Tuesday, March 12, 2013

“என்னையும் உங்களோடு சேருங்கள்!” பொது பல சேனாவிடம் ஒரு கோரிக்கை.



Commented by nizamhm1944 in lankamuslim.org


“என்னையும் உங்களோடு சேருங்கள்!” பொது பல சேனாவிடம் ஒரு கோரிக்கை.



கூறப்பட்ட பெரும்பான்மை விடயங்கள் பௌத்த தர்மத்துக்கு ஏற்ப செயற்படுத்தப்படுமாயின், அவை இஸ்லாமிய போதனைகளைச் செயற்படுத்தியதாகவே இருக்கும்.

ஆனால், மனிதன் உயிர் வாழ்வதற்காகவும், உலகின் சமநிலை பாதிக்கப்படாமலும் இருப்பதற்காக ஆகுமாக்கப்பட்ட உயிரினங்களைக் கொல்வதைத் தடை செய்தல், தாவர உணவை மட்டுமே உண்ணல் என்ற மனித தத்துவம், குர்ஆனை மீறுவதோடு நின்று விடாமல் இந்நாட்டையே அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும்.  சொல்லொணா துன்ப, துயரங்களை விளைத்து மனித வாழ்வையே கேள்விக் குறியாக்கிவிடும்.  நடைமுறைச் சாத்தியமற்றது.  காரணம் இயற்கை தன் இரும்புக் கரங்கைள நீட்டி வரட்சியை, அல்லது வேறு வகையில் தாவரங்களுக்கு அழிவை ஏற்படுத்திவிட்டால் அச்சமயத்தில் உண்பதற்கின்றி நாமும், கால்நடைகளும் கூட உயிரையே விடவேண்டி வரும். உயிரினங்கள் கொல்லப்படாத நிலையால், அல்லது அவைகளின் இறப்பால்,  இயற்கை சமநிலையில் ஏற்படும் மாற்றத்தை, அபாயத்தை சிந்திப்போர் உணர்ந்து கொள்வர். இது பற்றி விரிவாக எழுத இது இடம் அல்ல.

ஹலால் சான்றிதழ் வழங்கல் குர்ஆனிய நடைமுறை அல்ல. ஆயினும், அது இஸ்லாமிய ஸ்தாபனமாகக் கருதப்படும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதனை வியாபாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க நடைமுறைப்படுத்தி வந்ததாகக் கூறுகிறது. அதனால், ஹலால் முத்திரை பொறித்தலை இஸ்லாமிய செயற்பாடாகக் கருதி, தடை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பொது பல சேனா செயற்பட்டது. தற்போது அதனைத் தடைக்கும் உள்ளாக்கி விட்டது. எந்த ஒரு நல்ல விடயம் உலகில் யாரால் செயற்படுத்தப்பட்டாலும், அது இஸ்லாம் கூறிய செயற்பாடாக‌வே இருக்கும்.

அந்த வகையில், தற்‌போது, மது, விபச்சாரம், சூது, சிறுவர் மீதான வன்முறைகள், பாலியல் குற்றங்கள்,  ஆபாசமான மானத்தை மறைக்கா ஆடை போன்ற இன்னோரன்னவற்றைத் தடை  செய்வதை நடைமுறைப்படுத்தி பௌத்த தர்மத்தை காப்பதில்  பொது பல சேனா ஈடுபட்டால் (ஈடுபடவே  வேண்டும்),  அந்த நடைமுறை, அவை குர்ஆனிய கருத்துக்களை செயற்படுத்திய தன்மையையே வெளிப்படுத்தும்   இந்நிலை ஏற்படுமாயின் இந்நாடு இஸ்லாமிய நாடு போன்று ஒழுக்க சீலங்களையே கொண்டிருக்கும். அச்சந்தர்ப்பத்தில் பொது பல சேனா, இவை “இஸ்லாமியச் சட்டங்கள்“  அல்லது 'இஸ்லாமிய நாடு' போன்றுள்ளது என அவற்றை நிராகரிக்கப் போகின்றதா! அவர்களின் பெளத்த போதனைகளைச் செயற்படுத்தாமல் விடப் போகின்றதா?

No comments: