Lankamuslim.org
One World One Ummah
வட்டதெனிய: அடுத்த சமூகத்தவரின் கவலையில் நாமும் பங்குகொள்கிறோம்
Comment of NizamHM1944
குர்ஆன் ஒரு ஆன்மாவில் இருந்தே அனைவரையும் படைத்ததாகக் கூறுகிறது. அதனால் மனித உயிரில் பேதமில்லை. தக்க காரணமின்றி ஒரு மனிதனைக் கொல்வது முழு மனித சமுதாயத்தையுமே கொன்றதற்கு சமன் எனக் கூறி மனித உயிரன் மகத்துவத்தைப் போதிக்கின்றது, இஸ்லாம்.
நல்லவன் தீயவன் எனப் பாராது அனைவருக்கும் உணவளிப்பதைத் தனது கடமையாகக் கொண்டுள்ளான் அல்லாஹ். மேலும், உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு என்ற தொடரின் மூலம் அவரவர் விரும்பிய மார்க்கத்தில் வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்னும். மார்க்கத்தில் பலவந்தமில்லை என்ற குர்ஆனியக் கொள்கையும் மாற்று மதத்தினரின் உரிமைக்கு எவ்வித குந்தகத்தையும் இஸ்லாம் வலியறுத்தவில்லை என்பதை விளக்குவதே!
இஸ்லாமிய தர்மம் (ஸதக்கா), ஏழைவரி (ஸக்காத்) என்பன வழங்கப்பட வேண்டியவர்களாகக் குர்ஆன் குறிப்பிட்டுள்ள மனிதர்களை நோக்குவோர், இஸ்லாத்தின் பரந்த நோக்கையும், மனிதரில் அது கொண்டுள்ள அக்கறையையும் அறிந்து வியப்பர். உலகில் எந்த சட்டத்திலும் காணப்படாத உயரிய பண்பே, வறியவர், ஏழைகள், கடனாளிகள், வழிப்போக்கர், விடுபட வேண்டியோர் போன்றோரை தர்மம், ஏழைவரி போன்றவற்றைப் பெறத் தகுதி படைத்தவர்களாகக் கூறியிருப்பது. இந்த குர்ஆனிய சட்டத்தில், காணப்படும் உயர் பண்பு, உலக மாந்தரில் நலிவுற்றோரை, சநதர்ப்பவசத்தால் பிரச்சினை களைச் சந்திப்போரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே தவிர, முஸ்லிம்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல, என்பதற்கொப்ப நாம் செயற்படும் போது, நமக்கெதிராக உலகில் எந்த சக்தியும் உருவெடுக்காது.
இன்னும் நமது சொத்தில், யாசிப்போருக்கும், யாசியாதோருக்கும் பங்குண்டு எனக் கூறி, மனித வர்க்கத்தை பிச்சைக்காரராக, அல்லது இல்லாதவராகப் பாராது, அவர்களை நமது சொத்தில் பங்காளர்களாகப் பார்க்கின்றது இஸ்லாம். இதன் மூலம் அவர்களை நமது சகோதரராகவே ஏற்க வைக்கின்றது. இதன் மூலம் சகோதரத்துவத்தை உருவாக்கும் மார்க்கம் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டுகின்றது. இன்னும் நிறையவே உண்டு. அல்லாஹ் நாடினால் சந்தர்ப்பம் வரும்போது வெளிவரும்.
இன் ஷா அல்லாஹ் நாம் அல்லாஹ் கூறியபடி நடப்போமாயின் அகில உலகும் நம்முடன்தான்.
No comments:
Post a Comment