Tuesday, March 26, 2013

குர்ஆனை அறிவதற்கு மனிதனாக இருப்பதே அவசியம்


25:44 - ”அல்லதுநிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்கிறார்கள் என்று நீர் எண்ணிக் கொண்டீராஅவர்கள் கால்நடையைப் போன்றவர்களேயன்றி வேறில்லை;  அன்றியும்அவர்கள் பாதையால் மிக வழிகெட்டவர்கள்.”

 மேற்கண்ட வசனம் குர்ஆன் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதன் அத்தியா வசியத்தை நமக்கு உணர்த்துகிறதுமனிதன் என்ற அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ள குர்ஆனை அறிந்திருக்க வேண்டியுள்ளதுமனிதனை மந்தைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதும் குர்ஆனிய அறிவேவிளங்கிக் கொள்ளாதவர்களை அல்லாஹ் கால்நடைகள் என்றே கூறி யிருப்பதுநமக்கு தரப்பட்ட ஆறாவதறிவைநுண்ணறிவை இலக்கு வைத்துக் கூறப்பட்டதே!.  இக் குர்ஆனை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமாஉய்த்துணர்ந்து நல்லறிவு பெற வேண்டாமாபோன்ற கேள்விகள் அல்லாஹ்வால்நாம் குர்ஆனில் உள்ளவற்றை சிந்திக்க வேண்டும்உய்த்துணர வேண்டும் என்ற தூண்டுதலை உருவாக்கும் வினாக்களாக வெளிப்பட்டுள்ளன

எதில் உங்களுக்கு தீர்க்கமான ஞானம் இல்லையோ அதனைப் பின்பற்றாதீர் என்ற குர்ஆனிய வசனம் கூட, குர்ஆன் அறியப்பட வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்திக் கொண்டு இருக்கின்றதுகுருட்டு நம்பிக்கை பற்றியும் குர்ஆன் இழித்துரைக்கின்றதுமுழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவல் எதனை நமக்கு உணர்த்துகின்றதுகுர்ஆன் அறியப்பட வேண்டியது என்பதை இல்லையா?   தீர்ப்புக்கள் யாவும் குர்ஆனில் இருந்தே கொடுக்கப்பட வேண்டும் என்ற கட்டளையை நிறைவு செய்ய எதனைப் பார்வையிட வேண்டியுள்ளது?

இதிலுள்ள மிகச் சிறந்ததைத் தேடுங்கள் என்பதுவும்அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்அவன்பால் நெருங்குவதற்குரிய வழியைத் தேடிக் கொள்ளுங்கள் போன்ற வசனங்கள் குர்ஆன் அறியப்பட வேண்டியதன் அவசியத்தை நமக்கு வலியுறுத்த வில்லையா?  இப்படிக் கூறிக் கொண்டே போகலாம் அந்தளவுக்கு அல்லாஹ் ‘குர்ஆனை அறிதல் பற்றிப் பேசி யுள்ளான்.  நமது வாழ்க்கையைச் சீராக நடத்திச் செல்வதற்கும் இந்த குர்ஆனே  தேவைப்படுகின்றதுகுர்ஆனை ஓதுவதனால் இதயங்கள் அமைதி அடைகின்றன எனக் கூறப்பட்டுள்ளதாலும் குர்ஆனை ஓத வேண்டிய தேவையே உள்ளதுஇது ஓர் நோய் நிவாரணி என்பதாலும் அதனை அனுபவிக்க குர்ஆனையே அறிய வேண்டியுள்ளதுஎல்லாவற்றுக்கும் மேலாகநமதுஈமானைப் பலப்படுத்திக் கொள்ளவேதங்களை அறிய வேண்டியதை நிறைவு செய்வதுடன்,  அல்லாஹ்வைஅவனது வானவர் களை,  தூதுவர்களைமறுமையைகலாகத்ர் முதலியவற் றையும் அறிய குர்ஆனையே புரட்ட வேண்டியுள்ளது.  குர்ஆனிலேயே மூழ்க வேண்டி யுள்ளதுஅல்லாஹ்வின் வார்த்தைகளே மேலேறிச் செல்கின்றன என்பதால்அவற்றை அறிந்து கொள்ள குர்ஆனைத் தவிர வேறு எதனில் அதனைக் கண்டு கொள்வது?

