Comment by Nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
ACJU பரிந்துரை: ஹலால் சான்றிதழ் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்
ஹலால் என்ற அரபு வார்த்தை எந்த வகையிலும் முஸ்லிம்கள் உண்ணத் தகுந்தது என்ற கருத்தை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. ஆகுமானது என்ற கருத்தை வெளிப்படுத்துவது. அதனால் முஸ்லிம் விரோத சக்திகள் பன்றி இறைச்சியைக்கூட ஹலால் முத்திரை பொறித்து விற்பனைக்கு விட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே!
இதனைச் சட்டபூர்வமாகவும் தடை செய்திட முடியாது. காரணம் பன்றி இறைச்சியோ அதனோடு ஒட்டிய பண்டங்களோ விற்பனை செய்வது குற்றச் செயலல்ல. ஆங்கில வார்த்தைகளை எப்படி யாருடைய அனுமதியுமின்றி பாவிக்க முடியுமேர் அப்படி ஹலால் என்ற வார்த்தையையும் பாவிக்க முடியும். நமக்கு ஹறாமானவை பிறருக்கு ஹலால் என்பதால், விரும்புவோருக்கு ஆகுமானது என்ற கருத்தை ஹலால் என்ற பதம் கொண்டுள்ளது.
உணமையில் முஸ்லிம்கள் மட்டுமே இந்த சூழ்ச்சியால் பாதிக்கப்படுகிறார்கள். காரணம், அவர்கள் ஹலால் என்ற வார்த்தையைக் கண்டதும், அது இஸ்லாமியர்கள் உண்ணக் கூடியது எனக் கருதுகிறார்கள்.
அதனால் ஹலால் என்ற சொல்லைப் பாவிப்பதைவிட்டு, மாற்று நடைமுறையாக மிகவும் பொருத்தமானதாக, சிக்கலற்றதாக, செலவினத்தைக் கூட்டாததாக, மதசார்பற்றதாக, எவரதும் எதிர்ப்புக்கு ஆளாகாத தன்மை கொண்டதாக, சட்டத்தால் கட்டுப்படுத்தக் கூடிய தன்மை கொண்டதாக, மீறினால் தண்டிக்கப்படக் கூடியதாகவுள்ள, PORK FREE போன்ற சொற்றொடரைப் பாவிக்கலாம். இதனை அ.இஜஉ வே அரசுக்குப் பரிந்துரை செய்யலாம்.
இதுஅல்லாஹ்வன் ஹறாமைத் தவிர்க்கும் முறையை அடியொட்டிய நடவடிக்கையே!
No comments:
Post a Comment