Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
http://lankamuslim.org/2013/03/31/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/
பொது பல சேனாவுடன் அரசுக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது
இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் முதல், வியாபார தலங்கள், முஸ்லிம் கலாசாரங்கள், அவர்களது ஆடைகள், பரம்பல்கள், பெருக்கம் போன்றவற்றின் மீதான, பல்வேறு குற்றச்சாட்டுக்கள, அவமானங்கள், அடாத்துக்கள், அத்துமீறல்கள், தாக்குதல்கள் அனைத்தும் பொதுபலசேனா, ஹெலஉறுமய, ராவய போன்ற மதவிரோதச் சக்திகளால், சில மதகுருமார்களால், பட்டப பகலிலும், இரவிலும், ஆரவாரத்தோடும், ஆங்காரத்தோடும், அறிவித்தல்களோடும், சுவரொட்டிகளோடும், பதாகைகள் ஏந்தி, காடையர்களையும் இணைத்துக் கொண்டு, படையினர், நிர்வாகிகள் பார்த்திருக்க, பல் வேறு உத்திகளுடன் அரங்கேற்றப்பட்டவை.
ஆதலால், தற்போது இவர்களைக் கைப்பற்றுவதோ, விசாரணைக்கு உட்படுத்துவதோ, தண்டனை வழங்குவதோ, இதன் பின்னர் இது போன்று நடைபெறாது என்ற உத்தரவாதத்தை, முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைத்து சாராருக்கும் அளிப்பதோ சிரமம் இல்லாதது. அதுவே, நீதிநாடும், ஜநாயக அரசொன்றின் தட்டிக் கழிக்க, தாமதப்படுத்தப்படக் கூடாத, அத்தியாவசியக் கடமை.
மேலாக, இந்த நாட்டின் அரசியல் யாப்பு என்பது கண்ணே போன்று காக்கப்பட வேண்டியது, அது மீறப்படும் போது, அது எவரால் மீறப்பட்டாலும் பாரபட்சமின்றி, தண்டனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.
நல்லாட்சி என்பது சட்டமும் ஒழுங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு. அச்சமின்றி மக்கள் வாழ்வதையே முதன்மை யாகக் கொண்டது. மக்களின் அன்றாட வாழ்க்கை கூட பெருஞ்சுமையாக ஆகலாம், அதற்காக மக்கள் விட்டுக் கொடுப்போடு இத்தனை காலமும் வாழ்ந்துமுள்ளனர், ஆனால், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்குக் குந்தகம் தரும், இன, மத, மொழி பேதங்கள் களையப்பட வேண்டும்.
இன்னொன்றையும் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன். ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகள் எமக்கு ஆதரவாக நடந்தமை என்பதை வைத்து, சிலர் கூறுவது போல், முஸ்லிம்களது வாழும் உரிமை தீர்மானிக்கப்பட்க் கூடாது. நாம் யாருக்கும் குடியல்லோம். அவர்களில் நாம் தங்கி வாழவும் விரும்பவில்லை. அது மரபுமல்ல. நீதியுமல்ல. சலுகை வாழ்வு அடிமை வாழ்வை ஒத்ததே!
“முஸ்லிம் நாடுகளின் உதவிக்காக எமக்கு செய்யப்பட வேண்டும்“ என்ற இவ்விழிநிலை, எதிர்காலத்தில் ஏதாவது ராஜதந்திர ரீதியில் ஏற்படும் மாற்றங்களால், இலங்கையுடன் அவர்கள் கருத்து வேற்றுமை கொள்ளும் நிலையில், நாம் வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும். எதைச் செய்வதானாலும், அது, நாம் இந்நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில், எமக்கும் உரிமைகள் உணடே என்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நாளை, அரபு நாடு ஒன்று கூட இந்நாட்டுக்கு சவலாக அமையும் என்றால், அவர்களுக்கு எதிராக, எம் நாடடுக்கு ஆதராவாக செயற்படவே வேண்டும். மேற்கண்டவாறு இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு தந்தது எனக் கூறி அதற்காக எமக்கு வாழும் உரிமை கொடுக்கப்படுவது. சட்டியில் இருந்து நெருப்பில் விழுந்த கதையாகவும், நக்கினார் நாவிழந்தார் என்ற அவல நிலையையும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி விடும். இது தெளிவாக்கப்பட வேண்டியதே.
எமது உரிமைகளை நாம் இந்நாட்டு மக்களோடும், அரசுகளோடும் பேசித் தீர்த்துக் கொள்ளும் வழிகள் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். அதுவே எமக்கும், அனைவருக்கும், இந்நாட்டுக்கும் சிறந்தது.