இதற்கும் மேலாககுர்ஆனே நமது இம்மை வாழ்வுக்கும்மறுமை வாழ்வுக்கும் வழிகாட்டியாகவிருப்பதால் அதனையே அறிய வேண்டி யுள்ளது.  நாயகத் திருமேனி அவர்களின் வாழ்கை பற்றி கருத்துக் கூறிய அவர்களது அருமை மனைவி ஆயிஷா நாயகியவர்கள்ரசூலே கரீம் அவர்களுடைய வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது எனக் கூறியிருந்ததும்  குர்ஆனை அறிவதன் இன்றியமையாமையை” நமக்கு உணர்த்துகின்றது

சுருக்கிக் கொள்வதற்காகஎல்லாவற்றுக்கும் மேலாக இன்னொன்றைக் கூறி, குர்ஆனை அறிவதன் முக்கியத்துவத்தை  வெளிப்படுத்துகிறேன்.  அதாவதுநபிகளார் தாமாக எதையும் செய்வதில்லைஅவருக்கு அறிவிக் கப்படும் வஹீயில் கூறப்பட்டதைத் தவிர என அல்லாஹ் சான்று பகர்ந்திருப்பதில் இருந்தும்நான் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப் பட்டதைத் தவிர எதனையும் செய்வதில்லை என நாயகம் ஸல் அவர்களே கூறியதிலிருந்தும், குர்ஆனை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொருவர் மீதும் பாரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. நமது வாழ்க்கையை குர்ஆனிய கட்டளைக்கமைய அமைத் துக் கொள்வதற்கும் அதன் அறிவே தேவைப்படுகின்றது.

குர்ஆனை எல்லோரும் அறிய முடியாதா?

இந்தக் கேள்விக்கான விடையாக நம் கண்முன் நிற்பவர், நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களே. ஆம் அவர்கள் எழுத, வாசிக்கத்த தெரியாத, எழுத்தறிவே என்னவென்றறியாத “உம்மி என அக்காலத்தில் அழைக்கப்பட்டவர் அல்லாஹ்வாலும் உம்மி என வர்ணிக்கப்பட்டவர்  என்பதே! 

87:6 - நாம் ஓதிக் ‌காட்டுவோம், நீர் மறக்க மாட்டீர். எனக் கூறுவதில் இருந்து, அல்லாஹ் அவருக்கு ஓதிக்காட்டி, அவரது மனத்தில் அவற்றை நிலைக்கச் செய்து விட்டமை புரிகிறது.  75:18 - ஆகவே, நாம் ஓதினால், பின்னர் அதனை நீர் பின்தொடர்ந்து ஓதுவீராக!  75:19 - பின்னர் அதனை விளக்கி வைப்பது நிச்சயமாக நம்மீதே பொறுப்பாகும்.  இந்த வசனங்கள் போதும் மேற்கண்ட கேள்வி அவசியமற்றது என்பதை விளங்க. மொத்தத் தில் ஓத வைப்பதும், மனத்தில் இருத்துவதும், விளக்கி வைப்பதும் கூட அல்லாஹ்வின் கடமையாகவுள்ளது என்பது ஒன்றே இக்கேள்வியை இல்லாமலாக்குவது. விடையாக அமைவது. இஸ்லாத்தை அறிந்து ஏற்க உள்ளம் விரிவடைய வேண்டும். 

குர்ஆனை அறிவதில் முக்கியம் வேண்டப்படுவதுஅதனை ஏற்பதே,  எப்போது நம்மிடம் ஏற்கும் மனப்பான்மை வந்து விடுகின்றதோ அப்போது அல்லாஹ் அதனை ஏற்பதற்காக நம் நெஞ்சங்களை விரிவாக்கி விடுகின் றான்  அப்படியானவர் தமது ரப்பின் பிரகாசத்தின் மீது இருக்கின்றார்அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டும் அவர்களுடைய இதயம் இறுக்கம் அடைந்தவிட்டவர்களுக்கு கேடுதான்.  அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர் என அல்லாஹ்வே கூறுகிறான்மேலும், 6:125இல்  அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவு படுத்துகின்றான். .....

சில உலமாக்கள் தமது பிரசங்கங்களின் போதுசாதாரண மக்களுக்கு குர்ஆன் பற்றிக கதைக்க தகுதியில்லாதது போன்ற கருத்தை வெளிப்படுத்தும் நோக்கத்துடன், ‘இவர்கள் யார் குர்ஆன் பற்றிக் கதைக்க’ என்கின்றனர்.  அந்த கர்வமானஅடிப்படையற்றமார்க்கத்துக்கு முரணானஆணவம் நிறைந்த கேள்விக்கு விடையாகவே அமைவதாக உள்ளதுமேற்கண்ட அல்லாஹ் வின் வசனம்.  28:56 இல் மிகத் தெளிவாக இது பற்றிக் கூறுகின்றான்.  நீர் விரும்பியவரை நிச்சயமாக நீர் நேர்வழியில் செலுத்திவிட முடியாதுஎனினும்அல்லாஹ் தான் நாடியவரையே நேர்வழியில் செலுத்துகின்றான்.  நேர்வழி பெறுகின்றவர்களை அவன் மிக அறிந்தவன்.

மேற்கண்ட சிந்தனைமுஸ்லிம்கள் மத்தியில் குர்ஆன் தம்மால் அறிந்து கொள்ள முடியாதது என்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்துவதனால்அவர்கள் குர்ஆனை ராய்ந்து பார்க்க வேண்டாமா என்ற இறையாணை யை அறியாமல், நடைமுறைப்படுத்தாமல் போவதுடன்குர்ஆனைப் புறந் தள்ளியவர்களாகவும்யாரோ கூறுவதை மட்டும் கேட்டு அதுதான் இஸ்லாம் என்ற மாயையில் வாழும் நிலையிலும் உள்ளார்கள்.  இதனாலே யே அல்லாஹ் சுபுஹான ஹுவதஆலா தன் அருள்மறையின் 25:30 வசனத்தில்,  ”எனது ரப்பேநிச்சயமாக என்னுடைய சமூகத்தினர்இந்த குர்ஆனை புறக்கணித்து விட்டனர்” என்று தூதர் கூறுவார் எனக் கூறி யுள்ளான்

இவ்வசாதாரண, அபாக்யநிலை மார்க்க அறிஞர்களாலேயே மக்கள் மனத்தில் ஊட்டப்பட்டுள்ளது என்பதை அறியும் போது குர்ஆனின் கீழ்கண்ட அல்லாஹ்வின் கண்டனம் நமது கண் முன் நிற்கின்றது.  6:119 - ....நிச்சயமாக பெரும்பாலோர் அறியாமையின் காரணத்தாலும்தங்களது மனோ இச்சையின் காரணத்தாலும் திட்டமாக வழி கெடுக்கின்றனர்நிச்சயமாக உம்முடைய ரப்பு வரம்பு மீறுவோரை மிக்க அறிந்தவன்மேலும்இத்தகையோர் தாமும் அறியாது பிறரையும் வழிகெடுக்கின்றனர்அவர்கள் தாம் வழிகெடுத்தவர்களின் சுமையையும் சுமப்பர் என எச்சரிக்கை விடுத்துள்ளதும் நோக்கற் பாலது.  தலைவர்களின் பேச்சைக் கேட்டு வழி தவறிவிட்டோம் எனக் கைசேதப்படுவார்கள் என்ற குர்ஆனின் கூற்றை நிரூபிக்கும் நிலையையும் தோற்றுவித்துள்ளது.

மேலும்குர்ஆனின் 2:269இல்,”அவன் தான் நாடியவருக்கு ஞானத்தை வழங்குகின்றான்.மேலும் எவர் ஞானம் வழங்கப்படுகிறாரோ அப்பொழுது அவர் அதிகமான நன்மைகளை நிச்சயமாக வழங்கப்பட்டு விடுகிறார்தவிரபுத்திசாலிகள் அல்லாது உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.  மேற்கண்டவை இறைவன் யாருக்கும் தன் ஞானத்தைக் கொடுத்து விடலாம் என்பதையும்அப்படிக் கொடுக்கப்பட்டவர்களை, ‘புத்திசாலிகள், உணர்பவர்கள்  எனக் கூறிஅப்படி அறியாதவர்கள் யார் என்பதை மறுதலையாகக் குறிப்பிட் டுள்ளான்

இவையனைத்தும் குர்ஆன் எவரதும் ஏக போக உரிமையல்லபடித்தவன்படிக்காதவன்ஏழைபணக்காரன்சிறுவர்முதியோர் போன்ற தகைமை களைக் கொண்டு குர்ஆனை அறியும் பண்பை, தகுதியை அறிவிப்பன வல்லமாறாக எவர் அதனை ஏற்று முயற்சியில் ஈடுபடுகிறாரோஅவரது முயற்சி கணக் கெடுக்கப்பட்டுஅவரை அறிந்த அல்லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்து விடுவதை வெளிப்படுத்துவது..

இவற்றுக்கும் அப்பால் அல்லாஹ் குர்ஆன் பற்றிக் கூறியுள்ள பல வசனங்கள்இந்த குர்ஆன் அறிவதற்கும்ஏற்று நடப்பதற்கும் ஏற்ற விதமாகமிகவும் தெளிவாகஉதாரணங்களுடன், விரிவாக, சந்தேகம் இல்லாதவாறு, விளக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனகுர்ஆனை ஒருவர் ஏற்பதற்கு அல்லாஹ்வின் நாட்டம் வேண்டுவதுடன்,அறிவுடையவர்களாகவும் இருக்க வேண்டியுள்ளது.  ‘தான் நாடியவருக்கே வழிகாட்டுகிறான், ‘உபதேசம் அறிவாளிகளுக்கு மட்டுமே என்ற அல்லாஹ்வின் கூற்றுகள் இதனை உறுதிப்படுத்தும்நல்ல விடயங்களை ஏற்பவர் எப்போதும் அறிவுடைய வராகவே இருப்பர்

இன்னொரு முக்கியமான விடயம் குர்ஆன் மனிதர்கள் அனைவருக்கும்அவர்கள் அறிவதற்காக அருளப்பட்டது என்பதை இடித்துரைக் கொண்டிருக் கின்றது குர்ஆன் ஓர் “நினைவு கூரல்“ என்ற சொல்.  தனியொருவர் நினைவு கூர வேண்டியிருப்பதை தெளிவாகக் கூறிக் கொண்டிருக்கின்றது.  ஆம் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக அவ்வப்போது தனது நபிமார்கள்ரசூல்மார்கள் மூலம் கூறப்பட்டவை அனைத்தையும் மெய்ப்படுத்தும் நோக்கில்அவற்றின் சேகரமாகஅருட்கொடையாக அருளப்பட்டுள்ளது.  ஆக மறுமை வாழ்வை நிரந்தரமானது எனக் கூறும் குர்ஆன்அவ் வாழ்வில் அவனது நெருக்கத்தைப் பெறஅவனது திருப்தியைசுவன பாக்கியத்தை யடையஅவனை நினைவு கூரும்படி கூறுவதற்காகவே இறக்கி அருளப் பட்டுள்ளது என்பதைதனது 7:172 இல் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளான்.

இது ஒன்றே அனைத்துக்கும் மேலாகஅல்லாஹ் நமக்கு குர்ஆன் இறக்கி அருளப்பட்டதன் நோக்கத்தையும்அனைவரும் ஏற்றத்தாழ்வு எதுவுமின்றி அதனை அறிய வேண்டியதன் அவசியத்தையும் விளங்கிக் கொள்ளப் போதுமானது. 7:172-இன்னும் உம்முடைய ரப்புஆதமின் மக்களாகிய அவர்களது முதுகுகளிலிருந்துஅவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கிஅவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்த போது, “நான் உங்கள் ரப்பு அல்லவா?“ (என்று கேட்டான்) “ஆம்நாங்கள் சாட்சி கூறுகிறோம்“ என்று அவர்கள் கூறியதைநினைவூட்டும்ஏனென்றால், ”நிச்சயமாகநாங்கள் இதனைவிட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்” என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காகஎன்று மிகத் ‌தெளிவாகக் கூறியுள்ளமைஅவன் நமது புகல்கள் மறுமையில் ஏற்கப்பட மாட்டாது என்பதனை  நியாயப்படுத்தி நிற்கின்றதுஇப்போது யார் இவர்கள் இக்குர்ஆனைப் பற்றிப் பேச என்பதற்கான விடையை மேலதிகமாக குர்ஆனே தந்துள்ளதுமேற்கண்ட குர்ஆன் வசனத்தை அறிவதற்கு எவரு டைய உதவியும் தேவையாஇதில் என்ன விளக்கம் குறைவாக உள்ளது?

குர்ஆனை சாதாரண மக்கள் அறிந்து கொள்ள முடியாது என்ற ஒரு நிலை முன்னர் இருந்தது என்பதை மறுக்க முடியாதுகாரணம் அக்காலத்தில் புனித குர்ஆன் அரபு மொழியில் மட்டும் காணப்பட்டதும்அரபியரல்லாதோர் அம்மொழியில் போதிய அறிவு, தேர்ச்சி  பெற்றிராமல் இருந்ததும் காரணமாகும்.  அத்தோடு மக்கள் மனத்தில்அப்போதைய அறிஞர்களாகக் கருதப்பட்டவர்களால் இந்த குர்ஆனின் ஓர்  (ஹர்பு ) எழுத்துக்குக் கூட கருத்தை அறிந்து கொள்ள முடியாது என ஊட்டப்பட்டமையேஉண்மையில் அவர்கள் கூறியதில் சில உண்மைகளும் இருக்கவே செய்கின்றனஅவற்றில் ஒன்று குர்ஆன் ஓரிரு எழுத்துக்களைக்கூட வசனமாக வெளிப்படுத்தி யுள்ளதுஅதற்கான கருத்தை சாதாரண நிலையில் உள்ளோர் கண்டு கொள்வதற்கு மிகுந்த பிரயாசை எடுக்க வேண்டும்அல்லாஹ் நாடினால் அந்த அறிவை அவன் நமக்குப் புகட்டுவான்இது அவனது வாக்குறுதியேஅதற்காககுர்ஆனை யாரும் விளங்கிக் கொள்ள முடியாது என்று எழுந்த மானமாகக் கூறுவோமாயின் அது அல்லாஹ்வின் கூற்றையே மறுதலிப்ப தாகும்.  காரணம் அந்த அளவுக்கு விளக்கமாக உள்ளதாக அல்லாஹ்வே கூறியுள்ளான்பல பொருள்களைக் கொண்ட சில  வசனங்களும் உள்ளனஅவற்றின் கருத்தை அல்லாஹ்வே அன்றி அறிவதில்லைஅதனைப் பார்ப்போம்

3:7 - “அவன்தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான்அதில் தெளிவான வசனங்களும் உள்ளனஅவைதான் இவ்வேதத்தின் அடிப்படை யாகும்இன்னும் பல பொருள்களைக் கொண்ட வேறு இருக்கின்றனஎனவே எவர்களின் இதயங்களில் சருகுதல் இருக்கின்றதோ,  அவர்கள் குழப்பத்தைத் தேடியும் அதிலிருந்து பல பொருள்கள் உடையதையே பின்தொடர்கின்றனர்ஆனால்அதனுடைய விளக்கத்தை அல்லாஹ்வை யன்றி அறிய மாட்டார்கள்ஆனால்கல்வியறிவில் உறுதியுடையவர்கள் “நாங்கள் இவற்றை நம்பிக்கை கொண்டோம்அனைத்தும் எங்கள் ரப்பிடமிருந்தே வந்துள்ளன“ எனக் கூறுவார்கள்மேலும்அறிவாளர்கள் அன்றி நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

விளங்காதவர்கள் மீது அல்லாஹ் வேதனையை ஏற்படுத்தி விடுகிறான் என்ற திருவசனம் கூட விளங்கிக் கொள்ள வேண்டியதன் முக்கியத்து வத்தையும் அதனை விளங்காவிடில் வரக்கூடிய வேதனையையும் கூறுவதன் மூலம் குர்ஆன் விளங்கப்படுவது மக்களது கடமையாக்கப் பட்டுள்ளது.  ஆககுர்ஆனை விளங்குவது கடமையாக்கப்பட்டுள்ள ஒரு விடயம் என்ற பதிலே, ‘இவர்கள் யார் குர்ஆனைப் பற்றிப் பேச’ என்ற வினாவுக்கு விடை பகர்வதுடன்அவ்வினா இறைமறுப்பாகவும்வழி கேடாகவும் உள்ளதாகக் காட்டி நிற்கின்றது.

மொத்தத்தில்குர்ஆனை விளங்கிக் கொள்ள மனிதனாக இருப்பதும்அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதுமே முக்கியமானதாகும்மேலும்விளக்கங்கள் போதாதென நினைப்போர் அல்லாஹ்வின் ஆணையானஅறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்வேதம் கொடுக்கப் பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்நீங்கள் அறியாதவர் களாக இருந்தால் ஞானமுள்ளவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள், அல்லாஹ்வைப்பற்றி நன்கு அறிந்தவர்களிடம் அறிந்து கொள்ளுங்கள் போன்ற அவன் வசனங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அறிந்துஅல்லாஹ் நாடினால் வெற்றியடையலாம்அல்ஹம்துலில்லாஹ்.

73:19 - நிச்சயமாக இது (திக்ர்நல்லுபதேசமாகும்எனவேஎவர் விரும்பு கிறாரோ அவர் தனது ரப்பின் பால் செல்லக்கூடிய வழியை எடுத்துக் கொள்வார்.
76:3 - நிச்சயமாகநாம் அவனுக்கு வழியை விளக்கினோம்.  ஆகவேநன்றி செலுத்துபவனாகவும் இருக்கலாம்நன்றி கெட்டவனாகவும் இருக்கலாம்
39:41 - நிச்சயமாகமனிதர்களுக்காக உண்மையைக் கொண்ட வேதத்தை நாம் உம்மீது இறக்கினோம்ஆகவேஎவர் நேர்வழி பெறுகிறாரோஅது அவருக்கேயாகும்எவர் வழி தவறுகிறாரோஅவர் வழி தவறுவதெல்லாம் அவரின் மீதே ஆகும்அவர்களுக்கு நீர் பொறுப்பேற்றுக் கொள்பவரும் அல்லர்
45:20 - இது மனிதர்களுக்கு தெளிவான ஆதாரங்களாகவும்உறுதி கொள்கின்ற கூட்டத்தாருக்கு நேர்வழியாகவும்அருளாகவும் இருக்கிறது.
38:29 - பாக்கியமிக்க வேதமாகும்.  இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும்அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும்இதை உம்பால் நாம் இறக்கி வைத்தோம்.
7:171 - .... நாம் உங்களுக்குக் கொடுத்ததைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயபக்தியாளர்களாகி விடலாம்.

No comments: