Wednesday, February 6, 2013Lankamuslim.org  இல்
“பௌத்த கடும்போக்காளர்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்“ என்ற கட்டுரையில் ‌nizamhm1944 ஆல் எழுதப்பட்ட கருத்துப் பதிவு.


http://lankamuslim.org/2013/02/03/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/#comment-7992// ஹலால் சான்றிதழை பெறுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வற்புறுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தெரிவித்தார்.உற்பத்தியாளர்களின் வேண்டுகோளின் காரணமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் தொண்டர் அடிப்படையிலே ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவை இடம்பெறுகின்றது என அவர் குறிப்பிட்டார். //

உற்பத்தியாளர் வேண்டுகோளை நடைமுறைப் படுத்துவதற்காக ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதாகக் கூறும் கூற்றே, அது மார்க்க காரியம் அல்ல என்பதை வெளிப்படுத்துகின்றது. மார்க்க விடயங்களில் ஈடுபட வேண்டிய உலமா சபை யார் யாரையோ எல்லாம் திருப்திப்படுத்த முனைந்து, இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகளையும், குழப்பங்களையும், அமைதியின்மையையும் ஏற்படுத்துகின்றதா என்ற கேள்வி எழுகின்றது!

கூறுவதுபோல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஒரு தொண்டர் ஸ்தாபனம் போன்று இயங்கி சேவை செய்வதாக இருந்திருந்தால், அதன் நடவடிக்கையான ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரமாக முன்னெடுத்திருக்கப்பட மாட்டாது. அது இலங்கை முஸ்லிம்களின் மதஅனுஷ்டான விடயங்களி்ல் முடிவெடுக்கும் அதியுயர் பீடமாகத் தன்னை வர்ணித்துக் கொண்டுள்ளது. அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறது. அதுவே முஸ்லி்களுக்கெதிரான பிரச்சினையாக ஹலால் சான்றிதழை உருவாக்கியுள்ளது.

ஆதலால், அதன் ஒவ்வாரு நடவடிக்கையும் குர்ஆனிய அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, தொண்டர் சேவையாக குர்ஆனுக்கு மாற்ற மான சேவைகளைச் செய்வதாக, அதன் மூலம் அது பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களுக்கும், வாழ்வியல் ஆதாரமான வியாபாரங்களுக்கும், அவர்களின் அமைதியான, பயமற்ற, மற்றவர்களின் சந்தேகமற்ற தன்மைக்கு எதிரான நிலையை ஏற்படுத்தக் கூடாது.

அஇஜஉ வின் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையே தற்போது அந்நிய மதத்தவரின் பாரிய எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. அதுவே முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணியாக உள்ளது.

இத்தொழிலை அல்லது தொண்டர் சேவையைச் செய்வதற்கு எதிர்ப்பும், அதனால் எவ்வித வருமானமும் அற்ற நிலையில் ஏன் அதனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்.

அவர்கள் சொல்வதுபோல் ஏற்றுமதியைக் கூட்டுவதும், உற்பத்திகளுக்கு சந்தையைப் பிடித்துக் கொடுப்பதும், அந்நியச் செலாவணியை இந்நாட்டுக்குப பெற்றுக் கொடுப்பதும் நல்ல விடயமானாலும், அது புத்த குருமார்களாலேயே ஏற்கப்படாது, எதிர்ப்பு காட்டப்படுமிடத்து, குழப்பங்கள் தோன்றுமிடத்து, முஸ்லிம்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படுமிடத்து, ஏன் பின்பற்றப்பட வேண்டும்?

பஸில் ராஜபக்ஷ் அவர்கள் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையை மிகவும் வரவேற்றுள் ளார்கள் என்று அஇஜஉ கூறுவதாயின், அவரிடம் கூறி இப்பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு கண்டிருக்கலாமே! அல்லது அவரிடம் கூறி அஇஜஉ வின் ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட் டுக்கு ஆதரவான அறிக்கையை வெளியிட்டிருக்கலாமே! அஇஜஉ வின் செயற்பாடுகள் யாரிடமோ அங்கீகாரம் பெறப்படுவதாகக் கூறப்படும் நிலையை நினைக்கும் போது…. நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என நினைக்கத் தோன்றுகிறது.

அனைத்துக்கும் மேல், இஸ்லாம் தோன்றி 1430 ஆண்டுகள் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை எவராலும் மேற்கொள்ளப்படவில்லை. அக்காலங்களில் முஸ்லிம்கள் ஹறாமைத் தவிர்த்து நடக்கவில்லையா? கடந்த நான்கைந்து ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியால்தானா ஹலால் சான்றிதழ் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது?

ஆம் எனின், இஸ்லாம் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போன மார்க்கமா?” உலக அழிவு வரை செல்லுபடியாகக் கூடியது, தெளிவானது, அனைத்துக்கும் தீர்வைக் கொண்டது, சந்தேக மற்றது, முழுமையானது, பாதுகாக்கப்பட்டது என்பவை எல்லாம் வெறும் பிதற்றல்களா? அல்லாஹ் யாவுமறிந்தவன் என்பது பொய்யா? இப்படி யொரு நிலை வருமென்பதை அவன் உணர்ந்திருக்கவில்லையா? அல்லாஹ் மன்னிக்க வேண்டும்.

அஇஜஉ வின் ஹலால் சான்றிதழ் வழங்கும் பங்களிப்பின்றி, இஸ்லாம் முழுமை யடையாதா? நடைமுறைச் சாத்தியமற்ற மார்க்கமா இஸ்லாம்?

ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு ஆதாரமாக ஒரு குர்ஆன் வசனத்தையாவது கொண்டு வர முடியுமா?

ஹலால் சான்றிதழ் வழங்குவது இஸ்லாத்துக்கு மாறானது, ஷிர்க்கையும் வருவிப்பது என்பதை மறுக்க முடியுமா?

ஹலாலான உணவுகளை வகைப்படுத்த முனைவது, உலகை அளக்கத் துணிவதைவிட சிரமமானது, அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதனால், மனிதர்களுக்கு சிரமத்தை விரும்பாத அல்லாஹ் ஹறாமான நான்கு உணவுகளை மிகத் தெளிவு படுத்தியுள்ளான். அந்த வழிமுறையே, இதுகால வரை சிறப்பாக, உலக அங்கீகாரத்துடன், இலகுவாக, எதிர்ப்புக்களின்றி அனைத்து முஸ்லிம்களாலும் செயற்படுத்த முடிந்துள்ளது.

ஹலால் முத்திரை, ஹறாமானதை ஹலாலால் என்ற அங்கீகாரத்தைக் கொடுத்து, அதனை முஸ்லிம்கள் உண்ணும் பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளதை மறுக்க முடியுமா? ஹலால் முத்திரை பொறிக்கும் முறையால் எதிர்காலத்தில், ஹறாமான பொருட்கள் ஹலால் முத்திரையுடன் விற்கப்படும் நிலை ஏற்படாதா? ஹலால் முத்திரையைப் பார்த்து பொருட்களை வாங்கி உண்ணும் நிலை ஏற்படாது என்பதை யாராவது உத்தரவாதம் தரமுடியுமா?

முடியாது என்பதை சில நாட்களுக்கு முன்னர் சுப்பர் மார்க்கட்டுக்களில் பன்றி இறைச்சி ஹலால் முத்திரையுடன் விற்கப்படுவதாக அஇஜஉ வே கூறியது நிரூபித்துள்ளது. அதனைத் தடுக்க அஇஜஉ வே பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி, முஸ்லிம்களை உஷார்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டதை மறுப்பீர்களா? இது போன்ற ஹறாமான பொருட்கள் இதன் பின்னர் ஹலால் முத்திரையுடன் விற்பனைக்கு வரும் போதெல்லாம் மக்களை உஷார் படுத்திக் கொண்டிருப்பது யார்? இதற்குப் பின்னராவது தமது இமாலயத் தவறையும், அல்லாஹ்வின் நுண்ணறிவையும் அறிந்து வியந்து நடைபெறும் தமது பிழையைத் திருத்த முயற்சிக்கலாமே!

இதன் பின்னராவது, அல்லாஹ்வின் சுன்னாவாகிய ஹறாம் பற்றிய அறிவே மக்களுக்கு வேண்டப்படுவது, ஹலால் முத்திரை பொறிக்கும் முறை அல்ல என்பதை அஇஜஉ ஏற்று நடக்குமா?

காலப் போக்கில் இஸ்லாமியர் வழிதவற வழி செய்யும் நோக்கில் யாரோ விஷமிகளால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஹலால முத்திரை பொறிக்கும் புதிய, ஆனால் பிழையான நடைமுறைக்கு அஇஜஉ வே பலியாகி உள்ளது என்பதை மறுக்க முடியுமா?

No comments: