Tuesday, March 5, 2013

பொது பல சேனாவின் நடவடிக்கையினால் ஆளுங்கட்சியே அச்சப்பட வேண்டும்


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org

பொது பல சேனாவின் நடவடிக்கையினால் 
ஆளுங்கட்சியே அச்சப்பட வேண்டும்

பொருள் ஒன்று பார்வை பல.  ஒரு பொருளைப் பார்க்கும் பல்வகை யானோர், ஒவ்வொருவரும் தத்தமது, தேவை, கொள்கை, எண்ணம், சிந்தனை, அறிவு, அனுபவம் போன்ற இன்னோரன்னவற்றின் அல்லது ஏதோவொன்றின் தாக்கத்திற்கேற்ப தமது கருத்தை வெளியிடுவர்.

அப்படியான வெளிப்பாடுகள் பொதுவான, முழுமையான ,அனைவருக்கும் நன்மை பயக்கக் கூடிய நடைமுறைச் சாத்தியமான உண்மைகளை வெளிப் படுத்துவதில்லை.  தனிநலம் சார்ந்ததாக, சில உண்மைகளை உள்ளடக்கி யதாகவே இருக்கும்.  அதனால் தீர்வுகள் முழுமையாக, நிரந்தரமாக எட்டப் படுவதில்லை. சில காலத்தில் செல்லாத் தன்மையை எட்டி விடும்.

பொ ப சே யின் நடவடிக்கைகளால் ஆளுங்கட்சி அச்சப்பட வேண்டும் என்பதில் சில உண்மைகள் உள்ளதாயினும், தமிழ், முஸ்லிம்கள்கள் அச்சப்படத் தேவையில்லை என்பது பொருத்தமற்றது.  வீடு பற்றி எரியும் போது வீட்டுக்காரன்தான் பயப்பட வேண்டும் என்பதல்ல, வீடுகளையுடைய அனைவரும் பயப்படத்தான் வேண்டும்.

அமைதிக்குக் குந்தகம், சட்டம் ஒழுங்கு மீறப்படும் பயங்கரம், நாட்டின் யாப்பே கேள்விக்குள்ளாக்கப்படுவது போன்ற சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட் டோருக்கு மட்டும் பாதிப்பு, அச்சம் ஏற்படுவதோடு நின்றுவிடுவதில்லை, அமைதி விரும்பும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் பாரிய அழுத்தத்தை அவை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்த நாட்டில் உத்தியோகபூர்வமற்ற பொலிஸாராக இனி நாமே செயற்படுவோம் என ஒவ்வொருவரும் தான்தோன்றிகளாக, தடி எடுத்த தண்டல்காரராக வெளிப்பட்டால், அரசு மட்டும்தான் கவலைப்படுமா அல்லது அமைதி விரும்பும், சட்டத்தை மதிக்கும், தேசப்பற்றுள்ளோர் கலவரமடைய மாட்டார்களா???

No comments: