Lankamuslim.org இல்
ஹலால் சான்றிதழ் நிதி அறிக்கை அரசாங்கத்திக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கட்டுரையில் nizamhm1944 என்பவரால் பதியப்பட்ட கருத்துரை
http://lankamuslim.org/2013/02/07/%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/#comment-8019
எத்தனை நாடுகளில் தனியார் நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் ஹலால் உலமா சான்றிதழ் வழங்குவதற்கான தகுதியாகவோ அங்கீகாரமாகவோ ஆகிவிடாது.
எவ்வாளவு பணம் பெறுகிறோம், அனைத்தும் நிர்வாகச் செலவுகளுக்காகவே செலவிடப்படுகின்றது, பயங்கரவாத குழுக்களுக்கு இந்நிதி போகவில்லை, என்பது எதுவும், ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கான அதிகாரத்தைத் தந்து விடாது.
முதற்கண் குர்ஆனிய அங்கீகாரம் உண்டா?
இன்றேல், இந்நடவடிக்கை குர்ஆனுக்கு எதிரான பண்பைக் கொண்டிருக்கவில்லை என்கிறீர்களா?
இதனால் எதிர்காலத்தில், ஹலால் முத்திரையுடன் ஹறாம் உணவுகள் விற்பனைக்கு வந்து, அதனை அறியாத அப்பாவி முஸ்லிம்கள் ஹலால் என பன்றி இறைச்சியை வாங்கி உண்ணும் நிலை ஏற்படாதா? அந்நிலை தற்போதே ஏற்பட்டுள்ளதை மறுக்கிறீர்களா?
அண்மையில் பன்றி இறைச்சி ஹலால் முததிரையுடன் விற்பனையானதாக நீங்களே கூறியுள்ளீர்களே!
இவ்வருடம் ஹலால் சான்றிதழுடன், ஹலால் முத்திரை பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட உணவுப் பண்டம், அடுத்த வருடம் ஹலால் சான்றிதழ் பெறப்படாமல் உண்ண முடியாது என்ற நிலையை அடையும் போது, அல்லாஹ் ஆகுமானது என்று கூறிய உணவுப் பண்டம், (சென்ற வருடம் உண்ண அனுமதிக்கப்பட்ட து ) இவ்வருடம் ஹறாமான நிலையை அடைகிறது.
அல்லாஹ்வின் கூற்றுப்படி, தான் ஆகுமானதாக்கியதை நீங்கள் ஆகாது எனக் கூற உங்களுக்கு வேறு தெய்வங்கள் இருந்து அனுமதி தந்தனவா? அன்றேல் தன்மீது கற்பனை செய்கிறீர்களா எனக் கேட்பது, ஷிர்க்கை வருவித்தல் என்பதை மறுக்கிறீர்களா?
சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் ஹலால் முத்திரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதும், முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதற்கும், முஸ்லிம்களைத் தாக்குவதற்கும், முஸ்லிம் கடைகளைப் பகிஷ்கரிக்குமாறு கூறுவதற்கும் ஹலால் முத்திரை காரணமாகி, நாட்டில் குழப்பத்தை உண்டுபண்ணி முஸ்லிம்களின் இருப்புக்கும், பாதுகாப்புக்கும், தொழிலுக்கும் குந்தகம் விளைவித்துள்ளதற்கு யார் பொறுப்பாளர்?
நீங்கள் செய்யும் பிழைகள் முஸ்லிம்களுக்கு எதிராக மாறுவது நியாயமா? இதனை இஸ்லாம் அனுமதிக்கின்றதா?
இந்த எதிர்ப்பலைக்கு, நீங்கள், வேறு காரணங்கள் காட்டுவதும், அதற்கு மதவிரோத நடவடிக்கை என்ற முலாம் பூசுவதும், நாம் செய்யும் குற்றத்தை இன்னொருவர் மீது சுமத்துவது என்ற அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட குற்றச் செயல் இல்லையா?
முஸ்லிம்கள் ஹலால் உணவு உண்பதற்காக, அந்நிய மதத்தவர் ஏன் ஒரு சதமாயினும் அதிகமாகச் செலவு செய்ய வேண்டும்? என்ற சிங்களவரின் நியாயமான கேள்விக்கு உங்கள் பதில் என்ன? இது இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கை என்பதை மறுக்க முடியுமா? இதனால் பெறப்படும் பணம் ஹறாமான தேட்டமாகாதா?
மறைமுகமான நிர்ப்பந்தங்களை உருவாக்கி ஹலால் முத்திரை பெறும்படி தூண்டுவது, குர்ஆனுக்கு மாற்றமி்ல்லையா?
நீங்கள் ஏன் 1425 வருடத்துக்கும் அதிகமாக நடைமுறையில் இல்லாத ஒன்றை செய்ய வேண்டும் என்று ஏன் துடிக்கிறீர்கள்?
இத்தனை காலமும், ஹலால் முத்திரை பொறிக்காத நிலையில் முஸ்லிம்கள் ஹறாமான உணவையா சாப்பிட்டு வந்தனர்?
முஸ்லிம்களை பாதுகாப்பதாகக் கூறும் உங்களுக்கு, அல்லாஹ்வின் அனுமதி உள்ளதா? நமது நாயகம் ஸல் அவர்களுக்கே முஸ்லிம்களைப் பாதுகாக்கும் உரிமை வழங்கப்படவில்லையே? அவனைத் தவிர வேறு பாதுகாவலன் இல்லை என்பதற்கு எதிராக நீங்கள் இயங்குவது ஷிர்க் என்பதை அறியவில்லையா?
ஹலால் முத்திரையால் குழப்பம் உண்டாகி உள்ளது. குழப்பம் உண்டாக்குவது குர்ஆனிய அடிப்படையில் மரண தண்டனைக்கு உரிய குற்றம் என்பதை மறுப்பீர்களா?
தொண்டாக இதைச் செய்வதாகக் கூறும் நீங்கள் பணம் அறவிடுவது ஏன்?
அப்படித்தான் செய்ய வேண்டுமென்றால் கூட அதனை அரசே, தனது, சுகாதாரத் திணைக்களத்தின் மூலம் மிகச் சிறப்பாக, தகுதியான நிபுணர்களை நியமித்து, சிறந்த ஆய்வு கூடங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தலாமே!
தற்போது உணவுப் பொதிகளின் மேலுறைகளில், அதனுள் பாவிக்கப்பட்ட பொருட்களின் அட்டவணை காணப்படுவது போதாது என்றால் மேலதிகமாகத் தகவல்களைப் பிரசுரிக்குமாறு கேட்கலாமே!
எப்படி இருந்தாலும், ஹலால் முத்திரை பொறித்து உணவுப் பொருட்களை விற்பனைக்கு விடுவது ஆபத்தானது. ஹலால் முத்திரையுடன் ஹறாம் விற்பனையாகும். ஹலால் முத்திரை பார்த்து பொருட்களை வாங்கிப் பழக்கப்பட்ட மக்கள் இதனால் ஹறாமை தாங்கள் அறியாமலே உண்ணும் நிலை நிச்சயம் ஏற்படும். அதற்கு நீங்களும் அல்லாஹ்விடம் பொறுப்புக் கூறவேண்டும்.
No comments:
Post a Comment