலையை அடைவதை இங்கு எழுதத் தேவையில்லை. அதனால்தான் அல்லாஹ் நமக்கு தீ்ர்ப்புக்கள் யாவும் குர்ஆனின் அடிப்படையில கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்து கிறான்.
மேலும், மனிதன், பதட்டக்காரனாகவும், பலகீனனாகவும் படைக்கப்பட் டுள்ளான். அதற்கு றிஸ்வி முப்தி மட்டும் விலக்கல் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தவறுகள் ஏற்கப்பட வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் தவறுக்காக பதவி விலக்க வேணடும் எனக் கோருவது சாதாரண அரசியல் களத்தில் கூறப்படுவதாகவே பார்க்க வேண்டியுள்ளது. தவறை உண்ர்ந்து திருந்துவது என்பது அல்லாஹ் வழி. அதனைவிடுத்து பதவி விலகல், அதுவும் ஒரு முஸ்லிமின் கண்ணியத்துக்குக் களங்கம் கற்பித்து, அவரைப் பதவி விலகும்படி ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் தாங்கள் கேட்பது, ஆளுங்கட்சியைப் பதவி விலகக் கோரும் எதிர்கட்சியின்செயறபாடு போன்ற பண்பை வெளிப்படுததுகின்றது.
மேலும், றிஸ்வி முப்தியைப் பதவி விலக வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்து, அவருக்கு எதிராக எழுதுவதில் தீவிரம் காட்டும் முனைப்பில் ஒரு சதவீதத்தைக்கூட, அல்லாஹ்வின் பள்ளிகள் தகர்க்கப்படும் விடயத் தில் காட்டாமல் இருப்பது, கருத்துப் பதிவேற்றம் செய்யாதிருப்பதானது மார்க்கத்தில் அவர்களுக்கு உரிய அக்கறையை விட, றிஸ்வி முப்தியின் மேல் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாகவே நினைக்க வைக்கின்றது.
அவருடைய இடத்திற்கு இன்னொருவரை சிபாரிசு செய்திருப்பதும், அவர் மேலும், கருத்துரைகள் பதிவாகுதலும். புதிதாக ஒரு பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும், தேவையற்ற விமர்சனங்களுக்கு அவரை ஆளாக்கிய குற்றத்திற்கும் உட்படுகின்றது. நீங்கள் முன் மொழிந்தவரும் தவறிழைத் தவரே! அதைவிட றிஸ்வி முப்தி அவர்களின் தீர்ப்புக்கு எதிரானவரல்ல. அவரும் ஜம்மிய்யாவில் அங்கத்தவர் என்ற ரீதியில் கூட்டுப் பொறுப்பைச் சுமக்க வேண்டியவரே!
கருத்துக் கூறும் உரிமை குர்ஆனின் அடிப்படையில் அனைவருக்கும் உண்டே தவிர, அதற்கு மேல் வரம்பு மீறுவது என்பது இறை சுன்னாவாகாது. அல்லாஹ்வே நாயகமவர்களிடம் உமது பிழைகளுக்காகவும். உம்மத்துக் களின் பிழைகளுக்காவும். பிழை பொறுக்கத் தேடுமாறே கூறியிருக்கிறான்.
Monday, August 12, 2013
நீர் பற்றி நான்
நீர் பற்றி நான்
நீள்நிலமும் பாழாகும் நீரின்றேல் அக்கணமே
ஆளில்லாக் கிரகமாம் அறி
தோன்றும் மறையும் துயர்துடைத்து காக்கும்
என்றுமே அழிவில்லை அறி
சேற்றிலும் சங்கமம் காற்றிலும் பவனி
கூற்றம் காணாது காண்
மலையிலும் உறைந்து மடுவிலும் மறைந்து
உழைப்பதே நீரின் கடன்
கள்ளமில்லை பள்ளம்தேடும் கருணையின்றி வெள்ளமாகும்
உள்ளபடி காட்டும் முகம்
அழிவில்லை இழிவில்லை கழிவில்லை காய்ப்புமில்லை
பொழிந்திடுமே மழையாகி நீர்
அகிலத்தில் ஆவியாகி சூழுற்று காற்றிலே
முகிலாகி மழையாகும் நீர்
எல்லோரையும் கழுவி இன்புறுமே ஞான்றும்
இல்லை இழப்பு பின்
ஆறாகும் கடலாகும் கிணறாகும் குளமாகும்;
நாறிடும் நீpரின்றேல் ஞாலம்
நீரின் பெருமையை நிறையவே கூறிடினும்
பாரில் முடிவுறாதான் பயன்
– என் குறள் -
1. நீரின்றேல் உயிரினங்களே இல்லை
2. நீரை யாரும் நிரந்தரமாக அசுத்தமாக்கிட முடியாது
3. அனைத்தையும் சுத்தம் செய்யும் நீரினால், தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ள முடியாது
4. தன்னை அழுக்காக்கிப் பிறரைச் சுத்தம் செய்கிறது நீர்
5. மண்ணில் விழுந்தாலும் தண்ணீர்தன் மகத்துவத்தை இழந்து விடுவதில்லை
6. விண்ணுக்குச்சென்றாலும் தண்ணீர் மண்ணை மறப்பதில்லை
7. மண்ணிற்குச் சென்றாலும் விண்ணைத் துறப்பதில்லை
8. தண்ணீர் கள்ளமற்றது, உள்ளதை உள்ளபடி காட்டிவிடுவது
9. விழுந்தால் நீர் எனப் பெயர் பெறும்
10. எழுந்தால் நீர் ஆவி எனப்பெயர்பெறும்
11. குளிர்ந்தால் பனிக்கட்டி எனப்படும்
12. தண்ணீர் கொதிப்படைந்தால் வெந்நீராகும், பின்னும் தன்னையே இழந்துவிடும்
13. தண்ணீர்உள்ளங் குளிர்ந்தால் கல்லாய்ச் சமைந்துவிடும்
14. தண்ணீர் இடத்துக்கேற்றபடி தன்னை மாற்றிக்கொள்வதில் பச்சோந்தியையும் மிஞ்சிவிடும்
15. தண்ணீரின் உபயோகத்தை விஞ்ச உலகில் வேறெதுவும் இல்லை
16. நீரின் தோற்றமின்றேல் உலகில் உயிரினங்களே தோன்றியிருக்க முடியாது
17. சில மணித்திpயாலங்களிலே நம்மை, ஊறி, உப்ப வைத்திடும் தண்ணீர், பத்து மாதங்கள் தாய்வயிற்றில் சிசுவை ஊறாது, உலராது, ஊறுகள் ஏற்படாது கவசமாய்க் காத்துவருகிறது
18. நீரற்ற ஒன்று ( ஓரறிவு உயிரினங்கள்கூட ) ஸ்பரிசத்தை உணராது
19. நெருப்பு அனைத்தையும் அழித்ததும் தானும் அவிந்து அழிந்துவிடும். ஆனால் நீர் அனைத்தையும் வளர்த்து தான் அழியாது மறைந்துவிடும்
20. இரண்டறக் கலந்தாலும் இயல்பை இழக்காது
21. கண், காது, வாய், மூக்கு, தோல், இரத்தம் உட்பட அனைத்து உள்ளுறுப்புக்களிலும் நீரின் ஆக்கிரமிப்பு தவிர்க்கப்பட முடியாதுளது.
22. எதையும் சேர்க்க, கலக்க, பிசைய, கரைக்க உதவி ஈற்றில் உலர்ந்துவிடும்
23. காற்றிலும் இருக்கும். மேகத்திலும் இருக்கும்.
24. கக்கூஸிலும் comode அடைப்பானாய் செயற்பட்டு SMELL PROOF ஆவதுடன், நம்மையும் தூய்மையாக்குகின்றது
25. சேவையில் சமத்துவம் காப்பது.
26. கருமுதல் கல்லறை வரை நீரின் தேவை இன்றியமையாதது
மேலும் அதன் குணங்களும், பண்புகளும்:
- நிஹா -
25.02.2009
நீள்நிலமும் பாழாகும் நீரின்றேல் அக்கணமே
ஆளில்லாக் கிரகமாம் அறி
தோன்றும் மறையும் துயர்துடைத்து காக்கும்
என்றுமே அழிவில்லை அறி
சேற்றிலும் சங்கமம் காற்றிலும் பவனி
கூற்றம் காணாது காண்
மலையிலும் உறைந்து மடுவிலும் மறைந்து
உழைப்பதே நீரின் கடன்
கள்ளமில்லை பள்ளம்தேடும் கருணையின்றி வெள்ளமாகும்
உள்ளபடி காட்டும் முகம்
அழிவில்லை இழிவில்லை கழிவில்லை காய்ப்புமில்லை
பொழிந்திடுமே மழையாகி நீர்
அகிலத்தில் ஆவியாகி சூழுற்று காற்றிலே
முகிலாகி மழையாகும் நீர்
எல்லோரையும் கழுவி இன்புறுமே ஞான்றும்
இல்லை இழப்பு பின்
ஆறாகும் கடலாகும் கிணறாகும் குளமாகும்;
நாறிடும் நீpரின்றேல் ஞாலம்
நீரின் பெருமையை நிறையவே கூறிடினும்
பாரில் முடிவுறாதான் பயன்
– என் குறள் -
1. நீரின்றேல் உயிரினங்களே இல்லை
2. நீரை யாரும் நிரந்தரமாக அசுத்தமாக்கிட முடியாது
3. அனைத்தையும் சுத்தம் செய்யும் நீரினால், தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ள முடியாது
4. தன்னை அழுக்காக்கிப் பிறரைச் சுத்தம் செய்கிறது நீர்
5. மண்ணில் விழுந்தாலும் தண்ணீர்தன் மகத்துவத்தை இழந்து விடுவதில்லை
6. விண்ணுக்குச்சென்றாலும் தண்ணீர் மண்ணை மறப்பதில்லை
7. மண்ணிற்குச் சென்றாலும் விண்ணைத் துறப்பதில்லை
8. தண்ணீர் கள்ளமற்றது, உள்ளதை உள்ளபடி காட்டிவிடுவது
9. விழுந்தால் நீர் எனப் பெயர் பெறும்
10. எழுந்தால் நீர் ஆவி எனப்பெயர்பெறும்
11. குளிர்ந்தால் பனிக்கட்டி எனப்படும்
12. தண்ணீர் கொதிப்படைந்தால் வெந்நீராகும், பின்னும் தன்னையே இழந்துவிடும்
13. தண்ணீர்உள்ளங் குளிர்ந்தால் கல்லாய்ச் சமைந்துவிடும்
14. தண்ணீர் இடத்துக்கேற்றபடி தன்னை மாற்றிக்கொள்வதில் பச்சோந்தியையும் மிஞ்சிவிடும்
15. தண்ணீரின் உபயோகத்தை விஞ்ச உலகில் வேறெதுவும் இல்லை
16. நீரின் தோற்றமின்றேல் உலகில் உயிரினங்களே தோன்றியிருக்க முடியாது
17. சில மணித்திpயாலங்களிலே நம்மை, ஊறி, உப்ப வைத்திடும் தண்ணீர், பத்து மாதங்கள் தாய்வயிற்றில் சிசுவை ஊறாது, உலராது, ஊறுகள் ஏற்படாது கவசமாய்க் காத்துவருகிறது
18. நீரற்ற ஒன்று ( ஓரறிவு உயிரினங்கள்கூட ) ஸ்பரிசத்தை உணராது
19. நெருப்பு அனைத்தையும் அழித்ததும் தானும் அவிந்து அழிந்துவிடும். ஆனால் நீர் அனைத்தையும் வளர்த்து தான் அழியாது மறைந்துவிடும்
20. இரண்டறக் கலந்தாலும் இயல்பை இழக்காது
21. கண், காது, வாய், மூக்கு, தோல், இரத்தம் உட்பட அனைத்து உள்ளுறுப்புக்களிலும் நீரின் ஆக்கிரமிப்பு தவிர்க்கப்பட முடியாதுளது.
22. எதையும் சேர்க்க, கலக்க, பிசைய, கரைக்க உதவி ஈற்றில் உலர்ந்துவிடும்
23. காற்றிலும் இருக்கும். மேகத்திலும் இருக்கும்.
24. கக்கூஸிலும் comode அடைப்பானாய் செயற்பட்டு SMELL PROOF ஆவதுடன், நம்மையும் தூய்மையாக்குகின்றது
25. சேவையில் சமத்துவம் காப்பது.
26. கருமுதல் கல்லறை வரை நீரின் தேவை இன்றியமையாதது
மேலும் அதன் குணங்களும், பண்புகளும்:
விழும், எழும், ஆவியாகும், உறையும், கட்டியாகும், அவியும், அவிக்கும், சுடும், குளிரும், ஓடும், தவழும், அரிக்கும், அழிக்கும், வளர்க்கும், வெட்டும், கலங்கும், தெளியும், கலக்கும், காட்டும், ஆழ்;த்தும், உயர்த்தும், தள்ளும், துள்ளும், துவளும், உயரும், பணியும், உறங்கும, ஆடும், அலையும், அடங்கும், அடங்காது, உருமாறும், உறையுளாகும், கறைபோக்கும், கறைப்படுத்தும், கழுவும்;;;;, கரைக்கும், உருளும்;, புரளும், உருட்டும், புரட்டும், பெரிpதாக்கும், எதையும் ஏற்கும், ஒதுக்கும், சேர்க்கும், சிதைக்கும், முட்டும், மோதும், கூடும், குறையும், ஊறும், வற்றும், பறக்கும்,
இசைக்கும், அசைக்கும், விசையாகும், பசையாகும், உணவாகும், படுக்கையாகும், தோண்டும், மூடும், துளைக்கும், நுரைக்கும், நுழையும், ஒழுகும், அடைக்கும், உடைக்கும், மட்டங்காட்டும், நிரவும், மறைக்கும், சேறாக்கும், சோறாக்கும், நீறாக்கும், அழுகவைக்கும், ஊறவைக்கும், நாறவைக்கும், உப்பவைக்கும், மிதக்கும், மிதக்க வைக்கும், அளவு காட்டும், நீளும், அகலும், கசியும், பசி போக்கும், மயக்கம் தீர்க்கும், வடியும், உலரும்,
பிணி போக்கும், பனியாகும், குளிக்க உதவும், குடிக்க உதவும், நீந்த உதவும், இடம் பெயரும், வெள்ளம் போடும,; சக்தியாகும், காவியாகும், சுமக்கும், காக்கும், அரணாகும், இரையும், காற்றிலும் கலந்திருக்கும், பிடிக்குள் அடங்காது, அழிவற்றது, கழிவாவது, பழியேற்பது, உப்பாகும், புளிப்பாகும், இனிப்பாகும், கசப்பாகும், உறைப்பாகும், உவர்ப்பாகும், கழுவும், களியாகும், சுழியாகும், நாறும், நிறம் மாறும், அணைக்கும், இணைக்கும், பிரிக்கும், பிளக்கும், வேகம் காட்டும், சோகம் காட்டும், போகத்திலும் உதவும், வழுக்கும், வளுவளுப்பாக்கும், பளபளக்கும், தெறிக்கும், துமிக்கும், விம்பம் காட்டும், தெம்பு தரும், இயக்கும், அமுங்காது, கிழிக்கும், ஒன்று சேர்க்கும், சொட்டும், துளியாகும், விலையாகும், வளையும், தணிக்கும், தாக்கும், கொல்லும், அடக்கும,; பிடுங்கும,; கழற்றும், சுழற்றும், குமிழ்விடும், ஒளியைத் தெறிக்க வைக்கும், மினுங்கும், வீழும், வீழ்த்தும், ஆறாகும், கிணறாகும், குளமாகும், கடலாகும், சமுத்திரமாகும். கட்டிலில் மெத்தையுமாகும். பாட்டிலில் மதுவுமாகும்.
- நிஹா -
25.02.2009
Saturday, August 10, 2013
Great Pass for Terrorize the Grandpass Masjid
Great Pass for Terrorize the
Grandpass Masjid
Grandpass Masjid
நம்பகத் தன்மைகள் அனைத்தும்
சம்பவங்களாகிப் போனதனால்
தம்ம பதம் பேசும் சிலர்
வம்பர்களாகி எம்பள்ளிகளை
தம்பட்டம் அடிதது தகர்க்கின்றனர்!
அம்பட்ட கத்தி முகச்சவரம்செய்துவிடும்
தம்பட்டம் பேசுவோர் கத்தி
நம்தலையை அறுத்திடவா?
மிருக வதை கூடாதாம்
மிருகங்களாகி மனிதவதை செய்யலாமா!
தம்மபதம் போதிப்போர்
தம்மிஷ்டம் போல் நாடழித்தால்
உம்மிஷ்டம் எனவிடுத்து
நம்மை அழிக்க உதவலாமா?
சாமிகளும் ஆமிகளும் சண்டாளராகிவிட
ஊமையாகிப் பார்த்திருக்கவா அரசு!
முஸ்லிம் பள்ளிகளைச் சுற்றி
முஸ்தீபுச் செய்யும் மஞ்சலுடை நஞ்சினரை
பஞ்சசீலம்பேசி பாதகம் செய்து
மிஞ்சவிட்டுப் பார்த்திருந்து
அஞ்சேல் எனும் அரசு
வஞ்சனையாய் முஸ்லிம்களை
கொஞ்சமும் மனிதாபமின்றி
நஞ்சராகமாறி வெஞ்சினத்தைக் காட்டி
வஞ்சிக்கும் நிலை ஏனோ
நெஞ்சத்தை இழந்தோரே!
காலிகளுடன் கைகோர்த்து
போலிகளும் நாசஞ் செய்தால்
வேலிகளாய் போலீஸிருந்து
காலிகளைக் காப்பதேனோ!
காலக்கெடு கொடுதது தண்ணீரைக் கேட்டோரை
காலாட்படை கொண்டு செந்நீரைச் சிந்தவைத்து
கோலோச்சி கொடுமையாய் கொன்று குவிப்போரை
தாலாட்டுப் பாடி தடவிக் கொடுப்பதேனோ!
காலக்கெடு வைத்து கோலெடுத்து வாளெடுத்து
காவாலிகள் சகிதம் காவியுடைக் காடையர்கள்
பள்ளியை உடைத்து பாதகங்கள் பல செய்து
கொல்லவும் முற்படடு கள்ளமிலா முஸ்லிம்கள்மேல்
எல்லையில்லா துயர் விளைக்க
கோலோச்சும் காதகரைவிட்டுக் காவுகொள்வதேனோ!
காலர்களே காவலர்களே கூறுங்கள்.
கலாசார அமைச்சின் கட்டளையைமதியாது
காலால் மிதித்து மஸ்ஜிதை உடைக்கும்வரை
காவலும் காத்து காடைத்தனம் செய்யவிடும்
கலாசாரம் காக்கும் போலிப்படை எதற்கு!
உடைக்கும் வரை ஒத்தாசையா
படைக்குக் கிடைத்த பரிபாஷை
நடக்கும்வரை மடக்கி ஊரவரை
கிடக்கும்படி செய்ய கூறியவர் யாரோ?
சம்பவங்களாகிப் போனதனால்
தம்ம பதம் பேசும் சிலர்
வம்பர்களாகி எம்பள்ளிகளை
தம்பட்டம் அடிதது தகர்க்கின்றனர்!
அம்பட்ட கத்தி முகச்சவரம்செய்துவிடும்
தம்பட்டம் பேசுவோர் கத்தி
நம்தலையை அறுத்திடவா?
மிருக வதை கூடாதாம்
மிருகங்களாகி மனிதவதை செய்யலாமா!
தம்மபதம் போதிப்போர்
தம்மிஷ்டம் போல் நாடழித்தால்
உம்மிஷ்டம் எனவிடுத்து
நம்மை அழிக்க உதவலாமா?
சாமிகளும் ஆமிகளும் சண்டாளராகிவிட
ஊமையாகிப் பார்த்திருக்கவா அரசு!
முஸ்லிம் பள்ளிகளைச் சுற்றி
முஸ்தீபுச் செய்யும் மஞ்சலுடை நஞ்சினரை
பஞ்சசீலம்பேசி பாதகம் செய்து
மிஞ்சவிட்டுப் பார்த்திருந்து
அஞ்சேல் எனும் அரசு
வஞ்சனையாய் முஸ்லிம்களை
கொஞ்சமும் மனிதாபமின்றி
நஞ்சராகமாறி வெஞ்சினத்தைக் காட்டி
வஞ்சிக்கும் நிலை ஏனோ
நெஞ்சத்தை இழந்தோரே!
காலிகளுடன் கைகோர்த்து
போலிகளும் நாசஞ் செய்தால்
வேலிகளாய் போலீஸிருந்து
காலிகளைக் காப்பதேனோ!
காலக்கெடு கொடுதது தண்ணீரைக் கேட்டோரை
காலாட்படை கொண்டு செந்நீரைச் சிந்தவைத்து
கோலோச்சி கொடுமையாய் கொன்று குவிப்போரை
தாலாட்டுப் பாடி தடவிக் கொடுப்பதேனோ!
காலக்கெடு வைத்து கோலெடுத்து வாளெடுத்து
காவாலிகள் சகிதம் காவியுடைக் காடையர்கள்
பள்ளியை உடைத்து பாதகங்கள் பல செய்து
கொல்லவும் முற்படடு கள்ளமிலா முஸ்லிம்கள்மேல்
எல்லையில்லா துயர் விளைக்க
கோலோச்சும் காதகரைவிட்டுக் காவுகொள்வதேனோ!
காலர்களே காவலர்களே கூறுங்கள்.
கலாசார அமைச்சின் கட்டளையைமதியாது
காலால் மிதித்து மஸ்ஜிதை உடைக்கும்வரை
காவலும் காத்து காடைத்தனம் செய்யவிடும்
கலாசாரம் காக்கும் போலிப்படை எதற்கு!
உடைக்கும் வரை ஒத்தாசையா
படைக்குக் கிடைத்த பரிபாஷை
நடக்கும்வரை மடக்கி ஊரவரை
கிடக்கும்படி செய்ய கூறியவர் யாரோ?
நாட்டின் சில பகுதிகளில் பெருநாள் தொழுகை: ACJU மறுப்பு
Comented by nizamhm1944 on: http://tinyurl.com/kh3ue4g
Lankamuslim.org
One World One Ummah
Lankamuslim.org
One World One Ummah
நாட்டின் சில பகுதிகளில் பெருநாள் தொழுகை: ACJU மறுப்பு
6:153 - அன்றியும், நிச்சயமாக இது என்னுடைய நேரான வழியாகும். இதனை நீங்கள் பின்பற்றுங்கள். வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனது வழியைவிட்டும் உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சம் உடையோர் ஆவதற்காக இவற்றை அவன் உங்களுக்கு வஸியத்துச் செய்கிறான்.
2:189 - பிறை பற்றி மிகத் தெளிவான கருத்தைத் தருகின்றது. ”உம்மிடம் பிறைகளைப் பற்றிக் கேட்கிறார்கள். அவை மனிதருக்கும், ஹஜ்ஜுக்கும் நேரங்களைக் குறிப்பிடுபவை என்று நீர் கூறும். ... ”
They ask thee concerning the New Moon. Say, They are but signs to mark fixed periods of time...
2:185 - ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், இன்னும் நேர்வழியில் இருந்தும், பிரித்தறிவிக்கக் கூடியதிலிருந்தும், தெளிவாக்கக்கூடிய சான்றுகளைக் கொண்டதுமான குர்ஆன் இறக்கி அருளப்பட்டது.
குறிப்பிடப்பட்ட விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் விடப்பட்ட நோன்பைப் பிறை பார்த்தா கழாச் செய்வதற்குக் கூறப்பட்டுள்ளது. ”ஆகவே, எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால், பிறகு எண்ணி வேறு நாட்களில் நோற்றிட வேண்டும்.” என்றுதானே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
இவை, மாதத்தைத் தீர்மானிக்கப் பயன்படுவது பிறை என்ற கருத்தை வெளிப்படுத்துவனவே, தவிர பிறை பார்த்து நோன்பு பிடிக்க வேண்டு மென்பதை வலியுறுத்துவன வல்ல என்ற உண்மையை வெளிப்படுத்து கின்றன. ஒரு தடவை முஹர்றம் தீர்மானிக்கப்பட்ட பின்பு மாற்றம் சாத்திய மில்லை. அப்படியே விதிவிலக்குகள் ஏற்படுமாயின் அது நமது குற்றமாகிட முடியாது.
இதிலிருந்து, பிறை என்பது மாதத் தொடக்கத்தை தலைப் பிறையின் மூலமும், அதன் வளர்ச்சியை, முழுமையை அதாவது நோன்மதியை, தேய்வுகளை, மறைவை அதாவது அமாவாசையை காட்டுவன. அவை ஒரு முறை காணப்பட்டால், அந்த சந்திரனின் நகர்வில் மாற்றங்கள் ஏற்படாது என்பது இறைவாக்கும், விஞ்ஞான உண்மையும் ஆகும். காலநிலைக்கு ஏற்ப அவை பார்வைக்குத் தென்படுவதில் பிரச்சினைகள் எழலாமே தவிர, அவை அவற்றின் தங்குமிடங்களை மாற்றிக் கொள்வதில்லை. அந்த அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசை தப்பாமல் கணிக்கப்பட்டுள்ள குறிப்பிடப்பட்ட நாட்களில் அனுசரிக்கப்படுகின்றமை நமக்குப் படிப்பினையாக அமையலாம்.
”எண்ணப்பட்ட நாட்களே” - "for a fixed number of days" எனவே, நோன்பு பற்றி குர்ஆன் குறிப்பிடு கிறதே தவிர அல்ல. ரமழான் மாதம் வந்துவிட்டால் நோன்பை எண்ணிப் பிடியுங்கள் என்ற கருத்தும், பிறை பார்த்துப் பிடிக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துவனவல்ல.
பிறை மாதத்தை தீர்மானித்து விடுகிறது என்ற அடிப்படையில், அமாவாசை முடிந்ததும், அடுத்த நாள் தலைப்பிறை தோன்றும் நாளே என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆகையினால் ஷஃபான் மாதம் முடிந்து விட்டது என்பதை அமாவாசை என்ற இருட்டு மூலம் நமக்கு சந்தேகமின்றி நாளை தலைப் பிறை தோன்றப் போகின்றது என்ற உண்மைச் செய்தியைத் தரும் வாய்ப்பை, மனிதருக்கு சிரமத்தைத்தர விரும்பாத வல்ல நாயன் அல்லாஹ் அளித்துள்ளான். அது போன்றே ஷவ்வால் மாத தலைப் பிறையும், றமழானின் அமாவாசைக்கு அடுத்த நாள் வருவதே! இதைவிட வழிகாட்டல் தேவையா?
பிறை பார்த்தல் என்ற நாயக வாக்கு அன்றைய நிலையில் அத்தியாவசிய மானதே. அது அக்கால மக்களுக்கு இலகு வழியாகக் கூறப்பட்டிருக்கலாம். பிறை பார்த்துப் பிடியுங்கள், பிறை பார்த்து விடுங்கள் என்ற ஹதீஸ், சில சந்தர்ப்பங்களில், எண்ணிப் பிடியுங்கள் என்ற இறைவாக்கை மீறும் சந்தர்ப்பத்தையும், அதனால் எண்ணப்பட்ட நாட்கள் "for a fixed number of days" என்ற கருத்துக்கு முரணாகின்றது. அத்தோடு, சில வேளைகளில் தவிர்க்கப்பட்ட பெருநாள் தினத்தன்று நோன்பு வைக்கும் குற்றத்துக்குள்ளும் புகுத்திவிடுகிறது.
கடமையான நோன்பு, றமழான் மாதத்தில் அனுஷ்டிக்கப்படல் வேண்டும் என்பதே இறை கட்டளை. தவிர பிறை பார்ப்பது என்பதல்ல. இந்த சிக்கலை விடுவித்தால், நோன்பு தீர்மானிப்பது என்ற பிரச்சினையே எழ வாய்ப்பில்லை.
இரவையும் பகலையும் மனிதரால் அச்சொட்டாகத் தீர்மானிக்க முடியாது என்பது இறைவாக்கு. அந்த நிலையில் கூட தொழுகை நேரங்களை கணிப்பீட்டின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும் என்றால், எண்ணிப் பிடிக்கும்படி கூறப்பட்ட நோன்பை ஏன் கணிப்பீட்டின் அடிப்டையில் தீர்மானிக்கக் கூடாது.
Tuesday, August 6, 2013
Monday, August 5, 2013
குர்ஆன் வழியில் ...
குர்ஆன் வழியில் ...
- நிஹா -
2011 ஜூலை, 14
அல்லாஹ்வால் கேடு என எச்சரிக்கப்பட்டோர்...
குர் ஆனில் சில இடங்களில் சில தடுக்கப்பட்ட விடயங்களைச் செய்வதனாலோ, அன்றி ஏவப்பட்டவற்றை செய்யாமல் விடுவதனாலோ நம்மில் கேடடைவோர் பற்றி வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவ தஆலா கூறியுள்ளான்.அவ்வாறு எச்சரிக்கப்பட்டு,சாபத்துக்கு உள்ளான வர்களாகக் கூறப்பட்டவர்களில் அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டும் இறுக்கம் அடைந்தவர்கள் பற்றி ஆய்வதே இப்பக்கத்தின் நோக்கம். அல் குர்ஆன் 39:22 'அல்லாஹ்வை நினைவுகூர்வதை விட்டும் அவர்களுடைய இதயம் இறுக்கமானவர்கக்குக் கேடுதான். அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர்'. சில விஷமிகள் தங்களுக்கு விளங்காத நிலையில் அறிவதற்கும் மனமின்றி தமது மனோஇச்சைப்படி குர்ஆன் வசனத்துக்கு விளக்கம் கொடுத்துத் தம்மையே ஏமாற்றிக் கொள்கி;றார்கள். குர்ஆனிய வசனங்களின் உண்மைகளை, நன்மைகளை அறிவதற்கு எள்ளளவும் எத்தனங்களை மேற்கொள்வதில்லை. மனோ இச்சை வணங்கப்படும் தெய்வங்களில் மிக மோசமானது என்பது இறைகூற்று. மனோஇச்சை ஷிர்க்கை வருவிப்பது.
இந்தளவுக்கு இறைவனின் சாபத்துக்கு உள்ளாவதற்கு காரணம் என்ன வென்று காண்போமாயின் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும். இவ்வுலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும், இறக்கப்பட்ட வேதங்களும், கட்டளைகளும் அல்லாஹ்வை நினைவு கூரும்படியே கூறிக் கொண்டிருக்கின்றன. அப்படி இருந்தும் அதனைச் செய்யாமல் இருப்பது இறைநிராகரிப்பு என்பதும், அவனது கட்டளைகளை சட்டை செய்யாது விடுவதும், மறுமையில் அவனது விசாரனைக்கும், அவனது தண்டனைக்கும் பயப்படாத தன்மையைக் கொண்டனவாகவும் உள்ளதே. அந்த வகையில் அல்லாஹ் கூறியமைக்கொப்ப அவனை நினைவுகூராதோர் மறுமையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு, நரக நெருப்புக்கு இரையாவதைக் கேடு என வலியுறுத்தவே, அவன் எதிர்வுகூறலாகவும், ஞாபகமூட்டலாகவும் எச்சரிக்கையாகவும், கூறியுள்ளான் என்பது இங்கு தெளிவாகிறது.
அல்லாஹ்வை நினைவுகூருங்கள் எனக் கூறிவிட்டு அவன் வாளாவிராது பல் வேறு உத்திகளையும், நினைவூட்டல் களையும் குர்ஆனில் ஆங்காங்கே பதிவாக்கி உள்ளான். அவைகள் நமது கண்ணில் படாததும், கருத்தைக் கவராததும் துர்அதிர்ஸ்டமே. மேலும், அவனை நினைவு கூர்வதற்கு வழிசமைக்கும் வண்ணம் ஐவேளைத் தொழுகையைக் கடமையாக்கி அதில் அவனை நினைவுகூர்வதன் மூலம் தொழுகையை நிலைநிறுத்தும்படி நமக்கு அறிவூட்டுகின்றான். தனது குர்ஆன் 20:14 ஆம் வசனத்தில், மேலும், என்னை நினைவு கூர்ந்திட தொழுகையை நிலைநிறுத்துவீராக' எனக் கூறி யிருப்பதில் தொழுகையின் நோக்கம் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இன்னும் தொழுகையின் நன்மை பற்றிக் கூறிய 29:45 வசனத்தில், ' ... இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நிச்சயமாகத் தொழுகையானது மானக்கேடானவைகளை விட்டும், வெறுக்கப்பட்டதை விட்டும் தடுக்கும். மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது மிகப் பெரியதாகும்' என அவனை நினைவு கூர்வதே மிகப் பெரியது எனவும் கூறியிருப்பது நாம் கவனத்தில் இருத்த வேண்டியது. அவனைத் தொழுகையில் நினைவுகூரவில்லை என்றால், முக்கிய கடமையாக்கப்பட்ட தொழுகைகூட பயனற்றதாகி விடுவதோடு நஷ்டத்தையும் ஏற்படுத்திவிடும். இதனை அல்லாஹ் குர்ஆனில் 'வேறோரிடத்தில் தொழுகையாளிகளுக்குக் கேடுதான்' எனக் கூறியே உள்ளான். இவ்வசனம் தொழுவதில் உரிய பயன்பாடான அல்லாஹ்வை நினைவுகூரல் இடம்பெறாத விடத்து ஏற்படும் தீமையைச் சுட்டிக் காட்டவே அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான்.
இன்னும், நாம் அவனை நினைவுகூர்வதை இலகுபடுத்தும் பொருட்டு, குர்ஆனில் பல இடங்களில் நமக்கும் அவனுக்குமிடையில் நடந்தவைகளை ஞாபகத்துக்குக் கொண்டு வந்துள்ளான். அப்படியான வசனங்களில் 7:172 மிகவும் உன்னிப்பாக அறியப்பட வேண்டியது. 'இன்னும் உம்முடைய ரப்பு, ஆதமின் மக்களாகிய அவர்களது முதுகுகளில் இருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்த போது, 'நான் உங்கள் ரப்பு அல்லவா?' . 'ஆம், நாங்கள் சாட்சி கூறுகிறோம்' என்று அவர்கள் கூறியதை நினைவுகூரட்டும். ஏனென்றால், 'நிச்சயமாக, தாங்கள் இதனைவிட்டும் மறதியாளர்களாக இருந்துவிட்டோம்' என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக'. இந்த வசனம் மறுமையில் அவனை நினைவு கூராததற்கான தண்டனையில் இருந்து மன்னிப்புக் கிடைக்காத சந்தர்ப்பத்தை நன்கு விளக்குகின்றது. அச்சமயத்தில் எந்தச் சாக்குப் போக்குகளுக்கும், சாட்டுகளுக்கும் இடம் தராதவாறு அல்லாஹ் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டுள்ளமை நம் கையறு நிலையைத் தெட்டத் தெளிவாகத் தெரிவிக்கின்றது. அதனாலேயே அவன், தன்னை நினைவு கூராதவர்களை இதயம் இறுக்கமடைந்தவர்களாக விமர்சிப்பதோடு அவர்களுக்குக் கேடுதான் எனவும் சபித்துள்ளான். ஆதலின் நாம் அவைகளை உணர்ந்து மறுமைக்கு ஆயத்தமாவோமா?
- நிஹா -
2011 ஜூலை, 14
குர்ஆன் வழியில் ...
குர்ஆன் வழியில் ...
அல்லாஹ் அனுமதியாததை எவரும் அனுமதிக்கலாமா?
அல்லாஹ் அனுமதியாதது அது நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்க லாம். நமக்கு நன்மை போல் தெரிவதில் தீமைகள் காணப்படுவதும், தீமை போல் தெரிவதில் நன்மைகள் காணப்படுவதும் நமக்குப் புலப்படுவதில்லை. தெரிய வரும் காலங்களில் விடயங்கள் நடந்தேறி விடுகின்றன. இங்கு நாம் ஆராயவிருப்பது நாம் அறியாமற் செய்பவை அல்ல. அறிந்து கொண்டே, அதாவது அல்லாஹ் கூறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டே ஒன்றைப் பின்பற்றுவது. இச்செய்கை மிகப் பாரதூரமானதும், அச்செயலைத் தானாகச் செய்பவர் அல்லாஹ்வைப் போன்று காரியமாற்றுவதாக இருப்பின், அல்லது தனது மனோ இச்சைப்படி நடப்பவராக இருந்தால் அது ஷிர்க்கை வருவிக்கும் பயங்கரத்தை உண்டாக்கி விடும். இதனை அல்லாஹ் கண்டித்துள்ளான். திரு மறை 42:21 கூறுவதைப் பாருங்கள். 'மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதி அளிக்கவில்லையோ, அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கும் இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கிறார்களா?...' இவ்வசனத்தின்படி அல்லாஹ் அனுமதி தராத விடயங்களைச் செயற் படுத்துவதற்கோ, அல்லது அது பற்றிச் சாதகமான கருத்துத் தெரிவிக்கவோ கூட யாருக்கும் அதிகாரம் அளிக்கப்படவில்லை என்பதை நன்கு விளங்கிக் கொள்ளுதல் நம்மை ஷிர்க்கில் அதாவது இணை வைத்தலில் இருந்து காப்பாற்றும். அதை மார்க்கமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் இணையாளர்கள் எனக் குறிப்பிடுகிறான்.
இன்றைய நிலையில் அதிகமான முஸ்லிம்கள் தம் விருப்பத்துக்கு ஏற்ப எதனை எல்லாமோ செய்து கொண்டு அவற்றை இஸ்லாம் எனவும், அல்லாஹ் கூறியிருக்கிறான் எனவும் அல்லது அவற்றுக்கு ஆதாரமான ஹதீஸ்கள் உண்டு எனவும் கூறிச் சப்பை கொட்டிக் கொள்கின்றார்கள். இப்படியானோர் தாமறியாமலேயே இறைவனுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவோரோகவே உள்ளனர். அல்லாஹ் அனுமதியாததை அவன் கூறியிருப்பதாகக் கூறுவது குற்றம். அடுத்து, ஆதாரமான ஹதீஸ்கள் உண்டு என அல்லாஹ் கூறாதவற்றுக்கு சாட்சியங்கள் தேடுவதோ, நிரூபிக்க முயல்வதோ பாரிய குற்றமான ஷிர்க் ஆகிவிடுகிறது. நிச்சயமாக நாயகத் திருமேனி அல்லாஹ் கூறியவற்றுக்கு மேல் அணுவளவு கூட மாற்றமாகச் செய்திருக்க மாட்டார்கள். அப்படிச் செய்ய முற்பட்டால், அச்சந்தர்ப்பத் திலேயே அவர்களின் வலது கரத்தைப் பிடித்து நிறுத்துவதோடு, அவர்களின் உயிர் நரம்பையும் அறுத்து விடுவதாக அல்லாஹ் தன் அருள்மறையில் பகன்றுள்ளான். ஆகவே, அப்படியான சிந்தனையில் இருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக. அல்லாஹ் அனுமதி அளிக்காதவற்றை அனுமதிக்குமாறு கூறும் ஹதீஸ்கள் எங்காவது காணப்பட்டால் அது நிச்சயமாக நபியவர்களால் கூறப்பட்டதாக இருக்க முடியாது. காரணம், அதற்கு அல்லாஹ்வே தனது திருமறையில், அவர் தானாகப் பேசுவதில்லை எனவும், வஹீ மூலமாக அவருக்கு அறிவிக்கப்படுபவற்றையே பேசுகிறார், பின்பற்றுகிறார் எனவும் கூறியிருப்பதே. அல் குர்ஆன் 53:2,3,4-உங்களின் தோழர் தவறி விடவுமில்லை. தவறான கொள்கையில் சென்று விடவுமில்லை.அவர் மனோஇச்சையின்படி பேசுவதுமில்லை. அது அறிவிக்கப்படும் அறிவிப்பே தவிர இல்லை.
நமது மத்தியில் ஆடைகளில், உணவுகளில், திருமண பந்தங்களில், உறவு முறைகளில், தத்து எடுத்தலில், தர்மம் செய்வதில், ஸக்காத் கொடுப்பதில், கடன் கொடுப்பதில்-எடுப்பதில், றிபா வைப் பேணுதலில், ஏன் தொழுகையில் கூட அல்லாஹ் கூறியிராத, அல்லது அனுமதியாத எவ்வளவோ நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது வருத்தத்தோடு பதிவிடப்பட வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு, தற்போது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள, முஸ்லிம் மாதரின் முகத்திரை இவ்வாறான அல்லாஹ் வின் அனுமதிக்கு உட்பட்ட தல்ல என்பதைக் கூறலாம். அதற்கு ஆதாரமான ஒரு சமிக்ஞை கூட குர்ஆனில் அல்லாஹ்வால் கூறப்பட வில்லை. அப்படி இருக்க முஸ்லிம் இயக்கங்களிற் சிலவும், மாதரும், முகத்திரை குர்ஆனில் கூறப்பட்ட ஒன்று போல நினைந்து அதற்கு முன்னுரிமை கொடுப்பதோடு, அதனை அணிவதற்கு ஏற்படும் இடைஞ்சல்களை, தடைகளை இஸ்லாத்துக்கு எதிராகச் செய்யப்படும் அநீதிகளாகச் சித்தரிக்க முற்படுகின்றனர். எல்லா விடயங்களிலும் தமது மனோ இச்சையே பின்பற்றப்படுகின்றது. மனோ இச்சையே வணங்கப்படும் தெய்வங்களில் எல்லாம் மிக மோசமானதாக அல்லாஹ் வர்ணித்துள்ளான்.
குர்ஆனுக்கு மொழி பெயர்ப்புத் தருவோர் கூடத் தமது மன இச்சைக்குத் தகுந்தவாறு, அல்லது தமது அறிவுக்கு எட்டியவாறு, அல்லது நடை முறையில் உள்ளவற்றில் மாற்றமோ முரணோ ஏற்பட்டு விடாதவாறு மொழி பெயர்ப்புச் செய்வதில் அக்கறை கொண்டு, அதற்காக அடைப்புக் குறிகளைப் புகுத்தி, அல்லாஹ் கூற முற்பட்டதையே திசைதிருப்பி விடுகின்ற மோசமான நிலையைக் காணக்கூடியதாக உள்ளது. குர்ஆனை அல்லாஹ் தான் மிகத் தெளிவாக விளக்கியுள்ளதாகப் பல்வேறு வசனங்களில் கூறியிருந்தும், மேலும், குர்ஆனைப் பூரணப்படுத்தி உள்ளதாக அறிவித்திருந்தும், அல்லாஹ் ஏதோ கூறுவதற்கு தவறிவிட்டது போலவும், அல்லது விளக்கியது போதாது என்பது போலவும் கருதி இடைச் செருகல்களை அடைப்புக் குறிகள் மூலம் செய்துள்ளமை கூட ஓர் வகையில் அல்லாஹ் அனுமதியாததை அனுமதிக்கும் குற்றத்துள் புகுத்தி ஷிர்க்கிற்கு தள்ளிவிடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. மன்னிப்பு ஹறாமாக்கப்பட்ட அத்தகு ஷிர்க் என்ற பயங்கரத்தில் இருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக. அல்ஹம்துலில்லாஹ்.
- நிஹா –
Sunday, August 4, 2013
'வடக்கு முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொண்டே கூட்டமைப்பில் போட்டியிடுகின்றோம்'
Commented by nizamhm1944 on: http://tinyurl.com/omtbya7
Lankamuslim.org
Lankamuslim.org
'வடக்கு முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொண்டே கூட்டமைப்பில் போட்டியிடுகின்றோம்'
வடக்கில் அபிவிருத்தி நடந்து கொண்டிருக்கினறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அது நடக்க வேண்டியதே! 30 வருட அழிவுக்கு முகம் கொடுத்த ஒரு மாகாணத்தில் நடப்பதை அபிவிருத்தி என்ற கருதுகோளுக்குள் அடக்கிவிட முடியாது. மீள்கட்டமைப்பு என வேண்டுமானால் கூறலாம். அபிவிருத்தி எனக் கூறுவது வெறும் ஏமாற்றே!
இந்நாட்டில் நடந்த போர், அபிவிருத்தி வேண்டி தொடுக்கப்பட்டதல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்காக நடத்தப்பட்ட உரிமைப் போராட்டம். அப்போராட்டம் வேண்டு மானால் தடம் மாறி தன்னழிவுக்குக் காரணமாகி இருக்கலாம்.
ஆனால், அம்மக்களின் உரிமையை தக்கவைப்பதற்கான அதிகாரப் பரவலாக்கல் என்ற தேவை நீர்த்துப் போகவில்லை என்பதை உணரவேண்டும். அது நீறுபூத்த நெருப்பே! அதனை அணைப்பதற்கு அபிவிருத்தி என்ற மந்திர நீரை வேண்டுமானால் சில காலத்துக்குத் தெளித்து ம்க்களை மயக்கி வைத்துக் கொள்ளப் பயன்படுத்தலாம். அதனால், அந்த வேட்கையை அழித்து விடலாம், அது மீண்டும் புகைந்து பெருநெருப்பாக மாறாது என நினைப்பதுதான் மடமை! தெரிந்தே செய்தால் அது இந்நாட்டுக்குச் செய்யும் துரோகம்!
முஸ்லிம்களைப் பொறுத்து அம்மாகாணத்தின் மீள்கட்டமைப்பு ஒன்றும் அவர்களது புரையோடிப்போன புண்ணுக்கு மருந்தாகிவிட முடியாது. அப்புண்ணுக்கு மருந்து உரிய முறையில் போடப்படாத வரை, அம்மக்களின் வாழ்வு அழிவின் விளிம்பில்தான் இருந்து கொண்டு இருக்கும். அழிவே அவர்களின் முடிவு ஆகிவிடுவதை தடுக்க முடியாது.
தேர்தலில் பெற்றுவிடும் வெற்றியை வைத்து யாரும், நாட்டில் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டி விடலாம் என நினைக்கக் கூடாது, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினையின் தீர்வே நாட்டின் நிரந்தர முன்னேற்றமும், நீடித்த அமைதியுமாகும். அத்தோடு முஸ்லிம்களுக்கு ஆகாயத்தில் இருக்கும் நிலவைக்காட்டி வெளிச்சம் வந்துவிட்டது எனக் கூற நினைப்பதும் துரோகமே ! அவர்களின் ஈடு செய்து கொள்ள முடியா இழப்புக்களை முழுமையாகக் கொடுத்து விட முடியா விடினும், நியாயமான முறையிலான பொறிமுறையினை உருவாக்கி அவர்களுக்கு இழப்பீடுகள் அளிக்கப்படுவதற்கான உறுதி மொழிகள் கொடுக்கப்படல் வேண்டும்.
மேற்கண்ட சிறுபான்மையினர் (தமிழ்-முஸ்லிம்) உரிமைகளை பாதுகாக்கும் அதிகாரப் பரவலாக்கமும், முஸ்லிம்களின் வாழ்வாதாரப் பிரச்சினையும் மனிதாபிமானமான முறையில் அணுகப்பட வேண்டும் என்ற ரீதியிலேயே இந்த தேர்தலை அனைத்துக் கடசிகளும் அணுக வேண்டும. அதனை விடுத்து தமக்கு பதவிகளை எடுப்பதற்காகவும், அதன் சலுகைகளையும், வரப்பிரசாதங்களையும் அனுபவிப்பதற்குமான தேர்தலாக நினைத்து விடுவதும், தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்ந்து விட்டதாக உலகுக்குக் காட்ட முனைவது மக்களுக்கும், இந்நாட்டின் நிரந்தர அமைதிக்கும் செய்யும் துரோமாகவே வரலாற்றில் பதிவாகும்
Koppiyam - Sona's Controversy Complaint
Very pathetic! Feel very sorry for the state of affairs !! If anyone denies the allegation, we have to accept that !!! It is the etiquette of a modest society.
ரம்ஜான் திருநாள்: போப்பாண்டவர் வாழ்த்து செய்தி!
Commented by nizamhm1944 on: http://tinyurl.com/qc9v3vo
http://berunews.wordpress.com/
The Greeting Message of the Highly Respected Pope is exposes the reality and requests those concerned to avoid such inferior activities, which has to be followed by all to have a peaceful world. Congratulations !
http://berunews.wordpress.com/
ரம்ஜான் திருநாள்: போப்பாண்டவர் வாழ்த்து செய்தி!
The Greeting Message of the Highly Respected Pope is exposes the reality and requests those concerned to avoid such inferior activities, which has to be followed by all to have a peaceful world. Congratulations !
கண்டி: பிரிட்டிஷ் இராணுவ சிப்பாய்களின் கல்லறையை அகற்றுவது தொடர்பில் விவாதம் ?
Commented by nizamhm1944 on: http://tinyurl.com/o7f5xrq
Lankamuslim.org
One World One Ummah
Lankamuslim.org
One World One Ummah
கண்டி: பிரிட்டிஷ் இராணுவ சிப்பாய்களின் கல்லறையை அகற்றுவது தொடர்பில் விவாதம் ?
ஒரு நாடு பற்றிய நல்லெண்ணத்தை அந்நியர் மத்தியில் உருவாக்குவதற்கு அங்கு அமைந்துள்ள நினைவுச் சின்னங்கள், அந்நாடு பிறரையும், வரலாறையும், மதித்துப் பாதுகாத்துவரும் பண்பாடும் தாராளத் தன்மையும் போன்றவை பெரும் பங்கை ஆற்றவல்லன.
அவைகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கை எடுப்பது நாட்டிற்கு அபகீர்த்தியையும், இந்நாட்டில் அமைந்துள்ள தங்கள் நாட்டைப் பிரதிபலி்க்கும் சின்னங்களைப் பார்வையிடுவதற்காகவே இந்நாட்டைத் தரிசிப்போரின் வரவையும் இல்லாதொழித்துவிடும். அதன் மூலம் பெறப்படும் வருவாய் இழக்கும். உல்லாசப் பயணத்துறை வீழ்ச்சியடையும்! என்பதை எல்லாம் அறியாமல் நடவடிக்கைகளை எடுப்பது அவ்வளவு நல்ல போக்கல்ல.
பிக்குகளின் காவியுடையை கழற்ற மாநாயக்க தேரர்களுக்கு அதிகாரம் – பிரதமர்!
Commented by nizamhm1944 on: http://tinyurl.com/lejt4a7
http://berunews.wordpress.com/
A timely action and very good move from the veteran politician, Prime Minister of this country to avoid calamities created in this Island and disrepute to the 2500 old Buddha Dharma and its holy yellow robe by few disgraceful Theros. Congratulations!
http://berunews.wordpress.com/
பிக்குகளின் காவியுடையை கழற்ற மாநாயக்க தேரர்களுக்கு அதிகாரம் – பிரதமர்!
A timely action and very good move from the veteran politician, Prime Minister of this country to avoid calamities created in this Island and disrepute to the 2500 old Buddha Dharma and its holy yellow robe by few disgraceful Theros. Congratulations!
Saturday, August 3, 2013
அனுமதி பெறப்படாத பள்ளிவாசல்கள் தொடர்பிலேயே பிரச்சினைகள் உருவாகின்றன – மஹிந்த!
Commented by nizamhm1944 on:..http://tinyurl.com/lzwqka9
http://berunews.wordpress.com/
http://berunews.wordpress.com/
அனுமதி பெறப்படாத பள்ளிவாசல்கள் தொடர்பிலேயே பிரச்சினைகள் உருவாகின்றன – மஹிந்த!
நல்ல ஆலோசனையை கூறியுள்ளார் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள். அதன் மூலம் மஹிய்ஙகனையிலும் பள்ளிவாசல் ஒன்று இருக்கின்றது. ஆனால் அது உரிய அனுமதியைப் பெற்றிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி யுள்ளார். அந்த வகையில் ஜனாபதிபதி பாராடடுக்கு உரியவர். காரணம் அங்கு பள்ளிவாசலே இருக்கவில்லை என்றல்லவா ஊடகஙக்ள் மூலம் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர்!
ஆனாலும், பள்ளிவாசல் ஒன்று மெத்தனத்ததால், அல்லது நயவஞ்சகத் தனத்தால் பதிவு செய்யப்டவில்லை என்ற காரணத்தைக் கொண்டு மாகாண அமைச்சர் ஒருவர் அதனை மூடுமாறு பணித்துள்ளமைதான் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இக்கோட்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முயன்றால் நாட்டில் பல மதத் தாபனங்கள் மூடுவிழா வைச் சந்திக்கும்.
பதிவுகள் பெற்றிராத அனைத்து வணக்க ஸ்தலங்களுக்கும் ஒரு காலக்கெடு வைக் கொடுத்து, அவற்றைப் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தலாம். அத்தோடு தற்போது வணக்கஸ்தலங்களாக இருப்பவற்றை, பதிவு செய்வ தில் இழுத்தடிப்புச் செய்ய வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக் குக் கட்டளை பிறப்பிக்கலாம். அல்லது ஒரு கமிட்டியை நியமித்து எங்கெல் லாம் பதிவ செய்யப்படாத வணக்கத் தலங்கள் உள்ளன எனக் கண்டுபிடித்து, அவைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் நாட்டில் மதவிரோத சக்திகளால் ஏற்படுத்தப்படும் அநாவசியப் பிரச்சினை களை, அமைதியின்மையை. இனமுரண்பாட்டை இல்லாதொழிக்கலாம்!
மஹிந்தவின் இப்தாரில் சுவாரசிய சம்பவங்கள் – முஸ்லிம் அரசியல்வாதிகள் திரண்டுவந்து பங்கேற்பு!
Commented by nizamhm1944 on:. http://tinyurl.com/m9rkwus
http://berunews.wordpress.com/
மஹிந்தவின் இப்தாரில் சுவாரசிய சம்பவங்கள் – முஸ்லிம் அரசியல்வாதிகள் திரண்டுவந்து பங்கேற்பு!
பூசி மெழுகும் .. சி வேலையைத் தற்போது அரசியல்வாதிகளிடம் இருந்து ஜம்இய்யத்துல் உலமா கடன் வாங்கிக் கொண்டதா? அன்றி குத்தகைக்கு எடுத்துள்ளதா!
மதஸ்தாபனங்களுக்கு ரூபா 25 தள்ளுபடியும், முதலாவது மரணச் செய்தியை அனுப்புவதும்தானா சகல மதங்களையும் சமமாகப் பேணுவது என்ற கோட்பாடு என ஜம்இய்யத்துல் உலமா கருதுகின்றது!
இந்த ஜம்இய்யத்துல் உலமா எந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக் கின்றதோ! நாளுக்குநாள் இந்நாட்டில் அதிகரித்து வரும் இஸ்லாம் மதவிரோதப் போக்கு இந்த உல மா வுக்கு தெரியவில்லையா! கண்களுக்கு திரையிடப்பட்டுள்ளதா? காதுகளுக்கு அடைப்பான் போடப்பட்டுள்ளதா? இதயத்துக்குப் பூட்டுப் போடப்பட்டுள்ளதா?
இஸ்லாத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காடைத்தனங் களை இச்சந்தர்ப்பத்திலாவது எடுத்துக் கூறி தடுக்கும்படி கேட்டிருக்க லாமே! நக்குண்டார் நாவிழந்தார் என்ற நிலையா?
அன்றி, இந்த நாட்டில் முஸ்லிம்கள் பூரண சுதந்திரத்துடன் தமது மத அனுஷ்டானங்களையும், தொழிலையும் செய்து வளமாக, அச்சமின்றி வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்று உலமா கருகிறதா? உலகுக்குக் கூற முனைகிறதா? சுத்த முனாபிக்குத்தனம்.
சிங்களபௌத்த நாடான இலங்கையில் முஸ்லிம்கள் வந்தேறு குடிகளே – ஞானசார தேரர்!
Commented by nizamhm1944 on: http://tinyurl.com/pzku5kz
http://berunews.wordpress.com/
தேரர் தனது குறைபாடுகளை, குற்றங்களை மறைத்துக் கொளவதற்காக அவ்வப்போது ஏதாவது கூப்பாடு போட்டுக கொணடிருக்கின்றார். இது ஓர் வகை மனோவியாதியே தவிர வேறில்லை. ஆங்கிலத்தில் இதனைத் தற்போது ISLAMAPHOBIA என்றழைக்கின்றனர். இது, தனது மதத்தைப் பின்பற்றி ஆன்ம உயர்வைப் பெற்றுக் கொள்ளாத தனால் ஏற்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. அக்குறைபாடு தனது மதம் குறைபாடுகளை உடையது. அதனால் அந்த இடத்தை இன்னொரு மதம் பிடித்துக் கொள்ளப் போகின்றதோ என்ற மனப்பயமே! அதனால்தான் இஸ்லாத்தைக் கண்டதும் சிங்கத்தைக் கண்ட கழுதைகள் வெருண்டோடுவது போன்று குழம்பிப் போய் இல்லாததும் பொல்லாததுமான பொய்களை, அவதூறுகளை, குற்றச்சசாட்டுக்களை இஸ்லாத்தின் மீதும், குர்ஆனின் மீதும் சுமத்திக் கொண்டும், தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணமும் உள்ளார்.
நாட்டுக்கு பௌத்தம் மகிந்த தேரரால் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதை தேரர் அறியாமல் இருந்தால் அதையாவது முதலில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும. மேலும் விஜயனும் அவனது தோழர்களும் அவனது தகப்பனாரால் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டு இந்நாட்டை வந்தடைந்தவர்கள் என்பதும் சரித்திரம். இந்த வரலாறாவது தேரருக்குத் தெரிந்திருக்கிறதோ எனத் தெரியவில்லை.
ஆனால், ஏகதெய்வ வணக்கவாளர்களான இறைநேசர்கள், மனித உருவம் அறுபது அடியாக இருந்த காலமுதல் இந்நாட்டில் வாழ்ந்து மறைந்ததற்கான தடயங்களாக அவர்களின் கல்லறைகள் தற்போதும் காணப்படுகிறது. இஸ்லாம் தளிர்விடும் முன்னரே இங்கு வாழ்நத் இறைநேசர்களின் சந்ததியினரே இங்கு தற்போது முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருப்போர். மேலும், அராபியர் சிலரினதும், தென்னிந்திய முஸ்லிகளின் வழ்சாவழியினரில் சிலரும் கூட வாழ்கின்றனர்.
முஸ்லிம்கள் அவர்களது சட்டத்தைப் பேணுவதைத் தடைசெய்ய வேண்டும் என்று கூறும் தகுதியை இந்த தேரருக் கொடுத்தது யார்? இது இந்நாட்டின் யாப்பின் மூலம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை.
பௌத்தம் அரசியல்வாதிகளால் 1972இல் இந்நாட்டின் பிரதான மதமாகப் பிரகடணப்படுத்தப்பட்டது என்பதிலிருந்து இந்நாடு எப்போதும் பல்லினம் மக்கள் வாழும் ஒரு நாடாகவே இருந்து வந்துள்ளது என்பது தெளிவாகின்றது. பெரும்பான்மை சமுதாயமாக பௌத்தர்கள் வாழ்கின்றனர் என்ற கருதுகோள், இந்நாட்டில் வேற்று மதத்தவர் வாழக்கூடாது எ்னபதற்கோ, அவர்கள் தமது கலை, கலாசாரங்களை, மதச்சட்டங்களைப் பின்பற்றக்கூடாது என்பதற்கோ கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இதுவரை இந்நாட்டில் அமைதிக்குப் பங்கத்தையும், அவப்பெயரையும் ஏற்படுத்தி, சட்டத்தையும் ஒழுங்கையும் மீறும் செயல்களையும் செய்து, இந்நாட்டின் ஜீவநாடியான அரசியல் யாப்பை அவமதித்துக் கருத்துக் கூறிக் கொண்டும், மிதித்துக் கொண்டும, இனங்களுக்கிடையே பமைமை உணர்வை வளர்த்துக் கொண்டுமிருக்கும் இந்த தேரருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காதிருப்பதேன்? இவரால இந்நாட்டில் ஏற்படவுள்ள அனர்த்தங்களுக்கு அரசும் பொறுப்பை ஏற்கவேண்டியே வரும் என்தை அறியாதிருக்கின்றனரா ஆட்சியாளர்! இவ்வாறான விடயங் களைக் கையாள வேண்டிய பொலிஸார் மௌனம் சாதிப்பதேன்? இக்கேள்விகள் அமைதி விரும்பும் பற்றாளர்கள் மததியில் எழுந்த வண்ணமேயுள்ளது.
http://berunews.wordpress.com/
சிங்களபௌத்த நாடான இலங்கையில் முஸ்லிம்கள் வந்தேறு குடிகளே – ஞானசார தேரர்!
நாட்டுக்கு பௌத்தம் மகிந்த தேரரால் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதை தேரர் அறியாமல் இருந்தால் அதையாவது முதலில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும. மேலும் விஜயனும் அவனது தோழர்களும் அவனது தகப்பனாரால் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டு இந்நாட்டை வந்தடைந்தவர்கள் என்பதும் சரித்திரம். இந்த வரலாறாவது தேரருக்குத் தெரிந்திருக்கிறதோ எனத் தெரியவில்லை.
ஆனால், ஏகதெய்வ வணக்கவாளர்களான இறைநேசர்கள், மனித உருவம் அறுபது அடியாக இருந்த காலமுதல் இந்நாட்டில் வாழ்ந்து மறைந்ததற்கான தடயங்களாக அவர்களின் கல்லறைகள் தற்போதும் காணப்படுகிறது. இஸ்லாம் தளிர்விடும் முன்னரே இங்கு வாழ்நத் இறைநேசர்களின் சந்ததியினரே இங்கு தற்போது முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருப்போர். மேலும், அராபியர் சிலரினதும், தென்னிந்திய முஸ்லிகளின் வழ்சாவழியினரில் சிலரும் கூட வாழ்கின்றனர்.
முஸ்லிம்கள் அவர்களது சட்டத்தைப் பேணுவதைத் தடைசெய்ய வேண்டும் என்று கூறும் தகுதியை இந்த தேரருக் கொடுத்தது யார்? இது இந்நாட்டின் யாப்பின் மூலம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை.
பௌத்தம் அரசியல்வாதிகளால் 1972இல் இந்நாட்டின் பிரதான மதமாகப் பிரகடணப்படுத்தப்பட்டது என்பதிலிருந்து இந்நாடு எப்போதும் பல்லினம் மக்கள் வாழும் ஒரு நாடாகவே இருந்து வந்துள்ளது என்பது தெளிவாகின்றது. பெரும்பான்மை சமுதாயமாக பௌத்தர்கள் வாழ்கின்றனர் என்ற கருதுகோள், இந்நாட்டில் வேற்று மதத்தவர் வாழக்கூடாது எ்னபதற்கோ, அவர்கள் தமது கலை, கலாசாரங்களை, மதச்சட்டங்களைப் பின்பற்றக்கூடாது என்பதற்கோ கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இதுவரை இந்நாட்டில் அமைதிக்குப் பங்கத்தையும், அவப்பெயரையும் ஏற்படுத்தி, சட்டத்தையும் ஒழுங்கையும் மீறும் செயல்களையும் செய்து, இந்நாட்டின் ஜீவநாடியான அரசியல் யாப்பை அவமதித்துக் கருத்துக் கூறிக் கொண்டும், மிதித்துக் கொண்டும, இனங்களுக்கிடையே பமைமை உணர்வை வளர்த்துக் கொண்டுமிருக்கும் இந்த தேரருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காதிருப்பதேன்? இவரால இந்நாட்டில் ஏற்படவுள்ள அனர்த்தங்களுக்கு அரசும் பொறுப்பை ஏற்கவேண்டியே வரும் என்தை அறியாதிருக்கின்றனரா ஆட்சியாளர்! இவ்வாறான விடயங் களைக் கையாள வேண்டிய பொலிஸார் மௌனம் சாதிப்பதேன்? இக்கேள்விகள் அமைதி விரும்பும் பற்றாளர்கள் மததியில் எழுந்த வண்ணமேயுள்ளது.
மஹியங்கனை நகரில் முஸ்லிம் பள்ளிவாசல் இருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்
Commented by nizamhmq944 on : http://tinyurl.com/kavzocl
Lankamuslim.org
One World One Ummah
Lankamuslim.org
One World One Ummah
மஹியங்கனை நகரில் முஸ்லிம் பள்ளிவாசல் இருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்
தேரர் செய்யும் பிழைகள் நிரூபிக்கவா வேண்டும்! அவர் உளறிய கருத்துக்கள் மட்டுமே போதும் அவர் கொண்டிருக்கும் புனித பதவியை துறந்து செல்ல. அவர் செய்யம் பிழைகளுக்கு அந்த அப்பாவி காவியுடை என்ன செய்யும்! அதனை தூக்கி எறிவேன் எனக் கூறுமளவுக்கு அக்காவியுடை செய்த பாவமென்ன!
மஹியங்கனை புனித பூமி, காவியுடை கழற்றி எறியும் இடமல்ல. அது காவியுடை தரிக்க வைக்கும் புனித விகாரை என்பதைக் கூடவா தேர் அறியாமல் இருக்கிறார்!
அமைச்சர் ஹக்கீம் அவர்கள் 21 வருடங்களாக மஹியங்கனையில் பள்ளிவாசல் இருப்பதாகத்தான் கூறினார். 40 வருடம் என்பது தாங்கள் இட்டுக்கட்டிச் சுமத்தும் அபாண்டம்.
இல்லாத பள்ளிவாசலை மூடும்படி உத்தரவிடும் அமைச்சர் பற்றி என்ன கூறுவது.
அது பள்ளிவாசல் என்பதால்தானே பன்றியின் கழிவுகளை அங்கு வீசினர் கொடியோர். கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்பது போல் பன்றியைத் தின்றுவிட்டு கழிவுகளை பள்ளியில் வீசினால் பாவம் தீர்ந்து விடுகிறதா!
பள்ளிவாசல் என்ற ஒன்று அங்கு இல்லாவிடில், ஒருவரைப் பிடித்து அங்கு பள்ளிவாசல் இருக்கவில்லை. எமது குடும்பத்தவர் தொழுமிடமாகவே அதனப் பாவித்தோம் என ஏன் கடிதம் பெற வேண்டும்!
அங்கு பள்ளிவாசல் இல்லாமல் இருந்திருந்தால், மஹியங்கனையில் பள்ளிவாசல் இருந்ததாகப் பதிவு இல்லை என்பதை ஏன் கூறவேண்டும்? இல்லாத ஒன்றுக்குப் பதிவிராது. பதிவில்லை எனக் கூறின் பள்ளிவாசல் இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
மேலும், பிறமதத்தவருக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யுமுன் அவற்றில் மூன்று முறை துப்பிய பின்னரே விற்க வேண்டும் எனக் குர்ஆனில் கூறப்படடுள்ளதாகவும், அதன்படியே முஸ்லிம் வியாபாரிகள் செய்வதாகவும் கூறினீர்களே! அதனை உங்களால் நிரூபிக்க முடியாவிட்டால், இவ்வளவு பெரிய அபாண்டத்தை ஒரு மதத்துக்கு மேல் கூறி, மக்களை வழிகெடுத்து, நாட்டில் இன ஒற்றுமையை அழிக்க முனையும் உங்களுக்குப் பொருத்தமான ஆடையைத் தேடுவதுதான தாங்கள் சார்ந்த தர்மத்துக்கும், மனித சமுதாயத்துக்கும் நல்லது. உங்களுக்கும் நல்லது.
Friday, August 2, 2013
புனித குர்ஆனை விமர்சனத்திற்கு உட்படுத்த முடியுமா!
புனித குர்ஆனை விமர்சனத்திற்கு உட்படுத்த முடியுமா!
இன்று உலகளாவிய ரீதியில் மாற்று மத சகோதரர்களாலும், இஸ்லாமிய எதிரிகளாலும்,
ஏன் முஸ்லிம்கள் சிலராலும் கூட செய்யப்படும் மிக மோசமான விமர்சனங்களுக்கு முழுமையாக முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஓரே மார்க்கம் இஸ்லாமும் அதன் வழிகாட்டியான புனித குர்ஆனுமேயாம்.
இதற்கான காரணங்களைக் கூறுமுன், இஸ்லாம் பற்றி இரண்டொரு வார்த்தைகள் கூறிச் செல்லலாம் என நினைக்கிறேன்.
இஸ்லாம் இறுதி மார்க்கம். எழுத வாசிக்கத் தெரியாத இறுதி நபியும், ரசூல் என்ற இறைதூதருமான நபிகள் கோமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மூலம் அரபிப் பாஷையில் கிபி ஆறாம். நூற்றாண்டின் பிற்பகுதியில் பகுதி பகுதியாக இறைவனால் அவனது வானவர் மூலம் இறக்கப்பட்டுஇ
23 வருடங்களாக நபிகளாரால் நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்டது.
இது கோணலற்றது. ஞாபகமூட்டுவது. முன்னைய வேதங்களை மெய்ப் படுத்துவது> அவற்றைப் பாதுகாப்பது. சந்தேகமற்றது. தெளிவானது. தெரிவானது. இலகுவானது. நிர்ப்பந்தமற்றது. நுண்ணறிவு கொண்டது. ஞானம் நிறைந்தது. நோய் தீர்ப்பது. வாய்மை பேணுவது. எதிர்வு கூறுவது. உண்மையானது. மாறாதது. விபரிக்கப்பட்டது. முரண் பாடற்றது. முழுமையானது. நேர்வழி காட்டுவது. வழிகெடுப்பது. பாதுகாக்கப்பட்டது. உலக அழிவு வரை நடைமுறைப்படுத்தக் கூடியதான தீர்வுகளைக் கொண்ட சட்டதிட்டங்களை உள்ளடக்கியது. உய்த்துணர்ந்து நல்லுணர்வு பெறத் தூண்டுவது. சிந்திக்கத் தூண்டுவது. பல தெய்வக் கொள்கையை மறுத்து ஓரே இறைவன் என உறுதிப்படக் கூறுவது. மனித குலத்தின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இறக்கி அருளப் பட்டது. இம்மை வாழ்வை நிறைவு செய்யவும், மறுமைக்கான வழிகளை தேடிக்கொள்ளவுமான நெறி முறைகளைத் தன்னகத்தே கொண்டது.
முற்பந்தியில் கூறிய விமர்சனங்களுக்கு காரணங்கள் பல உண்டு. அவைகளில் முக்கியமானவை, காழ்ப்புணர்வு, மத விரோத மனப்பான்மை, அறியாமை, அறிய விருப்பமின்மை, குறையறிவு, பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டமை, மொழி பெயர்ப்புக்களில் காணப்படும் குறைபாடுகள், மொழி பெயர்ப்புக்களில்
சேர்க்கப்பட்டிருக்கும் மொழி பெயர்ப்பாளரின் சொந்த இடுகைகள், நபி சுன்னத்தாகக் கருதி வெளிப்படுத்தப்பட்டுள்ள ஹதீதுக் கிரந்தங்கள், அவற்றில் காணப்படும் செய்திகள், மேலும் அவற்றிலுள்ள முரண்பாடுகள், அவற்றின் குர்ஆன் சாராத தன்மை, சட்ட வல்லுநர்களான இமாம்களால் வகுக்கப்பட்டிருக்கும் மதுஹபுகள், அவை தம்முள் முரண்படும் தன்மை, ஷரிஆ என்ற மனிதர்களால் ஆக்கப்பட்ட பிக்ஹ் எனப்படும் சட்டம், இச்சட்டத்தை உருவாக்குவதில் கையாளப்பட்ட இஜ்மா, கியாஸ் எனப்படும் உத்திகள், உலமாக்கள் என்ற பெயரில் மத்ரஸாக்களால் கொடுக்கப்படும் பட்டங்களைப் பெற்ற மௌலவிமார்கள், பிழையாகப் புரிந்து கொண்டமையால் ஏற்பட்ட முரண்பாடுகளால் பிரிந்து நிற்கும் பல்வேறு இஸ்லாமியப் பிரிவுகள், முஸ்லிம்கள் என ஆடைகளால் தம்மை இனம் காட்டிக்கொள்ள முனையும் மக்கள், இஸ்லாத்தின் ஓரிரு கடமைகளைச் செய்து விட்டால் போதும் என்ற வகையில் அக்கடமைகளையே என்ன வென்று அறியாது குருட்டுத்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள்,
மேலும்> இஸ்லாமிய தஃவாவைப் பிழையாக விளங்கிக்கொண்டு தாம் ஏதோ சாதனை செய்வதாகக் கற்பனை பண்ணிக் கொண்டு மதமாற்றம் செய்ய முனையும் பிரகிருதிகள், ஜிஹாத் என்பதை என்னவென்றறியாது வன்செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சில இயக்கங்கள், பழி வாங்கும் உரிமையைப் பிழையாகப் பயன்படுத்தும் வழிகேடர்,
குர்ஆன் தடை செய்தவை பற்றிய சரியான அறிவின்றி எதையெதை எல்லாமோ செய்ய முற்பட்டு சமூக இணக்கப்பாட்டை சீரழிக்கும் ஒரு கூட்டம், ஆகுமான விடயங்களை அறிந்து கொள்ளாமல் சில மரபுகளையும் மனோஇச்சை களையும் பின்பற்றி இஸ்லாத்துக்கு தேவையற்ற விமர்சனங்களை, அபகீர்த்தியை அந்நியர் செய்வதற்கு இடம்பாடளித்துக் கொண்டிருக்கும் அரை வேக்காடுகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
தலையங்கம் எழுப்பியுள்ள கேள்விக்கு விடை 'இல்லை' என்றே கூறலாம். முதன்மைக் காரணம் அது இறையறிவில் வெளியானது. இரண்டாவது காரணம் உலக அழிவு வரை செல்லுபடியாகும் பண்புகளுடன் வெளியாக் கப்பட்டது. மூன்றாவது இது ஞான வெளிப்பாடு. நான்காவது அந்த ஞானம் கூட அல்லாஹ்விடமிருந்து கொடுக்கப்படுவது. அடுத்தது, அதன் பரந்து விரிந்து உலகின் மாற்றங்களுக்கும் ஏற்ப கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய பண்பு என்பதனால் அவ்வாறான அறிவு பெற்றவர்கள் மட்டுமே இதனை விமர்சிக்கலாம். ஆனால், அவ்வாறான அறிவு பெற்றிடும் நிலையில் அங்கு விமர்சனத்திற்கு இடமிராது. விளக்கங்கள் வெளியாகும். வியப்பு மட்டுமே மேலோங்கி நிற்கும்! உண்மையைக் கொண்டே தவிர இதனை இறக்கி அருளவில்லை என்ற இறைவாக்கு அதன் கேடயமாகும்.
விமர்சகர் ஒருவர் ஒன்றை விமர்சிக்க வேண்டுமாயின், அது பற்றிய முழுமையான அறிவை, ஞானத்தைக் கொண்டிருத்தல் அவசியம். அல்லாத நிலையில் விமர்சனம் சாத்தியப்படாது. இங்கு, அல்லாஹ்விடமிருந்து வந்த வேதத்தை அவனிடமிருந்து ஞானம் பெற்றவர்கள் மட்டுமே விமர்சிக்க முடியும். அதாவது முக்காலம் உணர்ந்தவர்கள். அவர்களது விளக்கங்கள், விமர்சனங்கள் கூட பிற்கால அறிவைக் கொண்டிராதவர்களால் விளங்கிக் கொள்ளும் சாத்தியம் குறைவு என்பதைவிட இல்லையெனவே கூறிடலாம்.
இப்படிக்
கூறுவதனால் யாரும், குர்ஆனை அறியப்பட முடியாத ஒன்றாக நான் கூறுவதாக எண்ணிவிட வேண்டாம். அது அவ்வக்காலங்களுக்குத் தேவையான அளவில் தனது கருத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக் கும். எளிய, சிறிய உதாரணத்தில் விளக்குவதாயின், பாடசாலைக் கல்வி யைக் கூறலாம். முன்னிலைப் பாடசாலைகளில் விண்ணின் பின்னணி பற்றிக் கூறிட முடியுமா! முதலாம் வகுப்பில் கற்கும் மாணவனுக்கு பேராசிரியர் தன்னிடமுள்ள அறிவு அனைத்தையும் கொடுத்திட முடியாது. முடிந்தாலும் அம் மாணவனால் அதனை விளங்கிக் கொள்ள முடியாது. அது படிப் படியாக அறிந்து கொள்ள வேண்டியது.
ஆசிரியர் பத்து எண்ணிக்கைக்குள் கணக்கொன்றைச் சொல்லிக் கொடுப் பதைப் பார்த்துவிட்டு, சுருக்கம் அல்லது அதைவிடச் சிறிது கூடத் தெரிந்த ஒருவர், இப்பேராசிரியருக்கு எதுவும் தெரியாது எனக் கூறிட முடியாது. மோட்டார் கார் புழக்கத்தில் இல்லாத போழ்து, அதன் தொழில் நுட்ப அறிவைப் புகட்ட முனைவது முட்டான் தனமாக நோக்கப்படும். அதற்காக மோட்டார் செய்தவனிடம் அவ்வறிவு இருந்திருக்கவில்லை எனக்கூறிட முடியாது. விஞ்ஞானிகள் விளங்கிக் கொள்ள வேண்டியதை தச்சுத் தொழிலாளருக்கு விளக்கிட முனைவது அபத்தம். கிராமத்தவனிடம் செய்மதி பற்றிக் கதைப்பது நேரவிரயம். ஆனால் மோட்டார் கண்டு பிடித்தவனிடம் இருந்த அறிவை நாம் கண்டு கொள்ளும் திறன் நம்மிடம் இருந்திருக்க வில்லை என்பதே யதார்ர்த்தம்.
ஆகவே அவரவர் தகைமைகளுக்கு ஏற்ப குர்ஆன் தனது அறிவை வெளிப்படுத்தும் என்பதனாலேயே, அது எவரினதும் விமர்சனத்திற்கு உட்படாது தானாகவே தலை நிமிர்ந்து நிற்பது எனக் கூறுகிறேன். அப்படியே யாராவது தம்மறிவுக்கு ஏற்ப இப்போது விமர்சனங்களை வெளிப்படுத்தின் அது அவனது முட்டாள் தனத்தை இன்று வெளிப்படுத்தாவிடினும் பின்னொரு காலத்தில் நிச்சயமாக வெளியாக்கவே செய்யும்.
மாடிரண்டைக் கட்டி உழுபவனிடம் உழவு இயந்திர அறிவைக் காண முடியாது. ஆனால் அவனும் நிலத்தை உழும் அறிவைக் கொண்டவனே என்பதை நாம் மறந்து விடலாகாது. குதிரை வண்டியில் சென்றவனும் தூரத்தைக் கடந்தான். தூரத்தைக் கல்தொலைவு எனவும் அளந்து கண்டான். இப்படி அறிவு என்பது வெவ்வேறு வடிவில் வெளிப்பட்டுக் கொண்டிருக் கின்றது. அதற்கு ஒரு வரையறையை யாரும் கொடுத்துவிட முடியாது. மனதால் கூட்டிக் கழித்துச் சொல்லும் மனிதனும், அதனையே கணினி மூலம் காண்பவனும் இருக்கின்றான். எதனையும் மனனம் செய்து தேவைக்கேற்ப அவ்வப்போது கூறுபவனின் அதே வேலையை கம்ப்யூட்டர் செய்கிறது. விடயம் ஒன்றே. விடையும் ஒன்றே. முறைகள் தான் வெவ் வேறாகின்றது. இதனை விமர்சனம் செய்ய முற்படுவது விஷமத்தனம்.
மூஸா அலை அவர்களுக்கு வல்ல நாயன் அல்லாஹ் பலகையில் எழுதிக் கொடுத்ததாகக் கூறுவதை அன்றைய நிலையில் நம்பாதவர்கள், இன்றைய நிலையில், தொலை நகல், SMS
எனப்படும் குறுஞ்செய்திச் சேவைகளைக் கண்ட பின்னர் ஏற்றுக் கொள்கின்றனர். ஆக இதற்கு ஏறத்தாழ 5000 வருடங்கள் சென்றுள்ளன.
அன்று நாயகம் அவர்களுக்குக் காட்டப்பட்டது என்ற விடயம் அன்றிருந்தவர்களால்
நம்ப முடியாதுதான். இன்றோ சிறு குழந்தையும் தொலைக் காட்சியை அழுத்தி உலகையே வலம் வந்து விடும். இன்னும் இணைய தளத்துள் புகுந்து உலகை விரல் நுனிக்குள் கொணர்ந்துவிடும் என்ற நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளது. இவைகள் எல்லாவற்றுக்கும் முகங் கொடுத்துக் கொண்டிருப்பது குர்ஆன் மட்டுமே.
வலுவிருந்தால் வானத்தில் ஏறலாம் என்றது. நாம் விரிவாக்கலுடையோம் எனக் கூறி பிரபஞ்சம் விரிந்து செல்வதைக் கூறுகின்றது. அன்று ஆத்மீக ரீதியில் கண்டறிந்தவை, செய்து கொண்டவை இன்று அற்புதங்களாகப் பார்க்கும் நிலையில்தான், முன்னேறியுள்ளதாகக் கூறிக் கொள்ளும் நாம், விமர்சனம் செய்ய முனையும் நாம் உள்ளோம் என்பதை சற்று சிந்தித்தால் புரியும்.
ஓரே இரவில் தூரத்திலுள்ள பள்ளிவாசலுக்கு நபிகளாரை அழைத்துச் சென்றேன் எனக் கூறுவது, நமது சிற்றறிவில் அற்புதமாகவே கண்டு கொள்ளப்படுகின்றது. சற்று சிந்திக்கக் கூடியவன் அவ்வத்தாட்சிகளை உணர்ந்து விமானத்தைக் கண்டு பிடித்தான். இதற்கும் காரணம், இவ்வறிவுகள் அனைத்தையும் அல்லாஹ் நம்மூளையுள் பதித்தே வைத்துள்ளான் என்பதே! இப்படி என்னால் ஆயிரத்துக்கும் அதிகமான உதாரணங்களை குர்ஆனில் இருந்து காட்டிட முடியும்.
இவையனைத்தையும் அல்லாஹ் குர்ஆனில் உள்ளடக்கியே உள்ளான். மனித மூளையுள் வைத்துப்படைத்வனுக்கு புத்தக ரூபத்தில் தருவது பெரிய வேலையா! அதனால்தான் குன் எனக் கூறி ஆறே கட்டங்களில் வானம் பூமிகளைப் படைத்த தனக்கு இவை எல்லாம் மிக எளிதானதே என்கிறான். நமது அறிவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்துக் கொண்டு நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கும் அல்குர்ஆன் என்பதே உண்மை என்பதால். முழுமையாக வளர்ச்சியடையாத அறிவைக்கொண்ட நம்மால் முற்றும் அறிந்தவனின், முக்காலமும் அறிந்தவனின், மறைவானதையும் அறிந்தவனின், எங்கும் நிறைந்து ஏகமும் தெரிந்தவனின், ஞானமுடையவனின், நுட்பமறிந்த வனின், நுண்ணறிவு படைத்தவனின் குர்ஆனை விமர்சனம் செய்ய முடியாது என்கின்றேன்.
புதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே தற்போது குர்ஆனில் காணப்படும் உண்மைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன விஞ்ஞான ஆய்வுகளின் மூலம். ஆதலால் இன்று நாம் விமர்சிக்க முயலும் சில விடயங்கள் நாளை முட்டாள் தனத்தை வெளிப்படுத்தியதாக அமைந்து விடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இன்ஷா அல்லாஹ் ! குர்ஆனுக்கு எதிரான விமர்சனங்களுக்குக் காரணமாக
அமைந்த விடயங்கள் பின்னொருபோது விரிவாக ஆராயப்படும்.
-
நிஹா -
கொழும்பு
03, 2013.08.01.
Subscribe to:
Posts (Atom)