Wednesday, February 27, 2013

ஹலால் சான்றிதழ்: அரசிடம் வழங்குவது திருப்திகரமான தில்லையாம்



Commented by Nizamhm1944 on

Lankamuslim.org
One World One Ummah

ஹலால் சான்றிதழ்: அரசிடம் வழங்குவது திருப்திகரமான தில்லையாம்



இஸ்லாம் முஸ்லிம்களுக்கு விதித்துள்ள சட்டம் இஸ்லாமியருக்கே தவிர வேற்றுமதத்தவருக்கு அல்ல.  குர்ஆனிய விடயங்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது, அரசியலைப் போன்று பேசுவது அபத்தம். நாம் விரும்பியபடி எல்லாம் விளக்கமளிக்க முற்படுவது அல்லாஹ் மேல் பொய் கூறி குற்றம், நிராகரிப்பு போன்றவற்றை உருவாக்கலாம்.

// ஹலால் உணவை உண்பதனால் ஒரு பௌத்தர் முஸ்லிம் ஆகமாட்டார். // இப்படிக கூறுவது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தியைப் பாவிப்பதைப் போன்றது. இதனையே அவர்கள் மாறிக் கேட்டால...

// ஹலால் அல்லாத உணவை உண்பதால் ஒரு முஸ்லிம் பௌத்தராகமாட்டார் .//  இக்கருத்து எதனைக் குறிக்கின்றது. குளிக்கப் போனவன் சேற்றைத் தன்மேல் வாரியிறைத்ததை ஒத்ததே! ஹலால் அல்லாத உணவை உண்பவன் நிராகரிப்பாளன். அவனை முஸ்லிம் எனக் கூறமுடியாது.

// உணவுக்காக கொல்லப்படும் விலங்கை நோகடிக்க கூடாது என ஹலால் கற்பிக்கின்றது //  இது நடைமுறையிலுள்ள ஷரீஆ.  ஹலால் என்றால்,  Permissible, lawful. Used especially in referance to food. - See more at: http://www.islamic-dictionary.com/index.php?word=halal#sthash.iq1BA4Eb.dpuf, என்கிறது இஸ்லாமிய அகராதி. அதாவது அனுமதிக்கப்பட்டது. சட்டபூர்வமானது. விஷேடமாக உணவைக் குறிப்பது.

ஹலால் முத்திரை பொறித்தல் ஏற்படுத்தியுள்ள அபாயமான, ”ஹறாமானவை ஹலால் முத்திரையுடன் விற்பனை” கருத்திற் கொண்டாவதாவது, அதனை நடைமுறைப்படுத்துவதில் இருந்து விலக வேண்டும்.

ஹறாம் என்றால் எதுவென்பதை அறிவதே அல்லாஹ்வின் சுன்னா. அதுவே ஹலாலைத் தேர்வதில், உண்பதில் நம்பகரமானது.  பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தருவது.

No comments: