Tuesday, February 26, 2013

இன்று மீண்டும் ஜம்இய்யதுல் உலமாவின் செய்தியாளர் மாநாடு



Comment of nizamhm1944 on

Lankamuslim.org
One World One Ummah
இன்று மீண்டும் ஜம்இய்யதுல் உலமாவின் செய்தியாளர் மாநாடு



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடனான தனது கலந்துரை யாடலின் போது, ஹலால் சான்றிதழ் வழங்கி, ஹலால் முத்திரை பொறிக்கும் முறை தங்களால் உருவாக்கப்பட்டதல்ல, வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே தம்மால் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறியதாக, முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் அவர்கள் தனது பீபீஸி உடனான செவ்வியில் கூறியிருந்தார்.

றிஸ்வி முப்தி அவர்களின் இந்த விளக்கம், நிச்சயமாக ஹலாலை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை உருவாக்கப்படவில்லை, வியாபார ரீதியாக தமது உற்பத்தியைச் சந்தைப்படுத்துவதற்கு ஹலால் என்ற அரபு வார்த்தை மிகவும் உதவியாக இருக்கும் என்ற வகையிலே, வியாபாரிகளின் வேண்டுகோளை நிறைவேற்றவே ஆரம்பிக்கப்பட்டது என்பது மிகவும் துல்லியமாகத் தெரிய வருகின்றது.

இந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை முஸ்லிம் அல்லாதோரின் எதிர்ப்புக்களை உருவாக்கியுள்ளது, அதனால் ஏற்பட்டுள்ள அபாயங்கள் அனைத்தையும் விட, முஸ்லிம்கள் தமது ஹலாலான உணவை இனங் காண்பதில், குர்ஆனியச் சட்டத்தை ஏற்று ஹறாமைத் தவிர்த்தலில் தவறிழைத்துவிட வேண்டிய சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது.

அரபுச் சொல்லான ஹலால் வார்த்தையைக் கொண்ட முத்திரையை யாரும் பாவிப்பதை சட்டபூர்மாகத் தடைசெய்ய முடியாது. எப்படி ஒரு உற்பத்தியாளன் ஆங்கில வார்த்தையைப் பாவிப்பதில் தடை இல்லை யோ, அப்படியே அரபிப் பதமான ஹலால் என்ற வார்த்தையைப் பாவிக்க முடியும்.

பன்றி இறைச்சி முஸ்லிம்களுக்கே தடைசெய்யப்பட்டுள்ளதால், அதனை விரும்பி உண்பவர்களுக்கு அது தடை செய்யப்படவில்லை. அதனை விற்பது குற்றச் செயலுமல்ல. அந்த ஹலால் என்ற வார்த்தை ஆகுமானது எனக் கூறும் ஆங்கில வார்த்தையை ஒத்ததே! அதனால் சட்டபூர்மாகவும் ஹலால் என்ற முத்திரையைப் பொறித்து பன்றி இறைச்சியை விற்பனை செய்வதைத் தடை செய்ய முடியாது.

இந்நிலையில், ஹலால் முத்திரை பொறிப்பதை ஏற்றுள்ள முஸ்லிம் கள், தாம் சாப்பிடுவது ஹறாம் என்பதை அறியாது, ஹலால் முத்திரை பார்த்துத் தமது உணவைத் தீர்மானிக்கும் புதிய நடைமுறையால், ஹலால் முத்திரை கொண்ட பன்றி இறைச்சியை வாங்கி உண்ண வேண்டிய நிலை தானாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆதலால், ஹலால் முத்திரை பொறிக்கும் வழக்கம் கைவிடப்படுவதே சிறந்ததும், பாதுகாப்பானதும், முஸ்லிம்கள் ஹறாமைத் தவிர்க்க உதவுவதும், பிரச்சினைகளை உருவாக்காததும், எதிர்ப்புக்களை விலக்குவதும்.

அரசு வேண்டுமானால், Fat Free, Sugar Free, Alcohol Free, Cholesterol Free என்பது போல், Pork Free என்ற வாசகத்துடனும், உணவுப் பொதியுள் உள்ள பண்டத்தில் கலக்கப்பட்டுள்ள நிறமூட்டி, சுவையூட்டி, பழுது படாது பாதுகாக்கப் பாவிக்கப்படும் பொருட்கள் போன்றவற்றை அட்டவணைப்படுத்த வேண்டும் எனக் கேட்கலாம்.

இம்முறையால், தவறிழைக்கும் உற்பத்தியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கலாம், Pork Free என அச்சிடுவதற்காக விஷேட கட்டணங்கள் அறவிடத் தேவையில்லை, பாவனையாளருக்கு தாம் என்ன சாப்பிடுகிறௌம் என்பது உறுதியாகத் தெரிகிறது, மதவிரோதக் கருத்துக்களோ , மதம் சார்ந்த நிலையோ ஏற்படப் போவதில்லை.

No comments: