Friday, February 8, 2013



Lankamuslim.org இல்

ஹலால் சான்றிதழ் நிதி அறிக்கை அரசாங்கத்திக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு தெளிவுபடுத்த வேண்டும் .  என்ற கட்டுரையில் Nizamhm1944  என்பவரால் எழுதப்பட்ட கருத்து.


http://lankamuslim.org/2013/02/07/%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/



திரு. தலபான் அவர்களே! உங்கள் எழுத்துக்களை மீண்டும் ஒரு முறை எடுத்து வாசித்துப் பாருங்கள். அதில், இஸ்லாம் தடைசெய்துள்ள பகடி, அவதூறு, பட்ட்ப்பெயர் சூட்டல் தவிர்ந்த ஏதாவது, ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு ஆதாரமானவை, அல்லது நான் எழுதியவற்றில் குர்ஆனிய அடிப்படையில் மறுப்பு இருக்கின்றனவா? வெறும் பிதற்ற‌லைத் தவிர எதுவுமில்லை என்பதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள். வேறு எவராவது ஆக்கபூர்வமான கருத்துக்களை குர்ஆனிய அடிப்படையில் வழங்கியுள்ளனரா?

இங்கு நடந்து கொண்டிருப்பது, ACJU வினதும் நிஸாமினதும் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. ஹலால் சான்றிதழ் வழங்குவதும், ஹலால் முத்திரை பொறிப்பதும் குர்ஆனிய அடிப்படையில் அமைந்ததா? அல்லவா என்பதும்,

ஹலால் முத்தி‌ரை பொறிப்பது எதிர் காலத்தில் ஹறாமை அறியாது, ஹலால் முத்திரையைப் பார்த்து உண்ணும் பயங்கரத்தை உருவாக்காதா? (ஏற்கனவே பன்றி இறைச்சி ஹலால் முத்திரையுடன் விற்கப்படுவதாக ACJU வே கூறியுள்ளது. )

ஹலால் சான்றிதழ் பெறப்படாத ஹலாலான உணவுப் பண்டம், ஹறாம் என உண்ணப்படாமல் விடப்படுவது, அல்லாஹ் ஆகுமானது எனக் கூறியதை ஆகாதது என்ற நிலையை அடைகின்றது. இப்படிக் கூற வேறொரு தெய்வம இருந்து கட்டளை இடுகிறதா என்ற அல்லாஹ்வின் கேள்விக்குள்ளாகி, ஷிர்க் என்ற நிலையை அடைகின்றது..

ஹலால் சான்றிதழ் பெறப்படவில்லை என அஇஜஉ ஒரு தயாரிப்பைக் கூறும்போது, அந்த உணவுப் பண்டம் ஆகாதது என்ற பண்பைப் பெறுவதுடன், உற்பத்தியாளனுக்கு மறைமுக நிர்ப்பந்தம் ஒன்றை உருவாக்குகின்றது. மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை என்ற இறைவாக்கை நிராகரிக்கின்றது.

சென்ற வருடம் ஹலால் சான்றிதழுடன் விற்கப்பட்ட பொருள், இவ்வருடம் ஹலால் சான்றிதழ் பெறப்படாமை யினால் உண்ணத் தகாதது என்ற நிலையை அடைவது, மார்க்கத்தை வெறும் கேலிக்கிடமாக்குகின்றது. இதில் பணம் அல்லாஹ்வின் இடத்தை வகிக்கின்றது. பணம் கொடுத்தால் மீண்டும் அது ஹலாலாகிவிடும். ஷிர்க்.

முஸ்லிம்கள் ஹறாமை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, முஸ்லிம் அல்லாதோர் மேல் பாரம் சுமத்துவது எந்த வகையில் இஸ்லாம் அனுமதிக்கின்றது. இந்த உழைப்பு ஹலாலா?

ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு கூறப்படும் காரணங்களில் சில அல்லாஹ் முஸ்லிம்களின் பாதுகாவலன் என்ற நிலைக்கு அஇஜஉ வை சமமாக்குவது ஷிர்க்கை வருவிப்பது.

மேலும், அவர்கள் கூறும் காரணங்கள் எதுவும் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்தவையல்ல.

இப்படி நிறையவே உண்டு. இதனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் தாங்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதால் எவ்வித நன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

மாறாக ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்கு எண்ணெய் வார்த்து, மூலை முடுக்குகளில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிகளுக்கும், சிங்கள மக்கள் மத்தியில் வியாபாரம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் வியாபாரிகளுக்கும் அபாயத்தை உண்டு பண்ணவே செய்யும்.

அல்லாஹ்வுக்காக சற்று சிந்தியுங்கள். எனக்கு யார் மேலும் காழ்ப்புணர்வு இல்லை. முஸ்லிம்கள் அநியாயமாகப் காதிக்கப்படப் போவதை அறிந்து, அதனைத் தடுப்பதற்காகவே நான்கு மாதங்களுக்கு முன்னர் அஇஜஉ வுக்கு விளக்கமாக கடிதம் எழுதினேன்.

மேலும், குர்ஆனிய உண்மைகள் வெளிப்படுத்தப்படுவது ஒவ்வொரு முஸ்லிமினது கடமை. அதனையே செய்தேன்.

நான் செய்தவை பிழை என நிரூபித்தால் அதற்காக மன்னிப்புக் கோரவும், அதற்காக எந்த தண்டனையையும் ஏற்கவும் தயாராயுள்ளேன்.

No comments: